பல்கலை துணைவேந்தர் பதவிகளுக்கு, பல்வேறு போராட்டங்களுக்கு இடையில் நகர்ந்த கோப்புகள், முதல்வர் மறைவு மற்றும் ’வர்தா’ புயலால் மீண்டும் நின்று விட்டன.
சென்னை பல்கலையின் துணைவேந்தராக இருந்த தாண்டவன், 2016 ஜனவரியில் ஓய்வு பெற்றார்; 11 மாதங்களாக, அந்த பதவி காலியாக உள்ளது. அதே போல், 600 இன்ஜினியரிங் கல்லுாரிகளை கட்டுப்படுத்தும், அண்ணா பல்கலை துணைவேந்தர் ராஜாராம் ஓய்வு பெற்று, ஏழு மாதங்கள் ஆகின்றன; இந்த பதவிக்கும், இன்னும் புதியவர் நியமிக்கப்படவில்லை.
இந்நிலையில், துணைவேந்தர் இல்லாமல் பட்டமளிப்பு விழா நடத்த, பல்கலைகளின் நிர்வாகம் ஏற்பாடு செய்தது. ஆனால், ஆசிரியர் சங்கத்தினர், கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தள்ளி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இரு பல்கலைகளுக்கும் துணைவேந்தர்களை நியமிக்கும் நடவடிக்கைகள், டிச., 1ல் மீண்டும் துவங்கின.
அதற்கான கோப்புகள், சம்பந்தப்பட்ட துறைகளில் நகர்ந்து வந்த நிலையில், முதல்வராக இருந்த ஜெயலலிதா, டிச., 5ல் காலமானார். அதனால், அந்த கோப்புகள் மேலும் நகராமல் நின்று விட்டன. ஆளும் கட்சியிலும், அரசு நிர்வாகத்திலும் ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி காரணமாக, துணைவேந்தர் கோப்புகள் மீண்டும் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
No comments:
Post a Comment