Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, December 31, 2016

    த.அ. உ.சட்டம் 2005 - மற்றவர்களின் பணிப்பதிவேட்டை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் வழங்க முடியாது RTI ஆணை!!

    ஜனவரி 1 முதல் ATM-ல் ரூ.4500 எடுக்கலாம்

    ஜனவரி 1 முதல் ஏடிஎம் மையங்களில் ஒரு நாளைக்கு 4500 ரூபாய் வரை எடுக்கலாம் என ஆர்பிஐ அறிவித்துள்ளது. இதற்கு முன் 2500 ரூபாய் எடுக்கலாம் என இருந்தது குறிப்பிடத்தக்கது.

    Friday, December 30, 2016

    ஓய்வூதியம் பெறுபவர்கள் உயிர் வாழ் சான்றிதழை 15-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் வருங்கால வைப்புநிதி கழகம் அறிவிப்பு


    ஓய்வூதியம் பெறுபவர்கள் உயிர் வாழ் சான்றிதழ், மறுமணம் செய்து கொள்ளவில்லை என்பதற்கான சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வருகிற ஜனவரி மாதம் 15-ந் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுஉள்ளது. 

    பி.எச்டி., உதவித்தொகை: விண்ணப்பிக்க நாளை கடைசி


    தமிழக அரசின் ஆராய்ச்சி படிப்பு உதவித்தொகை திட்டத்தின்கீழ் முழு பிஎச்டி-யில் ஈடுபடும் மாணவர்களுக்கு மாதம் ரூ.3,000 வீதம் ஆண்டுக்கு ரூ.36 ஆயிரம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

    கற்றல் அடைவுத்தேர்வு: மதிப்பிடும் முறை துவக்கம்

    கற்றல் அடைவுத்தேர்வு விடைத்தாள், ஆன்-லைன் மூலம், மதிப்பிடும் பணிகள் துவங்கின.தமிழகத்தில், 37 ஆயிரத்து 797 அரசு, அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இங்கு படிக்கும் மாணவர்களின், கற்றல் திறன் பரிசோதிக்க, 'அனைவருக்கும் கல்வி இயக்ககம்' சார்பில், கற்றல் அடைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.

    அகஇ - குறுவளமையப்பயிற்சி - ஜனவரி 2017 - தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 21.01.2017 அன்றும், உயர்தொடக்கக்நிலை ஆசிரியர்களுக்கு 28.01.2017 அன்றும் நடைபெறவுள்ளது.


    Thursday, December 29, 2016

    10ம் வகுப்பு தமிழ் பாட தேர்வுக்கு விலக்கு : அரசு பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

    பத்தாம் வகுப்பு பொது தேர்வில், தமிழ் வழி கல்வி பயிலாத மாணவர்களுக்கு, தமிழ் மொழி பாடம் எழுத, மூன்று ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்க பரிசீலிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    CPS ரத்து கோரிக்கை - அரசு ஊழியர் சங்கத்தினர் முதல்வருடன் சந்திப்பு

    அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள், முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினர்.ஜெ., முதல்வராக இருந்த போது, அவரை, அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளால், எளிதில் சந்திக்க முடியாத நிலை இருந்தது. ஆனால், தற்போதைய முதல்வர் பன்னீர்செல்வத்தை, அனைத்து தரப்பினராலும், எளிதாக சந்திக்க முடிகிறது. 

    Wednesday, December 28, 2016

    7வது ஊதியக்குழு ,CPS நீக்கம் போன்றவைகளை உடனடியாக அமுல்படுத்த அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல் !!

     

    எழுதுங்கள் ஜே.இ.இ.,!

    நாட்டின் தலைசிறந்த தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர்க்கை பெற எழுத வேண்டிய தேசிய நுழைவுத் தேர்வான, ஜாயின்ட் என்டரன்ஸ் எக்சாமினேஷன் (ஜே.இ.இ.,) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது! மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.,) நடத்தும் இந்த பொது நுழைவுத்தேர்வின் அடிப்படையிலேயே, ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி., என்.ஐ.டி., உள்ளிட்ட மத்திய அரசின்கீழ் இயங்கி வரும் பல்வேறு தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

    பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற அரசு பள்ளிகள் தீவிரம்!

    தமிழகத்தில், வரும் மார்ச் மாதம், பிளஸ் 2 மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வு துவங்குகிறது. நாமக்கல்லில் உள்ள அரசு பள்ளிகளில், மாணவர் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    போட்டி தேர்வை எதிர்கொள்ள சிறப்பு பயிற்சி வகுப்புகள் துவக்கம்!

    மத்திய அரசு நடத்தும் இருவித போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் மூலம், அரசு பள்ளி மாணவர்கள் சாதிக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பு மையங்கள் துவக்கப்பட்டு உள்ளன.

    தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 01.12.2016 அன்றைய நிலைப்படி உதவி / கூடுதல் / மழலையர் / அறிவியல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களின் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு

    நலத்திட்ட பொருட்கள் வழங்க ’நோடல்’ மையம் தேவை!

    பாடப்புத்தகம் உள்ளிட்ட, நலத் திட்ட பொருட்கள் வழங்க, வட்டார அளவில், நோடல் மையம் அமைத்தால், பயனுள்ளதாக இருக்கும் என்பது, தலைமையாசிரியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. சமச்சீர் கல்வித்திட்டம் நடைமுறைக்கு வந்தபின், புத்தகச் சுமையை குறைக்க, மூன்று பருவங்களாக பாடப்புத்தகங்கள் அச்சிட்டு வினியோகிக்கப்படுகின்றன. இதுதவிர, சீருடை, நோட்டுகள், மூன்றாம் பருவத்திற்கு, பிரத்யேகமாக மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. 

    8ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு!!!

    எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்கள் இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட நுழைவுச்சீட்டுகளை இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்து அரசுத்தேர்வுகள் மண்டலத்துணை இயக்குனர் வீரகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

    டிஜிட்டல் இந்தியாவில் இன்னமும் 95 கோடி இந்தியர்களிடம் இண்டர்நெட் வசதியில்லை

    இந்தியாவில் ஸ்மார்ட்போன் மற்றும் மொபைல் டேட்டா திட்டங்களின் விலை குறைந்து வருகிறது. இங்கு டேட்டா திட்டங்கள் உலகளவில் குறைந்த விலையில் கிடைக்கிறது. இந்நிலையில் இன்றும் 95 கோடி இந்தியர்களிடம் இணைய வசதியில்லை என்ற தகவல் சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. 

    பாலிடெக்னிக் தேர்வு இன்று 'ரிசல்ட்'

    பாலிடெக்னிக் பட்டயத் தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன.பாலிடெக்னிக் கல்லுாரியில் படித்து வரும் மாணவர்களுக்கு, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில், அக்டோபரில் பட்டயத் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகள், 

    இந்திய ஆட்சிப் பணி (IAS) தேர்வு என்றால் என்ன ? உங்களுக்கு தேவையான விவரங்கள்

    IAS மற்றும் IPS உள்ளிட்ட 24 பணிகளுக்காக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணயத்தினால்(UPSC) ஆண்டிற்கு ஒருமுறை நடத்தப்படும் குடிமைப்பணித் தேர்வே(CIVIL SERVICE EXAM) மிகவும் பிரபலமாக IAS தேர்வு என்று அழைக்கப்படுகிறது.

    30–ந் தேதிக்கு பின்னர் செல்லாத ரூபாய் நோட்டு வைத்திருந்தால் அபராதம்?

    செல்லாததாக அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கான காலஅவகாசம் 30–ந் தேதியுடன் (வெள்ளிக்கிழமை) முடிகிறது. அதன்பின்னர் செல்லாத ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் அபராதம் விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 

    ரேஷன் புகார் பதிவேடு : ஊழியர்களுக்கு உத்தரவு

    ரேஷன் கடைகளில், புகார் பதிவேட்டை, மக்கள் பார்வைக்கு வைக்காமல், ஊழியர்கள்அலட்சியமாக உள்ளனர். ரேஷன் கடைகளில், புகார் பதிவேடு என்ற நோட்டு உள்ளது. அதில், மக்கள், தங்களின் புகார்களை எழுதுவர். தற்போது, பல கடைகளில், புகார் பதிவேடு இல்லாததால், மக்கள் புகார் செய்ய முடியாமல், சிரமப்பட்டு வருகின்றனர். 

    இரண்டு ஊக்க ஊதியம் : தொழிற்கல்வி ஆசிரியர் மனு

    'தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு, உயர் கல்விக்கான இரண்டு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்' என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக பொது செயலர் ஜனார்த்தனன், தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை தலைவர் ஆரோக்கியதாஸ் உள்ளிட்ட, ஆசிரியர் சங்க கூட்டமைப்பினர், நேற்று, பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜன், தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர்.

    Tuesday, December 27, 2016

    WAY TO SUCCESS - SSLC - SPECIAL GUIDE FOR ALL SUBJECTS (TAMIL & ENGLISH MEDIUM)

    தற்காலிக, ஒப்பந்த மற்றும் தொகுப்பூதிய பணி செய்பவர்களுக்கு ஊதிய உயர்வை அரசு வழங்க கோரிக்கை.

    தமிழக அரசின் அனைத்து துறையிலும் ஒப்பந்த முறையில் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்துவரும் அனைத்து வகையான பணியாளர்களுக்கும் அரசு உடனடியான ஊதிய உயர்வை வழங்க வேண்டும். அரசால் நடத்தப்பட்டுவரும் டாஸ்மாக் மதுபான கடை பணியாளர்களுக்கு ஆண்டு வாரியாக தொகுப்பூதியம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. ஊரக வளர்ச்சி துறையில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரியும் கணினி இயக்குபவர்களுக்கும் ஆண்டு வாரியாக தொகுப்பூதியம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

    பணியிடங்களை நிரப்புவதில் இழுபறி; கல்லூரி மாணவர்கள் பாதிப்பு!

    அரசாணை வெளியிட்டும், அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், 2011ம் ஆண்டு வரையிலான காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்பாமல் இழுத்தடிப்பதால், மாணவர்கள் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

    தகுதியற்ற பகுதி நேர ஆசிரியர்கள்; ஆர்.டி.ஐ., தகவலில் அம்பலம்!

    உரிய கல்வித்தகுதி இன்றி, கோவையில் பகுதி நேர ஓவிய ஆசிரியர்கள் மூன்று பேர் நியமிக்கப்பட்டிருப்பது, தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக அம்பலமாகியுள்ளது.

    அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், அரசு நடுநிலைப்பள்ளிகளில் தையல், இசை, ஓவியம் உள்ளிட்ட, கலைப்பாடங்கள் கற்பிக்க, கடந்த 2012ல், 16 ஆயிரத்து 549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 

    டெட்’ சிலபசில் மாற்றம் வருமா? ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு!

    ஆசிரியர் தகுதித்தேர்வு சிலபஸ் படி, பாட வாரியாக அளிக்கும், மதிப்பெண் முறைகளில், மாற்றம் கொண்டுவர வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது. மத்திய அரசு உத்தரவுப்படி, கடந்த 2010 ஆகஸ்ட் 23ம் தேதி, ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்), கட்டாயமாக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு, தமிழக அரசு, 2011 நவ., 11ம் தேதியில் தான், அரசாணை வெளியிட்டது.

    அரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள்: அமைச்சரிடம் கோரிக்கை

    அரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியர்களை நியமித்து 39,000 பட்டதாரிகளுக்கு வேலை அளிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாபா க.பாண்டியராஜனிடம் தமிழ்நாடு பி.எட். வேலையில்லாத கணினி பட்டதாரி ஆசிரியர்கள்  கோரிக்கை வைத்துள்ளனர்.

    Sunday, December 25, 2016

    மத்திய அரசு அதிரடி: இனி கட்டாய தேர்ச்சி கிடையாது!

    அனைத்து பள்ளிகளிலும் இனிமேல் 5ஆம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி செய்யப்படும். 5 முதல் 8 ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறையில் மாற்றம் கொண்டுவர மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு, சட்டத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

    டிச.30-ம் தேதிக்கு பிறகு நேர்மையற்றவர்களுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கும்: பிரதமர் மோடி எச்சரிக்கை

    ஊழலை நாட்டில் இருந்து வேரோடு ஒழிக்கும் வரையிலும்கறுப்பு பணத்திற்கு எதிரான போர்தொடரும் எனவும், நேர்மையற்ற நபர்களுக்கு டிசம்பர் 30-ம் தேதிக்குப்பிறகு பிரச்சனைகள் அதிகரிக்கும்என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

    ஆதாருடன் இணைந்த 'ஆப்' அறிமுகம்:போன் இன்றி பரிவர்த்தனை செய்யலாம்

    டிஜிட்டல்' பணப்பரிவர்த்தனையை வேகப்படுத்தும்விதமாக, ஆதார் எண்ணுடன் இணைந்தஎளிமையான புதிய, 'ஆப்' இன்றுஅறிமுகம் செய்யப்படுகிறது. இதன்மூலம், 'ஸ்மார்ட் போன்' உட்பட, நவீனவசதிகள் ஏதும் இல்லாமல், வர்த்தகர்களின் கணக்கில் பணம்செலுத்த முடியும்.

    விரைவில் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பலர்... மாற்றம்!:ஊழல் நபர்களை நீக்கி நேர்மையானவர்களை நியமிக்க திட்டம்

    தமிழக அரசுநிர்வாகத்தை,முழுமையாக மாற்றிஅமைக்கும் வகையில், விரைவில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள்பலர் மாற்றப்பட உள்ளனர். ஊழல் நபர்களை நீக்கி, நேர்மையானவர்களை முக்கிய பொறுப்புகளில் நியமிக்க, திட்டமிடப்பட்டு உள்ளது.

    சர்ச்சையில் 4 ஆயிரம் ஆசிரியர் 'டிரான்ஸ்பர்' : ரெட்டிக்கு தொடர்பா; கலக்கத்தில் அதிகாரிகள்!

    தமிழக கல்வித்துறையில் பெரும்அளவில் 2014-15ல் நடந்த 4 ஆயிரம்ஆசிரியர்கள் இடமாற்றம்பின்னணியில் சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டிக்குதொடர்பு இருப்பதாக சர்ச்சைஎழுந்துள்ளது. இதனால் கல்விஅதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

    Saturday, December 24, 2016

    பழைய ஓய்வூதியத் திட்டம் : அலுவலர் ஒன்றியம் வலியுறுத்தல்.

    "முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும்,'' என, மதுரையில் அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் சண்முகராஜன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: 

    10ம் வகுப்பு செய்முறை தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்.


    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான செய்முறை தேர்வுக்கு, டிச., 26 முதல் விண்ணப்பிக்கலாம்.இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    விரிவுரையாளர் நியமன பட்டியல் வெளியீடு

    ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் மற்றும் இளநிலை விரிவுரையாளர் பணியில் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வு பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்-செயலர் உமா வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    சிறப்பு பி.காம்., படிப்பு : 'இக்னோ' அறிவிப்பு

    இக்னோ' எனப்படும், இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலையின் மண்டல இயக்குனர், கிஷோர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இக்னோ பல்கலை, தொலைநிலை கல்வியில், சி.ஏ., - ஏ.சி.எஸ்., - ஐ.சி.டபிள்யூ.ஏ., ஆகிய, நிதி தணிக்கை சார்ந்த மாணவர்களுக்கு, சிறப்பு பி.காம்., படிப்பை அறிமுகம் செய்துள்ளது. 

    பணமில்லா பரிவர்த்தனை (கார்டு) மூலம் ரேஷனில் அரிசி, பருப்பு விநியோகம்! மத்திய அரசு அறிவிப்பு.

     நாடு முழுவதும் ரேசன் கடைகளில் பணமில்லா பரிவர்த்தனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    💳 அதன் காரணமாக கிரிடிட், டெபிட், ஏடிஎம், பே-வாலட் போன்றவற்றினால் மட்டுமே பொருட்கள் வாங்க முடியும்.

    Friday, December 23, 2016

    சுற்றுச்சூழல் பாதிக்காத 'எலக்ட்ரிக் சைக்கிள்' அறிமுகம்


    சுற்றுலா துறை கருத்தரங்கில் அறிமுகம் செய்யப்பட்ட, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத, 'எலக்ட்ரிக் சைக்கிள்' பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

    டில்லி குடியரசு தினவிழா அணிவகுப்பு : தமிழக மாணவர்கள் 6 பேர் தேர்வு

    டில்லியில் நடக்கும் 2017 குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்க விருதுநகர் மாவட்ட மாணவர் உட்பட தமிழக கல்லுாரி மாணவர்கள் ஆறு பேர் தேர்வாகி உள்ளனர்.குடியரசு தினத்தன்று முப்படைகள், துணை ராணுவம், என்.சி.சி., மற்றும் என்.எஸ்.எஸ்., மாணவர்களின் அணிவகுப்பு டில்லியில் நடக்கும்.

    10ம் வகுப்பு தேர்வு நேரம் மாற்றுமா தமிழக அரசு?

    'பத்தாம் வகுப்பு தேர்வு நடக்கும் நேரத்தை, மாற்ற வேண்டும்' என, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 2; 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 8ல், துவங்க உள்ளது. பிளஸ் 2 தேர்வு, காலை, 10:00 முதல் பகல், 1:15 மணி வரையும்; 10ம் வகுப்பு தேர்வு, காலை, 9:15 முதல் நண்பகல், 12:00 மணி வரையும் நடக்கிறது.

    பொங்கல் போனஸ் : அரசு ஊழியர் கோரிக்கை

    'அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பொங்கல் போனஸாக, 7,000 ரூபாய் வழங்க வேண்டும்' என, தமிழக அரசின் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

    NEET தமிழ் உள்பட 8 மொழிகளில் மருத்துவ படிப்புக்கான தேசிய நுழைவுத்தேர்வு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு


    2017-18-ம் கல்வி ஆண்டு முதல் மருத்துவ படிப்புக்கான தேசிய நுழைவுத்தேர்வு தமிழ் உள்பட 8 மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    PFRDA ஆணையம் CPS திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை.

    புதிய ஓய்வூதிய திட்டத்தைதமிழகத்தில் நடைமுறைப்படுத்தி வரும்நிலையில் அதற்காக பிடித்தம்செய்த தொகையினை ஆணையத்திடம் ஒப்படைக்க தமிழக அரசுடன்

    பகுதி நேரப் பயிற்றுநர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கக் கோரிக்கை

    பகுதிநேரப் பயிற்றுநர்களுக்குஊதிய உயர்வு அளிக்கவேண்டுமென கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பகுதிநேரப் பயிற்றுநர்கள்சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்வெளியிட்டுள்ள அறிக்கை:

    இரண்டாம் கட்ட கலந்தாய்வு விரைவில் நடக்க வாய்ப்பு!!!

    நடுநிலைப்பள்ளிதலைமையாசிரியர் பணியிடம்ஒப்புதல் கோப்பு அரசிடம்நிலுவையில் உள்ளதால், ஒப்புதல்கிடைத்தவுடன் அதனுடன் சேர்த்து இரண்டாம் கட்ட பதவி உயர்வு  நடத்தப்படும் என

    Thursday, December 22, 2016

    *டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர்களாக 11 பேரை நியமனம் செய்த தமிழக அரசு உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.


    2015 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட 11 டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் நியமனம் செல்லாது, புதிய உறுப்பினர்களை நியமித்து அரசு பிறப்பித்த அரசாணையை சென்னை உயர்நீநீதிமன்றம் ரத்து செய்தது.

    தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன்

    🎀கிரிஜா வைத்தியநாதன் 1981ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரிவு ஐஏஎஸ் அதிகாரி 

    🎀🎀 டாக்டர். கிரிஜா வைத்தியநாதன், சுகாதார பொருளியலில் சென்னை ஐ.ஐ.டி மூலம் முனைவர் பட்டம் பெற்றவர்... 

    Wednesday, December 21, 2016

    அ.தே.இ - பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2017 - பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியல் - திருத்தம் மேற்கொள்ளல் சார்ந்து அறிவுரைகள் வழங்கி இயக்குனர் உத்தரவு

    ரூ.5000 டெபாசிட் கட்டுப்பாடு : தளர்த்தியது ஆர்பிஐ

    ரூ.5000 க்கு மேல் பழைய ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி தளர்த்தி உள்ளது. பழைய ரூ. 500, 1000 நோட்டுக்களை டெபாசிட் செய்வதற்கு புதிய கட்டுப்பாடு ஒன்றைய சமீபத்தில் ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்படி, பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்பவர்கள், ரூ.5000 மட்டுமே டிபாசிட் செய்ய முடியும்.

    தமிழ்நாடு அமைச்சுப் பணி - பயிற்சி - பவானிசாகர், அரசு அலுவலர் பயிற்சி நிலையம் மூலம் இளநிலை உதவியாளர் / உதவியாளர்களுக்கு அடிப்படை பயிற்சி - 31.12.2016 நிலவரப்படி பயிற்சி பெற வேண்டி நிலுவையில் உள்ள பணியாளர்களின் பட்டியல் வெளியீடு

    13 மாவட்ட தலைநகரங்களில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற உத்தரவு

    பதிமூன்று மாவட்ட தலைநகரங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை 20 நாள்களுக்குள் அகற்றுமாறு, மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றக்கோரி மதிமுக பொதுச்செயலர் வைகோ, மதுரை மாநகராட்சியின் முன்னாள் மேயர் எம்.பட்டுராஜன் உள்ளிட்ட பலர், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    ஊதியத்தை ரொக்கமாக வழங்குவதை தடை செய்யும் அவசரச் சட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள், தங்களது ஊழியர்களுக்கான ஊதியத்தை ரொக்கமாக வழங்குவதை தடை செய்யும் அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    தமிழ்நாடு தமிழக தலைமைச் செயலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை

    தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் வீட்டில் நடத்தப்பட்டு வரும் சோதனையின் தொடர்ச்சியாக, தமிழக தலைமைச் செயலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    7th Pay Commission: Central Govt employee union calls nationwide strike on February 15, demand settlement of 21-points-charter demand

    After a massive Parliament march conducted by the central government employees on December 15, the union has called again for a nationwide strike on February 15, 2017, demanding the Union Government to make an immediate settlement of their 21 points charter demands in 7th Pay Commission (7CPC). The strike has been called in a joint cooperation by several central government employees union against what they say “the betrayal and breach of assurance by Home Minister Rajnath Singh, Finance Minister Arun Jaitley and Railway Minister Suresh Prabhu”.

    பொதுத்தேர்வு முறைகேடு தடுக்க தனியார் பள்ளிகளுக்கு கட்டுப்பாடு

    பிளஸ் 2 பொதுத்தேர்வில் முறைகேடு நிகழாமல் தடுக்க, தனியார் பள்ளி தேர்வு மையங்களுக்கு புதிய நிபந்தனைகள் விதிக்க, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. ஆண்டு தோறும், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், 2,500 மையங்களில் நடத்தப்படும்.

    தொடக்கக் கல்வியில் பணிபுரியும் ஆசிரியர்களின் வைப்பு நிதி கணக்குகள் -அரசு தகவல் தொகுப்பு விவர மையத்திலிருந்து மாநில கண்காயருக்கு மாற்றம் செய்யப்பட்டது -தொடக்கக் கல்வி இயக்குநரின் தெளிவுரைகள்.

    பள்ளிக்கல்வி - முப்பருவ கல்வி முறை தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை ஆணை வெளியிட்டது - சில திருத்தங்கள் செய்து ஆணை வெளியீடு

    2ம் கட்ட கலந்தாய்வுக்கு இதுவரை அறிவிப்பில்லை; பதவி உயர்வுக்கு காத்திருக்கும் ஆசிரியர்கள் கடும் அதிருப்தி


    பள்ளி, கல்லூரிகளில் மரம் வளர்ப்பை கட்டாயமாக்க கல்வித்துறை திட்டம்

    'வர்தா' புயலால், மரங்கள் சாய்ந்த நிலை யில், எதிர்கால வெப்பநிலையை சமாளிக்க, பள்ளி, கல்லுாரி மற்றும் பல்கலைகளில், மரம் வளர்க்கும் திட்டத்தை கட்டாயமாக்க, தமிழக கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

    பள்ளி மாணவர்களுக்கு டிக்‌ஷ்னரி தமிழக அரசு திடீர் நிறுத்தம்.

    தமிழக அரசு சார்பில், கடந்த 2011-12 கல்வியாண்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில அகராதி வழங்க, ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இது 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது. ஆங்கிலம்-ஆங்கிலம்-தமிழ் அகராதி என்பதால், பாடத்தில் வரும் பல்வேறு புதிய வார்த்தைகளுக்கு இணையான ஆங்கில வார்த்தையை அறிவதோடு, தமிழில் அதற்கான அர்த்தத்தையும் அறியலாம்.

    நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் வந்த பிறகே ‘நீட்’ தேர்வு நடத்த வேண்டும்: முதல்வருக்கு ஆசிரியர் அமைப்பு கோரிக்கை

    நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னரே ‘நீட்’ நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு ஆசிரியர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

    10-ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு கட்டாயம்: சிபிஎஸ்இ பரிந்துரை.

    மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பாடத் திட்டத்தின் கீழ் பயிலும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2018-ஆம் ஆண்டு முதல் பொதுத் தேர்வு கட்டாயமாகிறது.

    ரேஷன் கார்டில் 6 மாதத்திற்கான உள்தாள் ஒட்ட முடிவு

    ஆதார் இணைப்பு பணி முழுமை பெறாததால், ரேஷன் கார்டில் அடுத்த 6 மாதத்திற்கான உள்தாள் ஒட்டி பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

    Tuesday, December 20, 2016

    அரசு பள்ளி மாணவர் சேர்க்கை: தமிழகம் முதலிடம்: அமைச்சர் கே.பாண்டியராஜன் பெருமிதம்

    அரசு பள்ளி மாணவர் சேர்க்கை விகிதத்தில் நாட்டிலேயே தமிழகம் முன்னிலை பெற்றுள்ளது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறினார். சென்னை முகப்பேர் கிழக்கில் உள்ள அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் 10,000 சதுர அடியில் ரூ.1.5 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பாண்டியராஜன் ஆகியோர் திங்கள்கிழமை திறந்து வைத்தனர். பின்னர் விழாவில் அமைச்சர் கே.பாண்டியராஜன் பேசியது:

    பல்கலை, கல்லூரிகளில் 'டிஜிட்டல்' வழி கட்டணம்

    பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், 'டிஜிட்டல்' பணப் பரிவர்த்தனையை துவக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை, அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில், பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. ரொக்கம் இல்லாத பரிவர்த்தனையை, அனைத்து இடங்களிலும் கொண்டு வர வேண்டும் என, மத்திய அரசு அறிவுறுத்திஉள்ளது. இந்நிலையில், அனைத்து கல்லுாரி மற்றும் பல்கலைகளில், டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் கட்டணங்களை வசூலிக்க, மத்திய பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டு உள்ளது.

    தற்காலிக, ஒப்பந்த மற்றும் தொகுப்பூதிய பணி செய்பவர்களுக்கு ஊதிய உயர்வை அரசு வழங்க கோரிக்கை.

    தமிழக அரசின் அனைத்து துறையிலும் ஒப்பந்த முறையில் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்துவரும் அனைத்து வகையான பணியாளர்களுக்கும் அரசு உடனடியான ஊதிய உயர்வை வழங்க வேண்டும். அரசால் நடத்தப்பட்டுவரும் டாஸ்மாக் மதுபான கடை பணியாளர்களுக்கு ஆண்டு வாரியாக தொகுப்பூதியம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. ஊரக வளர்ச்சி துறையில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரியும் கணினி இயக்குபவர்களுக்கும் ஆண்டு வாரியாக தொகுப்பூதியம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

    ஆனால் 2012ம் ஆண்டு மார்ச் மாதத்தில் அரசுப் பள்ளிகளில் ரூ.5000 தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட 15000க்கும் மேலான பகுதிநேர பயிற்றுநர்களுக்கு முதல் முறையாக ஏப்ரல் 2014 முதல் ரூ.2000 உயர்த்தப்பட்டு ரூ7000/- வழங்கப்பட்டு வருகிறது. ஐந்து ஆண்டுகளில் ஒரே ஒருமுறை மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. வாரம் மூன்று அரைநாளாக, மாதத்திற்கு பன்னிரண்டு அரைநாளாக ஒப்பந்த பணியாக, தொகுப்பூதியப் பணியாக, தற்காலிகப் பணியாக உள்ளதால் பண்டிகை போனஸ்கூட மறுக்கப்பட்டு வருகிறது. பணியின்போது இறந்தவர்களுக்கு இழப்பீடு மறுக்கப்பட்டு வருகிறது. 58 வயது பூர்த்தி அடைந்து பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் மறுக்கப்பட்டு வருகிறது. மகளிர் பகுதிநேர பயிற்றுநர்களுக்கு விடுமுறையுடன் கூடிய மகப்பேறு கால விடுப்பு அனுமதிக்கப்படவில்லை. 







    14வது சட்டசபையில் முதல் கூட்டத்தொடரில் மறைந்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில்  110 விதியில் உறுதியளித்ததை நடைமுறைப்படுத்தி, கடந்த ஐந்து வருடமாக நிலுவையில் உள்ள மே மாதங்களின் தொகுப்பூதியத் தொகையான(ரூ.513019000) 51 கோடியே 30 லட்சத்து 19 ஆயிரம் தொகுப்பூதியத்தை பகுதிநேர பயிற்றுநர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவா மாநிலத்தில் பகுதிநேர பயிற்றுநர்களுக்கு மாதம் ரூ.15000 தொகுப்பூதியம் வழங்கப்பட்டு வருவதைப்போல தமிழத்திலும் வழங்க வேண்டும். கேரள மாநிலத்தில் பகுதிநேரப் பயிற்றுநர்களுக்கு வேலை வழங்கப்படும் முறையை தமிழத்திலும் வழங்க வேண்டும். பகுதிநேரப் பயிற்றுநர்களின் ஊதியம் மற்றும் பணி சார்ந்த கோரிக்கைகளை பலமுறை வைத்தும் இதுவரை ஏற்கப்படவில்லை. 

    14வது சட்டசபையின் கடைசி கூட்டத்தொடருக்கு முன்பு ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் வழங்கக் கோரி வேலைநிறுத்தம் மற்றும் உண்ணாவிரதம் மேற்கொண்ட கல்லூரி விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வும்,  செவிலியர்களுக்கு படிப்படியாக பணி நிரந்தரம் செய்ய உறுதிமொழியும் அரசால் செய்யப்பட்டது. ஆனால் ஜாக்டோ அமைப்பின் 08.10.2015 மற்றும் 01.02.2016 போராட்டங்களின்போது பள்ளிகளை இயக்க பகுதிநேர ஆசிரியர்கள் தமிழக அரசின் உத்தரவின்படி முழுமையாக பயன்படுத்தப்பட்ட 15000க்கும் மேலான பகுதிநேர பயிற்றுநர்களுக்கு ஊதிய உயர்வோ (அ) பணி முன்னேற்றம் சார்ந்த எந்தவொரு உறுதிமொழியோ இதுவரை இல்லாத நிலையால் ஏமாற்றத்துடன் பணிபுரிந்து வருகின்றனர். எனவே பள்ளிக்கல்வி செயலர், அனைவருக்கும் கல்வி இயக்க செயலர்கள் அரசிடம் பரிந்துரை செய்து வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 


    அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விரைவில் ஏழாவது ஊதியக் கமிஷன் அமுல்படுத்தப்பட உள்ளது. மத்திய அரசு அகவிலைப் படியை உயர்த்தும்போது, மாநில அரசும் அவ்வப்போது உயர்த்தி வழங்கி வருகிறது. எனவே பகுதிநேரப் பயிற்றுநர்களைப் போல பணியாற்றிவரும் தற்காலிகமாக, ஒப்பந்த முறையில், தொகுப்பூதியத்தில் அரசுப் பணியை செய்துவரும் அனைவருக்கும் சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒப்பந்த பணியாளர்களுக்கு நிரந்தரப் பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். சம வேலை, சம ஊதியம் என்ற தத்துவத்துக்கு உயிர் கொடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.எஸ்.கெஹர், எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் பஞ்சாப் மாநில ஒப்பந்த தொழிலாளிக்கு ஆதரவாக வழங்கிய தீர்ப்பை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும் நீதிமன்றங்கள், மனித உரிமை ஆணையம் அரசுப்பணியை தற்காலிகமாக, ஒப்பந்த முறையில், தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டு பணிபுரிபவர்களின் தற்போதைய நிலைகள், அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை தானாக முன்வந்து கண்காணித்து நீதியை நிலைநாட்ட வேண்டும்.

    அனைவருக்காகவும்
    கடலூர் செந்தில்
    மாநில ஒருங்கிணைப்பாளர்

    பொதுத்தேர்வு முறைகேடு தடுக்க தனியார் பள்ளிகளுக்கு கட்டுப்பாடு

    பிளஸ் 2 பொதுத்தேர்வில் முறைகேடு நிகழாமல் தடுக்க, தனியார் பள்ளி தேர்வு மையங்களுக்கு புதிய நிபந்தனைகள் விதிக்க, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. ஆண்டு தோறும், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், 2,500 மையங்களில் நடத்தப்படும். இரு வகுப்புகளிலும், 20 லட்சம் பேர் எழுதும் இத்தேர்வு, பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விதிகளுடன் நடத்தப்படுகிறது.

    ‘பழைய ரூபாய் நோட்டு’ வங்கியில் டெப்பாசிட் செய்ய புதிய விதிகள்: தெரிந்துகொள்ள வேண்டிய அம்சங்கள்!

    5,000 ரூபாய்க்கு அதிகமான பழைய ரூபாய் நோட்டுகளை இன்னும் உங்கள் கைகளில் நீங்கள் வைத்துள்ளீர்களா வங்கிகளுக்கு விரைந்து செல்ல
    வேண்டும். ஆரிபிஐ திங்கட்கிழமை இன்று பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெப்பாசிட் செய்வது குறித்து புதிய விதிகளை அறிவித்துள்ளது.

    ⏩புதிய 5000 ரூபாய் விதி

    புதிய விதிப்படி அதிகப்படியான தொகையை டிசம்பர் 30 வரை ஒரு முறை மட்டுமே வங்கியில் டெப்பாசிட் செய்ய முடியும். 5000 ரூபாய்க்குக் குறைவாக டெப்பாஸிட் செய்யலாம்.

    ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தாமல் மௌனம் சாதிக்கும் தொடக்கக்கல்வித்துறை; ஏமாற்றத்தில் ஆசிரியர்கள்

    தமிழ்நாட்டில் தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமறையான மே மாதம் நடத்துவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக சில நிர்வாக சிக்கலால் ஜூன் மாதம் நடந்து வருகிறது. இக்கலந்தாய்வில் ஆசிரியர்கள் பணி நிரவல், காலிப்பணியிடங்களில் தகுதியான ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அதன்பின் ஒன்றியத்திற்குள் மாறுதல், ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் என ஒவ்வொரு நாளும் நடப்பது வழக்கம்.

    SSLC - 2016 SCIENCE TM HALF YEARLY EXAM 2016 ANSWER KEY

    Monday, December 19, 2016

    2016 - 17ம் ஆண்டிற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் குறைப்பு


    2016 - 17ம் ஆண்டிற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி குறைக்கப்பட்டுள்ளது.

    ஆராய்ச்சி ஊக்கத்தொகை குறித்து விழிப்புணர்வு இல்லை!

    மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில், சமூக சூழல்கள் காரணமாக ஆராய்ச்சி படிப்பை தொடரமுடியாத பெண்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை குறித்து விழிப்புணர்வு இல்லாததால், தமிழகத்திலிருந்து இந்த விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை சொற்பமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    ’செமஸ்டர்’ கட்டணம்; கல்லூரிகள் கெடுபிடி

    தனியார் கல்லுாரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர், பணத் தட்டுப்பாடு காரணமாக, ’செமஸ்டர்’ கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்கின்றனர்.

    ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி; தேர்வு நடத்த ஆள் இல்லை

    துவக்க பள்ளிகளில், நேற்று இரண்டாம் பருவத்தேர்வு துவங்கியநிலையில், ஆசிரியர்களுக்கு, தமிழ் வாசித்தலுக்கான இருநாள் பயிற்சிவழங்கப்பட்டது. இதனால், தேர்வு நடத்த ஆசிரியர்கள் இல்லாமல், தலைமைஆசிரியர்கள் தவித்தனர்.

    அரசு மருத்துவமனைகளில் சான்றிதழ் வழங்குவதில் தாமதம்

    அரசு மருத்துவமனைகளில் சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்படுவதால் மாற்றுத்திறனாளி மற்றும் கற்றல் குறைபாடு உடைய மாணவர்கள் தேர்வுக்கு தயாராக முடியாமல் அவதிப்படுவதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

    தூத்துக்குடியில் கானல் நீரா கேந்திரிய வித்யாலயம்?



    துறைமுகம் உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்கள் நிறைந்துள்ள முத்துநகர் என அழைக்கப்படும் தூத்துக்குடியில், கேந்திரிய வித்யாலயம் பள்ளி அமைக்கப்பட வேண்டும் என மத்திய அரசு ஊழியர்களிடையே மட்டுமன்றி பொதுமக்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    3ம் பருவப்பாடப்புத்தகம் மாணவர்களுக்கு 28ம் தேதிக்குள் வினியோகிக்க உத்தரவு


    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்கு பாடப்புத்தக சுமையை குறைப்பதற்காக முப்பருவ முறை நடைமுறையில் உள்ளது. இதையடுத்து பாடப்புத்தகங்கள் 3 பருவங்களாக பிரிக்கப்பட்டு தனித்தனியே அச்சிட்டு வழங்கப்பட்டு வருகிறது.

    சிண்டிகேட் வங்கியில் புரொபேஷனரி அதிகாரி பணி

    சிண்டிகேட் வங்கியில் 2017-2018-ஆம் ஆண்டிற்கா 400 புரொபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    ஒரே பாடத்திட்டம் வருமா?

    தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் இளமாறன், முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு அனுப்பியுள்ள மனு: மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான 'நீட்' தேர்வு, சி.பி.எஸ்.இ., மூலம் அந்த பாடத் திட்டத்தில் நடத்தப்படுகிறது.சி.பி.எஸ்.இ., மாணவர்கள், இத்தேர்வில் அதிகமாக பங்கேற்கின்றனர்; அவர்களுக்கு எளிதாக உள்ளது.

    Sunday, December 18, 2016

    மனப்பாடம் செய்வதால் எந்த பயனும் இல்லை.. வாழ்க்கைக்கு உதவும் கல்வியே சிறந்தது - ஜெர்மன் அறிஞர் பேச்சு


    தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஜெர்மன் நாட்டை சார்ந்த அறிஞரும், தமிழ் மரபு அறக்கட்டளை தலைவருமான முனைவர் சுபாஷினி மாணவர்களிடம் கலந்துரையாடல் நடத்தினர்.

    பிளஸ் 2 தனித்தேர்வு 19ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

    பிளஸ்-2 தனித்தேர்வு எழுத விண்ணப்பிக்க விரும்புவோரிடம் இருந்து ‘ஆன்-லைனில்’ விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டு உள்ள அரசு தேர்வுகள் சேவை மையங்களுக்கு சென்று வருகிற 19-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை மாலை 5.45 மணிக்குள் தங்களின் விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம்.

    காலவரையற்ற போராட்டம்: அரசு ஊழியர் சங்கம் எச்சரிக்கை


    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான, அரசு உத்தரவை வெளியிடாவிட்டால், ஜனவரியில் நடைபெறும் மாநில மாநாட்டில், காலவரையற்ற போராட்டம் நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்,'' என அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் தமிழ்செல்வி தெரிவித்தார்.

    Saturday, December 17, 2016

    SSLC - 2016 DEC - HALF YEARLY EXAM - MATHS KEY


    இன்று ஓய்வூதியர் உரிமை நாள்.

    17.12.1982 அன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திராசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு ஓய்வூதியம் உரிமை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியநாள். ஓய்வூதியர்களால் கொண்டாடப்படும் நாள். ஓய்வூதியம் என்பது கருணை அல்ல.அரசு ஊழியர்களின் நீண்டகால பணிக்கு வழங்கப்படும் கொடுபடா ஊதியம்.

    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வளாக தேர்வு 19–ந் தேதி நடக்கிறது

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இளைஞர் நலத்துறையின் வேலைவாய்ப்பு மையத்தின் சார்பில் 2016–ம் ஆண்டு, அதற்கு முந்தைய ஆண்டு இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கக்கூடிய வளாக தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தனியார் வங்கி, தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு வளாக தேர்வு நடத்தி பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

    அ.தே.இ - NMMS 2016 – இணையதளம் மூலமாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்காக கால அவகாசம் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.


    திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

    மஞ்சூர் அடுத்துள்ள பெங்கால்மட்டம் கிளூர் பாண்டவர் அறக்கட்டளை மற்றும் துாரிகை அறக்கட்டளை சார்பில், அப்பகுதியில் பழங்குடி மாணவர்களுக்கு மூன்று நாட்கள் திறன் மேம்பாட்டு முகாம் நடந்தது.ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித்குமார் வரவேற்றார். 

    மாணவர்களுக்கு மாத்திரை; ஹெச்.எம்.,களுக்கு பயிற்சி

    வளரிளம் பருவ மாணவரிடையே, ரத்தசோகை ஏற்படாமல் தடுக்கும் வகையில், இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்குவது குறித்து, தலைமை ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் நேற்று நடந்தது.

    ‘நீட்’ நுழைவு தேர்வு பயிற்சி; 18ல் இலவச கருத்தரங்கம்

     ‘நீட்’ எனப்படும் மருத்துவ நுழைவுத்தேர்வை எதிர்கொள்வது குறித்த இலவச கருத்தரங்கம், வரும் 18ம் தேதி, பாப்பீஸ் ஓட்டலில் நடைபெறுகிறது.

    அவிநாசி அருகேயுள்ள தெக்கலூர் நிகிதா பள்ளி மற்றும் ‘தினமலர்’ நாளிதழ் இணைந்து, ‘நீட்’ தேர்வை திறம்பட எதிர்கொள்வது குறித்த விளக்கம் அளிக்கும் கருத்தரங்கை, வரும் 18ம் தேதி, திருமுருகன்பூண்டியில் உள்ள பாப்பீஸ் ஓட்டலில் நடத்தப்படுகிறது. 

    காலை, 10:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரை நடைபெறும் இந்த கருத்தரங்கில், வல்லுனர்கள் பங்கேற்று, ‘நீட்’ தேர்வு குறித்து முழுமையான விளக்கம் அளிக்க உள்ளனர்.

    ‘நீட்’ தேர்வு என்றால் என்ன, தேர்வை எப்படி எதிர்கொள்ளவேண்டும்; எந்தெந்த வகைகளில் கேள்விகள் கேட்கப்படும், தேர்வுக்கு தயாராவது எப்படி என அனைத்து விளக்கங்களையும் அளிக்க உள்ளனர். கருத்தரங்கில், ஒன்பது, பத்து, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் இலவசமாக பங்கேற்கலாம்.

    இது குறித்து, நிகிதா பள்ளி மற்றும் சக்தி பொறியியல் கல்லூரி சேர்மன் தங்கவேல் கூறியதாவது:

    மருத்துவ நுழைவு தேர்வான ‘நீட்’ விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவ, மாணவியர் இந்த தேர்வை வெற்றிகரமாக எதிர்கொண்டு, தனியார், அரசு மருத்துவ கல்லூரிகளுக்குள் நுழைவதற்காக, ‘நீட்’, என்ன நெருப்பா’ என்கிற தலைப்பில், இலவச கருத்தரங்கத்தை நடத்துகிறோம்.

    இந்த வாய்ப்பை பயன்படுத்தி, மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் பங்கேற்கவேண்டும். வல்லுனர்களின் அறிவுரைகளை கேட்டு பயன்பெறவேண்டும். நிகழ்ச்சியில் பங்கேற்போருக்கு, ‘நீட்’ தேர்வு குறித்த முழுமையான விளக்கங்களுடன் கூடிய கையேடு இலவசமாக வழங்கப்படும்.

    வரும் ஏப்., 1ம் தேதி முதல், நீட் தேர்வு குறித்த 45 நாள் இலவச பயிற்சி முகாம் துவங்க உள்ளது. பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு தேர்வு நடத்தி, வெற்றி பெறும் 30 பேருக்கு, தங்கும் வசதியுடன் இப்பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு, தங்கவேல் கூறினார்.

    தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு!

    ’வர்தா’ புயலால் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளிகள், விடுமுறையை நீட்டித்து இருப்பதோடு, தேர்வுகள் குறித்து முறையான அறிவிப்புகள் வெளியிடாததால், பெற்றோர் மற்றும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    துணைவேந்தர் தேர்வு; ஜெ., மறைவால் நிறுத்தம்!

    பல்கலை துணைவேந்தர் பதவிகளுக்கு, பல்வேறு போராட்டங்களுக்கு இடையில் நகர்ந்த கோப்புகள், முதல்வர் மறைவு மற்றும் ’வர்தா’ புயலால் மீண்டும் நின்று விட்டன. 

    மூன்றாம் பருவ பாடப்புத்தகம் வினியோகம்!

    பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், மாணவர்களுக்கான மூன்றாம் பருவ பாட புத்தகங்கள் பள்ளி தலைமையாசிரியர்களிடம் வினியோகிக்கப்படுகிறது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 58 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சுயநிதி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் 14,323க்கு மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 

    ஆராய்ச்சி ஊக்கத்தொகை குறித்து விழிப்புணர்வு இல்லை!

    மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில், சமூக சூழல்கள் காரணமாக ஆராய்ச்சி படிப்பை தொடரமுடியாத பெண்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை குறித்து விழிப்புணர்வு இல்லாததால், தமிழகத்திலிருந்து இந்த விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை சொற்பமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    Friday, December 16, 2016

    நிதித்துறை - தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்விற்கான அரசாணை வெளியீடு

    அ.தே.இ - 2016-17 பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்விற்கான அதிகாரபூர்வ கால அட்டவணை

    10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் தேதிகள் அறிவிப்பு

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 8-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி முடிகிறது எனவும், பிளஸ் -2 பொதுத்தேர்வுகள் மார்ச் 2-ம் தேதி தொடங்கும் என 
    தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.

    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கான கால அட்டவணை
    08.03.2017 - தமிழ் முதல் தாள்
    09.03.2017 - தமிழ் இரண்டாம் தாள்

    14.03.2017 - ஆங்கிலம் முதல் தாள்

    தேர்வு நேரத்தில் பணிநிரவல் ஆசிரியர்கள் எதிர்ப்பு

    சிவகங்கை மாவட்டத்தில் தேர்வு நேரத்தில் உதவிபெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்வதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசு மற்றும் உதவிபெறும் உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை படி ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஆக.,1ல் மாணவர்களின் வருகைப்படி உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டன.

    கல்வி துறைக்கு ஐ.இ.எஸ்., சேவையை உருவாக்கும் யோசனை நிராகரிப்பு.

    மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீட்டை 3 சதவிகிதத்தில் இருந்து 4 சதவிகிதமாக அதிகரிக்கும் - மசோதா நிறைவேற்றம்.

    மாற்றுத்திறனாளிகளின் உரிமையை பாதுகாப்பது மற்றும் தேவையான சலுகைகளை வழங்க வழிவகுக்கும் சட்ட மசோதாவுக்கு மாநிலங்களவை ஒப்புதல் அளித்துள்ளது. இம்மசோதாவுக்கு கட்சி பாகுபாடின்றி அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு அளித்தனர்.

    வி.ஏ.ஓ., பதவிக்கு கவுன்சிலிங் அறிவிப்பு

    'கிராம நிர்வாக அதிகாரி என்ற, வி.ஏ.ஓ., பதவிக்கான, பணி ஒதுக்கீட்டு கவுன்சிலிங், வரும், 19 முதல் நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

    தொடக்க கல்வி வினாத்தாள்களும் 'அவுட்'? பள்ளிகளிலேயே தயாரிக்க உத்தரவு.

    NMMS பதிவு செய்யும் கடைசி நாள் 17.12.2016 வரை நீட்டிப்பு

    NMMS பதிவு செய்யும் கடைசிநாள் 14.12.2016லிருந்து 17.12.2016 சனிக்கிழமை மாலை 5 மணிவரை  நீட்டிக்கப்பட்டுள்ளது.

    SSLC :HALF-YEARLY EXAM 2016 ANSWER KEY

    Thursday, December 15, 2016

    அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு

    தமிழக அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படியை உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

    பெட்ரோல் விலை உயருகிறதா? வாகன ஓட்டிகளுக்கு ஒரு அதிர்ச்சித் தகவல்

    சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக இந்தியாவில் பெட்ரோல் விலை கடுமையாக உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    உலகின் செல்வாக்கு மிக்க முதல் 10 தலைவர்கள் பட்டியலில் மோடி

    உலகின் செல்வாக்கு மிக்க முதல் 10 தலைவர்களின் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி இடம்பெற்றுள்ளார். 2016-ஆம் ஆண்டுக்கான உலகின் செல்வாக்கு மிக்க 74 தலைவர்களின் பட்டியலை அமெரிக்காவின் "ஃபோர்ப்ஸ்' பத்திரிகை புதன்கிழமை வெளியிட்டுள்ளது. அதில், முதல் 10 இடங்களில் பிரதமர் மோடி, 9-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இதுதொடர்பாக, அந்தப் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

    SLAS - 2016-17 - SELECTED SCHOOLS LIST (DISTRICT WISE)

    UP Govt likely to finalize 7th Pay Commission recommendations today

    The Akhilesh Yadav government may bring smiles on the faces of state employees on Tuesday by finalizing the recommendations of Seventh Pay Commission thereby ensuring a hike of up to 20 per cent in their salaries. The state cabinet is scheduled to take up the interim report submitted by a committee on Seventh Pay Commission. The committee headed by retired bureaucrat GB Pattnaik had submitted its interim report to Chief Minister Akhilesh Yadav on December 7.

    தமிழகம், ஆந்திராவை அதிக புயல்கள் தாக்கும்

    இனி வரும் காலங்களில் வங்கக்கடலில் அதிக அளவில் புயல்கள் உருவாகி ஆந்திரா மற்றும் தமிழகத்தை தாக்கும் என்று விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    ஜனவரியில் காலவரையற்ற வேலை நிறுத்தம்

    Image may contain: text

    ஜூன் 10-ல் 'நீட்' தேர்வு: பாடத்திட்ட விவரம் வெளியீடு.

    2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 10-ம் தேதி நடைபெற உள்ள மருத்துவப் படிப்புகளுக்கான 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:  1956 ஆம் ஆண்டு இந்திய மருத்துவ சபை சட்டம் மற்றும் 2016ம் ஆண்ட திருத்தி அமைக்கப்பட்ட சட்டம் 10வது பிரிவின்படி டி.எம் / எம்.சிஹெச் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வினை தேசிய தேர்வுகள் வாரியம் நடத்த உள்ளது. 

    இன்று நள்ளிரவு முதல் பழைய ரூ.500 நோட்டுகளைப் பயன்படுத்த முடியாது: நிதியமைச்சகம்

    அத்தியாவசியப் பொருள்களின் கட்டணங்களைச் செலுத்துவதற்கும், மருந்துப் பொருள்கள் வாங்குவதற்கும் ஏற்கப்பட்டு வந்த பழைய ரூ.500 நோட்டுகளை வியாழக்கிழமை (டிச.15) நள்ளிரவு முதல் பயன்படுத்த முடியாது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து நிதித்துறைச் செயலர் சக்திகாந்த தாஸ் தனது சுட்டுரைப் பதிவில், "குறிப்பிட்ட சேவைகளுக்காக, தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்த பழைய ரூ.500 நோட்டுளின் பயன்பாடும் டிசம்பர் 15-ஆம் தேதி நள்ளிரவு முதல் முடிவுக்கு வருகிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.

    பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த மாதம் 8-ஆம் தேதி அறிவித்தது. இருந்தபோதிலும், அத்தியாவசியத் தேவைகளான சமையல் எரிவாயு, தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றுக்கான சேவைக் கட்டணங்களை செலுத்துவதற்கும், மருந்துப் பொருள்கள், பெட்ரோல் - டீசல் ஆகியவற்றைப் பெறுவதற்கும் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை குறிப்பிட்ட காலம் வரை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. பிறகு, இதற்கான கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டது.

    இதனிடையே, சில குறிப்பிட்ட சேவைகளுக்கு பழைய ரூ.1000 நோட்டுகளின் பயன்பாட்டினை மத்திய அரசு கடந்த சில நாள்களுக்கு முன்பு நிறுத்தியது. அதேபோல், தற்போது அத்தியாவசியப் பொருள்களின் கட்டணங்களைச் செலுத்துவதற்கும், மருந்துப் பொருள்கள் வாங்குவதற்கும் ஏற்கப்பட்டு வந்த பழைய ரூ.500 நோட்டுகளை வியாழக்கிழமை (டிச.15) நள்ளிரவு முதல் பயன்படுத்த முடியாது என்று மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

    பள்ளி, கல்லூரிகள் இன்று செயல்படும்

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகள் வியாழக்கிழமை செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வர்தா புயல், அது ஏற்படுத்திய பாதிப்பைத் தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம்திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    ரூ.600ல் நவீன சிறுநீர் கழிப்பிடம்: அரசு பள்ளி மாணவர்களுக்கு விருது

    பள்ளி வளாகத்தில், 600 ரூபாய் செலவில், நவீன சிறுநீர் கழிப்பிடத்தை ஏற்படுத்தி, அரசு பள்ளி மாணவர்கள் விருது பெற்றுள்ளனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே, ஏ.குரும்பப்பட்டியில் உள்ள யூனியன் நடுநிலைப்பள்ளியில், 97 மாணவர்கள் படித்து வருகின்றனர்; ஏழு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்குள்ள சிறுநீர் கழிக்கும் இடம், சிறுநீர் வெளியேற வடிகால் இன்றி, சுகாதாரமற்ற முறையில் இருந்தது. 

    தவறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை: காவல் துறையில் அதிமுக புகார்

    ஜெயலலிதா இறப்பு குறித்து சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காவல் துறையில் அதிமுகவினர் புகார் செய்தனர். வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகரக் காவல் துறை அலுவலகத்துக்கு அதிமுக செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான சி.ஆர்.சரஸ்வதி, தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநிலச் செயலர் ராமச்சந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் புதன்கிழமை மாலை வருகை தந்தனர்.

    பள்ளி சிறார்கள் மது, போதைக்கு அடிமையாவதைத் தடுக்க செயல் திட்டம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

    பள்ளி மாணவ, மாணவியர் போதைப் பொருளைப் பயன்படுத்துவதையும், மது அருந்துவதைத் தடுக்கவும் 6 மாதத்தில் தேசிய செயல் திட்டத்தை வகுக்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    பாடம் நடத்த முடியாமல் அரசு பள்ளி ஆசிரியர்கள் தவிப்பு!

    மாணவர்களின் இ.எம்.ஐ.எஸ்., விவரங்களில் புள்ளி, கமா வேறுபாட்டினால் கல்வித்துறை ஏற்படுத்தும் குளறுபடிகளால், பாடம் நடத்த முடியாமல் அரசு பள்ளி ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள், அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை, பாடப்புத்தகங்கள், பாடங்கள் சம்பந்தமான தகவல்கள், கல்வித்துறையின் செயல்பாடுகள், கல்வித்துறையிலுள்ள அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் ஆன்-லைன் மூலம் அறிந்துகொள்வதற்காக பள்ளி மேலாண்மை தகவல் மையம் என்ற இணையதளத்தை அரசு அறிமுகப்படுத்தியது. திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளை கடந்த, 2012 ஆண்டில் துவக்கியது.

    Wednesday, December 14, 2016

    6 அமைச்சர்களின் வீடுகளை முற்றுகையிட்டு ஆசிரியர்கள் தர்ணா


    பணிநிரந்தரம் கோரி 6 ஒடிஸா மாநில அமைச்சர்களின் இல்லங்களை நூற்றுக்கணக்கான பள்ளி ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தேசிய திறனாய்வு தேர்வுக்கான (NMMS) பாடத்திட்டம்

    MAT Syllabus

    1.Number Series
    2.Identifying The Wrong Number In The Series
    3. Letter Series
    4.Change Of Sign And Number
    5. Substitution of Mathematical Symbol

    Tuesday, December 13, 2016

    3 மாவட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை (14.12.2016) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

    தொடக்கக் கல்வி - இரண்டாம் பருவத் தேர்வுக்கான கால அட்டவணை

    CPS NEWS: தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் வரம்பிற்குள் PFRDAவின் ஓய்வூதிய நிதி மேலாளர் UTI இல்லை. எனவே, தமிழகத்தில் மத்திய அரசு பணியில் ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதிய விபரம் வழங்க இயலாது. RTI பதில்.


    சென்னையிலிருந்து பெங்களூர், மதுரை, கோவை உட்பட பல நகரங்களுக்கு இயக்கப்படும் 17 ரயில்கள் ரத்து

    வர்தா புயல் காரணமாக சென்னையிலிருந்து இயக்கப்படும் 17 ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்து அறிவித்துள்ளதால் பயணிகள் பெரும் அவஸ்தைக்கு உள்ளாகியுள்ளனர். 

    மத்திய அரசு அறிவிப்பு: கல்வி வரைவு கொள்கைக்கு மீண்டும் குழு அமைக்கப்படும்

    புதிய தேசிய கல்வி வரைவு கொள்கையைடி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் கமிட்டி சமர்பித்த நிலையில், மீண்டும் புதிய குழு அமைக்க இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போதைய கல்வி அமைப்பில் சீர்திருத்தம் மேற்கொள்வதற்காக, கடந்தாண்டு டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையிலான கமிட்டியை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நியமித்தது.

    Monday, December 12, 2016

    'வர்த்' சென்னையை நெங்குகிறது! 100 கி.மீட்டர் தொலைவில் "வர்த்"

    வர்தா புயல் கரையை கடந்த பின்னும் 36 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. மேலும் புயல் கரையை கடந்த பிறகும் 12 மணி நேரத்திற்கு 50 - 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    Sunday, December 11, 2016

    தமிழக அரசு ஊழியருக்கான அகவிலைப்படி உயர்வு - அமைச்சரவை கூட்டத்தில் விவாதம்

    தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த தமிழக அமைச்சர்கள்

    சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இரட்டை பதவி உயர்வு

    சிறப்பாக பணியாற்றும் ஆசிரி யர்களுக்கு இரட்டை பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம் என, முதல்வர் நாராயணசாமி பேசினார்.

    வர்தா புயல் - 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

    வர்தா புயல் கனமழை காரணமாக கீழ்கண்ட 8 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை (12.12.2016) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    1.சென்னை  (பள்ளி,கல்லூரிகள்)
    2.கடலூர் (பள்ளிகள் மட்டும்)
    3.புதுச்சேரி (பள்ளி,கல்லூரிகள்)
    4.காரைக்கால் (பள்ளி,கல்லூரிகள்)

    Saturday, December 10, 2016

    பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல துருப்பிடித்த பழைய பஸ்!

    உச்ச நீதிமன்ற உத்தரவை அலட்சிப்படுத்திய பி.எம்.டி.சி., பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல, துருப்பிடித்த பழைய பஸ்களை ஒப்பந்தம் அடிப்படையில் வழங்கியுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பள்ளி மாணவர்களை அழைத்து செல்லும் வாகனங்களுக்கு உச்ச நீதிமன்றம், சில வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. பள்ளி வாகனங்களில், ’சிசிடிவி’ கேமரா, ஜி.பி.எஸ்., கருவி, முதலுதவி சிகிச்சை பெட்டி, தீயணைப்பு கருவி, ஜன்னல்களில் இரும்பு கிரில், அவசர கதவுகள், 7 லட்சம் கிலோ மீட்டருக்கும் அதிகமாக ஓடிய வாகனங்களை பள்ளி வாகனமாக பயன்படுத்த கூடாது என்பது உட்பட, பல விதிகளை கட்டாயமாக கடைபிடிக்கும்படி, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

    நீதிமன்ற காலிப்பணியிடங்களை நிரப்ப கால அவகாசம்

    நுகர்வோர் நீதிமன்ற காலிப்பணியிடங்களை நிரப்ப கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு மேலும் இரு வாரம் அவகாசம் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில், எட்டு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்கள், நீதிபதிகள் இன்றி செயல்படுகின்றன. சென்னையில் உள்ள மாநில நுகர்வோர் நீதிமன்றத்திலும், 2015 மே முதல் நீதிபதி பணியிடம் காலியாக உள்ளது. இதனால், 10 ஆயிரத்து, 450 வழக்குகள் தீர்ப்புக்காகவும், 8,245 வழக்குகள் விசாரணைக்காகவும் காத்திருக்கின்றன.

    உயர் நீதிமன்ற பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு

    ‘உயர்நீதிமன்ற பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, டிச., 14ல் நடக்கும்’ என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

    ’தேவையில்லாத புத்தகங்களை கொண்டு வர வேண்டாம்’

    'தேவையில்லாத புத்தகங்களை கொண்டு வர வேண்டாம்' என, மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது. பள்ளி மாணவர்கள், ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு செல்லும் போது, அனைத்து பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், உணவு மற்றும் குடிநீர் போன்றவற்றை சுமந்து செல்கின்றனர். அதனால், சிறு வயது குழந்தைகளின் முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக, மருத்துவ ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

    டிஜிட்டல் முறையில் பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தம்

    மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகளில், பொதுத்தேர்வு விடைத்தாள்கள், 'டிஜிட்டல்' முறையில் திருத்தப்பட உள்ளன. தமிழக பள்ளிக்கல்வித் துறையில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளின் விடைத்தாள்கள், ஆங்காங்கே விடை திருத்தும் மையங்கள் அமைத்து, ஆசிரியர்கள் மூலம் திருத்தப்படுகின்றன. இதில், அவ்வப்போது பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு, அதிக மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர். 

    எழுத்து தேர்வு ஒத்திவைப்பு

    இளநிலை உதவியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு, ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.'இளநிலை உதவியாளர்கள் மற்றும் உதவி சேமிப்புக் கிடங்கு மேலாளர்கள் பணிக்கான எழுத்துத்தேர்வு, டிச., 11ல்,

    ஓய்வூதியர் விபரங்கள் இல்லை : அரசு ஊழியர், ஆசிரியர் அதிர்ச்சி

    புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வூதியர்கள் குறித்த விபரம் மத்திய அரசிடம் இல்லை' என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிந்துள்ளது.புதிய ஓய்வூதிய திட்டத்தில் மேற்கு வங்கம், திரிபுரா தவிர்த்த மாநில அரசு மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் இணைக்கப்பட்டனர். 2016 ஜூலை வரை 17 லட்சத்து 11 ஆயிரத்து 727 மத்திய அரசு ஊழியர், 30 லட்சத்து 72 ஆயிரத்து 872 மாநில அரசு ஊழியர், ஐந்து லட்சத்து 4,019 பொதுத்துறை ஊழியர்கள் உள்ளனர். 

    பிளாஸ்டிக் கரன்சி அச்சடிக்க முடிவு: மத்திய அரசு தகவல்

    பிளாஸ்டிக் கரன்சி நோட்டுகள் அச்சடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பார்லிமென்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிளாஸ்டிக் நோட்டு அச்சடிக்க ரிசர்வ் வங்கி நீண்ட காலமாக ஆலோசனை நடத்தி வந்தது. கடந்த 2014ம் ஆண்டு, பார்லிமென்டில் மத்திய அரசு, கொச்சி, மைசூரு, ஜெய்ப்பூர், சிம்லா மற்றும் புவனேஸ்வரில் சோதனை முறையாக பிளாஸ்டிக் நோட்டுக்கள் அச்சடித்து வெளியிடப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. 

    டெபிட், கிரெடிட் கார்டில் பணம் செலுத்தினால் அதிரடி டிஸ்கவுண்ட் சலுகைகள் அறிவிப்பு; அருண் ஜேட்லி

    ரொக்கப் பணமாக இன்றி, டிஜிட்டல் முறையில் (டெபிட்-கிரெடிட் கார்டுகள், ஆன்லைன், இ-வாலட் மூலமான பரிவர்த்தனை) பணம் செலுத்தும் பொதுமக்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி டெல்லியில் இன்று மாலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

    மாணவி வெளியேற்றம் : ஆசிரியை இடமாற்றம்

    சபரிமலைக்கு மாலை அணிந்த மாணவியை, பள்ளியை விட்டு வெளியேற்றிய தமிழ் ஆசிரியை, வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டார். வேலுார் மாவட்டம், திம்மணாமுத்துார் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரின், 12 வயது மகள், அங்குள்ள அரசு பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். 

    மிலாது நபி விடுமுறை தேதி மாற்றம்

    மிலாது நபி பண்டிகைக்காக, விடுமுறை தேதியை, டிச., 13க்கு, தமிழக அரசு மாற்றியுள்ளது. தமிழக அரசின், 2016ம் ஆண்டுக்கான, பொது விடுமுறை பட்டியலில், டிச., 12ல், மிலாது நபிக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பிறை, டிச., 13ல், தென்படும் என்பதால், அன்று, மிலாது நபி கொண்டாடப்பட உள்ளது. 

    டி.இ.டி., தேர்வு எப்போது, தனியார் பள்ளி ஆசிரியர்கள் கலக்கம்

    தமிழிலும் 'நீட்' தேர்வு எழுதலாம்

    எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளில், மத்திய அரசின் இட ஒதுக்கீட்டில் சேர, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வுக்கு, இன்னும் சில தினங்களில் அறிவிப்பு வெளியாக உள்ளது. 

    இனி உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும்; உயர்நீதிமன்றம்

    பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராகப் பதவி உயர்வு பெற முடியாது. உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கு: உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதியரசர் திரு. சத்தியநாராயணன் அவர்களின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இத்தனை நாட்களாக எடுத்த எடுப்பிலேயே அடுத்த வாரம் என்ற அளவில் குறுகிய கால அளவில் ஒரு தேதியினைக் குறிப்பிட்டு விசாரணை ஒத்தி வைக்கப்ப்ட்டு வந்தது.

    Wednesday, December 7, 2016

    அரையாண்டுத்தேர்வுகள் 09.12.2016 முதல் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணைப்படி நடைபெறும் என அறிவிப்பு

    அரையாண்டுத்தேர்வுகள் 09.12.2016 முதல் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணைப்படி நடைபெறும் எனவும், 07.12.2016 மற்றும் 08.12.2016 அன்று

    நமது முதல்வரின் உண்மையான முகம்

    இந்திய அரசியலின் நெருங்க முடியாத பெண்மணியாக இன்றும் பார்க்கப்படும் முதல்வர் ஜெயலலிதாவின், மிகப்பிரபலமான பேட்டி இது. செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெ. எப்படி பேசுவார் என்பது கூட இன்றைய தலைமுறைக்கு தெரியாத சூழலில், அவரின் மிக உண்மையான பக்கத்தை காட்டும்வகையிலான ஒரே ஒரு வீடியோ பேட்டி என்றால், அது இதுவாக மட்டுமே இருக்கும்.

    மூத்த பத்திரிக்கையாளர் சோ.ராமசாமி காலமானார்.

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சோ.ராமசாமி (82) மாரடைப்பு காரணமாக  இன்று காலை 5 மணி அளவில் காலமானார்.

    வங்கக்கடலில் மீண்டும் புதிய புயல் சின்னம்.

    வங்கக் கடலில் அந்தமான் அருகே, புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளது. வங்கக் கடலில், நவ., 30ல் உருவான, 'நடா' புயல், தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களை தாண்டி, அரபிக் கடலுக்கு சென்றது. 

    ஜெ.,யின் நிறைவேறாத உயர் பாடத்திட்ட கனவு.

    அரசு பள்ளி மாணவர்கள், சர்வதேச அளவில் புகழ் பெற, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தை விட, உயர்ந்த பாடத்திட்டத்தை வழங்கும் தன் கனவு, நனவாகும் முன், ஜெயலலிதா மறைந்தது, அரசு பள்ளி ஆசிரியர்கள், பெற்றோரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

    எல்லோருக்கும் ஏதோ ஒரு காரணத்தால் ஜெயலலிதாவைப் பிடித்திருப்பது ஏன்?

    நடு வீட்டில் அலங்கரிக்கப்பட்டிருந்த பூத உடலை, மயானத்துக்கு தூக்கிச் செல்லும் அந்த நொடியில், அதுவரை அடக்கி வைத்திருந்த துக்கம் பீறிட்டு வெளிப்படும். அத்தனை சொந்தமும் வெடித்து அழும். கலங்காத மனமும் கலங்கும். 

    Tuesday, December 6, 2016

    Demise - Demise of Hon'ble CM of TN - Notification issued


    மாண்புமிகு ஜெ., அவர்களின் இறப்பு சான்றிதழ்


    தனியொரு பெண்ணாகக் களம் இறங்கி வெற்றி மேல் வெற்றி குவித்த ஜெயலலிதா!

    ஆணாதிக்கம் நிறைந்த அரசியலில் தனியொரு பெண்ணாகக் களம் இறங்கி, சாமானியத் தொண்டர்கள் நிறைந்த அதிமுகவுக்கு வெற்றி மேல் வெற்றி பெற்றுத் தந்தவர் ஜெயலலிதா.

    "ஒரு கோடி தடைகளை உடைத்தெடுக்கும் வல்லமை''


    முதல்வர் ஜெயலலிதா தனது பேச்சில் எப்போதும் பொன்மொழிகளையும், வெகுஜன மக்களைக் கவரும் கருத்துகளையும் குறிப்பிடுவது வழக்கம். பொதுக்கூட்டங்கள், அரசு விழாக்களில் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அமுதமொழிகள்:

    மறைந்தார் ஜெயலலிதா! இரும்பு மனுஷியை இழந்தது தமிழகம்

    தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்தார்..!

    அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 68. டிசம்பர் 5-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு மருத்துவர்களின் தீவிர சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா காலமானதாக அப்போலோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    அதே அமைச்சர்கள்... அதே இலாகா...

    ஜெயலலிதா மறைவை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை செவ்வாய் கிழமை அதிகாலை 1 மணிக்கு பதவி ஏற்றது. ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்று இருந்த அனைத்து அமைச்சர்களும் அதே இலாகா பொறுப்புடன் பதவியேற்று கொண்டனர்.

    தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம்

    சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இறுதிச் சடங்கு.
    பொதுமக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி பவனில் உடல் வைக்கப்படுகிறது.
    ஏழு நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும்.
    மூன்று நாட்கள் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை.

    Monday, December 5, 2016

    பள்ளிக்கல்வி - CCE பணித்தாள்தேர்வு தொடர்பான ஆணை வெளியீடு

    அப்போலோ ஊழியர்களுக்கு திடீர் உத்தரவு!

    ஊழியர்களை வீட்டுக்குச் செல்லுமாறு அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் திடீரென அறிவுறுத்தியுள்ளது.

    தனியார் நிறுவன ஊழியர்களுக்கு லீவ்

    முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியிடப்பட்டதை அடுத்து, சென்னையில் பாதுகாப்பு கருதி சில தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது.

    சென்னை அப்பல்லோவில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் முடிவடைந்தது

    முதல் - அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நலம் பற்றி தகவல் அறிந்ததும் சென்னையில் இருந்த எம்.எல்.ஏ.க்கள் உடனடி யாக அப்பல்லோ மருத்துவ மனைக்கு சென்றனர்.

    ஜெயலலிதா உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது; அப்பல்லோ மருத்துவமனை

    ayalalithaa heath very critical Apollo Hospital, New Reportமுதல் - அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது.நீர்ச்சத்து  குறைபாடு காரணமாக அவதிப்பட்ட அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில்  அனு மதிக்கப்பட்டார்.

    முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு: தற்போதைய நிலவரம்

    தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

    உடனடியாக அவருக்கு ஆஞ்சியோகிராம் எனப்படும் சிறு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அவரது உடல்நிலை சீராக இருப்பதாக செய்திகள் வெளியாகின.

    இந்த நிலையில், ஜெயலலிதாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டது குறித்து தொலைக்காட்சி வாயிலாக அறிந்து கொண்ட பொதுமக்கள் அப்பல்லோ மருத்துவமனையில் குவிந்தனர். இதனால், அப்பகுதியில் காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

    ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடம்: அப்பல்லோ புதிய அறிக்கை

    தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து சென்னை அப்பல்லோ மருத்துவமனை இன்று புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. புதிய அறிக்கையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமானது.

    ஜெயலலிதா உடல்நிலை: சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை போலீசார் எச்சரிக்கை

    அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை தொடர்பாகவும், அதன் தொடர்ச்சி யாகவும் தேவையில்லாத வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. இதனால் பொது மக்கள் மத்தியில் தேவையில்லாத பரபரப்பும்  குழப்பமும் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற வதந்திகள் பேஸ்புக், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலேயே அதிகம் பரவி வருகிறது. 

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவசர கூட்டம் சற்று நேரத்தில் தொடங்குகிறது

    முதல் - அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நலம் பற்றி தகவல் அறிந்ததும் சென்னையில் இருந்த எம்.எல்.ஏ.க்கள் உடனடியாக அப்பல்லோ மருத்துவ மனைக்கு சென்றனர்.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை எதுவும் இல்லை; ஆளுநர் வித்யாசாகர் ராவ்

    முதல் - அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலையில் திடீரென்று மாரடைப்பு  ஏற்பட்டதை தொடர்ந்து பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பல்லோ ஆஸ்பத்திரி வளாகம் மற்றும் கிரீம்ஸ் ரோட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக் கப்பட்டுள்ளனர்.

    "ரூபாய் நோட்டு நடவடிக்கையால் ஜிடிபி விகிதம் 2% உயரும்"

    பெருமதிப்பு ரூபாய் நோட்டுகள் வாபஸ் நடவடிக்கை காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி விகிதம் 2 சதவீதம் அதிகரிக்கும் என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கூறினார். இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

    பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை இல்லை; வதந்திகளை நம்பவேண்டாம்...!

    தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை ஏதும் அறிவிக்கப்படவில்லை என்றும், அத்தகைய வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

    முதல்வருக்கு ஆஞ்ஜியோ சோதனை செய்யப்பட்டது

    முதல்வர் ஜெயலலிதாவிற்கு இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்வதற்காக இன்று அதிகாலை ஆஞ்ஜியோ சோதனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    டிஜிட்டல் பண பரிவர்த்தனை : கலெக்டர்களுக்கு ஊக்கத்தொகை

    டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் மாவட்ட கலெக்டர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

    வங்கி கணக்கு துவங்க ஆதார் எண் கட்டாயமல்ல : நிதி அமைச்சகம்

    வங்கி கணக்கு துவங்குவதற்கு ஆதார் எண் கட்டாயம் இல்லை என மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ்குமார் கேங்வார் தெரிவித்துள்ளார். பார்லி.,யில் கேள்வி ஒன்றிற்கு எழுத்துபூர்வமாக பதிலளித்த சந்தோஷ்குமார், வங்கி கணக்கு துவங்குவதற்கோ அல்லது பணபரிவர்த்தனைக்கோ ஆதார் எண் கட்டாயமல்ல.

    'நீட்' தேர்வு: அடுத்த வாரம் விண்ணப்ப பதிவு

    மருத்துவப் படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத்தேர்வுக்கு, அடுத்த வாரம் முதல் விண்ணப்பப் பதிவு துவங்க உள்ளது. மத்திய, மாநில அரசு மருத்துவக் கல்லுாரிகளில், மத்திய அரசு ஒதுக்கீட்டு இடங்களில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அத்துடன், 'மாநில அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளிலும், மாணவர்களை சேர்க்க, நீட் தேர்வு தேர்ச்சி கட்டாயம்' என, உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

    'டெபிட்' கார்டில் மின் கட்டணம் ஜனவரியில் சேவை துவக்கம்

    மின் கட்டண மையங்களில், 'டெபிட், கிரெடிட்' கார்டு மூலம், பணப் பரிவர்த்தனையை துவக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு மின் வாரியத்துக்கு, 2,800 பிரிவு அலுவலகங்கள் உள்ளன. இவை, மின் கட்டண மையங்களாகவும் செயல்படுகின்றன. அந்த மையங்களில், ரொக்க பணம், வங்கி காசோலை, வரைவோலை என, ஏதேனும் ஒன்றின் வாயிலாக, மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

    ஆசிரியர் காலி பணியிடம்; 3 மாதங்களில் நிரப்ப அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

    பள்ளிக் கல்வி - டிசம்பர் - 7 கொடிநாள் கடைபிடிப்பது சார்பான இயக்குனர் செயல்முறைகள்

    பள்ளிகளுக்கு அருகில் தின்பண்ட கடைகளுக்கு தடை

    பள்ளிகளுக்கு அருகில் சுகாதாரமற்ற தின்பண்டங்களை விற்க, தடை விதிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக, பள்ளிக் கல்வி இயக்குனர், கண்ணப்பன், அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதம்:பள்ளியில் வழங்கப்படும் சத்துணவு, முற்றிலும் துாய்மையாக சமைக்கப்பட வேண்டும்.

    முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது; எதிர்வினையைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை!

    முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறு அறுவை சிகிச்சை (ஆஞ்ஜியோ) செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அறுவைச் சிகிச்சைக்கு முதல்வரின் உடல் ஆற்றும் எதிர்வினையைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கையும் தொடர் சிகிச்சையும் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிகிறது.

    முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு: லண்டன் டாக்டர் ஆலோசனையின் பேரில் தொடர் சிகிச்சை!

    திடீர் மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே ஆலோசனையின் பேரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    18 ஆயிரம் கோடி ரூபாய் என்னாச்சு : அரசு ஊழியர் சங்கம் கேள்வி

    அரசு ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்டசம்பள பணம் 18 ஆயிரம் கோடி ரூபாய் எந்த கணக்கில் உள்ளது, என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்  கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச்செயலர்கிருஷ்ணன், மாநில   துணைத்தலைவர் மெய்யப்பன்ஆகியோர் ராமநாதபுரத்தில் கூறியதாவது:  தலைமைசெயலகம், சட்டசபை உள்பட 143 அரசு துறைகள்தமிழகத்தில் உள்ளன. இவற்றில் 6,49,201 நிரந்தரம், 4,12, 214 தற்காலிகஊழியர்கள் பணியாற்றுகின்றனர். சட்டசபை தேர்தலில் அளித்த வாக்குறுதிபடிபுதியபங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அரசுத்துறைகளைதனியார்மயமாக்கும் போக்கை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும்.

    பள்ளிகளுக்கு நாளை விடுமுறை இல்லை; கல்வி அமைச்சர் அறிவிப்பு

    தமிழக பள்ளி, கல்லூரிகள் நாளை விடுமுறை என்ற வதந்திகளை

    முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு: தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி!

    முதல்வர்  ஜெயலலிதாவுக்கு இன்று மாலை 4 மணி அளவில் மாரடைப்பு ஏற்பட்டதாக அப்போல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைபாடு காரணமாக கடந்த செப்டம்பர் - 22 ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    Saturday, December 3, 2016

    SSA - 2016-17 SLAS - DATE FOR CONDUCTING SURVEY AT SCHOOL LEVEL


    Arun Jaitley Explains How Income Tax Returns Are Scrutinised

    Finance Minister Arun Jaitley on Friday said that fear of scrutiny by income tax authorities is not an excuse for not paying taxes. A tax non-compliant person can't say that paying tax would invite further headaches, Mr Jaitley said.

    Goa Govt Implements 7th pay Commission’s Recommendations – Orders Issued.

    The Goa govt on Wednesday issued an order for the implementation of the 7th Pay Commission recommendations for its 55,000-plus employees. The cabinet had last week approved the proposal for the implementation of the new pay scales, which will also be applicable to 45,000 pensioners. As per the notification issued by the Goa Govt state finance secretary, Daulat Hawaldar, the revised pay scale would be implemented for all government employees and employees of government-aided education institutions with effect from January 1. The actual payment through monthly salary will commence from January 2017.