தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும், ஒன்றாம் வகுப்பு மாணவர்களின் விபரங்களை, 'ஆதார்' எண்ணுடன், 'எமிஸ்' கணினி திட்டத்தில் பதிவு செய்யும் பணியை, ஆக., 7க்குள் முடிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், தமிழக அரசின், 14 வகை நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில் பல பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை குறையும் நிலையில், ஆசிரியர் பணியிடத்தை தக்கவைக்கவும், இலவச பொருட்களை, 'அபேஸ்' செய்யும் வகையிலும், போலி பெயரில் மாணவர்கள் இருப்பதாக, கடந்த ஆண்டுகளில் கணக்கு காட்டினர்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 'எமிஸ்' எனப்படும், கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்டுதோறும், பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெயர், முகவரி, பெற்றோர் பெயர், சேரும் பள்ளி, முன்பு படித்த பள்ளி, ஆதார் எண், ரத்த பிரிவு வகை சேர்க்கப்படுகின்றன.
இந்நிலையில், இந்த ஆண்டு ஒன்றாம் வகுப்பில் சேர்ந்துள்ள மாணவர்களின், விபரங்களை பதிவு செய்து அதை மாநில கணினித் தொகுப்பில் இணைக்க, அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த பணிகளை ஆசிரியர்கள், ஆக., 7க்குள் முடிக்க, கெடு விதிக்கப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment