தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வின்போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்த அரசாணை அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இடமாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள தற்போது பணிபுரியும் பள்ளியில் 1.6.2015-க்கு முன்னர் பணியில் சேர்ந்திருத்தல் வேண்டும்; அரசு உயர் அல்லது மேல்நிலைப் பள்ளிகளைப் பொருத்தவரை வருவாய் மாவட்டத்துக்குள், மாவட்டம் விட்டு மாவட்டம் பொது மாறுதல் வழங்க பரிசீலிக்கப்பட வேண்டும்.
முற்றிலும் பார்வையற்றோர்-மாற்றுத் திறனாளிகள்-இதய மாற்று சிகிச்சை-சிறுநீரக மாற்று சிகிச்சை செய்து கொண்டவர்கள்-புற்று நோயாளிகள் உள்ளிட்டோரைப் பொருத்தவரை கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளும் அரசாணையில் இடம்பெற்றுள்ளன. நிர்வாக காரணங்களுக்காக மாற்றப்பட்டு, தற்போது பணிபுரியும் பள்ளியில் மூன்று ஆண்டுகள் பணியாற்றுவோர் இடமாறுதல் கோரி விண்ணப்பிக்கலாம்; எனினும் ஏற்கெனவே பணியாற்றிய இடத்துக்கு மாறுதல் கோரி விண்ணப்பிக்கக்கூடாது என இடமாறுதல் கலந்தாய்வின்போது அலுவலர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பல நிபந்தனைகள் அந்த அரசாணையில் இடம்பெற்றுள்ளன.
No comments:
Post a Comment