சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு துறையால் நடத்தப்படவுள்ள தேசிய போட்டிக்கு மாணவர்களை பள்ளி அளவில் தேர்வு செய்யும் தகுதி போட்டி நடைபெற்றது.
மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு துறையால் கட்டுரை மற்றும் ஓவியம் தொடர்பாக போட்டிகள் பள்ளி அளவில் நடத்தப்பட்டன. பெட்ரோல் மற்றும் எரிவாயு ஆகிய இயற்கை வளங்களை பாதுகாத்தல் என்ற தலைப்பில் ஓவிய போட்டியும்,நான் எவ்வாறு பெட்ரோலிய பொருள்களை பாதுகாப்பது,சேமிப்பது,தேசிய அளவில் இதனை பாதுகாப்பது தொடர்பாக எவ்வாறு எடுத்து செல்வது என்கிற தலைப்புகளில் போட்டிகள் நடைபெற்றன..6,7,8 வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் இந்த போட்டியில் பள்ளி அளவில் கலந்துகொண்ட 70க்கும் மேற்பட்ட மாணவர்களில் மாநில அளவில் கலந்துகொள்ள மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.போட்டிக்கான நிகழ்ச்சியில் மாணவர் ரஞ்சித் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் .ஆசிரியை முத்தும் மீனாள் போட்டிகளை நடத்தினார்.போட்டியில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகளில் மூவரை தேர்வு செய்து பரிசு வழங்கப்பட்டது.
கட்டுரை போட்டியில் 8ம் வகுப்பு மாணவர் கண்ணதாசன் முதல் பரிசும்,7ம் வகுப்பு மாணவி தனலெட்சுமி இரண்டாம் பரிசும்,அதே வகுப்பு மாணவி பார்கவி லலிதா மூன்றாம் பரிசும் பெற்றனர். ஓவிய போட்டியில் 8ம் வகுப்பு மாணவி தனம் முதல் பரிசையும்,7ம் வகுப்பு மாணவி பிரவீனா இரண்டாம் பரிசையும் ,அதே வகுப்பு மாணவர் பரத்குமார் மூன்றாம் பரிசையும் பெற்றனர்.நிறைவாக மாணவர் ஜெகதீஸ்வரன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment