'தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு, உயர் கல்விக்கான இரண்டு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்' என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக பொது செயலர் ஜனார்த்தனன், தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை தலைவர் ஆரோக்கியதாஸ் உள்ளிட்ட, ஆசிரியர் சங்க கூட்டமைப்பினர், நேற்று, பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜன், தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர்.
இதுகுறித்து, ஜனார்த்தனன் கூறியதாவது: அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, அவர்களின் உயர் கல்விக்காக, இரண்டு முறை ஊக்க ஊதியம் தரப்படுகிறது. தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு, ஒரு முறை மட்டுமே ஊக்க ஊதியம் வழங்கப்படுகிறது. இதை, இரண்டு முறையாக உயர்த்த வேண்டும். பதவி உயர்வு இல்லாத பணியிடங்களுக்கு, தேர்வு நிலை தர ஊதியம் வழங்கப்படும். இந்த ஊதியத்தை, தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை, அமைச்சரிடம் வலியுறுத்தினோம். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment