அரசு பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வில் கலந்து கொள்ள ஜூலை 28 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் அரசு மற்றும் நகராட்சி பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை அந்தந்த தலைமை ஆசிரியர்களிடம் பெற்று ஜூலை 28 -க்குள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் வழங்க வேண்டும்.
கண் பார்வையற்றவர்கள், மாற்றுத் திறனாளிகள், ராணுவத்தில் பணிபுரிவோரின் மனைவி, இதயம் மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சை பெற்றவர்கள், புற்றுநோய் உடையோர் ஆகியோர் உரிய சான்றிதழில் தலைமை ஆசிரியர் கையொப்பம் பெற்று விணணப்பித்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். ஆக. 6 இல் அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைபள்ளிகளில் பணி புரியும் தலைமை ஆசிரியர்களுக்கு மாறுதல்
(மாவட்டத்திற்குள் மாறுதல் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்). ஆக. 7 இல் அரசு மற்றும் நகராட்சி மேல் நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறுகிறது.
ஆக. 13 இல் அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை பள்ளிகளில் பணி புரியும் தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டத்திற்குள் மாறுதல் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்). ஆக. 20 இல் அரசு மற்றும் நகராட்சி மேல் நிலை பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் மாறுதல், ஆக. 21 இல் அரசு மற்றும் நகராட்சி மேல் நிலை பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல், ஆக. 22 இல் அரசு மற்றும் நகராட்சி பள்ளிகளில் பணி புரியும் முது கலை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும்.
ஆக. 23 இல் உடற்கல்வி ஆசிரியர்கள், தையல் இசை கலை ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டத்திற்குள் மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. ஆக. 24 இல் உடற்கல்வி ஆசிரியர்கள், தையல் இசை கலை ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் நடைபெறும். ஆக. 27 முதல் ஆக.29 வரை பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல் கலந்தாய்வு நடைபெறுகிறது என்றார் அவர்.
No comments:
Post a Comment