எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்கள் இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட நுழைவுச்சீட்டுகளை இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்து அரசுத்தேர்வுகள் மண்டலத்துணை இயக்குனர் வீரகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் 4ம் தேதி தொடங்குகிறது. அதையொட்டி அரசு துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் அரசு தேர்வுகளின் சேவை மையங்களில் ஆன்-லைன் மூலமாக விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் இன்று (27ம் தேதி) முதல் www.tngdc.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் தேர்வுக் கூட நுழைவுச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த இணைய தளத்தில் ’டிபார்ட்மென்ட் ஆப் கவர்ன்மென்ட் எக்சாமினேஷன் ஆன் லைன் அப்ளிகேஷன்’ என்ற வாசகத்தினை கிளிக் செய்து தோன்றும் பக்கத்தில் இ.எஸ்.எல்.சி., ’பிரைவேட் கான்டிடேட் ஹால் டிக்கெட் டவுன்லோடு’ என்பதை கிளிக் செய்து அதில் தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்தால் தேர்வுக் கூட அனுமதிச்சீட்டு திரையில் தோன்றும். அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உரிய தேர்வுக் கூட அனுமதி சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்விற்கு விண்ணப்பித்த அனைத்துத் தேர்வர்களுக்கும் தேர்வுக் கூட அனுமதிச்சீட்டு குறித்து தனிப்பட்ட முறையில் அறிவிப்பு ஏதும் அனுப்ப இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment