சிவகங்கை மாவட்டத்தில் தேர்வு நேரத்தில் உதவிபெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்வதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசு மற்றும் உதவிபெறும் உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை படி ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஆக.,1ல் மாணவர்களின் வருகைப்படி உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டன.
தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டும் உபரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கல்வியாண்டின் இடையில் பணி நிரவல் செய்வதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரிஆசிரியர் கழக மாவட்டச் செயலாளர் இளங்கோ கூறியதாவது: அரசு பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் மே மாதம் நடக்கும் கவுன்சிலிங்கில் தான் பணிநிரவல் செய்யப்படுவர். அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களை திடீரென தேர்வு சமயத்தில் பணி நிரவல் செய்ய உள்ளனர். கல்வியாண்டின் இடையில் ஆசிரியர்களை மாற்றுவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். அவர்களை தேர்வுகளுக்கு தயார்படுத்த முடியாது, என்றார்.
No comments:
Post a Comment