வளரிளம் பருவ மாணவரிடையே, ரத்தசோகை ஏற்படாமல் தடுக்கும் வகையில், இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்குவது குறித்து, தலைமை ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் நேற்று நடந்தது.
ஈரோடு, மொடக்குறிச்சி ஒன்றியங்களுக்கான பயிற்சி முகாம், ஈரோட்டில் எஸ்.கே.சி., சாலை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்தது. இதில், ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளை சேர்ந்த, 53 ஹெச்.எம்.,கள் உட்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment