‘நீட்’ எனப்படும் மருத்துவ நுழைவுத்தேர்வை எதிர்கொள்வது குறித்த இலவச கருத்தரங்கம், வரும் 18ம் தேதி, பாப்பீஸ் ஓட்டலில் நடைபெறுகிறது.
அவிநாசி அருகேயுள்ள தெக்கலூர் நிகிதா பள்ளி மற்றும் ‘தினமலர்’ நாளிதழ் இணைந்து, ‘நீட்’ தேர்வை திறம்பட எதிர்கொள்வது குறித்த விளக்கம் அளிக்கும் கருத்தரங்கை, வரும் 18ம் தேதி, திருமுருகன்பூண்டியில் உள்ள பாப்பீஸ் ஓட்டலில் நடத்தப்படுகிறது.
காலை, 10:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரை நடைபெறும் இந்த கருத்தரங்கில், வல்லுனர்கள் பங்கேற்று, ‘நீட்’ தேர்வு குறித்து முழுமையான விளக்கம் அளிக்க உள்ளனர்.
‘நீட்’ தேர்வு என்றால் என்ன, தேர்வை எப்படி எதிர்கொள்ளவேண்டும்; எந்தெந்த வகைகளில் கேள்விகள் கேட்கப்படும், தேர்வுக்கு தயாராவது எப்படி என அனைத்து விளக்கங்களையும் அளிக்க உள்ளனர். கருத்தரங்கில், ஒன்பது, பத்து, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் இலவசமாக பங்கேற்கலாம்.
இது குறித்து, நிகிதா பள்ளி மற்றும் சக்தி பொறியியல் கல்லூரி சேர்மன் தங்கவேல் கூறியதாவது:
மருத்துவ நுழைவு தேர்வான ‘நீட்’ விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவ, மாணவியர் இந்த தேர்வை வெற்றிகரமாக எதிர்கொண்டு, தனியார், அரசு மருத்துவ கல்லூரிகளுக்குள் நுழைவதற்காக, ‘நீட்’, என்ன நெருப்பா’ என்கிற தலைப்பில், இலவச கருத்தரங்கத்தை நடத்துகிறோம்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் பங்கேற்கவேண்டும். வல்லுனர்களின் அறிவுரைகளை கேட்டு பயன்பெறவேண்டும். நிகழ்ச்சியில் பங்கேற்போருக்கு, ‘நீட்’ தேர்வு குறித்த முழுமையான விளக்கங்களுடன் கூடிய கையேடு இலவசமாக வழங்கப்படும்.
வரும் ஏப்., 1ம் தேதி முதல், நீட் தேர்வு குறித்த 45 நாள் இலவச பயிற்சி முகாம் துவங்க உள்ளது. பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு தேர்வு நடத்தி, வெற்றி பெறும் 30 பேருக்கு, தங்கும் வசதியுடன் இப்பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு, தங்கவேல் கூறினார்.
No comments:
Post a Comment