திருவண்ணாமலை; பைக்கில் சென்ற தலைமை ஆசிரியர் மீது, திடீரென துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் அவர் படுகாயம் அடைந்தார். திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை, கல்யாணமந்தை கிராம வனத்துறை நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், முனிரத்னம், 56. இவர், சென்னைக்கு செல்ல, வாணியம்பாடி பஸ் ஸ்டாண்டுக்கு நேற்று முன்தினம் இரவு பைக்கில் சென்றார்.
அப்போது, காவனுார் விண்வெளி ஆராய்ச்சி மையம் அருகே சென்ற போது, முனிரத்னத்தின் தொடைப் பகுதியில் திடீரென துப்பாக்கி குண்டு பாய்ந்ததில், வலி தாங்க முடியாமல் அலறி துடித்து, கீழே விழுந்தார். அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு, வேலுார் சி.எம்.சி., மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து, ஜமுனாமரத்துார் போலீசார் கூறுகையில், 'காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக, இந்தப் பகுதியைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் நாட்டுத் துப்பாக்கியால் சுடும்போது, குறி தவறி தலைமை ஆசிரியர் மீது பாய்ந்து இருக்கலாம்' என்றனர்.
No comments:
Post a Comment