மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி உட்பட, 16 இடங்களில் உள்ள அரசு பொறியியல் கல்லுாரிகளில், பேராசிரியர் காலியிடங்களை நிரப்ப, அண்ணாபல்கலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இதன்படி, மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் உட்பட மொத்தம், 13 பாடப் பிரிவுகளில், 178 உதவி பேராசிரியர்கள்; 102 பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இவர்களுக்கு, 37 ஆயிரம் முதல், 74 ஆயிரம் ரூபாய் வரை மாத சம்பளம் நிர்ணயிக்கப்படும். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் மட்டுமே, ஓய்வூதியம் கிடைக்கும். வரும், 23ம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. கூடுதல் விவரங்களை, பல்கலை இணையதளத்தில் அறியலாம்.
No comments:
Post a Comment