சென்னையில் 24 பள்ளிகளுக்கு வரும் 29-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிற பள்ளிகள் வழக்கம் போல செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தீபாவளி விடுமுறைக்கு பின்னர், தொடர் மழை பெய்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு நீண்ட நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து பெரும்பாலான பள்ளி, கல்லூரிகள் வியாழக்கிழமை (நவ. 26) திறக்கப்பட்டன.
இதில், குறிப்பிட்ட 24 பள்ளிகளில் மட்டும் வியாழக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது இந்த 24 பள்ளிகளுக்கும் வரும் 29-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரையில் விடுமுறை நீட்டிப்புச் செய்யப்பட்டுள்ளது.
வரும் 30-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் இந்தப் பள்ளிகளின் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே முடிவு எடுத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment