மத்திய அரசின், உயர் கல்வி நிறுவனங்களில், எம்.பி.ஏ., படிப்புகளில் சேர்வதற்கான 'கேட்' தேர்வில், சென்னையில் மட்டும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். இவர்களில், பி.இ., எனப்படும், இன்ஜினியரிங் பட்டதாரிகள் மற்றும் மாணவர்கள் அதிகம்.
To get free Education Dept. Updated News & GOs type ON TNKALVII and send to 9870807070 or type ON SATISH_TR and send to 9870807070
Labels
- NEWS
- DIRECTOR PROCEEDINGS
- TET
- ASSN NEWS
- SSA
- COURT NEWS
- EDUCATION DEPT. GOs
- TIP
- TRB
- GO
- TNPSC
- PANEL
- CPS
- SSLC
- RESULTS
- DEE
- VI PC
- HSC
- CCE
- PAY ORDER
- RTI PROCEEDINGS
- DSE
- ANNOUNCEMENTS
- SCERT
- EXPECTED DA
- TNKALVI NEWS
- TETOJAC
- FORMS
- MODEL QNS
- PENSION
- TET QNS
- RMSA
- VII PC
- Dept. Exam
- RTE
- REG ORDER
- IT
- DA
- GK
- EMIS
- UPSC
- CEO VELLORE
- IT 2012-13
- RULE
- ANDROID
- FREE SMS REGISTRATION
- RARE GOs
- RL LIST
- NEP 2016
- NHIS
- SABL
Hot News
JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Monday, November 30, 2015
கனமழை காரணமாக 14 மாவட்ட பள்ளி, கல்லூரிகாளுக்கு இன்று விடுமுறை
சென்னை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
திருவள்ளூர் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
வேலூர் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
திருவண்ணாமலை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
விழுப்புரம் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கடலூர் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
திருவள்ளூர் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
வேலூர் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
திருவண்ணாமலை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
விழுப்புரம் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கடலூர் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
ஐந்து நாட்கள் பணி 10 ஆயிரம் சம்பளம் பகுதி நேர ஆசிரியர் கோரிக்கை
வாரத்தில் ஐந்து முழு நாட்கள் வேலை, ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும், என பகுதி நேர ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் 2012 மார்ச்சில் 16,549 பகுதி நேர கலை, ஓவியம், உடற்பயிற்சி, தையல், இசை ஆசிரியர்கள் பணியில் சேர்க்கப்பட்டனர். வாரத்தில் மூன்று அரை நாட்கள் பணி, மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டது.
பள்ளிகளுக்கு ரூ.125 கோடி சேதம்
தமிழகத்தில், தொடர் மழையால், பள்ளிக்கல்வித் துறைக்கு, 125 கோடி ரூபாய் சேதம் மற்றும் செலவு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், 6ம் தேதி முதல், 25ம் தேதி வரை கனமழை பெய்ததால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் போன்ற மாவட்டங்களின், பள்ளி, கல்லுாரி கட்டடங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை
'பொதுத் தேர்வு எழுதும் மாணவர் பட்டியலில் தவறுகள் இருந்தால், ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வித்துறை எச்சரித்துள்ளது. பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன. மாவட்டம் தோறும், தேர்வு மையங்களின் எண்ணிக்கை, மாணவர் எண்ணிக்கை விவரங்கள், பள்ளிகளிலிருந்து சேகரிக்கப்படுகின்றன. இந்தப் பட்டியலில் தவறுகள் வருவதால், தேர்வு நடத்தும் போது, பல மாணவர்களுக்கு, ஹால் டிக்கெட் இல்லை; பட்டியலில் பெயர் இல்லை என்பன போன்ற குழப்பங்கள் ஏற்படுகின்றன.
மழை விடுமுறை ,ஆசிரியர்களுக்கு கூடுதல் பணி
'மழைக்கால விடுமுறையிலிருந்த பகுதி நேர ஆசிரியர்கள், அதற்குப் பதில், மாற்று நாட்களில் பணியாற்ற வேண்டும்' என, உத்தரவிடப்பட்டுள்ளது. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டமான, எஸ்.எஸ்.ஏ., இயக்குனரகக் கட்டுப்பாட்டில், கணினி, ஓவியம், உடற்கல்வி உட்பட, பல பகுதி நேர பாடப் பிரிவுகளுக்கு, 16 ஆயிரம் சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாரத்துக்கு மூன்று வகுப்புகள் பாடம் எடுக்க வேண்டும். ஆனால், பெரும்பாலும் பள்ளிகளில், முழு நேர ஆசிரியர்களாகவே பணியாற்றுகின்றனர்.
10ம் வகுப்பு பொது தேர்வு செய்முறை தேர்வு உண்டு
'பத்தாம் வகுப்புக்கு பொதுத் தேர்வில், அறிவியல் பாட செய்முறைத் தேர்வு, கண்டிப்பாக உண்டு' என, பள்ளிக்கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. சில ஆண்டுகளாக, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், பிளஸ் 2 மாணவர்களுக்கு நடத்தப்படுவது போல், அறிவியல் பாடத்தில் செய்முறைத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கு, 25 மதிப்பெண்கள் தனியாக வழங்கப்படுகின்றன. இத்தேர்வுக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியலுக்கு தலா, நான்கு செய்முறைப் பயிற்சிகள் வழங்கப்படும். பின், அவற்றில், தலா ஒரு பயிற்சி, செய்முறைத் தேர்வில் வினாவாக வரும்.
கல்வி உதவித் தொகை தேர்வு(NMMS): விண்ணப்பங்களை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்
தேசிய வருவாய் வழி- திறன் கல்வி உதவித் தொகை (என்.எம்.எம்.எஸ்.) தேர்வுக்கான விண்ணப்பங்களை திங்கள்கிழமை (நவ. 30) முதல் பதிவிறக்கம் செய்யலாம்.
சென்னைப் பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தில் சேர கால அவகாசம் நீட்டிப்பு
சென்னைப் பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தில், 2015-16 கல்வியாண்டுக்கான பல்வேறு படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.அதன்படி, பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஒற்றைச் சாளர சேர்க்கை மையத்தை வருகிற டிசம்பர் 19-ஆம் தேதி வரை மாணவர்கள் நேரடியாகத் தொடர்புகொண்டு சேர்க்கை பெறலாம்.
கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அறிய உத்தரவு: அரசு கல்லூரி பேராசிரியர்கள் அதிருப்தி
போலி கல்விச் சான்றிதழ்கள் கொடுத்து பணியில் சேர்ந்துள்ளனரா என்பதைக் கண்டறிவதற்காக, அரசுக் கல்லூரி பேராசிரியர்களின் அனைத்துச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அறிய உயர் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
Sunday, November 29, 2015
உதவி பேராசிரியர் தேர்வு பட்டதாரிகள் ஓராண்டு காத்திருப்பு
அரசு இன்ஜி., கல்லுாரி உதவி பேராசிரியர் பணிக்கு எழுத்து தேர்வு அறிவித்து ஓராண்டாகியும் தேர்வு நடத்தாததால், விண்ணப்பதாரர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். தமிழகத்திலுள்ள இன்ஜி., மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளில், காலியாக இருந்த, 139 உதவி பேராசிரியர் பணியிடத்தை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கடந்த, ஜூலையில் அறிவிப்பு வெளியிட்டது.முதுகலை பட்டத்துடன், எம்.பில்., ஸ்லெட், நெட், முடித்தவர்கள் என, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரிகள், விண்ணப்பித்திருந்தனர்.
பள்ளியின் பூட்டை உடைத்து கணினி, தொலைக்காட்சி பெட்டிகள் திருட்டு
ஆம்பூர் அருகே ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் பூட்டை உடைத்து கணினி, தொலைக்காட்சிப் பெட்டிகள் திருடுபோனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். அண்மையில் பெய்த பலத்த மழை காரணமாக கானாற்றில் ஏற்பட்ட வெள்ளம் ஆம்பூர் அருகே ஆலாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் தேங்கியது.
ஏழாவது ஊதியக் குழுவின் படி புதியதாக நிர்ணயம் செய்யவுள்ள புதிய அடிப்படை ஊதியம் குறித்த கணக்கீடு
31.12.2015 இல் D.A 119%
01-01-2016 - ல் அகவிலைப்படி உயர்வு 6%
கூடுதல் (119% + 6%) = D.A 125%.
கணக்கீட்டுக்காக எடுத்துக்கொள்ளும் ஊதியம்:
Pay 100% + D.A 125% (அதாவது 01.01.2016 இல் ஊதியம்)
= 225% = 2.25
# அரசு வழங்கும் ஊதிய உயர்வு 14.29%,
F.F = 2.25 + அரசு வழங்கும் ஊதிய உயர்வு 14.29% ( 2.25 x 14.29%)
= 2.25 + ( 2.25 × 14.29% )
= 2.25 + 0.32
= 2.57
பிளஸ் 2 இடைநிலைத் தேர்வில் ஆங்கிலம், கணிதத்தில் அதிகமானோர் தோல்வி: ஆசிரியர்களுக்கு சிறப்பு கற்பித்தல் பயிற்சி
மதுரை மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற இடைநிலைத் தேர்வுகளில் ஆங்கிலம், கணிதத்தில் அதிகமான மாணவர்கள் தோல்வியடைந்திருப்பது தெரியவந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு, கடந்த 16 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை இடைநிலைத் தேர்வுகள் நடைபெற்றன. அத்தேர்வுகள் அடிப்படையில், 50 சதவிகித மாணவர்கள் ஆங்கிலம், கணிதம் மற்றும் பொருளியல், வணிகவியல், கணக்குப் பதிவியல் ஆகிய பாடங்களில் அதிகமாக தோல்விடைந்துள்ளது தெரியவந்துள்ளது.
ஆசிரியர்கள் மறியல் போராட்டம்டிச., 1ல் மனு அளிக்க 'ஐாக்டோ' முடிவு
ஆசிரியர்களின், 15 அம்ச கோரிக்கை குறித்தும், டிச., 28ம் தேதி மறியல் போராட்டம் குறித்தும், வரும் 1ம் தேதி ஜாக்டோ நிர்வாகிகள், தலைமைச் செயலகத்தில் மனு அளிக்க உள்ளனர். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து, மத்திய அரசுக்கு இணையான இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம், ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு சட்டம், தமிழை முதல் பாடமாக்க அரசாணை உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக்குழுவான ஜாக்டோ, கடந்த பிப்ரவரி முதல் போராட்டம் நடத்துகிறது.
"எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி" கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தல்
பள்ளி மாணவர்களுக்கு எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் கொள்கையை ரத்து செய்யும் வகையில், கல்வி உரிமைச் சட்டத்தில் (ஆர்டிஇ) திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பஞ்சாப் உள்ளிட்ட 13 மாநிலங்கள், மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன.
பெல் நிறுவனத்தில் லேப் டெக்னீசியன், கிளார்க், பொறியாளர் பணி
மத்திய அரசின்கீழ் மகாராஷ்டிரா புனேவில் செயல்பட்டு வரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் பெல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள லேப் டெக்னீசியன், கிளார்க், தொழில்நுட்பவியலாளர் மற்றும் பொறியியல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்னப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 31
1. Deputy Engineer (Electronics)- 04
2. Deputy Engineer (Mechanical)- 11
3. Lab Technician-C- 02
4. Technician-C- 06
5. Clerk-cum-Computer Operator-C- 04
6. Engineering Assistant- 04
Saturday, November 28, 2015
”தினமணி” நாளிதழில் ”தேவையற்ற சுமை” என்ற தலைப்பில் வெளிவந்த தலையங்கத்திற்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவரின் பதில்
23.11.2015 அன்று தினமணி நாளிதழில் மத்திய அரசு அறிவித்த ஏழாவது ஊதியக்குழு அறிக்கை தொடர்பாகவும,அரசு அலுவலர்களுக்கு ஊதியம் அறிப்பது ’’தேவையற்ற சுமை” என்ற தலைப்பில் தலையங்கம் எழுதப்பட்டது.
அத்தலையங்கத்திற்கு பதில் :
தமிழகத்தில் தொண்ணுற்று ஐந்து ஆண்டு காலம் பாரம்பரியமிக்கதும்,தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற சங்கங்களில் முதன்மையானதாக திகழ்ந்து வருவதும்,தமிழக அரசில் பணிபுரியும் அரசு அலுவலர்களில் சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு அலுவலர்களை உறுப்பினர்களாக கொண்டுள்ளதும்,தமிழக அரசு அலுவலர்களின் பாதுகாப்பு அரணாக திகழ்ந்து வரும் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் என்ற முறையில் இந்தக் கடிதத்தினை தினமணி நாளிதழ் ஆசிரியர் அவர்களின் கனிவான பார்வைக்கு வைக்க விரும்புகின்றேன்.
ஆன்லைனில் மார்க்!: சி.பி.எஸ்.இ., அறிமுகம்
பிரதமரின், 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தில், அனைத்து துறைகளையும் கணினிமயமாக்க, நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன் படி, கல்வித் துறையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி சேவை பிரிவைத் துவக்கி, பாடம் நடத்துதல்; மாணவர்களின் கல்வித் திறனை ஆய்வு செய்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
சென்னை பல்கலை தேர்வுகள் தேதி அறிவிப்பு
சென்னை, காஞ்சி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 12 தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இதனால், சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளில் அன்றைய தினம் தேர்வு நடைபெறவில்லை.
DEC - 2015 TRAINING FOR PRIMARY AND UPPER PRIMARY TEACHERS.
IED Training : - (30.11.2015) to (4.12.2015) - 5 days IED TRAINING for primary teacher.
5 days IED training for upper primary teachers
5 days IED training for Angan wadi
SMC Training:- 30.11.2015, 1.12.2015 - 2 days SMC RP training
9.12.2015 to 13.12.2015 - 3 days SMC TRAINING (1st Batch)
பிளஸ் 2 மாணவர்களுக்கு புது கட்டுப்பாடு
அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், தேர்வில் அதிக மதிப்பெண் பெற, மூன்று வகை சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, மார்ச் முதல் வாரம் துவங்க உள்ளது. பிளஸ் 2 தேர்வில், நான்கு ஆண்டுகளாக அரசு பள்ளி மாணவர்கள், மாநில ரேங்க் பெறவில்லை; தேர்ச்சி சதவீதத்திலும், பின்தங்கினர்.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களிடம் உறுதி மொழி எழுதி வாங்கும் கல்வித்துறை
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக, மாணவர்களிடம், புதிதாக உறுதிமொழி எழுதி வாங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச் முதல் வாரத்தில் பொதுத்தேர்வு நடக்க உள்ளது. இதற்காக, மாணவர்களிடம், புதிதாக உறுதிமொழி படிவத்தில் கையெழுத்து வாங்கி, தேர்வுத் துறைக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது.
இடைநின்ற மாணவர்களின் பட்டியல் தயாரிக்க உத்தரவு
பள்ளிகளில், 8ம் வகுப்புக்குள் படிப்பை நிறுத்திய மாணவர் பட்டியலை கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசின், கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தின் படி, 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், இலவசமாக, கட்டாயம் கல்வி வழங்க வேண்டும்; இதற்கு மத்திய அரசு மூலம் நிதி உதவி அளிக்கப்படுகிறது.
பணிநிரவலால் பதறும் 2 ஆயிரம் ஆசிரியர்கள்: 'கவுன்சிலிங்' நடத்தப்படுமா?
மாநிலம் முழுவதும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்- மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, உபரி ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேர், கலந்தாய்வு இல்லாமல் விரைவில் பணிமாற்றம் செய்யப்பட உள்ளதால் கலக்கமடைந்துள்ளனர்.
தேர்வு நேரத்தில் இடமாற்றம் ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சி
அரையாண்டுத் தேர்வு நேரத்தில், அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளதால், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் வருடாந்திர பணியிட மாற்றம் மற்றும் உபரி ஆசிரியர்கள் கலந்தாய்வு கடந்த மாதம் தான் முடிந்தது. ஆசிரியர்கள் புதிய இடத்துக்கு சென்று, பாடங்களை நடத்துகின்றனர்.
Friday, November 27, 2015
பாடம் முடிக்காமல் தேர்வா?
வட கிழக்குப் பருவ மழை காரணமாக, 9ம் தேதி முதல், பல்கலை, கல்லுாரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது; தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.
கலை கல்லூரிகளுக்கு தரவரிசை; யு.ஜி.சி.,அறிவிப்பு
நாட்டில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளுக்கும், தரவரிசை திட்டத்தை கட்டாயப்படுத்தி, யு.ஜி.சி., சேர்மன் வேத் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.
அண்ணா பல்கலை. பேராசிரியர்கள் நேரடி நியமனத்தை ரத்து செய்யக் கோரி வழக்கு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் நேரடியாக நியமனம் செய்வதை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் பணிக்கான தொகை தாமதம் ஓட்டுச்சாவடி களப்பணியாளர்கள் அவதி
மத்திய அரசிடமிருந்து பெறப்படும் தேர்தல் பணிகளுக்கான செலவுத்தொகை வராததால் ஓட்டுச் சாவடி நிலைய அலுவலர்கள் தவிக்கின்றனர்.தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களில் கடந்த அக்டோபரில் வரைவு வாக்காளர் பட்டியில் வெளியிடப்பட்டது. பின், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், இடமாற்றம் தொடர்பான படிவங்கள் பெறப்பட்டன.
ஐ.ஏ.எஸ்., அதிகாரியை எதிர்த்து பேச்சு: 22 தலைமை ஆசிரியருக்கு 'மெமோ'
கல்வி ஆய்வு கூட்டத்தில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூஜா குல்கர்னியை எதிர்த்து பேசி, வெளிநடப்பு செய்த, 22 தலைமை ஆசிரியர்களுக்கு, ஒழுங்கு நடவடிக்கை குற்றச்சாட்டின் கீழ், 'நோட்டீஸ்' கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கற்றல் திறன் குறித்த ஆய்வு கூட்டம், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த மாதம் நடந்தது; 100 தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
நீண்ட விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 29 ஆயிரம் மாணவர்களுக்கு மீண்டும் கல்வி உதவிகள்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நீண்ட விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன. முதல்நாளில் வந்த பெரும்பாலான மாணவர்களுக்கு பாடங்கள் விறுவிறுப்பாக நடத்தப்பட்டதாகவும், வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகள், தாழ்வான பகுதிகளைச் சேர்ந்தவர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே பள்ளிகளுக்கு வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், 29 ஆயிரம் மாணவர்களுக்கு விலையில்லா கல்வி உதவிகள் ஓரிரு நாள்களில் மீண்டும் வழங்கப்பட உள்ளது.
தமிழக கல்வித்துறைக்கு 4 ஆண்டுகளில் ரூ.85,680 கோடி ஒதுக்கீடு:அமைச்சர் கே.சி.வீரமணி
நாட்டில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழக அரசு கல்வித்துறை வளர்ச்சிக்காக, கடந்த நான்கு ஆண்டுகளில் இதுவரை ரூ.85,680 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி குறிப்பிட்டார்.
அரையாண்டு தேர்விலும் விடுமுறையிலும் மாற்றமில்லை கல்வி அதிகாரிகள் சுற்றறிக்கை
அரையாண்டுத் தேர்வு மற்றும் பருவத் தேர்வை ஏற்கனவே அறிவித்தபடி முடித்து, கிறிஸ்துமஸ் விடுமுறை விட, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், 12 வேலை நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு, இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
நாளை முதல் 2 நாள்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு
தென் கிழக்கு வங்கக் கடல், அதை ஒட்டிய பகுதியில் நீடிக்கும் மேலடுக்குச் சுழற்சியானது, அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுப்பெறும் வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மைய அதிகாரிகள் கூறியதாவது: தெற்கு அந்தமான் கடல், அதை ஒட்டிய பகுதியில் நிலை கொண்டிருந்த மேலடுக்குச் சுழற்சியானது, வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் மேற்கு நோக்கி நகர்ந்துள்ளது.
ஆசிரியர்கள் பி.எப்., கணக்கு மாயம் 81 அதிகாரிகளுக்கு 'நோட்டீஸ்'
மதுரை, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில், ஆசிரியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கு விவரம் காணாமல் போனதாக புகார் எழுந்து உள்ளது. தொடக்கக் கல்வித் துறையில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில், 5ம் வகுப்பு வரையுள்ள பள்ளிகளில், 1.20 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களின், பி.எப்., எனப்படும், வருங்கால வைப்பு நிதி கணக்குகள், மாநில தகவல் தொகுப்பு மையத்தால் பராமரிக்கப்பட்டு வந்தன.
குறைந்த மதிப்பெண் மாணவர்களுக்காக வெற்றிப்படி! மாநகராட்சி பள்ளிகளில் சிறப்பு வகுப்பு
கோவை மாநகராட்சி பள்ளிகளில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில், குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களுக்காக, 'வெற்றிப்படி' என்ற, சிறப்பு வகுப்பு துவங்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், 2,480 மாணவர்கள் பத்தாம் வகுப்பு படிக்கின்றனர். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, மாநகராட்சி பள்ளிகளில், அரையாண்டு தேர்வுக்கு பிறகு, காலை மற்றும் மாலை நேரத்தில் சிறப்பு வகுப்பு நடத்தப்படவுள்ளது. இந்நிலையில், மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் 24 பள்ளிகளுக்கு வரும் 29-ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிப்பு
சென்னையில் 24 பள்ளிகளுக்கு வரும் 29-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிற பள்ளிகள் வழக்கம் போல செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
Thursday, November 26, 2015
3 நாட்களுக்கு கன மழை
'வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்று அழுத்த தாழ்வு, குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலையாக மாறுவதால், தமிழகம், புதுச்சேரியில், நாளை முதல் மூன்று நாள்களுக்கு கன மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் இன்று பள்ளிகள் திறப்பு
கனமழை காரணமாக சென்னை, காஞ்சி, திருவள்–்ளுர் மாவட்டங்களில் 19 நாட்களுக்கு பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. இருப்பினும் மழை நீர் சூழ்ந்த பள்ளிகள் இயங்காது என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மாறாக வி.ஏ.ஓ., தேர்வுக்கு வயது வரம்பு: வேலையில்லா பட்டதாரிகள் ஏமாற்றம்
பட்டதாரிகள் அரசு தேர்வு எழுதுவதற்கு வயது உச்சவரம்பு தேவையில்லை என்ற உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை, வி.ஏ.ஓ., தேர்வில் நடைமுறைப்படுத்தாததால், வேலையில்லா பட்டதாரிகள் ஏமாற்றமடைந்து உள்ளனர்.
வெள்ளத்திலும் வேலை தனியார் பள்ளி ஆசிரியைகள் அதிருப்தி
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்வதால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு, கடந்த சில நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வர வேண்டும் என, பல தனியார் பள்ளி நிர்வாகங்கள் கட்டாயப்படுத்தி உள்ளன.
அரையாண்டு தேர்விலும் விடுமுறையிலும் மாற்றமில்லை
அரையாண்டுத் தேர்வு மற்றும் பருவத் தேர்வை ஏற்கனவே அறிவித்தபடி முடித்து, கிறிஸ்துமஸ் விடுமுறை விட, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மழை வெள்ளத்தால், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், 12 வேலை நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு, இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
அரசு ஊழியர்கள் சம்பளம் வாங்க 'ஆதார்' எண் கட்டாயம்?
'தமிழக அரசு ஊழியர்கள், நவ., மாத சம்பளம் வாங்க, 'ஆதார்' எண்ணை இணைக்க வேண்டும்' என, சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.தமிழக அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களின் நவம்பர் மாத சம்பள பட்டியல், இன்று தயார் செய்யப்பட்டு, கருவூலங்களுக்கு அனுப்பப்படும். இந்த நிலையில், 'ஆதார் எண் அல்லது ஆதார் எண்ணுக்கு விண்ணப்பம் செய்ததற்கு பெற்ற ஒப்புகை ரசீதை, சம்பள பட்டியல் தயார் செய்யும் அலுவலரிடம், இன்று அளிக்க வேண்டும்' என, அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லாவிடில், 'நவ., மாத சம்பளம் அளிப்பது தாமதமாகும்' என்றும் கூறப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகள் திறந்தாச்சு: ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை
சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், 18 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பின், இன்று பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படுகின்றன. வெள்ளம் தேங்கிய சில இடங்களுக்கு மட்டும், இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், நவ., 9 முதல் மழை விடுமுறை துவங்கியது. தீபாவளிக்கு மறுநாள், 11ம் தேதி, சில பள்ளி, கல்லுாரிகள் திறந்தாலும், மழை தொடர்ந்ததால் அரை நாள் மட்டுமே இயங்கின. தொடர்ந்து விடுமுறைமழையின் சீற்றம் அதிகரித்ததால், ஒவ்வொரு நாளும் தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டது.
பிளஸ் 2 தேர்வு தேதி அடுத்த வாரம் அறிவிப்பு
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, 2016 மார்ச்சில், பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும்; ஏப்ரலில், சட்டசபை தேர்தல் வருவதால், பிப்., 29ம் தேதி தேர்வுகளை துவங்க, பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது. இதன்படி, பொதுத்தேர்வுக்கான இறுதி வினாத்தாள் தேர்வு பணி நடக்கிறது.
அரசு மகளிர் பள்ளியில் மொபைல் போன்கள் பறிமுதல்
கரூர் மாவட்டம், குளித்தலை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், கடந்த வாரம், பிளஸ் 1 படிக்கும் நான்கு மாணவியர் மாயமாகி பரபரப்பை ஏற்படுத்தினர். நேற்று முன்தினம் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவியரிடம் ஆசிரியர்கள் சோதனை நடத்தினர்.
Wednesday, November 25, 2015
மத்திய அரசின் போட்டிக்கு பள்ளி அளவிலான தகுதி தேர்வு
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு துறையால் நடத்தப்படவுள்ள தேசிய போட்டிக்கு மாணவர்களை பள்ளி அளவில் தேர்வு செய்யும் தகுதி போட்டி நடைபெற்றது.
ஏழாவது சம்பள கமிஷன் சம்பள உயர்வு பரிந்துரையால் பணித்திறன் அதிகரிக்கலாம்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரை மகிழ்ச்சி அளிக்கும். மத்திய அரசு ஊழியர்கள், 48 லட்சம் பேர் மட்டுமின்றி, பென்ஷன் பெறுவோரும் பயனடைவர். இந்த பரிந்துரையை அரசிடம் தயாரித்து சமர்ப்பித்த நீதிபதி மாத்துாரின் நுாற்றுக்கணக்கான பக்கங்கள் கொண்ட அறிக்கையில், சில புதிய அணுகுமுறைகள் பரிந்துரைக்கப் பட்டுள்ளன.
வேலூரில் 1,317 பள்ளிக் கட்டிடங்கள் மழையால் பலத்த சேதம்: அரசுக்கு கல்வித் துறை அறிக்கை
வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் 1,317 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிக் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக அரசுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிக்கை அனுப்பியுள்ளது. தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. வேலூர் மாவட்டத்தில், தொடர் மழை காரணமாக பல்வேறு பள்ளிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிக் கட்டிடங்கள் மழையால் சேதமடைந்துள்ளதாக அரசுக்கு புகார் சென்றது. இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிக் கட்டிடங்களை ஆய்வு செய்து அதற்கான அறிக்கைகளை சமர்ப்பிக்கும்படி பள்ளிக்கல்வித் துறைக்கு அரசு உத்தரவிட்டது.
பள்ளியில் மது அருந்திய 4 மாணவியர் 'டிஸ்மிஸ்'
நாமக்கல்: பள்ளி வகுப்பறையில் பிறந்த நாள் விருந்து கொண்டாடிய அரசு பள்ளி மாணவியர், குளிர்பானத்தில் மது கலந்து குடித்து, போதையில் மயங்கி விழுந்தனர். இதையடுத்து, நான்கு மாணவியரையும், 'டிஸ்மிஸ்' செய்து, பள்ளி தலைமையாசிரியை 'டிசி' வழங்கினார்.
மழை விடுமுறையை ஈடுகட்ட பள்ளிகள் செய்யப் போவது என்ன?
சென்னை உட்பட தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் மழை காரணமாக கடந்த 15 நாட்களுக்கும் மேலாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.பொதுவாகவே, எதிர்பாராத விடுமுறைகளை ஈடுகட்ட, பள்ளிகள் சனிக்கிழமைகளில்இயங்குவது வழக்கம்.
10ம் வகுப்பு துணைத் தேர்வு இன்று மறுகூட்டல் 'ரிசல்ட்'
பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுக்கான மறுகூட்டல் முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன.இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர் (பொறுப்பு) வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தொடர் கனமழை எதிரொலி; பள்ளிகள் தொடர் விடுமுறையால் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு?
தொடர் கனமழை காரணமாக பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்க கல்வித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். பொதுவாக பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகளை டிசம்பர் மாதம் 2 மற்றும் 3-வது வாரங்களில் நடத்திவிட்டு 4-வது வாரம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகள் அளிக்கப்படுவது வழக்கம்.
இளைஞர் படையினருக்கு நவ.29ல் எழுத்துத் தேர்வு
தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படையினருக்கு, 29ம் தேதி, எழுத்துத்தேர்வு நடக்கிறது.தமிழக போலீசில், போலீசாருக்கு உறுதுணையாக செயல்பட, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, சிறப்பு காவல் இளைஞர் படையினர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள், தங்களை போலீசாராக அறிவிக்க வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை விடுத்ததை அடுத்து, சில மாதத்திற்கு முன், அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.
Tuesday, November 24, 2015
சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி. கல்லூரிகளுக்கு நாளை நவம்பர் 25 விடுமுறை அறிவிப்பு.
சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி. கல்லூரிகளுக்கு
7 வது ஊதியக்குழுவில் பென்ஷன் (5 Easy Steps for Calculation)
First They have to calculate the Two options and whichever is benefit for them They can select higher amount as their Pension
Option No.1 . The existing Pension may be Multiplied by 2.57
Option No.2 . The Pay Scale on their retirement and Number of increments they earned to be taken for calculation
In that Case they should know their Pay Scale and Basic Pay drawn on the date of their Retirement and number increments they earned
இன்றைய கல்வித் தேவை
ஒரு நாட்டின் வளம் அந்த நாட்டின் கல்வித்தரத்தைப் பொருத்தே அமைகிறது. இதனை உலக வங்கி, "2000-ஆம் ஆண்டின் நலிவும் நம்பிக்கையும்' என்னும் தன்னுடைய ஆண்டறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
27-இல் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டி
திருப்பூரில் வரும் 27ஆம் தேதி அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் மட்டும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு அரையாண்டுத் தேர்வை தள்ளி வைக்க, கல்வித்துறை முடிவு
வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் மட்டும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு அரையாண்டுத் தேர்வை தள்ளி வைக்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்துடன், அரையாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களையும் குறைக்காமல் இருப்பது குறித்து, கல்வித்துறை பரிசீலனை செய்து வருகிறது. எனவே, மாணவர்கள் குஷியாகியுள்ளனர்.
கல்விக் கடனுக்கு அசலுக்கு மேல் வட்டிபொறியியல் பட்டதாரிகள் அதிர்ச்சி
சிவகங்கை மாவட்டத்தில் தேசிய வங்கிகளில் கல்விக் கடன் பெற்றவர்களிடம் அசலுக்கு மேல் வட்டி கேட்பதாக பாதிக்கப்பட்ட பொறியியல் பெண் பட்டதாரிகள் சிவகங்கை கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.கடந்த காங்., ஆட்சியின் போது, நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம் ஏழை மாணவர்கள் கல்வி கற்க வங்கிகள் மூலம் கல்வி கடன் வழங்கச் செய்தார். தேசிய வங்கிகள் பொறியியல், மருத்துவம், பி.எட்., உள்ளிட்ட படிப்பிற்கு கல்விக் கடன் வழங்கின. கடன் பெறும் மாணவர்கள்,படிப்பை முடித்து, வேலை தேடுவதற்கு 6 மாதம் ஆகும். அது வரை கடன் பெற்றோரிடம் வட்டி வசூலிக்கப்படமாட்டாது என வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மாநகராட்சி பள்ளிகளில் 'டேப்லெட்' கல்வி கற்றல், கற்பித்தலை மேம்படுத்த முயற்சி
கோவை மாநகராட்சி பள்ளிகளில், மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் திறனை மேம்படுத்த, 'டேப்லெட்' கல்வி முறை, அமல்படுத்தப்படுகிறது. இதன் மூலம், மாணவர்கள் சுயமாக கற்கும் திறன், புரிதல் கல்வி மேம்படும். கோவை மாநகராட்சியிலுள்ள, காதுகேளாதோர் சிறப்பு பள்ளியில், மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்த, 'அமெரிக்கன் இந்தியன் பவுண்டேஷன்' சார்பில், 'டேப்லெட்' கல்வி முறை அமல்படுத்தப்பட்டது. இந்த முறைக்கு மாணவர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளதால், அனைத்து மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிகளிலும், 'டேப்லெட்' கல்வி முறையை புகுத்த திட்டமிடப்பட்டது.
பள்ளி வளாகங்களில் தேங்கிய நீரை அகற்ற உத்தரவு
பள்ளி வளாகங்களில் தேங்கியுள்ள மழை நீரை, 'பம்ப்செட்' மூலம் வெளியேற்றவும், கிருமி நாசினி மருந்து தெளிக்கவும், பொதுப்பணித் துறை மற்றும் சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் மழை குறைந்து மீட்பு பணி நடந்து வருகிறது. பள்ளி, கல்லுாரிகளில் சீரமைப்பு பணி துவங்கி உள்ளது. பள்ளி, கல்லுாரி வளாகங்களில் தேங்கியுள்ள நீரை, பொதுப்பணித்துறை மூலம் அகற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.
கனமழை... 7 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர்,
Monday, November 23, 2015
தமிழகத்துக்கு நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.939.63 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு
தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு எழுதிய கடிதத்தினைத் தொடர்ந்து தமிழகத்துக்கு நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.939.63 கோடியை ஒதுக்கீடு செய்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஏழாவது ஊதியக் குழு அறிக்கையை எதிர்த்து விரைவில் போராட்டம்
தஞ்சாவூரில் ஏழாவது ஊதியக் குழு அறிக்கையை எதிர்த்து விரைவில் போராட்டம் நடத்துவது என எஸ்.ஆர்.இ.எஸ். (தெற்கு ரயில்வே ஊழியர் சங்கம்) முடிவு செய்துள்ளது. தஞ்சாவூரில் எஸ்.ஆர்.இ.எஸ். மாவட்டக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
நீடிக்கிறது காற்றழுத்த தாழ்வு 2 நாட்களுக்கு மழை உண்டு
'வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, குமரி கடல் பகுதியில் நீடிப்பதால், தமிழகத்தில், இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை உட்பட, தமிழகத்தின் வட மாவட்டங்களில், இடைவிடாது கொட்டித் தீர்த்த கனமழையால், பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன. சற்று மழை ஓய்ந்து மீட்பு பணிகள் தொடரும் நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால், தென் மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது.
திறன் அடிப்படையில் சம்பளம்? ஏழாவது மத்திய சம்பளக் கமிஷன் பரிந்துரை
ஏழாவது மத்திய சம்பளக் கமிஷன், மத்திய அரசின் அனைத்துபிரிவு ஊழியர்களுக்கும், திறன் அடிப்படையிலான சம்பளம் வழங்க பரிந்துரைத்துள்ளது. ஏழாவது மத்திய சம்பளக் கமிஷன் அளித்த பரிந்துரைகள் விவரம்:மத்திய அரசின் அனைத்து பிரிவு ஊழியர்களுக்கும் திறன் அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட வேண்டும்.
தேர்வுகள் ரத்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
இன்று முதல் 28-ந்தேதி வரை நடைபெற இருந்த என்ஜினீயரிங் மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
ஆசிரியர்களுக்கு பேரிடர் பயிற்சி
சென்னை:மாவட்ட வாரியாக, ஆசிரியர்களுக்கு பேரிடர் மேலாண்மைப் பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது; சென்னையில், இன்று பயிற்சி துவங்குகிறது.
மாணவர்கள் மகிழ்ச்சி, பெற்றோர்கள் கவலை சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் 17வது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை, காஞ்சி ஆகிய மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக 17வது நாளாக இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 7ம் தேதி முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த வாரம் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் பேய்மழை கொட்டி தீர்த்தது.
அழியாத அடையாள மைக்கு பதிலாக விரைவில் மார்க்கர் குறி: தேர்தல் கமிஷன் பரிசீலனை
சுதந்திரத்துக்கு பின்னர் நமது நாட்டில் நடைபெற்றுவரும் தேர்தல்களில் வாக்காளர்களின் விரல்களில் வைக்கப்படும் அழியாத மைக்கு பதிலாக நவீன மார்க்கர்களின் மூலம் அடையாளம் பதிக்கும் புதிய நடைமுறை பற்றி மத்திய தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகின்றது.
Sunday, November 22, 2015
7-வது ஊதிய குழு பரிந்துரை குறித்து அரசு ஆய்வு: மத்திய அமைச்சர்
ஏழாவது ஊதிய குழு பரிந்துரைகளை அரசு சரியான கண்ணோட்டத்தில் ஆய்வு செய்து வருகிறது என மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் கூறினார். நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வதியர்களின் ஓய்வூதியத்தை மாற்றியமைக்க, நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான 7-வது ஊதிய பரிந்துரைக் குழுவை, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியமித்தது.
15 மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு
கனமழை காரணமாக தருமபுரி, அரியலூர் (பள்ளிகள் மட்டும்), விருதுநகர் (பள்ளிகள் மட்டும்), சென்னை, திருவள்ளூர் (பள்ளிகள் மட்டும்), காஞ்சிபுரம், விழுப்புரம், நாகை, திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி (பள்ளிகள் மட்டும்), பெரம்பலூர் (பள்ளிகள் மட்டும்), தூத்துக்குடி தாலுக்கா (பள்ளிகள் மட்டும்)
7ஆவது ஊதியக் குழு பரிந்துரைகள்:காங்கிரஸ் அதிருப்தி
அண்மையில் வெளியிடப்பட்ட 7ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் குறித்து காங்கிரஸ் கட்சி அதிருப்தி தெரிவித்துள்ளது. பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சமாக 40 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்றும் அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அஜய் மாக்கன், தில்லியில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
அரசுப் பணியிலுள்ள ஆண்களுக்கும் குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு: 7வது ஊதியக் குழு பரிந்துரை
அரசுப் பணியில் உள்ள ஆண்கள், மனைவியில்லாமல் தனியாக குழந்தைகளை வளர்த்து வந்தால் அவர்களுக்கும் குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு அளிக்க 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ளது.
7வது ஊதியக்குழு அறிக்கை அமலானால் தமிழக அரசுக்கு ஏற்படப்போகும் கூடுதல் செலவு ரூ.1,500 கோடி
ஏழாவது ஊதியக்குழு அறிக்கை, மத்திய நிதி அமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்களிடமும், ஊதிய உயர்வு தொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த அறிக்கையை, தமிழகத்தில் அமல்படுத்தும் போது, ஆண்டுக்கு கூடுதலாக, 1,500 கோடி ரூபாய் அரசுக்கு செலவாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசு பணியில், 48 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்; 55 லட்சம் பேர் ஓய்வூதியம் பெறுகின்றனர்.
40 ஆயிரம் ஆசிரியர்கள், சம்பளம் பெறும் தலைப்பை கண்டுபிடிக்க குழு!!!
தமிழகத்தில் சம்பளம் வழங்குவதில், 75 ஆயிரம் தற்காலிக ஆசிரியர் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதில், 35 ஆயிரம் பேர் மட்டுமே சம்பளம் பெறுகின்றனர். காணாமல் போன, 40 ஆயிரம் ஆசிரியர்கள், சம்பளம் பெறும் தலைப்பை கண்டுபிடித்து, முறையாக
மாற்றுவதற்காக, மாவட்டந்தோறும் குழு அமைத்து, ஆய்வு நடத்தப்பட உள்ளது.
டிசம்பர் 2015 மாத குறுவள மையப் பயிற்சி மற்றும் கணிதம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி!!!
*தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 5.12.15 அன்று குறு வள மைய அளவில் நடைபெறவுள்ளது.
புதிய திட்டத்தில், குற்றம் புரியும் ஆசிரியர்களை பள்ளிகள் அமைந்துள்ள கிராம மக்களே, 'தண்டிக்கலாமா? அல்லது 'டிஸ்மிஸ்' பண்ணலாமா?
மத்திய அரசின் 'ஒரே கல்வித்திட்டம்' குறித்த கருத்துக் கேட்பில் கல்வியாளர்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளதால், பல்வேறு ஆசிரியர்கள்சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. புதிய திட்டத்தில், குற்றம் புரியும் ஆசிரியர்களை பள்ளிகள் அமைந்துள்ள கிராம மக்களே,
'தண்டிக்கலாமா? அல்லது 'டிஸ்மிஸ்' பண்ணலாமா?' என்பதை மக்களே தீர்மானிக்கும் வகையில் கல்வித்திட்டம் உள்ளது.
Saturday, November 21, 2015
7-வது சம்பள கமிஷன் பரிந்துரைக்கு மத்திய அரசு ஊழியர்கள் எதிர்ப்பு
சென்னையில் 24-ந்தேதி ஆர்ப்பாட்டம் 7வது சம்பள கமிஷன் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் மத்திய அரசு ஊழியர்கள்வருகிற 24-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.7-வது சம்பள கமிஷன்மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான 7-வது சம்பள கமிஷன் தொடர்பான 900 பக்கங்கள் கொண்ட சிபாரிசு அறிக்கையை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம், சம்பள கமிஷன் குழு தலைவர் நீதிபதி ஏ.கே.மாத்தூர் நேற்று முன்தினம் சமர்ப்பித்தார்.
7-வது ஊதிய குழு பரிந்துரை அமலாகும் போது வீடு, கார், இருசக்கர வாகனங்கள் விற்பனை எகிறும் .
ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள், அடுத்த ஆண்டில் அமல்படுத்தப்படும் போது, மத்திய அரசு ஊழியர்களின் கையில், தாராளமான பணப்புழக்கம் இருக்கும்; இதனால், வீடு, கார், டூ - வீலர், வீட்டு உபயோகப்பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை எகிறும்' என, பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.
அண்ணா பல்கலையில் 280 பேராசிரியர் நியமனம்
மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி உட்பட, 16 இடங்களில் உள்ள அரசு பொறியியல் கல்லுாரிகளில், பேராசிரியர் காலியிடங்களை நிரப்ப, அண்ணாபல்கலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இதன்படி, மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் உட்பட மொத்தம், 13 பாடப் பிரிவுகளில், 178 உதவி பேராசிரியர்கள்; 102 பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஓட்டுநர் பணியிடத்துக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு
செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஓட்டுநர் பணியிடத்துக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆர்.கஜலட்சுமி வெளியிட்ட அறிக்கை:
7th CPC Pay Fixation with examples
Pay Fixation in the New Pay Structure : The fitment of each employee in the new pay matrix is proposed to be done by multiplying his/her basic pay on the date of implementation by a factor of 2.57.
The figure so arrived at is to be located in the new pay matrix, in the level that corresponds to the employee’s grade pay on the date of implementation, except in cases where the Commission has recommended a change in the existing grade pay. If the identical figure is not available in the given level, the next higher figure closest to it would be the new pay of the concerned employee. A couple of examples are detailed below to make the process amply clear.
Seventh Pay Commission Report - List of 196 Allowances (Summary) Chapter 8.1
TOTALLY 196 TYPES OF ALLOWANCES
Subscribe to:
Posts (Atom)