நாட்டில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளுக்கும், தரவரிசை திட்டத்தை கட்டாயப்படுத்தி, யு.ஜி.சி., சேர்மன் வேத் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து கல்லுாரிகளும், மூன்று ஆண்டுகளின் தேர்ச்சி விகிதம், மாணவர் எண்ணிக்கை, ஆராய்ச்சி எண்ணிக்கை, பேராசிரியர் திறன் மேம்பாடு, உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல புள்ளி விவரங்களை, https://www.nirfindia.org/Home இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என, அவர் உத்தரவிட்டு உள்ளார்.
இந்த பட்டியலில், மொத்தம், 795 பல்கலைகள், 39 ஆயிரம் இணைப்பு கல்லுாரிகள் இணைக்கப்பட்டு, 2.37 கோடி மாணவர்களின் கல்வி தேர்ச்சியும், 10.15 லட்சம் பேராசிரியர்களின் கற்பித்தல் திறனும், ஆய்வு செய்யப்படுகின்றன.
No comments:
Post a Comment