டிஜிட்டல்' பணப்பரிவர்த்தனையை வேகப்படுத்தும்விதமாக, ஆதார் எண்ணுடன் இணைந்தஎளிமையான புதிய, 'ஆப்' இன்றுஅறிமுகம் செய்யப்படுகிறது. இதன்மூலம், 'ஸ்மார்ட் போன்' உட்பட, நவீனவசதிகள் ஏதும் இல்லாமல், வர்த்தகர்களின் கணக்கில் பணம்செலுத்த முடியும். செல்லாத ரூபாய்நோட்டு அறிவிப்பால், சில்லரைபணமில்லாமல் மக்கள் தவித்துவருகின்றனர். மக்கள், வங்கிகள், ஏ.டிஎம்.,களில் நீண்ட வரிசையில்காத்திருக்கும் சூழ்நிலை உள்ளது;வர்த்தக நடவடிக்கையும் முடங்கிவருகிறது. எனவே மக்கள்,ரொக்கமின்றி டிஜிட்டல் முறை யில்பணப் பரிவர்த்தனை செய்யவேண்டும் என, மத்திய அரசுவலியுறுத்தி வருகிறது.
இதை ஊக்குவிக்கும் பொருட்டு,சலுகைகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன; கட்டணங்களும்குறைக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்ய, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இ - வாலட் மூலம்பணப் பரிவர்த்தனை செய்ய, 'ஸ்மார்ட் போன்' தேவைப்படுகிறது.ஏராளமானமக்களிடம் இந்த வசதி இல்லாததால், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைசெய்வதில் சிக்கல்நீடிக்கிறது.இதற்கு தீர்வாக, இவை எதுவும்இல்லாமல் டிஜிட் டல் முறையில்பணப் பரிவர்த் தனை செய்ய புதியவசதி உருவாக்கப்பட்டு உள்ளது. 'ஆதார் பேமென்ட் ஆப்' என்றபெயரில், ஆதார் எண் ணுடன்இணைக்கப்பட்ட, 'ஆப்' உருவாக்கப்பட்டு உள்ளது; இது, இன்று அறிமுகம்செய்யப்படு கிறது.
இதை, யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும்இந்திய தனிப்பட்ட அடையாளஆணையம் உருவாக்கி உள்ளது.இதுகுறித்து அதன் நிர்வாகஇயக்குனர் அஜய் பூஷண்கூறியதாவது: நாட்டில் தற்போது, 40 கோடி வங்கி கணக்குகளுடன் ஆதார்எண் இணைக்கப்பட்டுவிட்டது. 2017 மார்ச் சில், மீதமுள்ள வங்கிகணக்குகளுடன் ஆதார் எண்முழுமையாக இணைக்கப்பட்டுவிடும். எனவே, ஆதார் எண் மூலம்வங்கி கணக்கில் இருந்து வர்த்தகருக்கு பணம் செலுத்த இந்த வசதிபயன்படும்.இதன் மூலம் எந்த ஒருவசதியுமின்றி, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும்.
வர்த்தகர் களும், 2,000 ரூபாய்செலவில், கைரேகை அடை யாளஇயந்திரம் மட்டும் வாங்கினால்போதும், வாடிக்கையாளர் கணக்கில்இருந்து எளிதில் பணம்பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார். எப்படிசெயல்படுகிறது? இந்த முறையில்பணப் பரிவர்த்தனை செய்ய, வர்த்தகர்களிடம் மட்டும் மொபைல்போன் இருந் தால் போதும்;பொதுமக்களுக்கு தேவை யில்லை.
அதில், இந்த, 'ஆப்'பை பதிவிறக்கம்செய்து கொள்ள வேண்டும். அத்துடன் கை ரேகை பதிவுஇயந்திரத்தை இணைக்க வேண்டும்.வாடிக்கையாளர், தன் ஆதார்எண்ணை தந்து கைரேகையை பதிவுசெய்தால், அவர் வங்கி கணக்கில்இருந்து வர்த்தகரின் வங்கி கணக்கிற்கு பணம் சென்று விடும்; வங்கிகணக்கு, 'பாஸ்வேர்டாக' கைரேகைபயன்படுத்தப்படும். எனவே, வாடிக்கை யாளரிடம் மொபைல்போன் இல்லாமலேயே அவரது வங்கிகணக் கில் இருந்து வர்த்தகரின்வங்கி கணக்கிற்கு எளிமையாகபணம் செலுத்த முடியும்.'ஸ்வைப்பிங்மிஷின்' தீவிரம்'டிஜிட்டல்' முறைபணப் பரிமாற்றத்திற்கு உதவும்வகையில், 'பாயின்ட் ஆப் சேல்மிஷின்' எனப்படும் 'ஸ்வைப்பிங்மிஷின்கள்' தயாரிப்பைவிரைவுபடுத்தும் படி, மத்திய அரசுகேட்டுக் கொண்டுள்ளது.
அதன்படி, 15 லட்சம் இயந்திரங்கள்தயாரிக்கப்பட்டு வருகின்றன; இதில், பாரத ஸ்டேட் வங்கி, 3 லட்சம் இயந்திரங்களை உருவாக்கி வருகிறது.
No comments:
Post a Comment