Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, December 19, 2016

    அரசு மருத்துவமனைகளில் சான்றிதழ் வழங்குவதில் தாமதம்

    அரசு மருத்துவமனைகளில் சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்படுவதால் மாற்றுத்திறனாளி மற்றும் கற்றல் குறைபாடு உடைய மாணவர்கள் தேர்வுக்கு தயாராக முடியாமல் அவதிப்படுவதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.
    தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் கற்றல் குறைபாடுடைய மாணவ, மாணவியர் தங்களால் சுயமாகத் தேர்வு எழுத முடியாத சூழலில், பதிலித் தேர்வர்கள் நியமிக்கப்பட்டு தேர்வு எழுதும் வசதியை அரசு வழங்கியுள்ளது.

    இத்தகைய மாணவ, மாணவியர்களுக்கு அரசு மருத்துவமனைகள் மூலம் பள்ளி நிர்வாகம் மருத்துவச் சான்றிதழ் பெறவேண்டும். இதற்காக அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவக் குழுக்கள் உள்ளன.
    மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டீன் தலைமையிலும், மாவட்ட மருத்துவமனைகளில் மருத்துவ அதிகாரி தலைமையிலும் மருத்துவக்குழு செயல்படும். வாரம் ஒரு நாள் கூடும் இந்த மருத்துவக்குழு முன்பாக மாணவ, மாணவியர் நேரில் ஆஜராக வேண்டும். மாணவர்களின் குறைபாடுகள் தொடர்பான மருத்துவத் துறைக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்படுவர்.
    கற்றல் குறைபாடுள்ள மாணவர் மற்றும் சுயமாகத் தேர்வு எழுத முடியாத மாணவர்கள் மனநலப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்படுவர். அங்கு உளவியல் மருத்துவர்கள் மருத்துவப் பரிசோதனை, எழுத்துத் தேர்வு உள்ளிட்ட பரிசோதனைகள் நடத்தி அவர்களது மூளைத்திறன் இயங்கும் தன்மை குறித்து ஆய்வு செய்வர்.


    பரிசோதனை அடிப்படையில் மருத்துவக்குழு சான்றிதழ் வழங்க பரிந்துரைப்பர். அந்த சான்றிதழ் கல்வித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் கற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்கு தேர்வு எழுத கூடுதல் கால அவகாசம் வழங்கப்படும். தாமாகத் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு பதிலித் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்கள்.
    ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி முதல் வாரத்திóல் செய்முறைத் தேர்வுகள் தொடங்கி விடுவதால் நவம்பர் இறுதி அல்லது டிசம்பர் முதல் வாரத்துக்குள் மருத்துவச் சான்றிதழைப் பெற்று பள்ளி நிர்வாகத்திடம் மாணவர்கள் ஒப்படைக்க வேண்டும். தாமதமாக வழங்கப்படும் சான்றிதழ்களை பள்ளிகள் ஏற்றுக்கொள்வது இல்லை.


    இந்நிலையில், தென் மாவட்டங்கள் மற்றும் கரூர், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட 13 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள மண்டல மருத்துவக் குழுவிடம் ஆஜராகி சான்றிதழ் பெறவேண்டிய நிலை உள்ளது.


    இங்கு கற்றல் குறைபாடுடைய மாணவர்களுக்கு எழுத்துத் தேர்வுகள் உள்ளிட்ட பரிசோதனைகள் 6 நாள்கள் நடத்தப்படுகின்றன. இதற்காக மாணவர்கள் தங்கள் பெற்றோருடன், மதுரை அரசு மருத்துவமனைக்கு தினமும் வரவேண்டும். ஆண்டு தோறும் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பரிசோதனைகளுக்காக இங்கு வருகின்றனர். சான்றிதழ் வழங்க மருத்துவர்கள் பரிந்துரைத்த பின்னரும் அலுவலக ஊழியர்கள் அலைக்கழிப்பதாக பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர்.


    இதுதொடர்பாக பெற்றோர் கூறியது: மாவட்ட மருத்துவமனைகளில் அனைத்து சிகிச்சைப் பிரிவுகளும் இருப்பது இல்லை. குறிப்பாக கண், மனநலம், மூளை, நரம்பியல் குறைபாடுடைய மாணவர்களை அழைத்துச் செல்லும்போது மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு செல்லுமாறு பரிந்துரைக்கின்றனர். அங்கு சென்றால் மருத்துவ பரிசோதனைக்கு குறைந்தது ஒரு வாரமாவது அலைக்கழிக்கின்றனர். பின்னர் சான்றிதழ் பெறுவதற்கு ஒரு மாதம் ஆகிவிடுகிறது. இதில் சில மருத்துவர்கள், பரிசோதனையே செய்யாமல் மாணவர்கள் நன்றாக இருப்பதாகக் கூறி நிராகரித்து விடுகின்றனர். இதனால் தேர்வுக்கு தயாராவதில் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர்.


    ஏற்கெனவே ஒரு வாரம் வேலைகளை விட்டு விட்டு, தொலைதூரப் பகுதிகளில் இருந்து அரசு மருத்துவமனைக்கு வருபவர்கள் போக்குவரத்து, உணவு உள்ளிட்ட செலவுகளுக்காக சில ஆயிரம் ரூபாய்களை செலவழிக்க வேண்டியுள்ளது. எனவே மாணவர்களை அலைக்கழிக்காமல் மருத்துவப் பரிசோதனைகளை ஓரிரு நாளில் முடிக்க வேண்டும். மேலும் மாவட்ட மருத்துவமனைகளிலேயே அனைத்து பிரிவுகளையும் ஏற்படுத்தும் பட்சத்தில் மாணவர்கள் வெளி மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது என்றனர்.


    மருத்துவத்துறை அதிகாரிகள் கூறியது: கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 4,400-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மருத்துவச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஏராளமான மாணவர்கள் மருத்துவமனைகளுக்கு வருகின்றனர். அவர்களுக்கு வரிசை அடிப்படையில் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. தகுதி இல்லாத மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு விடக்கூடாது என்ற கவனத்துடன் செயல்பட வேண்டியுள்ளது. மேலும் மருத்துவர்கள் பற்றாக்குறையும் உள்ளது. ஆனாலும் மாணவர்களுக்கு விரைவில் சான்றிதழ் வழங்க மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.

    No comments: