தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் வீட்டில் நடத்தப்பட்டு வரும் சோதனையின் தொடர்ச்சியாக, தமிழக தலைமைச் செயலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தலைமைச் செயலகத்தில் உள்ள ராமமோகன் ராவின் அறையில், வருமான வரித்துறை அதிகாரிகள் 20 பேர் சோதனை செய்து வருகின்றனர்.
தலைமைச் செயலகத்துக்கு துணை ராணுவப் படையின் பாதுகாப்புடன் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், நேராக தலைமைச் செயலாளரின் அறைக்குச் சென்று அங்கு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment