மஞ்சூர் அடுத்துள்ள பெங்கால்மட்டம் கிளூர் பாண்டவர் அறக்கட்டளை மற்றும் துாரிகை அறக்கட்டளை சார்பில், அப்பகுதியில் பழங்குடி மாணவர்களுக்கு மூன்று நாட்கள் திறன் மேம்பாட்டு முகாம் நடந்தது.ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித்குமார் வரவேற்றார்.
நிறைவு நாள் நிகழ்ச்சியில், ஊட்டி ரூரல் டி.எஸ்.பி., பாலமுருகன் தலைமை வகித்தார். மஞ்சூர் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், பாண்டவர் அறக்கட்டளை நிர்வாகிகள் சிவக்குமார், மூர்த்தி, சண்முகம், தேவராஜ் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளுடன் ஓவியம், கட்டுரை, கவிதை, பேச்சு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment