நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னரே ‘நீட்’ நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு ஆசிரியர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில தலை வர் பி.கே.இளமாறன், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனுப்பி யுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்' நுழைவுத்தேர்வு, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் நடத்தப்படுகிறது. ‘நீட்’ தேர்வில் சிபிஎஸ்இ மாணவர்கள்தான், அதிக எண்ணிக்கையில் பங்கேற்கின்றனர்; அவர்களுக்கு இத்தேர்வு எளிதாக உள்ளது.அதேநேரத்தில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வு மிகவும் கடினமாக இருக்கிறது. எனவே, 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை கொண்டுவந்து, அதன்பின், ‘நீட்' தேர்வு நடத்தினால்தான், அது நியாயமான போட்டியாக இருக்கும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment