துவக்க பள்ளிகளில், நேற்று இரண்டாம் பருவத்தேர்வு துவங்கியநிலையில், ஆசிரியர்களுக்கு, தமிழ் வாசித்தலுக்கான இருநாள் பயிற்சிவழங்கப்பட்டது. இதனால், தேர்வு நடத்த ஆசிரியர்கள் இல்லாமல், தலைமைஆசிரியர்கள் தவித்தனர்.
ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, முப்பருவக்கல்வி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில், ஒன்று முதல்,ஐந்து வரை, இரண்டாம் பருவத்தேர்வுகள் நேற்று துவங்கின.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், மாணவர்களின் தமிழ் வாசித்தல் திறனை மேம்படுத்தல் குறித்து, துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு இரு நாள் பயிற்சி வழங்க, கடந்த வாரம் திட்டமிடப்பட்டது. ஆனால், முதல்வர்ஜெயலலிதா மறைவு, பள்ளி விடுமுறையால், பயிற்சி ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், சேலம் மாவட்டம், தமிழ் பயிற்சி வட்டார வளமையங்களில், ஒத்திவைக்கப்பட்ட பயிற்சி நேற்றுமுன்தினம் துவங்கியது. அதில், துவக்கப்பள்ளிகளில் பணிபுரியும், 50 சதவீத ஆசிரியர்கள் பங்கேற்கஉத்தரவிடப்பட்டது.
தேர்வு நடத்தும் நாளன்று, 50 சதவீத ஆசிரியர்கள் பயிற்சிக்கு சென்ற நிலையில், பள்ளியை நடத்த தலைமைஆசிரியர்கள் சிரமத்துக்கு ஆளாகினர். தேர்வுகளை நடத்த முடியாமல், பெயரளவில் தேர்வுகள் நடத்தப்பட்டன.
அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கூறியதாவது:
தேர்வு நாளில், ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு ஆசிரியர் இருப்பது அவசியம். ஏனெனில் செயல்திட்ட முறைகளில்தனித்தனியே மதிப்பீடு செய்ய வேண்டும். ஆனால், பள்ளியில் உள்ள பாதி ஆசிரியர்கள் பயிற்சிக்கு சென்றுவிட்டனர். இதனால், தேர்வு பணி பாதிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி நடத்தும் அலுவலர்கள், தேர்வு நடத்துவது குறித்த கண்டுகொள்ளாமல் ஏற்பாடு செய்துள்ளதால், தலைமை ஆசிரியர்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், கண்துடைப்பாக தேர்வு நடத்த வேண்டியகட்டாயம் ஏற்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment