Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, July 30, 2016

    உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நிலையில் இருந்து 41 தலைமை ஆசிரியர்கள் மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு

    41  அரசு உயர்நிலை, அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பணி மூப்பின் அடிப்படையில் மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது.

    1 என்.சுப்பிரமணியன் தலைமையாசிரியர் அரசு (ம) மேல்நிலைப்பள்ளி கும்பகோணம் தஞ்சாவூர் மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், திருவாரூர்
    2 மு.மணிமேகலா தலைமையாசிரியை அரசு உயர்நிலைப் பள்ளி, நெய்வாசல், தஞ்சாவூர் மாவட்டம் மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர் தஞ்சாவூர்

    Friday, July 29, 2016

    நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் 82 ஜூனியர் உதவியாளர், அலுவலக உதவியாளர் பணி

    நாமக்கல் மாவட்ட சிவில் நீதித்துறை அலகில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப் பணி மற்றும் தமிழ்நாடு அடிப்படை பணியில் காலியாக உள்ள ஜூனியர் உதவியாளர், அலுவலக உதவியாளர் மற்றும் தட்டச்சர் பணியிடங்களை நியமனம் செய்யும் பொருட்டு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    மொத்த காலியிடங்கள்: 82

    பணி - காலியிடங்கள் விவரம்:

    1. Steno­-Typist Grade III - 10

    2. Computer Operator - 03

    9 நாட்டு மாணவர்களுக்கு இந்திய ஐ.ஐ.டி., நிறுவனங்களில் ’அட்மிஷன்’

    பாகிஸ்தான் தவிர, இலங்கை, ஆப்கானிஸ் தான் உட்பட ஒன்பது நாடுகளின் மாணவர்கள், இந்திய உயர்கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி.,யில், அடுத்த ஆண்டு முதல் சேர்க்கப்படுவர் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆசிரியர்களுக்கு பணி நிரந்தர ஆணை!

    அரசு மேல்நிலைப் பள்ளிகளில், மணி நேர சம்பள அடிப்படையில் பணியாற்றிய 25 தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு முதல்வர் நாராயணசாமி பணி நிரந்தர ஆணை வழங்கினார்.

    கல்வி துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு!

    தமிழகத்தில் தான் கல்வி துறைக்கு, அதிக நிதி ஒதுக்கப்படுகிறது, என, நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

    சட்டசபையில் நடந்த விவாதம்:

    தி.மு.க., - சேகர்பாபு: பள்ளி கல்வித்துறையில், 600 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள், 60 காலியாக உள்ளன. இவை நிரப்பப்படாததால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டு உள்ளது. 

    அமைச்சர் பெஞ்சமின்: ஒரே நாளில், 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி ஆணையை முதல்வர் வழங்கினார்.

    அரசு பள்ளிகளில் ஆங்கில பிரிவு மாணவர்கள் ஆர்வம்:அமைச்சர் தகவல்

    தமிழகத்தில் பள்ளிகள் எதுவும் மூடப்படவில்லை,'' என, பள்ளிக்கல்வி அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்தார்.சட்டசபையில் நடந்த விவாதம்:காங்கிரஸ் - கே.ஆர்.ராமசாமி: கிராமங்களில், ஆரம்ப பள்ளிகள் சரியாக செயல்படுவதில்லை. போதிய மாணவர்கள் இல்லாததால், பல பள்ளிகளை மூடும் நிலை ஏற்படுகிறது. அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேருவது இல்லை. காரணத்தை அரசு சிந்தித்து பார்க்க வேண்டும்.

    18 கேந்திரிய வித்யாலய பள்ளிகளுக்கு அனுமதி வழங்க கோரிக்கை

    தமிழகத்தில் புதிதாக 18 கேந்திரிய வித்யாலய பள்ளிகள் தொடங்க வேண்டும் என மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் 41 கேந்திரிய வித்யாலய பள்ளிகள் தமிழகத்தில் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலய பள்ளிகள் கூடுதலாக தொடங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அண்மையில் தெரிவித்துள்ளார்.

    முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம்

    ** புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர் (அகஇ), கிருஷ்ணகிரி முதன்மைக் கல்வி அலுவலராக மாறுதல்

    ** நாகப்பட்டிணம் முதன்மைக் கல்வி அலுவலர் (அகஇ), திருவாரூர் முதன்மைக் கல்வி அலுவலராக மாறுதல்

    பி.எட்.,க்கு நுழைவுத் தேர்வு கட்டாயம்

    தரமான ஆசிரியர்களை உருவாக்கும் வகையில், நுழைவுத் தேர்வின் மூலம் பி.எட்., படிப்பில் மாணவர்களை சேர்க்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.ஆசிரியர் பயிற்சிக்கான பி.எட்., படிப்பை, இரண்டு ஆண்டுகளாக மாற்றி, மத்திய அரசு உத்தரவிட்டது; புதிய பாடத்திட்டமும் அறிமுகமானது. இதன் தொடர்ச்சியாக, பி.எட்., படிப்பை தரமானதாக மாற்றவும், சிறந்த ஆசிரியர்களை உருவாக்கவும், மேலும் சில மாற்றங்களை கொண்டு வர, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    சித்தா, ஆயுர்வேத படிப்பு:அவகாசம் நீடிப்பு இல்லை

    'சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, அவகாசம் நீடிக்கப்பட மாட்டாது; இன்றே கடைசி நாள்' என, இந்திய மருத்தும் மற்றும் ஓமியோபதி இயக்குனரகம் தெளிவுபடுத்தி உள்ளது.தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட, இந்திய மருத்துவ படிப்புகளுக்கு, அரசு கல்லுாரிகளில், 356 இடங்கள்; 21 சுயநிதி கல்லுாரிகளில், 1,000 இடங்கள் உள்ளன.

    வழக்கறிஞர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு:7,000 போலிகள் கண்டுபிடிப்பு

    தமிழ்நாடு பார் கவுன்சில் மேற்கொண்டு வரும் வழக்கறிஞர்களின் சான்றிதழ் சரிபார்ப்பில், 7,௦௦௦க்கும் மேற்பட்டது போலி என, தெரியவந்துள்ளது. இவர்களது பதிவை நீக்குவதற்கு, பார் கவுன்சில் நடவடிக்கை எடுத்து வருகிறது. 'நம்நாட்டில், வழக்கறிஞர்களாக பதிவு செய்தவர்களில், ௩௦ சதவீதம் பேர் போலியாக இருக்கலாம்' என, இந்திய பார் கவுன்சில் தலைவர் மன்னன்குமார் மிஸ்ரா தெரிவித்திருந்தார். இதையடுத்து, பார் கவுன்சிலில் ஏற்கனவே பதிவு செய்தவர்கள், புதிதாக பதிவு செய்தவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும்படி, அனைத்து மாநிலங்களிலும் உள்ள பார் கவுன்சிலுக்கு, இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டது.

    64 நடுநிலைப் பள்ளிகளில் கணித ஆய்வகத்துக்கு ஒப்புதல்

    தமிழகத்தில் 64 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் கணித ஆய்வகம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

    பிளஸ் 2 பொதுத் தேர்வு: மறுமதிப்பீட்டில் கூடுதல் மதிப்பெண்: ஆசிரியர்களிடம் தேர்வுத் துறை விசாரணை

    கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வு மறுமதிப்பீட்டில் 2,000-க்கும் அதிகமான மாணவர்களின் மதிப்பெண்ணில் மாற்றம் ஏற்பட்டது தொடர்பாக, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் தேர்வுத் துறை விசாரணை நடத்தி வருகிறது.

    பிளஸ் 2 துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கல்லூரியில் விண்ணப்ப விநியோகம்

    பிளஸ் 2 துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சேலம் அரசு கலைக் கல்லூரியில் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. சேலம் அரசு கலைக் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில், பிளஸ் 2 துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மட்டும் ஜூலை 22-ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். 

    மாற்றுத்திறனுடைய மாணவ / மாணவியருக்கான உள்ளடங்கிய கல்வி திட்டத்தின் கீழ் உபகரணங்கள் வழங்குவதற்கான சிறப்பு முகாம்


    ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை அமல் ஒரு கோடி பேருக்குப் பயன் செயல்திறன் அடிப்படையில் ஊதிய உயர்வு

    மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட ஏழாவது ஊதியக் குழுவின் ஊதிய உயர்வு உள்ளிட்ட பரிந்துரை கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு அமலுக்கு வந்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய நிதியமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 1 கோடி பேர் பயனடைவர். மேலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வானது இனிமேல் செயல்திறன் அடிப்படையில்தான் வழங்கப்படும்.

    குழு - நிபுணர் குழு - பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்வது குறித்து அரசுக்கு பரிந்துரை அளிக்க - குழு மாற்றியமைத்து, 3 மாத கால நீட்டிப்பு செய்து அரசு உத்தரவு

    Wednesday, July 27, 2016

    பி.எட். படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் ஆக.,1 முதல் தொடக்கம்

    பி.எட் படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் ஆகஸ்ட் 1 முதல் 9-ம் தேதி வரை வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

    மத்திய அரசு ஊழியர்களுக்கான ஏழாவது ஊதியக்குழு அறிக்கை மீதான நிதித்துறை தீர்மானம் - அரசிதழில் வெளியீடு

    'எமிஸ்' திட்டத்தில் ஆக., 7க்குள் பதிவு செய்ய கெடு

    தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும், ஒன்றாம் வகுப்பு மாணவர்களின் விபரங்களை, 'ஆதார்' எண்ணுடன், 'எமிஸ்' கணினி திட்டத்தில் பதிவு செய்யும் பணியை, ஆக., 7க்குள் முடிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், தமிழக அரசின், 14 வகை நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில் பல பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை குறையும் நிலையில், ஆசிரியர் பணியிடத்தை தக்கவைக்கவும், இலவச பொருட்களை, 'அபேஸ்' செய்யும் வகையிலும், போலி பெயரில் மாணவர்கள் இருப்பதாக, கடந்த ஆண்டுகளில் கணக்கு காட்டினர்.

    170 பாட வினாத்தாள் மாற்றம் : அண்ணா பல்கலை அதிரடி

    அண்ணா பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள, 550 இன்ஜினியரிங் கல்லுாரிகள், அகில இந்திய கல்விக் கவுன்சிலின் அங்கீகாரம் பெற்று இயங்குகின்றன. இதில், தன்னாட்சி அந்தஸ்து பெற்ற, 13 கல்லுாரிகள் தவிர மற்ற கல்லுாரிகள், அண்ணா பல்கலை பாடத் திட்டம் மற்றும் தேர்வு முறையை பின்பற்றுகின்றன.இந்நிலையில், பி.இ., - பி.டெக்., மாணவர்கள் பலர் தேர்ச்சி பெற்ற போதிலும், வேலை இல்லாமல் கஷ்டப்படுவது குறித்து, பல்கலை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

    அரசுப் பள்ளியில் மது விருந்து - 12 மாணவர்கள் சிக்கினர்: ஆசிரியர்கள் அதிர்ச்சி

    வேலூர் மாவட்டம், அரக்கோணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சக மாணவரின் பிறந்தநாளை பள்ளி வளாகத்திலேயே 12 மாணவர்கள் மது அருந்தி கொண்டாடி, வகுப்பறைக்கு போதையில் வந்த சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரக்கோணத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியானது ஓச்சேரி சாலையில் உள்ளது. இப்பள்ளியில் மொத்தமாக மேல்நிலை வகுப்புகளைச் சேர்த்து 342  மாணவர்கள் படிக்கின்றனர். மேல்நிலை வகுப்புகளில் மட்டும் 168 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியர், உதவித் தலைமை ஆசிரியர் உள்பட மொத்தம் 28 ஆசிரியர், ஆசிரியைகள் பணிபுரிந்து வருகின்றனர்.

    மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து விரைவில் போராட்டம்: ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு

    மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்றார் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச் செயலர் இரா. போஸ். தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி: ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். அதனை முழுமையாக ஒளிவுமறைவற்ற நிலையில் நடத்த வேண்டும் எனக் கோருகிறோம்.

    பிளஸ் 2 தேர்வில் மறுகூட்டல் மதிப்பெண் அளித்ததில் 5 மாவட்டங்களில் முறைகேடு: கல்வித் துறை விசாரணை

    தமிழகத்தில் கடந்த மார்ச்சில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான மறுகூட்டல் மதிப்பெண் வழங்கியதில் முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டதையடுத்து 5 மாவட்டங்களில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    பிளஸ் 2 தேர்வில் மறுகூட்டல் மதிப்பெண் அளித்ததில் 5 மாவட்டங்களில் முறைகேடு: கல்வித் துறை விசாரணை

    தமிழகத்தில் கடந்த மார்ச்சில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான மறுகூட்டல் மதிப்பெண் வழங்கியதில் முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டதையடுத்து 5 மாவட்டங்களில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    Tuesday, July 26, 2016

    தொடக்கக் கல்வி - மனமொத்த மாறுதல் கோருபவர்கள் "ஓராண்டுக்கு குறைவாக உள்ளவர்கள் அரசாணை பத்தி 5 விதிகளின் படி மாறுதல் கோருபவர்களுக்கு பொருந்தும்" என திருத்தம் வெளியீடு

    தொடக்கக் கல்வி - பொது மாறுதல் - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு சார்ந்து 27.07.2016 அன்று இணையதளத்தில் பதிவுகள் மேற்கொள்ள தயாராக இருக்க உத்தரவு


    உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 2016 - விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவு செய்ய உத்தரவு

    உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 2016க்கான விண்ணப்பங்கள் www.deetn.com

    பழைய ஓய்வூதிய திட்டம் எப்போ வரும்?

    'அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது அமலுக்கு வரும்' என, சட்டசபையில் தி.மு.க., எழுப்பிய கேள்விக்கு, ஆளுங்கட்சி தரப்பில் பதில் தெரிவிக்கவில்லை.

    தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் சென்னை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரை கண்டித்து கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்

    பணி மாறுதல் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்த ஆசிரியர்கள் வலியுறுத்தல்

    ஆசிரியர் பணி மாறுதல் பொது கலந்தாய்வை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.  கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொதுக்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 

    கற்பித்தலை மேம்படுத்த புதிய முயற்சிகள்: மக்களவையில் அமைச்சர் ஜாவடேகர் விளக்கம்

    கற்பித்தலை மேம்படுத்த புதிய முயற்சிகள் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று மக்களவையில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.

    "நீட்' தேர்வு வினாத்தாள் கடினம்: தேர்வர்கள் கருத்து

    "நீட்' (தேசிய தகுதிகாண் பொது நுழைவுத் தேர்வு) தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்ததாக, தேர்வர்கள் தெரிவித்தனர். மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்திய 2-ஆம் கட்டத் தேர்வு (நீட்) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதை நாடு முழுவதும் 6 லட்சம் பேர் எழுதினர்.

    10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்: படித்த பள்ளியில் ஆக. 1 வரை வேலைவாய்ப்புக்கு பதிவு செய்யலாம்

    பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே இணையதளத்தில் பதிவு செய்யலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பது: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுப் பணி நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    "பதவி உயர்வு ஆசிரியர்களுக்கு மனமொத்த மாறுதல் கிடையாது"

    நிகழ் கல்வியாண்டில் பதவி உயர்வில் செல்லவுள்ள ஆசிரியர்களுக்கு மனமொத்த மாறுதல் கிடையாது என கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தொடக்கக் கல்வித்துறை இயக்குநர், அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் (ந.க.எண்: 011042) கூறியிருப்பதாவது:

    Monday, July 25, 2016

    கல்விப் பணியை கெடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 'ஊராட்சி அலுவலகத்தில் குடிநீர் பரிசோதனை மேற்கொள்ளும் பணி' ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு.

    தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயற்குழு கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் ஞாயிற்று கிழமை மாவட்டத் தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமையில் நடந்தது. மாநிலத் துணைத்தலைவர் ஜோசப் ரோஸ், மாநிலச் செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார். மாநிலப்பொதுக்குழு உறுப்பினர்கள் ஞான அற்புதராஜ், சிங்கராயர்;,
    மாவட்டப் பொருளாளர் குமரேசன், மாவட்டத் துணைச் செயலாளர் ரவி;, வட்டாரச் செயலாளர்கள் ஜெயக்குமார், சகாயதைனேஸ், சேவியர் சத்தியநாதன், சத்தியேந்திரன், மற்றும் அஜ்மீர், ஜோசப், சாஸ்தா சுந்தரம், பாலமுருகன், சூசை மாணிக்கம், ரவிக்குமார், டேவிட் ரொசாரியோ, முத்துக்குமார் உள்ளிட்ட மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    பள்ளிக்கல்வி - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது - படிவங்களில் விவரங்களை பூர்த்தி செய்து சமர்பிக்க உத்தரவு

    அடிப்படை வசதிகளின்றி மாணவிகள் தவிப்பு!

    திருமங்கலம் மதுரை காமராஜ் பல்கலை உறுப்பு கல்லுாரியில் இடநெருக்கடி மற்றும் அடிப்படை வசதிகள் இன்றி மாணவிகள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். திருமங்கலம் அரசு ஆண்கள் பள்ளி வளாகத்தில் 2012 முதல் செயல்படும் கல்லுாரியில் பி.காம்., பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பி.எஸ்.சி., கணிதம் பாடப் பிரிவுகளில் 600 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.

    சிறுபான்மையின மாணவர் கல்வி உதவி தொகை

    சிறுபான்மையின மாணவ, மாணவியர் மேற்படிப்பு திட்டத்தில் கல்வித் தொகை பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சென்னை மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பிளஸ் 1, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு படிக்கும் சிறுபான்மையின மாணவர்களுக்கு, பள்ளி மேற்படிப்பு திட்டத்தின் கீழ், கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

    ஊரக வளர்ச்சித் துறையில் 903 புதிய பணியிடங்கள் : உள்ளாட்சி தேர்தலுக்காக அரசு உத்தரவு.

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைகளில் 903 புதிய பணியிடங்களை தோற்றுவித்து அரசு முதன்மைசெயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் தற்போதைய உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் அக்., 23ல் முடிகிறது. 

    பழைய சமச்சீர் 'சிலபஸ்' மாற்ற புதிய குழு : அரசுக்கு தனியார் பள்ளிகள் ஆலோசனை

    தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றபடி, புதிய பாடங்கள் இடம் பெறும் வகையில், சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்' என, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    'நீட்' தேர்வில் 'கேட்' ஏறி குதிக்க முயன்ற மாணவர்கள் : மூக்குத்தி, காது வளையத்தை பாதுகாத்த பெற்றோர்

    எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர்வதற்கான, இரண்டாம் கட்ட, 'நீட்' மருத்துவ பொது நுழைவு தேர்வில், தாமதமாக வந்தோர் அனுமதிக்கப்படவில்லை; அதனால் பலர், 'கேட்' ஏறி குறிக்க முற்பட்டனர். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, இரண்டாம் கட்ட, 'நீட்' தேர்வு நேற்று நாடு முழுவதும் நடந்தது; 4.7 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழகத்தில், 3,000 மாணவர்கள் எழுதினர். இயற்பியல், வேதியியல் ம ற்றும் உயிரியல் பாடங்களில், 180 ஒரு மதிப்பெண் கொள்குறி என்ற, 'அப்ஜெக்டிவ்' வகை வினாக்கள் கேட்கப்பட்டன.

    இடைநிலை ஆசிரியராக நியமிக்கப்பட்ட பி.எட்., பட்டதாரிகளுக்கு ஊக்க ஊதியம்

    துப்பாக்கி குண்டு பாய்ந்து தலைமை ஆசிரியர் காயம்

    திருவண்ணாமலை; பைக்கில் சென்ற தலைமை ஆசிரியர் மீது, திடீரென துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் அவர் படுகாயம் அடைந்தார். திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை, கல்யாணமந்தை கிராம வனத்துறை நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், முனிரத்னம், 56. இவர், சென்னைக்கு செல்ல, வாணியம்பாடி பஸ் ஸ்டாண்டுக்கு நேற்று முன்தினம் இரவு பைக்கில் சென்றார்.

    தி இந்து’ வாசகர்கள் வழங்கிய பொருளுதவியால் தொடுதிரை மூலம் பாடம் கற்கும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள்: ‘ஸ்மார்ட் கிளாஸ்’ வசதியால் உற்சாகம்

    இந்திய அளவில் ஆங்கில மொழித் திறன் தொடர்பான போட்டியில் கலந்துகொண்டு பல பரிசுகளையும், பாராட்டுகளையும் பெற்ற திருவாரூர் மாவட்ட அரசுப் பள்ளிக்கு ‘தி இந்து’ வாசகர்கள் வழங்கிய பொருளுதவியால், தற்போது தொடுதிரை மூலம் பாடங்கள் நடத்தப்படுகின்றன.

    கல்வி அலுவலர் தேர்வு முடிவு; காத்திருக்கும் ஆசிரியர்கள்

    தமிழக பள்ளி கல்வி துறையில் காலியாக உள்ள மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கு, தேர்வு எழுதி, ஓராண்டாக, 3,000 ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர். தமிழகத்தின் பல மாவட்டங்களில், 11 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழக பள்ளிக் கல்வித்துறை இக் காலியிடங்களை நிரப்ப, 2014ம் ஆண்டில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் முதல்நிலை எழுத்து தேர்வு நடத்தியது. இத்தேர்வை தமிழகம் முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் எழுதினர்.

    தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் 50% வழங்க வேண்டும்: முதுநிலை ஆசிரியர்கள் சங்கம்

    பதவி உயர்வு பெற்ற முதுநிலை ஆசிரியர்களுக்கு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் 50 சதம் வழங்க உத்தரவிட கோரி நீதிமன்றத்தை அணுகுவது என ஆசிரியர் சங்கம் முடிவு செய்துள்ளது. தருமபுரியில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    உடற்கல்வியில் 500 காலிப் பணியிடங்கள்

    தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 500-க்கும் அதிகமான உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. புதிதாகத் தொடங்கப்பட்ட, தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்காததால் மாநில, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் பிரகாசிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

    கல்வியால் மனிதத்தைப் பரப்ப வேண்டும்: ஆளுநர் கே.ரோசய்யா

    கல்வியால் மனிதத்தைப் பரப்ப வேண்டும் என ஆளுநர் கே.ரோசய்யா வலியுறுத்தினார். ஸ்ரீ வல்லபாசார்யா வித்யா சபாவின் 50-ஆவது ஆண்டு விழா சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டுவிழா அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆளுநர் கே.ரோசய்யா பேசியதாவது:

    Friday, July 22, 2016

    சுயநிதி பல்கலைகளில் 'அட்மிஷன்' : ஜூலை 28 வரை விண்ணப்பிக்கலாம்

    தனியார் சுயநிதி பல்கலைகளில், இன்ஜி., படிப்பதற்கான, மத்திய அரசின் இட ஒதுக்கீடு வாரியத்தின் விண்ணப்ப பதிவு, நேற்று துவங்கியது. மத்திய அரசின் ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்களில், ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வான ஜே.இ.இ., 'ரேங்க்' பட்டியல் மூலம், மாணவர் சேர்க்கப்படுகின்றனர். இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங் முடிவுக்கு வந்துள்ள நிலையில், தனியார் சுயநிதி கல்லுாரி மற்றும் பல்கலைகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு, நேற்று துவங்கியது.

    கல்வித்துறையில் புது திட்டம் : பிரச்னைகளுக்கு தீர்வு காணும் மாணவர்கள்

    சமூக பிரச்னைகளுக்கு தீர்வு காணும் திட்டங்களை செயல்படுத்தும் அரசு பள்ளி மாணவர்களை, மொரீஷியஸ் நாட்டிற்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 'அனைவருக்கும் கல்வி இயக்கம்' சார்பில் அரசு துவக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களை தன்னம்பிக்கை உடையவர்களாக மாற்றவும், சமூக பிரச்னைகளுக்கு அவர்கள் மூலம் தீர்வு காணும் வகையில் 'செயல் திட்ட வழிக்கற்றல் திட்டம்' (புராஜெக்ட் பேசிக் ஸ்கீம்) செயல்படுத்தப்படுகிறது.

    தமிழக அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த உயர்மட்ட குழு

    தமிழக பட்ஜெட் 2016-17 சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. காலை 11 மணிக்கு பேரவையில் 2016-17-ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர்ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

    கல்லீரல் பாதித்த அரசுப் பள்ளி ஆசிரியருக்கு மருத்துவ உதவி: முதல்வர் உத்தரவையடுத்து அமைச்சர் நேரில் பார்வயிட்டார்

    கல்லீரல் பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியரை வியாழக்கிழமை பார்வையிட்டு சிறப்பு சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு ஆலோசனை வழங்குகினார் அமைச்சர் விராலிமலை, ஜூலை, 21: புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியருக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உயிருக்குப் போராடும் தங்கள் ஆசிரியரின் மருத்துவச் செலவுக்கு உதவி கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த புதன்கிழமை பள்ளி வளாகத்தில் இருந்து மாணவர்கள் தனித்தனி கோரிக்கை மனு எழுதி தமிழக முதல்வருக்கு அனுப்பினர், 

    7வது ஊதியக் குழு பரிந்துரைகள்: அலுவலர்கள் குழு நியமிக்கப்படும்

    ஏழாவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து பரிசீலிக்க உயர் அலுவலர்கள் குழு அமைக்கப்படும். இதுதொடர்பாக நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு: அரசு அலுவலர்களுக்கு மருத்துவச் சிகிச்சைகள் வழங்க புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் - 2016 ஜூலை 1-ஆம் தேதி முதல் செயல்படுத்துவதற்காக ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. இதன்படி அரசு அலுவலர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு 4 ஆண்டுகளுக்கு ரூ. 4 லட்சம் வரை மருத்துவச் சிகிச்சை பெற முடியும். தற்போது நீட்டிக்கப்பட்ட இந்தத் திட்டத்தில் சில குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கு மட்டும் உச்சவரம்புத் தொகை ரூ.7.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    முதல் இடைத்தேர்வு 26ல் தொடக்கம்: பிளஸ் 1, பிளஸ் 2 பாட புத்தகங்கள் கிடைக்காமல் மாணவர்கள் தவிப்பு

    தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. பள்ளிகள் திறந்த முதல்நாளே மாணவ, மாணவியருக்கு பாட புத்தகங்கள் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு அன்று மாலையில் புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்: அரசு ஊழியர்கள் பெருந்திரள் முறையீடு

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்துவிட்டு அனைவருக்கும் பழைய பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் வளாகத்தில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் வியானன்று (ஜூலை 21)நடைபெற்றது.

    பிளஸ் 2 ஆசிரியர்களுக்கு விரைவில் புத்தாக்கப் பயிற்சி

    பொதுத்தேர்வில் தேர்ச்சியை அதிகரிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட கற்றல் கையேடு குறித்து, பிளஸ் 2 ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி அடுத்த மாதம் அளிக்கப்படுகிறது. பிளஸ் 2 மாணவர்களுக்கு புளு பிரிண்ட் அடிப்படையில் கடந்த ஆண்டு கற்றல் கையேடு தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. இதை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்.சி.இ.ஆர்.டி.) தயாரித்தது.

    பிளஸ் 2 மாணவர்களுக்கு விரைவில் சிறப்பு கையேடு

    பிளஸ் 2 மாணவர்களுக்கு இந்தாண்டு முன் கூட்டியே இலவச சிறப்பு கையேடு வழங்கப்படுகிறது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: பிளஸ் 2 'ப்ளூ' பிரின்ட் அடிப்படையில், கடந்த ஆண்டு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச கற்றல் கையேடு வழங்கப்பட்டது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இதனை தயாரித்தது.

    Thursday, July 21, 2016

    நிதித்துறை - 2016-17ஆம் நிதியாண்டிற்கான வரவு-செலவு திட்ட அறிக்கை

    ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்பட்ட நிதி பற்றிய முழு விவரம்

    தமிழக சட்டப்பேரவையில் இன்று 2016-17ம் ஆண்டுக்கான  திருத்திய நிதிநிலை அறிக்கையில், ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்பட்ட நிதி பற்றிய முழு விவரத்தை இங்கே பார்க்கலாம்.

    சமூக நலத்துறைக்கு ரூ.4,512 கோடி ஒதுக்கீடு.

    பள்ளிக் கல்வித் துறைக்கு 24,130 கோடி ஒதுக்கீடு.

    பள்ளிக் கட்டடங்களை மேம்படுத்த ரூ.330.60 கோடி ஒதுக்கீடு.

    தமிழக நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள்

    தமிழக சட்டப்பேரவையில் இன்று 2016 - 17ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

    தமிழக சட்டப் பேரவை இன்று காலை கூடியது. காலை 11 மணியளவில் கூடிய சட்டப்பேரவைக் கூட்டத்தில், நிகழ் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

    அதன் சிறப்பம்சங்கள்,

    தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.15,854 கோடி.

    அடுத்த நிதியாண்டில் 3.50 லட்சம் இலவச வீட்டு முனைப் பட்டா வழங்கப்படும்.

    தொடக்கக் கல்வி - அலகு விட்டு அலகு மாறுதல் கோரும் விண்ணப்பம் (நகராட்சி / மாநகராட்சி பள்ளிகள்)


    தொடக்கக் கல்வி - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல் விண்ணப்பம்


    பள்ளிக்கல்வி / தொடக்கக் கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பங்கள்

    பொது கலந்தாய்வு விதியில் மாற்றம் : ஆசிரியர்கள் வலியுறுத்தல்

    ஆசிரியர்கள் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு தொடர்பாக கல்வித்துறை வெளியிட்டுள்ள புதிய விதிமுறையால் பெரும்பாலான ஆசிரியர்கள் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு ஆக., 3ல் துவங்கி செப்., 4 வரை நடக்கிறது. இந்தாண்டில் கலந்தாய்வு விதிமுறையில் கல்வித்துறை மாற்றம் செய்துள்ளது.

    அரசு பணியாளர் மருத்துவ காப்பீட்டு திட்டம்: முதல்வர் ஜெ., துவக்கி வைப்பு

    அரசு பணியாளர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை துவக்கி வைத்து, ஐந்து அரசு பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகளை, முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். ஜூலை, 1ம் தேதி முதல், நான்கு ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தை, சில கூடுதல் பயன்களுடன் செயல்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் மூலம், ஜூலை, 1ம் தேதி முதல், 2020 ஜூன் 30 வரை, இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    பிளஸ் 2 உடனடி துணைத்தேர்வு 'ரிசல்ட்' இன்று வெளியீடு

    பிளஸ் 2 உடனடி துணைத்தேர்வின் முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா தேவி, நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஜூன் மற்றும் ஜூலையில், பிளஸ் 2 மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கு, சிறப்பு துணைத்தேர்வு நடந்தது.

    ஆசிரியர் உயிரைக் காக்க முதலமைச்சருக்கு கோரிக்கை மனு எழுதிய 400 மாணவர்கள்

    அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6 ஆண்டுகளாக பணியாற்றி 100 சதவீதம் மதிப்பெண் பெற வைத்த ஆசிரியர் கல்லீரல் பாதிப்பால் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். அவரது உயிரை காக்க முதலமைச்சர் மருத்துவ உதவிக்கு செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பள்ளி மாணவர்கள் 400 பேர் முதலமைச்சருக்கு கோரிக்கை மனு எழுதியுள்ளனர்.

    பள்ளி ஆசிரியர்களுக்கு ஆக. 6 முதல் பொதுமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு: விண்ணப்பிக்க ஜூலை 28 கடைசி

    அரசு பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வில் கலந்து கொள்ள ஜூலை 28 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி தெரிவித்தார்.

    மாணவர்களின் திறமையை வளர்ப்பது குறித்த கலந்தாய்வு:40 பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்பு

    மாணவர்களின் திறமையை உயர்த்துதல் தொடர்பாக ஆசிரியர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் ஆர்.கே.பேட்டையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் 40 பள்ளிகளிலிருந்து ஆசிரியர்கள் பங்கேற்றனர். பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஒன்றியங்களில் தேர்வு செய்யப்பட்ட 40 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு 2016 - 17 ஆண்டுக்கான கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் மாணவர்களிடம் உள்ள திறமைகளை எவ்வாறு உயர்த்துவது என்பது தொடர்பான வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    Tuesday, July 19, 2016

    பள்ளிக்கல்வி - பத்தாம் வகுப்பில் தமிழ் பாடத் தேர்வில் விலக்கு கோருவது சார்பான அரசு செயலரின் வழிகாட்டுதல்கள்

    பிளஸ் 2 தேர்வில் ஆள் மாறாட்டம்; ஆசிரியர்கள் ’சஸ்பெண்ட்’

    பிளஸ் 2 பொதுத்தேர்வில், ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளி தேர்வு மையத்தில், ஆள் மாறாட்டம் செய்தது தொடர்பான புகாரில், இரண்டு தலைமை ஆசிரியர் உட்பட நான்கு ஆசிரியர்கள், சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். கடந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வின் போது சென்னையில் இருந்து இணை இயக்குனர்கள், மாவட்ட வாரியாக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டனர். மேலும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட பொதுத்தேர்வுக்கான அதிகாரியாகவும் நிர்ணயிக்கப்பட்டனர். 

    பிளஸ் 2 விடைத்தாள் திருத்தத்தில் குளறுபடி; ஆசிரியர்களிடம் விசாரணை!

    பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தத்தில், குளறுபடிகள் நடந்துள்ளது தொடர்பாக, 500 ஆசிரியர்களிடம் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில், 3,500 மாணவர்கள், எங்கள் விடைத்தாள்கள் சரியாக திருத்தம் செய்யப் படவில்லை எனக் கூறி, மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தனர். இவர்களில், 2,400 பேரின் விடைத்தாள்களில் வழங்கப்பட்ட மதிப்பெண்ணில் மாற்றம் ஏற்பட்டது.

    தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க கோரிக்கை!

    உயர்கல்வி முடித்த தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு, இரண்டு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, தேர்வு நிலை தர ஊக்க ஊதியம், பதவி உயர்வு, ஊதிய உயர்வு மற்றும் உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் என, ஊதிய உயர்வுகள் வழங்கப்படுகின்றன. உயர்கல்வி முடித்த ஆசிரியர்களுக்கு, இரண்டு ஊக்க ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த ஊதிய உயர்வு, தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு மறுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

    பிளஸ் 1 புத்தகம் வாங்க மணிக்கணக்கில் காத்திருப்பு

    பிளஸ் 1 புத்தகங்கள் வாங்க, பள்ளிக்கல்வித் துறை அலுவலகத்தில், பெற்றோர் மணிக்கணக்கில் காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், பிளஸ் 1 வகுப்புகள், அரசு பள்ளிகளில், ஜூன் 23ம் தேதியும்; தனியார் பள்ளிகளில், ஜூன் முதல் வாரத்திலும் துவங்கின. அரசு பள்ளி மாணவர்களுக்கு, இலவசமாக புத்தகங்கள் வழங்கப்பட்டன. பொருளியல் பிரிவு பாட புத்தகங்கள் மட்டும் இருப்பு இல்லாததால், கடந்த வாரம் வழங்கப்பட்டது.

    சி.ஏ., தேர்வில் சேலம் மாணவர் தேசிய அளவில் முதலிடம்

    'சார்ட்டட் அக்கவுன்டன்ட்'டுக்கான சி.ஏ., தேர்வில், 613 மதிப்பெண் பெற்று, தேசிய அளவில், சேலம் மாணவர் முதலிடம் பிடித்துள்ளார். சி.ஏ., தேர்வு, ஆண்டுக்கு இரு முறை, நவம்பர் மற்றும் மே மாதங்களில் நடக்கிறது. சி.பி.டி., எனப்படும், பொது தகுதித்தேர்வு, மெயின் தேர்வு மற்றும் இறுதித் தேர்வு என, மூன்று கட்டமாக தேர்ச்சி பெற வேண்டும். இதில், மே மாதம் நடந்த, மூன்றாம்கட்ட இறுதித் தேர்வின் முடிவுகளை, 'இந்திய சார்ட்டட் அக்கவுன்டன்ட்' சங்கம், நேற்று அறிவித்தது.

    ஆசிரியரின் ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்த மாவட்ட கருவூல அதிகாரியின் உத்தரவுக்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு

    ஆசிரியரின் ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்த மாவட்ட கருவூல அதிகாரியின் உத்தரவுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. மதுரை ஞானஒளிவுபுரத்தைச் சேர்ந்த எம்.ஜெபமாலைராஜ் சென்னை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: வேடசந்தூர் அரசுப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 1958-ல் பணியில் சேர்ந்தேன். 1984-இல் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றேன்.

    குழந்தைகளின் உரிமைகளைப் புரிந்து கொள்பவர்களே உண்மையான ஆசிரியர்கள்

    குழந்தைகளின் உரிமைகளைப் புரிந்து கொள்பவர்கள் மட்டுமே உண்மையான ஆசிரியர்கள் என்று குழந்தை நேய பள்ளித் திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் சுடரொளி பேசினார். விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ள குழந்தை நேய பள்ளிகள் தலைமை ஆசிரியர்களுக்கான அறிமுகக் கூட்டம் திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்புப் பதிவு தொடங்கியது:ஆக.1 வரை பதிவு செய்ய வாய்ப்பு

    பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான வேலைவாய்ப்புப் பதிவு திங்கள்கிழமை தொடங்கியது. தமிழகத்தில் உள்ள 3,893 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, மதிப்பெண் பட்டியல் திங்கள்கிழமை (ஜூலை 18) முதல் வழங்கப்படுகிறது.

    மாநில பாடத் திட்டத்தை மேம்படுத்த ஆசிரியர்கள் கோரிக்கை

    மத்திய அரசின் இடைநிலை கல்வி திட்டத்துக்கு இணையாக மாநில பாடத் திட்டத்தை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கையெடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க அவசரச் செயற்குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் செல்வராஜ் தலைமையில் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் செல்வக்குமார் வரவேற்றார். மாநில தகவல் தொடர்பு செயலாளர் சந்திரசேகரன், பொருளாளர் தமிழ்மணியன், துணைத்தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தேசிய கல்விக் கொள்கை: உயர்நிலைக் குழு அமைக்க வேண்டும்

    தேசிய கல்விக் கொள்கையைத் தயாரிக்க கல்வியாளர்கள், சமூகநல ஆர்வலர்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் அடங்கிய உயர்நிலைக் குழுவை அமைக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

    Monday, July 18, 2016

    அகஇ - 2016-17ஆம் ஆண்டிற்க்கான பள்ளி மான்யம் வழங்குதல் மற்றும் பயன்படுத்துதல் சார்ந்த இயக்குனரின் வழிகாட்டுதல்கள் நெறிமுறைகள்

    அகஇ - 2016-17ஆம் ஆண்டிற்க்கான பள்ளி மான்யம் விடுவித்தல் சார்பான உத்தரவு

    ’பேஸ்புக்’கில் நேரத்தை வீணடிக்கும் ஆசிரியர்கள்!

    ஆசிரியர்களுக்கான பயிற்சியின் போது, மொபைல் போன்களை பயன்படுத்தக்கூடாது என, உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு எஸ்.எஸ்.ஏ., எனப்படும், அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலமும், வட்டார வள மையங்கள் மூலமும், விடுமுறை நாட்களில் சிறப்பு பயிற்சிகள் தரப்படுகின்றன. 

    உலக சாதனை என்ற பெயரில் சிறுவனுக்கு கொடுமை

    திருச்சியில், உலக சாதனை என்ற பெயரில், 6 வயது சிறுவனை கால் விரல்களை மடக்கி வலியால் துடித்தபடி நடக்க வைத்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியைச் சேர்ந்த பாலாஜி - -அன்னபூரணி தம்பதியின் மகன் சஞ்சய், 6; கேம்பியன் பள்ளியில், 1ம் வகுப்பு படிக்கிறான். இவன் ஏற்கனவே கால் விரல்களை மடக்கியபடி, 60 மீட்டர் நடந்து, ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ், இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளான்.

    இலவச உயர்கல்வி தரும் ’உதான்’ திட்டம்

    மத்திய அரசு சார்பில், உயர்கல்வி நிறுவனங்களில் மாணவியர் இலவசமாக சேரும், உதான் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் அவகாசம், 20ம் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் உயர்கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்றவற்றில் ஏழை மாணவ, மாணவியரும் சேர்ந்து இலவச கல்வி கற்கும் திட்டத்தை, உதான் திட்டம் என்ற பெயரில், 2014ல் மத்திய அரசு அறிமுகம் செய்தது.

    பழைய பென்சன் திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுனர் குழுவின் அறிக்கையை தாக்கல் செய்வது எப்போது? கெடு முடிந்ததால் ஏமாற்றத்தில் அரசு ஊழியர்கள்


    பள்ளிக் கல்வி - பொது மாறுதல் - 2016-17ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதலுக்கான கால அட்டவணை

    கணினிமயமாக்கம் - 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ / மாணவியர்கள் - அவர்கள் பயின்ற பள்ளிகள் மூலமாக நேரடியாக வேலைவாய்ப்பு இணையதளத்தில் தங்கள் கல்வித்தகுதிகளை பதிவு செய்தல் சார்ந்து செயல்முறைகள்

    சேம நிதியம் - பொது வருங்கால வைப்பு நிதி - 01.04.2016 முதல் 30.06.2016 வரை 8.1% வட்டி விகிதம் அறிவிப்பு

    தொடக்கக் கல்வி - பொது மாறுதல் - 2016-17ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதலுக்கான கால அட்டவணை

    தொடக்கக் கல்வி - பொது மாறுதல் - 2016-17ஆம் கல்வியாண்டிற்கான வழிக்காட்டி நெறிமுறைகள் குறித்து இயக்குனரின் செயல்முறைகள்

    TEACHERS GENERAL TRANSFER NORMS & INSTRUCTIONS

    கல்விக் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

    மாணவர்களின் கல்விக் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய அதிமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் வருமாறு:

    8ம் வகுப்பு படித்தால் 'பிஸியோதெரபிஸ்ட்'

    'திறன் இந்தியா' திட்டத்தின் கீழ் 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு உதவி 'பிஸியோதெரபிஸ்ட்' சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுவதற்கு இயன்முறை மருத்துவ பெருமன்றம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.மதுரையில் நேற்று இயன்முறை மருத்துவ பெருமன்றம் மாநில தலைவர் கிருஷ்ணகுமார் கூறியதாவது: மத்திய அரசின் 'திறன் இந்தியா' திட்டத்தின் கீழ் ௮ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் பயின்றவர்களுக்கு உதவி 'பிஸியோதெரபிஸ்ட்' சான்றிதழ் பயிற்சி அளித்து வருகிறது. இயன்முறை மருத்துவர்கள் நான்கரை ஆண்டுகள் கல்லுாரியில் படித்தவற்றை, இவர்களுக்கு ௪ மாதங்களில் பயிற்றுவிப்பது முடியாத விஷயம்.

    மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைப்பு

    தமிழகத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த, மருத்துவ படிப்புக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு, சென்னையில், ஜூன், 21 முதல், 25ம் தேதி வரை நடந்தது. இதில், அரசு மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள அனைத்து இடங்களும் நிரம்பின. அரசு பல் மருத்துவ கல்லுாரியில், 85 இடங்களில், 78 இடங்கள் நிரம்பின.

    இன்ஜி., கல்லூரிகளில் இன்று முதல் 'அட்மிஷன்"

    அண்ணா பல்கலை கல்லுாரிகளில், இன்று முதல் இன்ஜி., மாணவர் சேர்க்கை துவங்குகிறது. அண்ணா பல்கலையின் இணைப்புக்கு உட்பட்ட, 524 கல்லுாரிகளில், தமிழக அரசின் ஒற்றைச் சாளர முறையில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. ஜூன், 27 முதல் பொது கவுன்சிலிங் நடந்து வருகிறது. கவுன்சிலிங்கில் இடம் வழங்கப்பட்டவர்களுக்கு, அண்ணா பல்கலையின் இன்ஜி., கல்லுாரிகள், அரசு இன்ஜி., கல்லுாரிகளில், இன்று முதல் மாணவர் சேர்க்கை துவங்குகிறது.

    புதிய கல்விக் கொள்கை விளக்கக் கருத்தரங்கம்

    தேசிய புதிய கல்விக் கொள்கை-2016 என்ற தலைப்பிலான கருத்தரங்கம் உடுமலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியன சார்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கிற்கு எம்.தண்டபாணி தலைமை வகித்தார்.

    பள்ளிக் கல்வித் துறையில் "சட்ட அலுவலர்' பணியிடம் உருவாக்க வலியுறுத்தல்

    ஒவ்வொரு மாவட்ட அலுவலகத்துக்கும் "சட்ட அலுவலர்' என்ற புதிய பணியிடம் தோற்றுவிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தருமபுரியில் அண்மையில் நடைபெற்ற சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் வட்டப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    Saturday, July 16, 2016

    பள்ளிக்கல்வி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு: ஆகஸ்டு 3 முதல் செப். 6 வரை நடைபெறவுள்ளது

    மாறுதல் விண்ணப்பங்கள் ஜுலை 19 முதல் 28 வரை விண்ணப்பிக்கலாம்

    பள்ளிக்கல்வித்துறை

    6.8.16 - மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மாறுதல் கலந்தாய்வு  

    7.8.16 - மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 

    13.8.16 - உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மாறுதல் 

    20.8.16 - முதுகலை ஆசிரியர் மாறுதல் (மாவட்டத்திற்குள்)

    21.8.16 - முதுகலை ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)

    22.8.16 - முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு

    தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு: ஆகஸ்டு 3 முதல் செப். 6 வரை நடைபெறவுள்ளது

    மாறுதல் விண்ணப்பங்கள் ஜுலை 19 முதல் 28 வரை விண்ணப்பிக்கலாம்

    தொடக்கக் கல்வி துறை

    3.8.16 - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல்  

    4.8.16 - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு 


    6.8.16 - நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் மாறுதல் & பதவி உயர்வு மற்றும் பட்டதாரி ஆசிரியர் மாறுதல்


    7.8.16 -  தொடக்கப்பள்ளி தலைமை யாசிரியர் மாறுதல் & பதவி உயர்வு 

    பள்ளிக்கல்வி - 2408 பட்டதாரி ஆசிரியர் / 344 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு ஜூன் மற்றும் ஜூலை 2016க்கான தொடர் நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவு

    Friday, July 15, 2016

    ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் விதிகள் அரசாணை தயாராகியும் வெளியிட தயக்கம்

    ஆசிரியர்கள் இடமாறுதல் தொடர்பான விதிகளை, தமிழக பள்ளிக்கல்வித் துறை இறுதி செய்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங் விதிமுறையை, அரசு உருவாக்கியுள்ளது. இதற்கான அரசாணை, ஜூலை, 6ல் தயாராகி உள்ளது. ஆனாலும், அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. அதே நேரத்தில் இதுபற்றிய தகவல்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அலுவலர்களின், 'வாட்ஸ் ஆப்'களில் வலம் வருகின்றன.

    500 அரசு பள்ளிகளுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு : மத்திய அரசு புது திட்டம்

    இந்தியா முழுவதும் சுகாதாரமான 500 அரசு பள்ளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கும் பிரதமர் மோடியின் தேசிய இயக்கத்திற்கு 'ஆன்லைனில்' பதிவு நடைபெறுகிறது. துாய்மை பாரதம் திட்டத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி கழிப்பறைகள் தினமும் இருவேளை பராமரிக்க பணியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாதசம்பளம், கிருமி நாசினி வாங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து, கை கழுவ சோப்பு, டவல் தரப்பட்டுள்ளன.

    பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் 'சுவாதி ஆப்' என்ற புதிய மொபைல் அப்ளிகேஷன்: விரைவில் அறிமுகம்

    ரயில்களில் பயணிக்கும் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் 'சுவாதி ஆப்' என்ற புதிய மொபைல் அப்ளிகேஷன் ஒன்றை ரயில்வே பாதுகாப்பு படை அறிமுகப்படுத்த உள்ளது.

    மருத்துவ காப்பீட்டுத் திட்ட குறைபாடுகள் : களைய அரசு ஊழியர்கள் வலியுறுத்தல்

    'அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்ட குறைபாடுகளை களைய, அரசு பேச்சு நடத்த வேண்டும்,' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சங்க மாநில பொது செயலர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது: அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அரசு நீடித்துள்ளது. 'புற்றுநோய், உறுப்பு மாற்று சிகிச்சை தவிர மற்ற சிகிச்சைகளுக்கு ரூ.4 லட்சம் மீண்டும் வழங்கப்படும்' எனவும் அறிவித்துள்ளது.

    காலங்கள் மறக்காத பெயர் 'காமராஜர்!' : இன்று காமராஜர் பிறந்த நாள்

    “படித்ததினால் அறிவு ​பெற்​றோர் ஆயிரம் உண்டு படிக்காத ​மேதைகளும் பாரினில் உண்டு...” இந்த வரிகள், நிச்சயமாக, மறைந்த, முன்னாள் முதல்வர் காமராஜருக்கு பொருந்தும். பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட வரலாற்றின் பக்கங்களில், காமராஜருக்கு, எப்போதுமே தனியிடம் உண்டு. பல்வேறு அணைகட்டுகள், தொழிற்சாலைகள், இவரின் பெயரை, இன்னும் நினைவூட்ட, இவர் மேற்கொண்ட செயல்பாடுகள் தான் காரணம்.

    ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு: அரசாணை வெளியீடு

    தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வின்போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்த அரசாணை அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இடமாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள தற்போது பணிபுரியும் பள்ளியில் 1.6.2015-க்கு முன்னர் பணியில் சேர்ந்திருத்தல் வேண்டும்; அரசு உயர் அல்லது மேல்நிலைப் பள்ளிகளைப் பொருத்தவரை வருவாய் மாவட்டத்துக்குள், மாவட்டம் விட்டு மாவட்டம் பொது மாறுதல் வழங்க பரிசீலிக்கப்பட வேண்டும்.

    பள்ளிக்கல்வி - தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைகேற்ப பணி நிரவல் செய்திட அரசு உத்தரவு

    மருத்துவ நுழைவுத் தேர்வு: மத்திய அரசின் அவசரச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

    மருத்துவ நுழைவுத் தேர்வு தொடர்பாக மத்திய அரசின் அவசரச் சட்டத்துக்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

    Thursday, July 14, 2016

    தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 2016-17ஆம் கல்வியாண்டிற்கு உதவி / கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணிமாறுதலுக்கு 31.12.2009 முடிய தகுதிவாய்ந்த நடு நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் தற்காலிக முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு


    பள்ளிக்கல்வி - 2016-17-ம் ஆண்டு ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் - கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்

    பொதுத்தேர்வு முறைகேடு புகார் எதிரொலி!

    எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு முறைகேடு புகாரில் சிக்கிய, தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கடந்த மார்ச் - ஏப்., மாதம் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வின் போது, வினாத்தாள் வெளியானது, குறிப்பிட்ட வினாவுக்கான விடை வெளியானது, தேர்வின்போது மாணவர்கள் கலந்து பேச அனுமதித்தது உட்பட பல பள்ளிகள் மீது புகார் எழுந்தது. தேர்வுத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டது. 

    2 ஆசிரியர்களின் நல்லாசிரியர் விருது பறிப்பா?

    இரண்டு ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கியது தொடர்பாக புகார் எழுந்துள்ளதால், வழங்கப்பட்ட விருதுகள் பறிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் நினைவாக, ஆண்டுதோறும் பள்ளி ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இதற்கு, மாவட்ட வாரியாக தேர்வுக்குழு அமைத்து, ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர். கடந்த ஆண்டு விருது வழங்கியதில், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் விதிகள் பின்பற்றப்படவில்லை; தேர்வுக் குழுவில் இருந்த அதிகாரிகளுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது என, தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச்சங்க தலைவர் ராஜ்குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

    தேர்வு வந்தாச்சு; புத்தகம் என்னாச்சு? தவிப்பில் மாணவர்கள்!

    பிளஸ் 1 மாணவர்களுக்கு முழு அளவில் பாடப் புத்தகங்கள் கிடைக்காத நிலையில் முதல் இடைத் தேர்வு தேதியை கல்வித்துறை அறிவித்தது மாணவர்களை அதிருப்தியடைய செய்துள்ளது. பிளஸ் 1 வகுப்புகள் துவங்கி ஒரு மாதத்திற்கும் மேல் ஆன நிலையிலும் கலை, அறிவியல் என அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் முழு எண்ணிக்கையில் புத்தகங்கள் வழங்கப்படவில்லை. சில மாவட்டங்களில் மொழிப் பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்ட நிலையில் &'மெயின்&' பாடப் புத்தகங்கள் கிடைக்கவில்லை. 

    கால்நடை மருத்துவ படிப்பு கவுன்சிலிங் துவக்கம்!

    தமிழக கால்நடை மருத்துவக் கல்லுாரியில், இளநிலை படிப்புகளில் சேர, மாணவர்களுக்கான கவுன்சிலிங், இன்று துவங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

    ஜூலை இறுதியில் பி.ஆர்க்., கவுன்சிலிங்!

    அண்ணா பல்கலை மூலம் பி.ஆர்க்., படிப்பில் சேர, 2,600 பேர் விண்ணப்பித்து உள்ளனர். ஜூலை இறுதி வாரம், கவுன்சிலிங் நடத்தப்படும் என தெரிகிறது. அண்ணா பல்கலையில் தற்போது, பி.இ., - பி.டெக்., படிப்புக்கான பொதுப்பிரிவு கவுன்சிலிங், 27ல் துவங்கி நடந்து வருகிறது.

    TNPSC - VAO Certificate Verification Schedule

    இனி "பாஸ்வேர்ட்" நினைவில் வைக்க வேண்டாம்

    மொபைல் பேங்கிங் ஆப்ஸ் பயன்படுத்தும் வங்கி வாடிக்கையாளர்கள் இனி பாஸ்வேர்ட் எனப்படும் ரகசிய குறியீட்டை எண்களை நினைவில் வைத்துக் கொள்ள அவசியமில்லை. இதுவரை பயன்பாட்டில் இருக்கும் பாஸ்வேர்ட் முறையை மாற்றி விட்டு புதிய முறையை கையாள வங்கிகள் முடிவு செய்துள்ளன.

    அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த ரூ 10 ஆயிரம் கோடி கதி என்ன? ஓய்வூதிய வல்லுனர் குழு முடக்கம்

    ஆசிரியர்கள் நாளை விடுப்பு எடுக்க தடை

    ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு எப்போது?

    ஆசிரியர் இடமாறுதல் பொது கலந்தாய்வு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுதோறும் ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு மாநில அளவில், ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து மே மாதம் நடத்தப்படும். ஆனால், நிகழ் கல்வியாண்டில் பள்ளிகள் துவங்கி, இதுவரை கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த கலந்தாய்வுக்கான புதிய விதிகளை, பள்ளிக் கல்வித் துறை உருவாக்கியுள்ளது.

    பி.இ. படிப்பில் 51 ஆயிரம் பேர் சேர்க்கை: 1.34 லட்சம் இடங்கள் காலி

    பொறியியல் கலந்தாய்வு முடிய இன்னும் 7 நாள்களே உள்ள நிலையில், 51,428 பேர் மட்டுமே பி.இ. படிப்புகளில் இதுவரை சேர்ந்துள்ளனர். 1,34,242 இடங்கள் மாணவர் சேர்க்கையின்றி காலியாக உள்ளன.

    விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பங்கள் விநியோகம்

    கல்வியியல் பயிற்சி நிறுவனங்களில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் ஜூலை 30 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி தெரிவித்தார்.

    பள்ளி மாணவர்களுக்கு விரைவில் இலவச பஸ் பாஸ்

    நிகழ் கல்வியாண்டில் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உத்தரவிட்டார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள அனைத்து மேலாண் இயக்குநர்களுடனான ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

    புரிதலை மேம்படுத்த 23-இல் புத்தாக்கப் பயிற்சி

    அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், புரிதலை மேம்படுத்த புத்தாக்கப் பயிற்சி குறு வள மைய அளவில் ஜூலை 23-இல் நடைபெறவுள்ளது. தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்குக் குறு, வள மைய அளவில் ஒருநாள் பயிற்சியாக புரிதலை மேம்படுத்த மாநில, மாவட்ட, வட்டார அளவில் கருத்தாளர் பயிற்சி வழங்கத் திட்டமிடப்பட்டது.

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுகோள்

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் மற்றும் பேச்சுவார்த்தையில்  வலியுறுத்தப்பட்டு, அரசால் ஏற்கப்பட்ட கோரிக்கைகளை தமிழக அரசு விரைவாக நிறைவேற்ற வேண்டுமென  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நாகை மாவட்டச் செயலர் ஏ.டி. அன்பழகன், தமிழக  முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு :

    Wednesday, July 13, 2016

    காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்: நாமும் தெரிந்துகொள்வோம்

    1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால் போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச்சரியாக சொல்வார். அந்த அளவுக்கு அவரிடம்ஞாபகசக்தி மிகுந்திருந்தது.
    2. கட்சி சுற்றுப் பயணத்தின் போது எல்லோரும் சாப்பிட்ட பிறகுதான் காமராஜர் சாப்பிடுவார். 
    3. காமராஜரிடம் பேசும் போது, அவர் "அமருங்கள், மகிழ்ச்சி, நன்றி'' என அழகுத் தமிழில்தான் பேசுவார்.
    4. காமராஜரின் ஆட்சி இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாய் இருக்கிறது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் சொல்லி இருக்கிறார்.

    ஜூலை இறுதியில் பி.ஆர்க்., கவுன்சிலிங்

    அண்ணா பல்கலை மூலம் பி.ஆர்க்., படிப்பில் சேர, 2,600 பேர் விண்ணப்பித்து உள்ளனர். ஜூலை இறுதி வாரம், கவுன்சிலிங் நடத்தப்படும் என தெரிகிறது. அண்ணா பல்கலையில் தற்போது, பி.இ., - பி.டெக்., படிப்புக்கான பொதுப்பிரிவு கவுன்சிலிங், 27ல் துவங்கி நடந்து வருகிறது.

    கோ-ஆப்டெக்ஸில் 100 உதவி விற்பனையாளர்கள் நியமனம்: போட்டித்தேர்வு மூலம் பணி

    கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் புதிதாக 100 உதவி விற்பனையாளர்கள் போட்டித்தேர்வு மூலமாக நியமிக்கப்பட உள்ளனர். தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் விற்பனை நிலையங்களில் உதவி விற்பனையாளர் பணியில் 100 காலியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. இப்பணிக்கு பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.வயது 18 முதல் 28-க்குள் இருக்க வேண்டும்.
    எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி, டிஎன்சி ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு 33 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    பி.எட். கலந்தாய்வை முன்கூட்டியே நடத்தத் திட்டம்?

    பி.எட். சேர்க்கைக்கு ஜூலை 4-ஆம் வாரத்தில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு, செப்டம்பர் 2-ஆவது வாரத்துக்குள் கலந்தாய்வை நடத்தி முடிக்கப்படலாம் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆசிரியர் கல்வியியல் இளநிலைப் படிப்பான பி.எட். கலந்தாய்வு வழக்கமாக செப்டம்பர் கடைசி வாரத்தில் தொடங்கப்பட்டு, அக்டோபரில் முடிக்கப்படும் நிலையில் இந்த ஆண்டு விரைவாக நடைபெற உள்ளது.

    பள்ளி மாணவர்களுக்கு விரைவில் இலவச பஸ் பாஸ்

    நிகழ் கல்வியாண்டில் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உத்தரவிட்டார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள அனைத்து மேலாண் இயக்குநர்களுடனான ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

    கலந்தாய்வில் இடமாறுதல்: ஆசிரியர்களுக்கு புது நிபந்தனை

    கலந்தாய்வில் இடமாறுதல் பெறும் ஆசிரியர்கள் குறைந்தது 6 ஆண்டுகள் அதே பள்ளியில் பணியாற்ற வேண்டும், என்ற புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதன் மூலம் கல்வியில் பின் தங்கிய மாவட்டங்களில் முழுமையாக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவதற்காக மாநில அளவில் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது.

    வங்காளதேசத்திற்கு அடியில் ராட்சத பூகம்பம் உருவாகி உள்ளதாக ஆய்வில் எச்சரிக்கை

    கிழக்கு இந்தியாவின் நகரப்பகுதிகளை ஒன்றுமில்லாமல் ஆக்கும் அளவிலான ராட்சத பூகம்பம் ஒன்று வங்காளதேசத்திற்கு அடியில் உருவாகி உள்ளதாக ஆய்வில் எச்சரிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பான ஆய்வறிக்கையானது நேச்சர் ஜியோ சயன்ஸ் ஆய்விதழில் வெளியிடப்பட்டு உள்ளது. அந்த ஆய்விதழ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 

    உடற்கல்வி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணையை செயல்படுத்தக் கோரி மனு: செயலர் பரிசீலிக்க உத்தரவு

    உடற்கல்வி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணையை செயல்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை பள்ளிக் கல்வித்துறைச் செயலர் பரிசீலிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி இயக்குநர் கிரேடு 1 ஆக பணியாற்றி வருபவர் செந்தில். இவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

    5 மாதத்தில் யாரையும் சந்திக்காத புதிய பென்ஷன் திட்ட ஆய்வு குழு : அரசு ஊழியர்கள் அதிர்ச்சி

    புதிய பென்ஷன் திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுனர் குழு, 5 மாதங்களில் யாரையும் சந்திக்கவில்லை என்பது தகவல் உரிமைச் சட்டத்தில் தெரிய வந்தது.அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் 2003 ஏப்.,1ல் புதிய பென்ஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதுவரை 4.23 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்துள்ளனர். அவர்களிடம் வசூலித்த புதிய பென்ஷன் திட்ட சந்தா,அரசு பங்கு தொகை என, மொத்தம் ரூ.8,543 கோடியை ஓய்வூதிய நிதி ஒழுங்கற்று மேம்பாட்டு ஆணையத்திடம் தமிழக அரசு செலுத்தவில்லை. இதனால் பணியில் இறந்தோரின் குடும்பத்தினர், ஓய்வு பெற்ற ஊழியர்கள் பணப்பலன் பெற முடியாமல் தவிக்கின்றனர்.

    அரசு பள்ளியில் அலைபேசி மூலம் பாடம்: அசத்தும் ஆசிரியர்

    மேலுார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியர் சூரியகுமார், அலைபேசியில் பாடங்களை 'டவுன்லோடு' செய்து கூடுதல் விளக்கத்துடன் பாடங்களை நடத்தி வருகிறார்.இப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர். தலைமை ஆசிரியையாக டெய்சி நிர்மலா ராணி உள்ளார். மாணவியருக்கு எளிதாக புரியும் வகையில் சில வழிமுறைகளை ஆசிரியர் சூரியகுமார் கையாள்கிறார்.

    வீட்டுப் பாடத்தை பொழுதுபோக்கு அம்சமாக மாற்ற சிபிஎஸ்இ புதிய முயற்சி

    வீட்டுப்பாடத்தை மாணவர்கள் ரசித்து செய்யும் வகையில் புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடவாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு வீட்டுப்பாடத்தில் புதியதொரு செயல்முறையை அறிமுகப்படுத்த சிபிஎஸ்இ கல்வி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    Tuesday, July 12, 2016

    கலந்தாய்வு மூலம் பணியிடை மாற்றம் பெறும் ஆசிரியர்கள் அங்கு குறைந்தது 6 ஆண்டுகள் கட்டாயம் பணிபுரிய வேண்டும்-News7

    ​கலந்தாய்வு மூலம் பணியிட மாற்றம் பெறும் ஆசிரியர்களுக்கு புதிய நிபந்தனை!

    கலந்தாய்வு மூலம் பணியிடை மாற்றம் பெறும் ஆசிரியர்கள் அங்கு குறைந்தது 6 ஆண்டுகள் கட்டாயம் பணிபுரிய வேண்டுமென பள்ளிகல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கலந்தாய்வு மூலம் மாநிலம் முழுவதும் உள்ளஆசிரியர் பணியிடை மாற்றம் கோரி விண்ணப்பிப்பர். இதில் கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் முழுமையாக ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல் அடிப்படையில், மாநில அளவில் கலந்தாய்வு நடைபெறுவது வழக்கம்.

    அகஇ - குறுவளமைய பயிற்சி - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 16.07.2016 அன்று நடைபெறவிருந்த குறுவளமையப் பயிற்சி 23.07.2016 அன்று ஒத்திவைத்து இயக்குனர் உத்தரவு

    தேசிய திறனாய்வு தேர்வு 9ம் வகுப்பு மாணவர்கள் ஆக.1 முதல் விண்ணப்பிக்கலாம்

    அரசுத் தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: வருகிற செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வுக்கு ஆக.1 முதல் 8 வரை விண்ணப்பிக்கலாம். கிராமப்புற பஞ்சாயத்து, நகர பஞ்சாயத்து மற்றும் டவுன்ஷிப் பகுதிகளில் இருக்கும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2016-17ம் கல்வியாண்டில் தொடர்ந்து 9ம் வகுப்பில் பயிலும் மாணவ, மாணவிகள் இத்தேர்வு எழுத தகுதி படைத்தவர்கள்.

    அரசுப்பள்ளிகளைப் பாதுகாக்கவேண்டும்: ஜி. ராமகிருஷ்ணன் சி.பி.ஐ. (மார்க்சிஸ்ட்) கட்சியின் மாநிலச்செயலாளர்

    ஜி. ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதியுள்ள கட்டுரை வரவேற்கத்தக்கது. ”தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கும் அணுகுமுறையை மாற்றி அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்கக்கூடிய கொள்கையை, மாநில அரசு நடைமுறைப்படுத்திட வேண்டும்” என்ற கோரிக்கையை இக் கட்டுரையில் முன்வைத்துள்ளார். அரசுப்பள்ளிகளைப் பாதுகாக்கவேண்டும் என்று பேசுபவர்கள், எழுதுபவர்கள் உத்திரப் பிரதேச மாநில உயர்நீதிமன்றம் ”அரசு ஊழியர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்க்கவேண்டும்” என்று தீர்ப்பு வழங்கியுள்ளதை தமிழக அரசும் ஏற்று நடைமுறைப்படுத்தவேண்டும் என்று பேசுவதற்கு ஏன் தயங்குகிறார்கள் என்பது புதிராக உள்ளது. இத் தீர்ப்பை ஏற்று தமிழக அரசு சட்டம் இயற்றினால் அரசுப்பள்ளிகள் பாதுகாக்கப்பட உறுதியாக வாய்ப்பு ஏற்படும்.

    ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வில் கடுமையான விதிகள் அமல்.

    *ஆசிரியர்கள் பணியிட  மாறுதல் கலந்தாய்வில் கடுமையான விதிகள் அமல் படுத்தப்பட்டுள்ளதாக தகவல்.

    *கலந்தாய்வு அரசாணை மற்றும் விதிமுறைகள் தயார்நிலையில் உள்ள நிலையில் இன்று மாலை அல்லது நாளை முறையான அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிகிறது.

    ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் : புதிய விதிகள் விரைவில் அறிவிப்பு

    அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு தொடர்பாக, புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த விதிகள், ஓரிரு தினங்களில் வெளியிடப்பட உள்ளன. தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டுக்கு ஒரு முறை விருப்ப இடமாறுதல் செய்யப்படுகிறது. இதற்கு, மாநில அளவில், 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பித்து, கவுன்சிலிங் என்ற கலந்தாய்வு, ஒவ்வொரு ஆண்டும், மே மாதம் கோடை விடுமுறையில் நடத்தப்படும். ஆனால், ஐந்து ஆண்டுகளாக, இந்த கலந்தாய்வு தாமதமாகவே நடத்தப்படுகிறது.

    தூய்மைப் பள்ளிகள் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

    மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் வழங்கப்படும் "தூய்மைப் பள்ளிகள்' விருதுக்கு ஜூலை 31-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில், கடந்த 2014-ஆம் ஆண்டு, நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் தூய்மையான பள்ளிகள் இயக்கம்(Swachh Vidyalaya  Puraskar) துவங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்கீழ், தேசிய, மாநில, மாவட்ட அளவில் தூய்மைப் பள்ளிகள் விருது வழங்கப்பட்டு வருகிறது. நிகழாண்டில் இந்த விருதை பெற, நகர மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் விண்ணப்பிக்கலாம்.

    மது அருந்தினால் டூவீலர் ஓடாது - அரசு பள்ளி மாணவரின் பலே கண்டுபிடிப்பு

    மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் 50 சதவீதத்துக்கு மேல் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் உயிர் பலி ஏற்படுவதோடு, உடல் உறுப்புகளையும் இழக்க வேண்டிய நிலை உள்ளது. இதை தடுப்பதற்காக மது அருந்தி விட்டு வாகனத்தை ஸ்டார்ட் செய்தாலே, இன்ஜின் ஸ்டார்ட் ஆகாத வகையில் ஒரு கருவியை சிவகங்கை மாவட்டம், திருவேலங்குடி அரசு பள்ளி 9ம் வகுப்பு  மாணவர் பிரேம்குமார் கண்டுபிடித்துள்ளார்.

    அரசுத் தேர்வுகள் துறை அலுவலகத்தில் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

    அரசுத் தேர்வுகள் துறை அலுவலகத்தில் காலியாகவுள்ள 3 ஓட்டுநர் பணியிடத்துக்குத் தகுதியுடையோரிடமிருந்து விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணி நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளது. பொதுப் பிரிவினர், பட்டியல் இனத்தவர் (அருந்ததியர்), மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

    Monday, July 11, 2016

    ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு அரசாணை அறிவிப்பு விரைவில்....!


    ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியிடுவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் (விரைவில்) ஓரிரு நாட்களில் வெளியாகும்.

    தமிழ்நாடு அமைச்சுப் பணி - 1993 முதல் தரம் உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் (இருக்கைப் பணி) பணியிடங்களில் பதவி உயர்வு மூலம் பணியமர்த்தப்பட்ட பணியாளர்களது பணியினை கண்காணிப்பாளர் பதவியில் பணிவரன்முறை செய்து ஆணை வழங்கி உத்தரவு

    உடற்கல்வி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவது சம்பந்தமான அரசாணையை செயல்படுத்தக்கோரி வழக்கு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பரிசீலிக்க, ஐகோர்ட்டு உத்தரவு.

    மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவது சம்பந்தமாக 2009–ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை செயல்படுத்தக்கோரி தொடர்ந்த வழக்கில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பரிசீலிக்க, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட்டில் மனு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி இயக்குனர் கிரேடு–1 ஆக பணியாற்றி வருபவர் செந்தில். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

    காலக்கெடு தாண்டியும் அறிக்கை தராத ஓய்வூதிய ஆய்வுக்குழு மீது அதிருப்தி : முதல்வருக்கு ஆசிரியர்கள் மனு

    காலக்கெடு தாண்டியும் அறிக்கை சமர்ப்பிக்காத ஓய்வூதிய ஆய்வுக்குழு மீது அதிருப்தி அடைந்த ஆசிரியர் கூட்டமைப்பினர் முதல்வர் ஜெ.,விடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்ரவரியில் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ) ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்டது. 

    ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய வேண்டும்: பள்ளிக் கல்வி அமைச்சர் உத்தரவு.

    ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய வேண்டும் என்று மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வி அமைச்சர் பா.பெஞ்சமின் உத்தரவிட்டுள்ளார். தொடக்கக் கல்வி இயக்ககத்தின் மூலம் நடப்பு கல்வி ஆண்டில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் பள்ளிக்கல்வி அமைச்சர் பா.பெஞ்சமின் தலைமையில் சென்னை டிபிஐ வளாகத்தில் நடந்தது. 

    'டெட்' தேர்வுகள் இல்லை!: ஆசிரியர் தேர்வு வாரியம் திடீர் முடிவு

    நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்

    ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுடன் அதன் துணை வங்கிகளை இணைப்பதற்கும், ஐடிபிஐ வங்கியை தனியார்மயமாக்கச் செய்துள்ள முடிவுக்கும் எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 12) முதல் 2 நாள்களுக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக வங்கி ஊழயர்கள் அறிவித்துள்ளனர்.

    பெருகி வரும் "நீட்' பயிற்சி மையங்கள்

    மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய பொது நுழைவு மற்றும் தகுதித் தேர்வு ("நீட்') அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கான பயிற்சி மையங்களும் பெருகத் தொடங்கிவிட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர். தனியார் பள்ளிகளும் கூடுதல் வருவாயை ஈட்டும் வகையில், இதற்கான பயிற்சியை மாணவர்களுக்கு அளிக்க ஆயத்தமாகி வருகின்றன. எனவே, மாணவர்களும் பெற்றோரும் நன்கு ஆராய்ந்து, பயிற்சி மைய முன்னாள் மாணவர்களிடம் விசாரித்து சிறந்த பயிற்சி மையத்தைத் தேர்வு செய்தால் மட்டுமே ஏமாறாமல், உரிய பலனைப் பெற முடியும் என்கின்றனர் பயிற்சி மைய நிர்வாகிகள்.  

    7-ஆவது ஊதியக் குழு அறிவிக்கை எப்போது?

    7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பான மத்திய அரசின் அறிவிக்கை இந்த வாரம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    7-ஆவது ஊதியக்குழு பரிந்துரையை எவ்வித மாற்றமும் இல்லாமல் அப்படியே ஏற்பதாக மத்திய அமைச்சரவை கடந்த ஜூன் 29-ஆம் தேதி அறிவித்தது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.6 சதவீத ஊதிய உயர்வு கிடைப்பது உறுதி செய்யப்பட்டது.

    தொகுப்பூதிய காலத்தைக் கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை

    தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான 50 சதவீத தொகுப்பூதிய பணிக்காலத்தைக் கணக்கிட்டு உரிய ஓய்வூதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்புக் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அந்த கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் கூறியதாவது:

    7வது ஊதியக் குழு பரிந்துரை: இந்த வாரத்தில் அறிவிக்கை வெளியாகும்?

    ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பான மத்திய அரசின் அறிவிக்கை இந்த வாரம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை எவ்வித மாற்றமும் இல்லாமல் அப்படியே ஏற்பதாக மத்திய அமைச்சரவை கடந்த ஜூன் 29-ஆம் தேதி அறிவித்தது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.6 சதவீத ஊதிய உயர்வு கிடைப்பது உறுதி செய்யப்பட்டது.

    மாணவர்கள் சரியாக படிக்காவிட்டால்... ஆசிரியர்களுக்கு மெமோ... அரசு அதிரடி முடிவு

    அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் சரியாக படிக்காவிட்டால், புத்தகத்தில் உள்ளதை வாசிக்கத் தெரியாவிட்டால் சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு விளக்கம் கேட்டு மெமோ கொடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து கல்வித் துறை இணை இயக்குநர் பாலமுருகன் கூறியதாவது: கடந்த ஆண்டு கூட்டத்தில், தமிழகத்தின் முதன்மை மாவட்டமாக அதிக தேர்ச்சியை வழங்குவோம் என வாக்குறுதி கொடுத்தீர்கள். ஆனால், அத்தனையும் தேர்தல் வாக்குறுதிகளாக மாறி விட்டது. தமிழகத்தில், தேர்ட்சியளவில் சேலம் மாவட்டம், 19-வது இடத்தில் உள்ளது.

    பாதுகாப்பில்லாமல் 6,000 'பிளே ஸ்கூல்'கள் பிஞ்சு குழந்தைகளை வைத்து கொழிக்கும் வியாபாரம்

    தமிழகத்தில் எந்த அங்கீகாரமும் இல்லாமல், பாதுகாப்பற்ற முறையில், 6,000 'பிளே ஸ்கூல்'கள் எனப்படும், முன்பருவ பள்ளிகள் இயங்கி வருகின்றன. பல கார்ப்பரேட் நிறுவனங்கள் எந்த அனுமதியும் பெறாமல் நடத்தும் இப்பள்ளிகளுக்கு, கல்வித்துறை, போக்குவரத்து துறை அதிகாரிகள் உடந்தையாக உள்ள, 'பகீர்' தகவல் வெளியாகிஉள்ளது.

    வீடுகளில் பொருத்திய மின் மீட்டர்களில் குறைபாடு? அதிக கட்டணம் வருவதால் நுகர்வோர் புலம்பல்

    வீடுகளில், குறைபாடு உடைய மின் மீட்டர்களை பொருத்தியதால் தான், மின் கட்டணம் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. தமிழ்நாடு மின் வாரியம், வீடுகளில், ஒரு முனை அல்லது மும்முனை மின் மீட்டர்களை பொருத்தி வருகிறது. தற்போது, மின் பயன்பாட்டை துல்லியமாக கணக்கிடுவதற்கு வீடுகளில் உள்ள பழைய மீட்டருக்கு பதில், 'ஸ்டேடிக்' என்ற நவீன மீட்டரை, இலவசமாக பொருத்தி வருகிறது.

    மத்திய அரசு ஊழியர்கள் 7-வது ஊதிய குழு ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும்

    மத்திய அரசு ஊழியர்களுக்கான ஏழாவது ஊதிய குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கான அறிக்கை ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பாக்கப்படுகின்றது. ஏழாவது ஊதிய குழு பரிந்துரைகளை மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்தது.

    ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் மகளிருக்கு முன்னுரிமை வழங்கக் கோரிக்கை

    ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில், மகளிருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என மாநில மகளிர் ஆசிரியர் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாநில மகளிர் ஆசிரியர் நலச்சங்கக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாநில பொதுச் செயலர் சாந்தி, பொருளர் ரோஜாவதி, அமைப்புச் செயலர் லட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    உயர் மருத்துவப் படிப்புகளுக்கு இன்று நுழைவுத் தேர்வு

    உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளான டி.எம்., எம்.சிஎச். ஆகிய 3 ஆண்டு கால படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

    200 பள்ளிகளைத் தரம் உயர்த்த வேண்டும்

    தமிழகத்தில் 200 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்த வேண்டுமென தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மாநிலத் தலைவர் மணிவாசகன் தலைமையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    வரவிருக்கும் தேசிய கல்விக் கொள்கையில்... இனி 6-ம் வகுப்பில் இருந்துஆங்கிலக் கல்விதான்!

    மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் தேசிய கல்விக் கொள்கை குறித்து, பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்டுள்ளது மனிதவள மேம்பாட்டு அமைச்சகம். 'வருகிற 31-ம் தேதிக்குள் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் எனச் சொல்லியிருக்கிறது மத்திய அரசு. இதுகுறித்து மாநில அரசு மௌனமாக இருப்பது வேதனையளிக்கிறது' என்கின்றனர் கல்வியாளர்கள். 

    அரசு பள்ளியில் கணினி கல்வி: கணினி ஆசிரியர்கள் வாழ்வில் விரைவில் விடியல்...

    தமிழக அரசு அனைத்து அரசு பள்ளிகளுக்கு கணினி அவை சார்ந்த உபகரணம்வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை கணினி ஆசிரியர் நியமனம் செய்யவில்லை

    தமிழ்நாட்டில் 39019பேர் இதுவரை பி.எட் படித்த விட்டு அரசு வேலைக்காககாத்திருக்கின்றனர்.இவர்களின் வாழ்வின் திருப்பு முனை நிகழ்ச்சியாக பள்ளிக்கல்வி  சார்பில் ஒர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

    மாணவர்களை வைத்து குடிநீர் தொட்டி சுத்தம்: ஆசிரியர் சஸ்பெண்ட்

    தர்மபுரி மாவட்டம், வத்தல் மலை பெரியூர் அரசு துவக்கப்பள்ளி கட்டடத்தின் முன் தரைக்கு கீழ் பாதாள குடிநீர் தொட்டி உள்ளது. இந்த குடிநீர் தொட்டியை கடந்த சில தினங்களுக்கு முன், இந்த பள்ளி ஆசிரியர், மாணவர்களை வைத்து சுத்தம் செய்ய வற்புறுத்தியுள்ளார். 

    Saturday, July 9, 2016

    பதவி உயர்வு ஏதுமின்றி ஓய்வு பெறும் உடற்கல்வி ஆசிரியர்கள்!

    தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி இயக்குநர் பணியிடங்கள் உருவாக்கப்படாததால், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி உயர்வு பெறாமலேயே ஓய்வு பெறும் நிலை ஏற்படுவதாக உடற்கல்வி ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். தற்போது தமிழகம் முழுவதும் உள்ள 3,566 மேல்நிலைப் பள்ளிகளில் 660 உடற்கல்வி இயக்குநர்களே பணியாற்றி வருகின்றனர். இதனால், கடந்த 25 ஆண்டுகளாக பல பள்ளிகளிலும் உடற்கல்வி இயக்குநர் பணியிடம் உருவாக்கப்படாமல், உடற்கல்வி ஆசிரியர்களே அந்தப் பொறுப்பில் நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    பள்ளிக்கல்வி - ஆசிரியர்கள் பள்ளி வேலை நேரத்தில் முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலங்களுக்கு அனுப்புவதை தவிர்த்தல் சார்பான முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்

    லேப்டாப் வழங்குவதில் குளறுபடி : சென்னையில் ஆலோசனை

    'அரசுப்பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்குவது குறித்து, ஒவ்வொரு மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு, சென்னையில் தொழிற்கல்வி இணை இயக்குனர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது,' என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2011 முதல் பிளஸ் 2 மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவச லேப்டாப் வழங்கப்படுகிறது. பல லட்சம் மாணவர்களுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்பட்டன.

    மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் எனப்படும் எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு, ஓராண்டிற்கான ஆரம்பகட்ட கம்ப்யூட்டர், 'ஹார்டுவேர்' இலவச பயிற்சி முகாம் ஆக., 1ல் துவங்குகிறது. இதற்கான விண்ணப்பங்கள் ஜூலை, 11 முதல் கிடைக்கும். ரூ.500 ஊக்கத்தொகை இது குறித்து, எஸ்.சி., - எஸ்.டி., பிரிவுக்கான மண்டல வேலை வாய்ப்பு அலுவலர் எஸ்.கே.ஷா கூறியதாவது:

    இசை தொகுப்பில் பள்ளி மனப்பாடப் பாடல்கள் : எஸ்.சி.இ.ஆர்.டி., தயாரிப்பு

    தமிழகத்தில் அரசு துவக்கப் பள்ளி மனப்பாடப் பாடல்களை மாணவர்கள் எளிதில் கற்கும் வகையில், ஆடியோ- வீடியோ வடிவிலான பாடல்களின் இசை தொகுப்பை, மாநில கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் (எஸ்.சி.இ.ஆர்.டி.,) தயாரித்துள்ளது. இத்தொகுப்பு சி.டி.,க்களை முதல்வர் ஜெயலலிதா அடுத்த மாதம் வெளியிட ஏற்பாடு செய்யப்படுகிறது.

    பிளஸ்-2 முடித்தவர்களுக்கு கடலோர காவல்படையில் பணி

    இந்திய கடலோர காவல்படை, ஆயுதப்படைப் பிரிவின் ஒரு அங்கமான இந்தியன் கோஸ்ட் கார்டு படைப்பிரிவில் நேவிக் (ஜெனரல் டியூட்டி)-01/2017 பயிற்சியுடன் கூடிய பணியில் சேருவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு இந்திய குடியுரிமை பெற்ற, திருமணமாகாத ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    'பாரா மெடிக்கல்' படிப்பு ஓரிரு நாளில் விண்ணப்பம்

    மருத்துவம் சார்ந்த, 'பாரா மெடிக்கல்' படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் குறித்த அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகும்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவ படிப்புகளுக்கு இணையாக, பாரா மெடிக்கல் எனப்படும், துணை மருத்துவ படிப்புகளுக்கு பெரும் வரவேற்பு உள்ளது. இதில், பி.பார்ம்., - பி.எஸ்சி., பட்டப்படிப்புகளில், 'நர்சிங், பிசியோதெரபி, ரேடியாலஜி, ஸ்பீச் ஆடியோலஜி, லாங்குவேஜ் பெத்தாலஜி, ரேடியோ தெரபி, ஆக்குபேஷன் தெரபி' உள்ளிட்ட, ஒன்பது விதமான பாடத்திட்டங்கள் உள்ளன. தமிழகத்தில், ஐந்து அரசு மருத்துவக் கல்லுாரிகள்;

    Friday, July 8, 2016

    மாணவியருக்கான 'உதான்' திட்டம் - ஜூலை 13 வரை அவகாசம்

    பிளஸ் 2 தேர்வில் சிறந்த மதிப்பெண் பெறும், 1,000 மாணவியரை தேர்வு செய்து, அவர்கள் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்றவற்றில், பி.இ., - பி.டெக்., போன்ற இன்ஜி., படிப்புகளில் சேர்ந்து, இலவசமாக படிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.இதற்காகவே, மத்திய அரசில், 'உதான்' என்ற திட்டம் செயல் படுத்தப்படுகிறது.