தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. பள்ளிகள் திறந்த முதல்நாளே மாணவ, மாணவியருக்கு பாட புத்தகங்கள் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு அன்று மாலையில் புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டன.
இருப்பினும் குமரிமாவட்டத்தில் பல்வேறு அரசு மேல்நிலை பள்ளிகளில் பிளஸ் 1 மாணவ, மாணவியருக்கு இதுவரை பாட புத்தகங்கள் அனைவருக்கும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. பிளஸ் 1 வகுப்பில் கணக்கு பதிவியல், பொருளியல், மேலாண்மை தத்துவம், பிளஸ் 2 இயற்பியல் 2ம் தொகுதி பாடபுத்தகம் ஆகியவை இன்னும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
பாட புத்தகங்கள் கிடைக்காத மாணவ, மாணவியர் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதற்கிடையே வரும் 26ம் தேதி முதல் இடைத்தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான கால அட்டவணையும் மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேர்வு தொடங்க இருக்கின்ற வேளையில் மாணவ, மாணவியருக்கு பாட புத்தகங்கள் முழுமையாக கிடைக்க கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
No comments:
Post a Comment