"முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும்,'' என, மதுரையில் அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் சண்முகராஜன் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
ஓய்வூதியத் திட்டம் குறித்து சாந்தா ஷீலாநாயர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு விசாரணை நடத்தியுள்ளது. இதில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வர பல சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன. இந்த அறிக்கையை விரைந்து பெற்று பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வர வேண்டும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, மாநில அரசும் சம்பளக் குழுவை அமைக்க வேண்டும். பொங்கல் போனசாக குரூப் 'டி' ஊழியர்களுக்கு ஏழாயிரம் ரூபாயும், கருணை அடிப்படையில் இரண்டாயிரம் ரூபாயும் வழங்க வேண்டும். இக்கோரிக்கைகள் குறித்து தலைமை செயலக அலுவலர்கள் சங்கம், அலுவலக உதவியாளர் சங்கத்தினருடன் இணைந்து முதல்வரை சந்திக்க உள்ளோம், என்றார்.
No comments:
Post a Comment