செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஓட்டுநர் பணியிடத்துக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆர்.கஜலட்சுமி வெளியிட்ட அறிக்கை:
செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு, பயிற்சித் துறையின் மூலம் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதி உள்ளவர்கள் தங்கள் கல்வி, ஜாதி, அனுபவச் சான்றிதழ்களை இணைத்து அனுப்ப வேண்டும். இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 8-ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். கனரக ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். பொதுப் பிரிவினரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரருக்கான வயது 30-க்குள் இருக்க வேண்டும்.
குறைந்தது 5 வருடம் அனுபவம் உள்ளவர்கள் வரும் டிசம்பர் 2-ஆம் தேதிக்குள் முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், செங்கல்பட்டு என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். ஊதியம் ரூ. 5200-20, ரூ. 20,200, தர ஊதியம் ரூ. 2400 என்ற விகிதத்தில் வழங்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment