'ஏ.டி.எம்., மையங்களில் பணம் எடுக்க முடியாததால், சம்பளத்தை ரொக்கமாக வழங்க வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மத்திய அரசின் செல்லாத நோட்டு அறிவிப்பு, நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கறுப்பு பணம் பதுக்கியோர், கடும் அதிர்ச்சி அடைந்துஉள்ளனர். பணத்தை மாற்ற, மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
வங்கி, ஏ.டி.எம்.,களிலும் குறிப்பிட்ட அளவுக்கே, 50, 100, 2,000 ரூபாய் நோட்டுகள் கிடைக்கின்றன. இந்நிலையில், 'சம்பள பணத்தை ரொக்கமாக வழங்க வேண்டும்' என, தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் கோரியுள்ளனர். தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர், சாமி.சத்தியமூர்த்தி வெளியிட்ட அறிக்கை: ஏ.டி.எம்., மையங்கள், இன்னும் சீராக இயங்காததால், நினைத்த நேரத்தில் பணம் எடுப்பது சிரமமாக உள்ளது. பணி நேரங்களில், ஏ.டி.எம்., மையங்கள் முன் காத்திருந்து, பணம் எடுப்பது சிரமம். எனவே, இம்மாத இறுதியில் வழங்கப்படும் சம்பள பணத்தை, வங்கிகளில் செலுத்தாமல் ரொக்கமாக வழங்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment