To get free Education Dept. Updated News & GOs type ON TNKALVII and send to 9870807070 or type ON SATISH_TR and send to 9870807070
Labels
- NEWS
- DIRECTOR PROCEEDINGS
- TET
- ASSN NEWS
- SSA
- COURT NEWS
- EDUCATION DEPT. GOs
- TIP
- TRB
- GO
- TNPSC
- PANEL
- CPS
- SSLC
- RESULTS
- DEE
- VI PC
- HSC
- CCE
- PAY ORDER
- RTI PROCEEDINGS
- DSE
- ANNOUNCEMENTS
- SCERT
- EXPECTED DA
- TNKALVI NEWS
- TETOJAC
- FORMS
- MODEL QNS
- PENSION
- TET QNS
- RMSA
- VII PC
- Dept. Exam
- RTE
- REG ORDER
- IT
- DA
- GK
- EMIS
- UPSC
- CEO VELLORE
- IT 2012-13
- RULE
- ANDROID
- FREE SMS REGISTRATION
- RARE GOs
- RL LIST
- NEP 2016
- NHIS
- SABL
Hot News
JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Thursday, March 31, 2016
மின் வாரிய தேர்வு திடீர் தள்ளிவைப்பு
தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வை, தமிழ்நாடு மின் வாரியம் திடீரென தள்ளிவைத்துள்ளது.தமிழ்நாடு மின் வாரியம், 525 தொழில்நுட்ப உதவியாளர்; 50 உதவி வரைவாளர்; 900 கள உதவியாளர் என, 1,475 காலி பணியிடங்களை நிரப்ப, சென்னை, அண்ணா பல்கலை மூலம், ஏப்., 3ல், எழுத்து தேர்வு நடத்த இருந்தது.
துறை தேர்வுகள் கடைசி தேதி நீடிப்பு
அரசுத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள், உயர் பதவிகளுக்கான தேர்வு டிசம்பர் மற்றும் மே மாதம் நடைபெறும். மே மாதம் நடைபெற இருக்கும் துறைக்கு விண்ணப்பிக்க தேதி மார்ச் 31 ல் இருந்து ஏப்ரல் 11 என நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தாமதமாகும்?
பள்ளி ஆசிரியர்களுக்கு, சட்டசபை தேர்தல் பயிற்சி வகுப்பு துவங்க உள்ள நிலையிலும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி துவங்கவில்லை. எனவே, தேர்வு முடிவுகள் வெளியாவது தாமதமாகலாம் என, தெரிகிறது.
பள்ளிக்கு பூட்டுபோட்ட தேர்தல் அதிகாரிகள்: குழந்தைகளுக்கு சர்ச்சில் நடந்த வகுப்புகள்
நெல்லை அரசு உதவிபெறும் பள்ளியில் ஓட்டுச்சாவடிக்காக சாய்வுதளம் அமைக்காததால்,பள்ளிக்கு தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனால் மாணவ, மாணவிகளுக்கு கிறிஸ்துவ ஆலயத்தில் வைத்து வகுப்புகள் நடத்தினர்.
பி.இ. கலந்தாய்வு: ஏப்ரல் 15 முதல் இணையத்தில் மட்டுமே பதிவு: விண்ணப்ப விநியோகம் கிடையாது
2016-17 கல்வியாண்டு பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கு ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் www.annaunivtnea.edu என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த முறை விண்ணப்பப் படிவம் விநியோகம் செய்யப்பட மாட்டாது என்றும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னையில் அண்ணா பல்கலை. பதிவாளர் கணேசன் செவ்வாய்க்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:
வீடு தேடி வரும் வாக்காளர் அட்டை: இன்று முதல் அமல்
வண்ண வாக்காளர் அடையாள அட்டை, வீடு தேடி வரும் திட்டம், இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதற்காக தேர்தல் கமிஷன், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி உள்ளது. தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, தேர்தல் கமிஷன், பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. தொலைந்து போன, வாக்காளர் புகைப்பட அட்டைக்கு பதிலாக, புதிய மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறவும், அண்மையில் எடுக்கப்பட்ட, வண்ண புகைப்படத்தை, வாக்காளர் அடையாள அட்டையில் புதுப்பித்துக் கொள்ளவும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று முதல், வாக்காளர் அடையாள அட்டையை, வீட்டிலேயே பெற்றுக் கொள்ளும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது.
Wednesday, March 30, 2016
பொதுத்தேர்வில் கை நழுவும் ‘சென்டம்’
கடந்தாண்டு போல் இல்லாமல், இம்முறை பொதுத்தேர்வில் சில பாடங்கள் கடினமாக இருந்ததால், தேர்வு எழுதிய மாணவ, மாணவியர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்; சென்டம் குறைய வாய்ப்புள்ளது.
ஆங்கிலம் கஷ்டம் மாணவர்கள் கவலை
பத்தாம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வில், ஒரு மதிப்பெண் வினா பகுதி கஷ்டமாக இருந்ததாக, தேர்வெழுதிய மாணவ, மாணவியர் கவலையுடன் கூறினர். பத்தாம் வகுப்பு தேர்வு, கடந்த,15ல் துவங்கியது. நேற்று, ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு, மாவட்டத்தில் உள்ள, 81 மையங்களில் நடைபெற்றது. விண்ணப்பித்த, 29 ஆயிரத்து, 664 பேரில், 29 ஆயிரத்து, 111 பேர் தேர்வு எழுதினர். 854 தனித்தேர்வரில், 738 பேர் மட்டுமே எழுதினர்.
விளம்பர கேள்விக்கு தனி இணைப்பு இல்லை
பத்தாம் வகுப்பு ஆங்கில இரண்டாம் தாளில், விளம்பரம் தொடர்பான ஐந்து மதிப்பெண் கேள்விக்கு, கடந்தாண்டு வரை வெள்ளைத்தாள் தனியாக வழங்கப்பட்டது. நேற்று தேர்வு நடந்தபோது, தனித்தாள் வழங்கப்படும் என மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதன்பின் விடைத்தாளின் கோடிட்ட கடைசிபக்கத்தில் விடையெழுத அனுமதிக்கப்பட்டனர்.
சிந்திக்க வைத்த ஆங்கிலம் இரண்டாம் தாள்!
பத்தாம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வில் சிந்திக்கும் வகையில் கேள்விகள் கேட்கப்பட்டதால் நுாறு மதிப்பெண் எடுப்பது கடினம், என மாணவர்கள் தெரிவித்தனர். வினாத்தாள் குறித்து மதுரை மாணவர்கள் கூறியது:
கல்வி கட்டண கமிட்டி மூடப்படும் அபாயம்; கண்டுகொள்ளாத தமிழக அரசு!
தனியார் பள்ளி கல்வி கட்டண நிர்ணய கமிட்டியில், மூன்று மாதமாக, நீதிபதி இல்லை. எனவே, புகார் அளிக்க முடியாமல் பெற்றோர் தவிக்கின்றனர். தற்போது பணியில் உள்ள சட்ட அதிகாரியும், நாளை ஓய்வு பெற உள்ளார். எனவே, கல்வி கட்டண கமிட்டி மூடப்படும் அபாயம்
ஏற்பட்டுள்ளது.
மே 2ல் பிளஸ் 2 'ரிசல்ட்'?
பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. கணிதம் மற்றும் அறிவியல் பிரிவுக்கு, ஏப்., 1ல் இயற்பியல் தேர்வும்; கணித பதிவியல் மாணவர்களுக்கு பொருளியல் தேர்வும் நடக்கிறது. அத்துடன், பிளஸ் 2 தேர்வுகள் முடிகின்றன. மற்ற பிரிவு மாணவர்களுக்கு, மார்ச், 28ல் தேர்வுகள் முடிந்து விட்டன.
10-ஆம் வகுப்பு ஆங்கிலத் தேர்வு: எழுத்துப் பிழையால் குழம்பிய மாணவர்கள்
10-ஆம் வகுப்பு ஆங்கிலம் 2-ஆம் தாள் தேர்வில், எழுத்துப் பிழையுடன் அமைந்திருந்த ஒரு வினாவால் குழப்பம் அடைந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் கடந்த 15-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. சுமார் 10.72 லட்சம் மாணவ-மாணவிகள் இந்தத் தேர்வுகளை எழுதுகின்றனர்.
செயல்படாத பி.எப்., கணக்குக்கும் வட்டி
பி.எப்., எனப்படும், வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் தொடர்ந்து பணம் செலுத்தப்படும் பி.எப்., கணக்குகளுக்கு, வட்டி அளிக்கப்படுகிறது.
புதிய பென்ஷன் திட்டத்தில்முன்பணம் பெறுவதில் சிக்கல்:4.23 லட்சம் ஊழியர்கள் அதிர்ச்சி
தமிழக அரசு பணம் செலுத்தாததால் புதிய பென்ஷன் திட்டத்தில் 25 சதவீத முன் பணம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 4.23 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மேற்குவங்கம், திரிபுரா தவிர மற்ற மாநில அரசு ஊழியர்கள்,மத்திய அரசு ஊழியர்களுக்கு 2003 ஏப்., 1 முதல் புதிய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
Tuesday, March 29, 2016
தீரர் சத்தியமூர்த்தி மார்ச் 28 நினைவு தினம்
இளமைக் காலம்
தீரர் சத்தியமூர்த்தி புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் 1887, ஆகஸ்டு 19-ல் பிறந்தார். தனது ஒன்பதாவது வயதில் தந்தையை இழந்தாலும், தாயின் முயற்சியால் திருமயத்திலும், கீரனூரிவும் பள்ளிக் கல்வியை முடித்தார். புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் கல்லூரிக் கல்வியை முடித்தார். சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் பி.ஏ. படித்தார். பின் தான் படித்த அதே கிறிஸ்துவ கல்லூரியில் ஆசிரியரானார். சட்டக் கல்லூரியில் பயின்று வழக்கறிஞரானார். சென்னையில் புகழுடன் விளங்கிய வழக்கறிஞர் வி.வி.சீனிவாச ஐயங்காரிடம் பயிற்சி பெற்று 1910-ல் வழக்கறிஞர் தொலைத் தொடங்கினார்.
15169 பகுதிநேர பயிற்றுநர்களுக்கு நிரந்தர வேலை வழங்குவதற்காக ஆண்டுக்கு 1000 கோடி அரசு செலவிட கோரிக்கை!!!
பகுதிநேர பயிற்றுநர் பணி நியமனங்கள், இந்தியா முழுவதும் திட்டத்தின் அடிப்படையிலான பணியாக, மத்திய அரசு மற்றும் மாநில அரசு நிதி பங்களிப்புடன்(65%:35%, 60%:40%, 50%:50%) அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு இவ்வேலையை ஓராண்டு சாதனை வேலையாக 2012ம் ஆண்டு அறிவித்து வழங்கியது. பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண் School Education(C2) Department G.O.(MS) No.177 Dated:11.11.2011ன்படி 16549 பகுதி நேர பயிற்றுநர்களை தேர்வு செய்ய, முறைப்படி விளம்பரங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமும், தினசரி நாளிதழ்கள் மூலமும் செய்தது.
பள்ளித் தேர்வுகளை இனி பிப்ரவரியிலேயே நடத்தலாமே?
மார்ச் தொடக்கமே வெளுத்து வாங்கும் வெயில் காலமாக மாறிவிட்டதால், அடுத்த கல்வியாண்டிலிருந்து பள்ளித் தேர்வுகளை ஒரு மாதத்துக்கு முன்பாக பிப்ரவரி மாதத்திலேயே நடத்தினால் என்ன என்ற கேள்வி கல்வியாளர்களால் முன்வைக்கப்படுகிறது. பருவநிலை மாற்றம் என்றழைக்கப்படும் மாறுபட்ட காலநிலைச் சூழலில் மழைக் காலம் சுருங்கிப் போய், பரவலாக- சராசரியாக ஆண்டுக்கு 50 நாள்கள் தான் மழை பெய்கிறது. ஆனால், பல நாள்கள் பெய்ய வேண்டிய மழையின் அளவு, ஓரிரு நாள்களில் கொட்டித் தீர்க்கத் தொடங்கிவிட்டது.
பிளஸ் 2 தேர்வில் முறைகேடு
பிளஸ் 2 தேர்வில் முறைகேடு செய்ததாக, 39 பேர் சிக்கி உள்ளனர். பிளஸ் 2 பொதுத் தேர்வில், நேற்று தமிழகம் முழுவதும், 39 பேர் முறைகேடு மற்றும் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதாக சிக்கினர். இதில், உயிரியல் தேர்வு எழுதிய மாணவர்கள் மட்டும், 30 பேர்; வரலாற்றில், ஏழு பேர்; வணிக கணிதம் மற்றும் தாவரவியலில் தலா ஒருவரும் சிக்கினர்.
இன்ஜி., விண்ணப்பம் எப்போது? ஒருங்கிணைப்பு குழு இன்று ஆலோசனை
இன்ஜி., படிப்புக்கான விண்ணப்ப வினியோகம் எப்போது என்பது குறித்து, இன்று நடக்கும் இன்ஜி., மாணவர் சேர்க்கை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், ஆலோசனை நடத்தப்பட உள்ளது.அண்ணா பல்கலை இன்ஜி., மாணவர் சேர்க்கை ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம், உயர்கல்வித் துறை செயலர் அபூர்வா தலைமையில், தலைமை செயலகத்தில், இன்று காலை நடக்கிறது.
அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை அரங்கம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ, குரூப் 2 உள்ளிட்ட தேர்வுகளுக்காக மாணவர்களும், இளைஞர்களும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், 31.08.2015 முதல் சத்யா ஐ.ஏ.எஸ் அகாதெமி, சென்னை தொகுத்து அளிக்கும் மாதிரி வினா-விடை பகுதி தினந்தோறும் தினமணியில் இடம்பெறும். அவை தினமணி இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதைத் படித்து மாணவர்கள், இளைஞர்கள், மாணவர்கள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். வாழ்த்துக்கள்.
-ஆசிரியர்.
TNPSC பொது தமிழ் மாதிரி தேர்வு (முழுமையான பாடத்திட்டம்)
மாணவிக்கு பாராட்டு
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி தனலெட்சுமி தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டி போட்டு வெற்றி பெற்றார்.
Monday, March 28, 2016
7th CPC : Modi govt likely to pay 'increment', arrears in July
This will definitely make Central government employees happy. Reportedly, Centre will start paying 'increased salary' to Government staff from the month of July. Sources say that Government will also pay six months' arrears along with the increment. It is being said that Government wants to complete all the formalities regarding the implementation of Sevent pay Commission till the end of the State Assembly elections.
குழந்தை பிறக்கும் முன் பள்ளியில்’அட்மிஷன்’ பெறும் நிலை!
குழந்தை பிறக்கும் முன், பள்ளியில் அட்மிஷன் பெறும் நிலை உள்ளது, என, நடிகர் பிரசன்னா பேசினார். திருச்சி அகரா பன்னாட்டுப் பள்ளியில், சர்வதேச மழழையர் பாடத்திட்ட அறிமுக விழா, நேற்று மாலை நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினர்களாக, நட்சத்திர தம்பதி, நடிகர் பிரசன்னா - நடிகை சினேகா ஆகியோர் பங்கேற்றனர்.
ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்ட ஆலோசனை கூட்டம்
சங்கராபுரத்தில் தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. வட்ட தலைவர் சைமன் தலைமை தாங்கினார்.
பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு தாமதம்
தேர்தலையொட்டி, பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணிகளும் தாமதமாக நடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது; இம்மாத இறுதியில் வர வேண்டிய சுற்றறிக்கை இதுவரை வராததால் ஆசிரியர் பயிற்றுனர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
போட்டி தேர்வுக்கு தயாராக அரசு பயிற்சி மையம் தேவை
அரசு பணி தேர்வு எழுவோருக்கு உதவும் வகையில், திருப்பூரில் பயிற்சி மையம் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி., குரூப் தேர்வுகள், ரயில்வே, வங்கி பணிகள், வி.ஏ.ஓ., உள்ளிட்ட அரசு பணிகளுக்கு, தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இத்தேர்வுக்கு படிக்கும் மாணவ, மாணவியருக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக, அவ்வப்போது பயிற்சி தரப்படுகிறது; இதற்கான அரங்கமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனினும், இத்திட்டத்தை இன்னும் மேம்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பெற்றோர் கவனத்திற்கு : மொபைல் பேட்டரி வெடித்து சிறுவன் பலி
மத்தியப் பிரேதச மாநிலம், செகோர் மாவட்டத்தில் மொபைல் போன் பேட்டரி வெடித்ததால் பலத்த தீக்காயம் அடைந்த சிறுவன் உயிரிழந்தான். செகோர் மாவட்டம், பட்கோலா என்ற கிராமத்தைச் சேர்ந்த ஃபதேஹ் என்பவரின் மகன் உவேஷ் (10). இச்சிறுவன் நேற்று தனது மொபைல் போனில் கேம்ஸ் விளையாடிக்கொண்டிருந்தான். இந்நிலையில் போன் பேட்டரி திடீரென வெடித்ததில் சிறுவனின் ஆடையில் தீப்பற்றி மார்பில் பலத்த காயம் ஏற்பட்டது.
உயர்கல்வி முறைகேடு குறித்து விசாரணை:'நெட், ஸ்லெட்' சங்கம் வலியுறுத்தல்
'தமிழக உயர்கல்வித் துறையில் நடந்த விதிமீறல்கள் குறித்து, விசாரணை குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்' என, பேராசிரியர்களின், 'நெட் மற்றும் ஸ்லெட்' சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இதுதொடர்பாக, 'நெட் மற்றும் ஸ்லெட்' சங்க தலைவர் தங்க முனியாண்டி அளித்த பேட்டி: தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளுக்கான உதவி பேராசிரியர் நேரடி நியமனத்தில், பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி.,யின், 2009 மற்றும், 2010ம் ஆண்டு விதிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை.
6 முதல் 9ம் வகுப்புகளுக்கான மூன்றாம் பருவத்தேர்வு ஏப்ரல் 6ல் துவங்கி 21ல் முடிவடைகிறது
வேலூர் மாவட்டத்தில் 6 முதல் 9ம் வகுப்புகளுக்கான மூன்றாம் பருவத்தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது . இதில் தேர்வுகள் ஏப்ரல் 6ல் துவங்கி 21ல் முடிவடைகிறது
நாடாளுமன்றத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மாற்றம் செய்வது குறித்து மத்திய அரசின் பதில்
GOVERNMENT OF INDIA
MINISTRY OF FINANCE
UNSTARRED QUESTION NO: 1524
ANSWERED ON: 04.03.2016
Replacement of New Pension Scheme
SUKHBIR SINGH JAUNPURIA
Will the Minister of FINANCE be pleased to state:-
(a) whether the Government proposes to replace the New Pension Scheme (NPS) with old pension scheme; and
(b) if so, the details thereof and the reasons therefor?
மதுரை காமராஜ் பல்கலை நேரடி சேர்க்கை தேர்வு ஓராண்டுக்கு பின் கிடைத்தது விடிவு!
மதுரை காமராஜ் பல்கலை நேரடி சேர்க்கை (லேட்ரல் என்ட்ரி) தேர்வில், உண்மை சான்றிதழ் சமர்ப்பித்த மாணவர்களை கண்டறிந்து ஒரு சில நாட்களில் தேர்வு முடிவு வெளியிட செயலர் அபூர்வா அறிவுறுத்தியுள்ளார்.இப்பல்கலை தொலைநிலைக் கல்வியில் நேரடி இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு சேர்க்கையான மாணவர்களுக்கு 2014 மே மாதம் தேர்வு நடந்தது. இரண்டாயிரத்திற்கும் மேற் பட்டோர் எழுதினர். ஜூனில் முடிவுகள் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் நேரடி மாணவர் சேர்க்கையில் சிலர் போலி ஆவணங்கள் தாக்கல் செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
அரை டிக்கெட் நடைமுறையில் ரயில்வே துறை அதிரடி மாற்றம்
'ரயில்களில், முழு டிக்கெட்டுக்கான கட்டணம் செலுத்தினால் மட்டுமே, குழந்தைகளுக்கு தனி இருக்கை அல்லது படுக்கை வசதி வழங்கப்படும்' என, ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்வே வட்டாரங்கள் கூறியதாவது: தற்போது, ரயில்களில் பயணம் செய்யும், 5 - 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு, அரை டிக்கெட் கட்டணத்தில், இருக்கை மற்றும் படுக்கை வசதி அளிக்கப்பட்டு வருகிறது. 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.
தேசிய கீதத்தில் திருத்தம் இல்லை:மத்திய அரசு திட்டவட்டம்
தேசிய கீதத்தில் திருத்தம் செய்ய வேண்டுமென்ற, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமியின் கோரிக்கையை, மத்திய அரசு நிராகரித்துள்ளது. இந்தியாவின் தேசிய கீதம், ரவீந்திர நாத் தாகூரால் எழுதப்பட்டது. இதில் உள்ள சில வார்த்தைகள், ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை புகழும் வகையில் அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த வார்த்தைகளுக்கு பதில், வேறு வார்த்தைகளை சேர்க்க வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, 2015, நவம்பரில், சுப்பிரமணியன் சாமி கடிதம் எழுதினார்.
பி.இ., எது முன்னணி படிப்பு?
பிளஸ் 2 படித்து முடிக்கும் மாணவர்களுக்கு பொறியியல் படிப்பில் எந்தத் துறையில் சேருவது என்ற குழப்பம் ஏற்படுவது வழக்கம். எது முன்னணி படிப்பு, எதில் சேர்ந்தால் எதிர்காலத்தில் வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்ற குழப்பம் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் பெற்றோர்களுக்கும் ஏற்படும். இதுகுறித்து தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் முதன்மையர் (திட்டம் மற்றும் மேம்பாடு) எஸ்.வைத்திய சுப்பிரமணியம் தெரிவித்தது:
ஐ.டி.பி.ஐ., வங்கி ஊழியர்கள் இன்று முதல் 4 நாள் 'ஸ்டிரைக்'
தனியார் முதலீட்டை அதிகரிக்கும், மத்திய அரசின் முடிவை எதிர்த்து, ஐ.டி.பி.ஐ., வங்கியின் ஊழியர் சங்கங்கள், இன்று முதல், நான்கு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ஐ.டி.பி.ஐ., வங்கியில் உள்ள, மத்திய அரசின் பங்கை, 80 சதவீதத்திலிருந்து, 50 சதவீதத்துக்கும் கீழ் குறைக்க உள்ளதாக, சமீபத்தில் பார்லிமென்டில் அறிவித்தார்.
Sunday, March 27, 2016
மதிப்பிழக்கிறதா சென்னை பல்கலை?
சென்னை பல்கலைக்கு இருந்து வந்த, நூற்றாண்டு கடந்த பாரம்பரிய கவுரவம், வன்முறை சம்பவங்களால், நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. பல்கலையின் சான்றிதழுக்கு, வெளிநாடுகளில் உள்ள மதிப்பு குறையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. கடந்த, 1857ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டப்படி, இங்கிலாந்தில் உள்ள லண்டன் பல்கலையை பின்பற்றி, சென்னை பல்கலை உருவாக்கப்பட்டது. தென் மாநிலங்களில் உள்ள அனைத்து பல்கலைகளுக்கும் தாயாக, சென்னை பல்கலை மதிக்கப்படுகிறது. 159 ஆண்டு கால பாரம்பரியத்தில், சென்னை பல்கலையின் சான்றிதழ்கள், சர்வதேச அளவில் மிகவும் மதிக்கப்பட கூடியவை.
அமெரிக்க பள்ளிகளில் வணக்கம் சொல்வதற்கு தடை
அமெரிக்க பள்ளிகளில் இரு கைகளையும் கூப்பி வணக்கம் சொல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்களின் எதிர்ப்பால் யோகா கற்றுத் தருவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில், யோகா கிறிஸ்துவ மத கலாச்சாரத்திற்கு எதிராக உள்ளதாகவும், வணக்கம் சொல்லும் முறை மத உணர்வுகளை பாதிப்பதாக உள்ளதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அங்கீகாரம் முடியும் பள்ளிகளின் பட்டியலை வெளியிட கோரிக்கை
வரும் மே மாதத்துடன் அங்கீகாரம் முடியும், 746 பள்ளிகள் எவை என தெரியாமல், பெற்றோர் பரிதவிப்புக்கு ஆளாகி உள்ளனர். இந்த பள்ளிகளின் பட்டியலை, இணையதளத்தில் வெளியிட கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாணவியருக்கு பாலியல் தொல்லை; உடற்கல்வி அசிரியர் ‘சஸ்பெண்ட்’ - தினமலர்
வேலூர் அருகே அரசு பள்ளியில், மாணவியருக்கு, பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியர், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார். வேலூர் அடுத்த இடையன்சாத்து அரசு உயர்நிலைப்பள்ளியில், உடற்கல்வி ஆசிரியராக குமார், 48, பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியில் நர்சரி பள்ளியையும் நடத்தி வருகிறார். கால்பந்து, கைப்பந்து விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுவதற்காக, மாணவியருக்கு மட்டும் பயிற்சி அளிப்பதாகக் கூறி, தினமும் மாலை, 4:30 மணியில் இருந்து 6:00 மணி வரை, சிறப்பு வகுப்புகள் நடத்தி வந்ததாக தெரிகிறது.
ஜெகத்ரட்சகனின் கல்லூரிக்கு அனுமதி; தமிழக அரசு சலுகை
முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் அறக்கட்டளை நடத்தும் மருத்துவக் கல்லூரி கட்டடங்களுக்கு, நகரமைப்பு சட்ட விதிகளை தளர்த்தி, தமிழக அரசு சலுகை அளித்துள்ளது.
Saturday, March 26, 2016
7 வயது அரசு பள்ளி மாணவி தேர்தல் தூதுவராக அறிவிப்பு
தமிழகத்திலுள்ள, 234 தொகுதி பெயர்களை, மனப்பாடமாக சரளமாக ஒப்பித்து, 7 வயது அரசு பள்ளி மாணவி அசத்தினார். அவருக்கு, பணமுடிப்பு வழங்கிய சப் - கலெக்டர், தேர்தல் துாதுவராகவும் அறிவித்தார்.சட்டசபை தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, ஓட்டளிக்க வாருங்கள் என்ற தலைப்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அரசு கலைக் கல்லுாரியில், நேற்று முன்தினம் நடத்தப்பட்டது.
10ம் வகுப்பு விடை திருத்தம் ஏப். 15ல் துவக்கம்:கருணை மதிப்பெண் எதிர்பார்ப்பு
தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம், ஏப்., 15 முதல்
துவங்குகிறது. 'தமிழ் தேர்வில் இடம்பெற்ற குழப்பமான வினாக்களுக்கு, கருணை மதிப்பெண் வழங்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், முக்கிய பாடங்களின் தேர்வுகள், ஏப்., 11ல் முடிகின்றன.
துவங்குகிறது. 'தமிழ் தேர்வில் இடம்பெற்ற குழப்பமான வினாக்களுக்கு, கருணை மதிப்பெண் வழங்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், முக்கிய பாடங்களின் தேர்வுகள், ஏப்., 11ல் முடிகின்றன.
மாற்றுத் திறனாளிகளுக்கு வாக்களிக்க முன்னுரிமை: தேர்தல் ஆணையம் உத்தரவு
மாற்றுத்திறனாளிகளை வரிசையில் நிற்க வைக்காமல், வாக்களிக்க முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்களிக்கச் செல்லும் மாற்றுத் திறனாளிகளுக்கு என்னென்ன வசதிகளைச் செய்து தர வேண்டும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பின்வருமாறு:
சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்களிக்கச் செல்லும் மாற்றுத் திறனாளிகளுக்கு என்னென்ன வசதிகளைச் செய்து தர வேண்டும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பின்வருமாறு:
செவிலிய பட்டயப்படிப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 7 கடைசி
செவிலிய பட்டயப் படிப்புக்கான பருவத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 7-ஆம் தேதி கடைசித் தேதியாகும்.செவிலியப் பட்டயப் படிப்புக்கான ஜூலை-ஆகஸ்ட் 2016 பருவத் தேர்வுகளை எழுதும் மாணவர்களின் விண்ணப்பம், தேர்வுகளை நடத்தும் தகுதியுள்ள ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் ஆகியவற்றை அந்த பயிற்சிப் பள்ளிகள் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வுக்காக ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ. 100 தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
DGE - XII PUBLIC EXAMINATION - ENGLISH I & II OFFICIAL ANSWER KEY - MARCH 2016
DGE - ENGLISH I OFFICIAL ANSWER KEY CLICK HERE...
DGE - ENGLISH II OFFICIAL ANSWER KEY CLICK HERE...
B. SRINIVASAN.M.A.,M.Ed.,M.C.A., M.A(YOGA), GRADUATE TEACHER, GHS GANGALERI - 635 122, KRISHNAGIRI - DT, CELL : 99943-94610
Friday, March 25, 2016
பள்ளி தலைமையாசிரியர்கள் சங்க செயற்குழுக் கூட்டம்
மதுரையில் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் சங்க செயற்குழுக் கூட்டம் மாவட்ட தலைவர் தனபால் தலைமையில் நடந்தது. அமைப்பு செயலாளர் ராஜேந்திர பிரசாத் முன்னிலை வகித்தார். செயலாளர் பாஸ்கரன் வரவேற்றார்.
பட்டதாரிகளை அழைக்கிறது இந்திய கடற்படை!
திருமணம் ஆகாத பட்டதாரிகளுக்கு, கேரளாவில் உள்ள இந்திய நேவல் அகாடமியில் பயிற்சி அளித்து, ‘லெப்டினன்ட்’ உட்பட பல்வேறு பணி வாய்ப்புகளை வழங்குகிறது இந்திய கடற்படை!
பணிப்பிரிவுகள்: லாஜிஸ்டிக்ஸ் பிரிவு (ஆண்கள் மட்டும்) மற்றும் எஜூகேஷன் பிரிவு (இருபாலரும்).
பணிப்பிரிவுகள்: லாஜிஸ்டிக்ஸ் பிரிவு (ஆண்கள் மட்டும்) மற்றும் எஜூகேஷன் பிரிவு (இருபாலரும்).
ஆதார் எண் விவரம் சேகரிக்காத ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை
மாணவர்களின் ஆதார் எண் விவரம் சேகரிக்காத, ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நெருக்கடிகளால் அலறும் உயர்கல்வி மன்றம்!
பல்கலை மற்றும் கல்லுாரிகளில், மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும், தமிழக உயர்கல்வி மன்றத்தில் நிகழ்ந்த அடுக்கடுக்கான மாற்றங்களால், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஓட்டம் பிடித்த வண்ணம் உள்ளனர்.
15169 பகுதிநேர பயிற்றுநர்களுக்கு நிரந்தர வேலை வழங்குவதற்காக ஆண்டுக்கு ஏன் 1000 கோடி அரசு செலவிட கோரிக்கை!!!!!
பகுதிநேர பயிற்றுநர் பணி நியமனங்கள், இந்தியா முழுவதும் திட்டத்தின் அடிப்படையிலான பணியாக, மத்திய அரசு மற்றும் மாநில அரசு நிதி பங்களிப்புடன்(65%:35%, 60%:40%, 50%:50%) அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு இவ்வேலையை ஓராண்டு சாதனை வேலையாக 2012ம் ஆண்டு அறிவித்து வழங்கியது. பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண் School Education(C2) Department G.O.(MS) No.177 Dated:11.11.2011ன்படி 16549 பகுதி நேர பயிற்றுநர்களை தேர்வு செய்ய, முறைப்படி விளம்பரங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமும், தினசரி
நாளிதழ்கள் மூலமும் செய்தது. விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு நேர்காணல் செய்து தகுதி மற்றும் வேலைவாய்ப்பக முன்னுரிமை, இனசுழற்சி அடிப்படையிலே நியமனங்களை மேற்கொண்டது. இலவச மற்றும் கட்டாய கல்வி (RTE) விதிமுறைகளுக்கேற்ப அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை நூறுக்கு அதிகமாக உள்ள 6 முதல் 8 வகுப்புகளுக்கு ஓவியம், உடற்கல்வி மற்றும் தொழிற்கல்வியை போதித்திட பகுதி நேர பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட்டனர். இவர்களில் 5253 நபர்கள் ஓவியம், 5392 நபர்கள் உடற்கல்வி, 5904 நபர்கள் தையல், இசை, கணினி, தோட்டக்கலை, வாழ்வியல் திறன் கல்வி, கட்டிடம் கட்டும் கல்வி போன்ற தொழிற்கல்வி ஆசிரியர்கள் ஆவர்.
நாளிதழ்கள் மூலமும் செய்தது. விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு நேர்காணல் செய்து தகுதி மற்றும் வேலைவாய்ப்பக முன்னுரிமை, இனசுழற்சி அடிப்படையிலே நியமனங்களை மேற்கொண்டது. இலவச மற்றும் கட்டாய கல்வி (RTE) விதிமுறைகளுக்கேற்ப அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை நூறுக்கு அதிகமாக உள்ள 6 முதல் 8 வகுப்புகளுக்கு ஓவியம், உடற்கல்வி மற்றும் தொழிற்கல்வியை போதித்திட பகுதி நேர பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட்டனர். இவர்களில் 5253 நபர்கள் ஓவியம், 5392 நபர்கள் உடற்கல்வி, 5904 நபர்கள் தையல், இசை, கணினி, தோட்டக்கலை, வாழ்வியல் திறன் கல்வி, கட்டிடம் கட்டும் கல்வி போன்ற தொழிற்கல்வி ஆசிரியர்கள் ஆவர்.
தேர்வு எழுத போறீங்களா?
பள்ளி இறுதித் தேர்வு என்பது வாழ்வில் ஒரு முக்கியக் கட்டம். அந்தத் தருணத்தில் கவனமாக இருத்தல் மிக அவசியமாகிறது! தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் மனம் சங்கடப்படும் படி பெற்றோர்கள் சண்டை போட்டுக் கொள்ளுவது, வீட்டிற்கு விருந்தினர்களை வரவழைத்து கூட்டம் போடுவது, வேண்டாத விஷயங்களுக்கு பிள்ளைகளோடு விவாதம் செய்வது, அவர்களை உறவினர்களின் இல்ல விழாக்களுக்கு வரும்படி தொந்தரவு செய்வது இவை எல்லாம் தவிர்த்தல் நல்லது.
CG Employees Begin Countdown for Implementation of 7th CPC Recommendations
Central government employees have begun the countdown for the Centre to notify implementation of 7th CPC recommendations. “As per the reports received, the 7th Pay Commission Pay recommendations may be notified in June after the model code of conduct of states polls which in place is in place till 21st May 2016, said , P.S.Prasad General Secretary, Confederation of Central Government Employees and Workers Karnataka State.
பாட திட்டம் தெரியாததால் பி.எட்., கல்லூரிகள் தவிப்பு
தமிழக பி.எட்., கல்லுாரிகளில் வகுப்புகள் துவங்கி, ஆறு மாதமாகியும் பாடத்திட்டம் தெரியாமல், மாணவர்கள், ஆசிரியர்கள் தவிக்கின்றனர். உயர்கல்வித் துறையின் அலட்சியத்தால், பாடத்திட்டம் முழுமை செய்யப்படவில்லை என, மாணவர்கள் குற்றம் சாட்டிஉள்ளனர்.ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கட்டுப்பாட்டின் கீழ், மாநிலம் முழுவதும், 690 பி.எட்., கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், இந்த ஆண்டு முதல், பி.எட்., படிப்பு, ஓராண்டில் இருந்து, இரண்டு ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது.
வேளாண் செயல்முறைகள் தேர்வு எளிது கால்நடை மருத்துவ 'கட் ஆப்' உயரும்
வேளாண் செயல்முறைகள் தேர்வு எளிதாக இருந்ததால், கால்நடை மருத்துவப் படிப்புக்கான, 'கட் ஆப்' மதிப்பெண் உயர வாய்ப்புள்ளது. பிளஸ் 2 தேர்வில், நேற்று, 'இண்டஸ்ட்ரியல் இன்ஜி.,' வேளாண் செயல்முறைகள் உட்பட, 12 தொழிற்கல்வி பாடங்களுக்கு தேர்வுகள் நடந்தன. வேளாண் செயல்முறைகள் தேர்வில் மிகவும் எளிமையான வினாக்களே இடம் பெற்றன.
பல்கலை, கல்லூரிகளில் முன்கூட்டியே தேர்வு!
சட்டசபை தேர்தலால், அனைத்து பல்கலைகளிலும் முன்கூட்டியே தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. மே மாதம் முதல் வாரத்திற்குள் தேர்வுகளை முடிக்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.தமிழக சட்டசபை தேர்தல் மே, 16ல் நடக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
Thursday, March 24, 2016
புதிய வண்ணத்தில் பிளஸ் 2 சான்றிதழ்
இந்த ஆண்டுக்கான, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் நவீன, '2 டி பார்கோடு' மற்றும், 'வாட்டர் மார்க்' என்ற, ரகசிய குறியீடுடன் பளிச்சிடும் வண்ணத்தில் தயாராக உள்ளது. பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. தேர்வு முடிவுகளை, சட்டசபை தேர்தலுக்கு முன் வெளியிட, பள்ளிக்கல்வித் துறையும் மற்றும் தேர்வுத் துறையும் திட்டமிட்டு உள்ளன.
ஆதார் எண் விவரம் சேகரிக்காத ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை
மாணவர்களின் ஆதார் எண் விவரம் சேகரிக்காத, ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின், ஆதார் எண் விவரங்களை சேகரிக்க, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது. ஆதார் எண் உள்ளவர்களிடம், ஆதார் அட்டை நகல் பெறப்பட்டது. அட்டை இல்லாதவர்களுக்கு, சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
தனியார் பள்ளிகளில் மர்மமாகும் 'அட்மிஷன்' விண்ணப்பம் அளித்த பெற்றோர் ஏமாற்றம்
விதிகளை மீறி, முன்கூட்டியே தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முடிந்து விட்டது. விண்ணப்பம் கொடுத்தவர்கள், பள்ளிக்குள் நுழைய முடியாமல் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர். தமிழகத்தில், அரசு பள்ளிகளை விட, சில குறிப்பிட்ட அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகள், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் தான், பிள்ளைகளை சேர்க்க, பெற்றோர் விரும்புகின்றனர்.இந்த பள்ளிகளில், கல்வி கட்டணம், சிறப்பு கட்டணம் மற்றும் நன்கொடை என, பல ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலித்தாலும், பெற்றோர் முட்டி மோதுகின்றனர். ஆனால், இந்த பள்ளிகளில், 'அட்மிஷன்' நடைமுறை புரியாத புதிராகவே உள்ளது.
சென்னை ஐ.ஐ.டி., 'ஜாம் ரிசல்ட்' வெளியீடு
இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான, சென்னை ஐ.ஐ.டி., நடத்திய, முதுகலை பட்டப்படிப்புக்கான, 'ஜாம்' நுழைவுத்தேர்வு முடிவு, நேற்று வெளியிடப்பட்டது.
Wednesday, March 23, 2016
மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு; ஜனவரி 2016 முதல் அமுல்
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. கடந்த 6-வது ஊதியக் குழு பரிந் துரையில், அகவிலைப்படி உயர்வை நிர்ணயிக்க தனி கணக் கீட்டு முறை உருவாக்கப்பட்டது. அதற்கேற்ப அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படுகிறது. கடந்த 2015 ஜனவரி முதல் டிசம்பர் வரையில் சராசரி நுகர்வோர் குறியீட்டு எண் 6.73 சதவீதமாக உள்ளது. அதன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அடிப்படை ஊதியத்துடன் இணைந்த அகவிலைப்படி விகிதம் தற்போதுள்ள 119 சதவீதத்தில் இருந்து 125 சதவீதமாக உயர்த்தப்படக்கூடும்.
பள்ளிகளுக்கு ஏப்., 22 முதல் கோடை விடுமுறை
தமிழகத்தில், அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, ஏப்., 22ம் தேதி முதல் மற்றும் 5ம் வகுப்பு வரை உள்ள துவக்கப் பள்ளிகளுக்கு, மே 1ம் தேதி முதல், கோடை விடுமுறை துவங்குகிறது. தமிழகத்தில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து வருகின்றன. பிளஸ் 2வுக்கு, ஏப்., 1ம் தேதி தேர்வுகள் முடிகின்றன. 10ம் வகுப்புக்கு, ஏப்., 11; விருப்ப பாடம் எழுதுவோருக்கு, ஏப்., 13ம் தேதி தேர்வுகள் முடிகின்றன. 9ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கு, ஏப்., 15ம் தேதிக்குள் தேர்வுகள் முடிகின்றன.
செவிலியர் பள்ளி அங்கீகாரம் ரத்து; மாணவர்களுக்கு பிரச்னையில்லை
திண்டுக்கல் மாவட்டத்தில் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 5 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு படிப்பில் பிரச்னை ஏற்படாது என, தமிழ்நாடு அனைத்து தனியார் தொழிற் கல்வி பயிற்சி மைய நலச்சங்கம் தெரிவித்துள்ளது. இதன் தலைவர் ஜோதிமுருகன், செயலாளர் சபரி இந்திரகோபால், பொருளாளர் சக்திவேல் கூறியதாவது:
10ம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகளில் சுணக்கம்!
ஆசிரியர் சங்க நிர்வாகிகளின் வருகையால், பொதுத்தேர்வு பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் கடும் அதிருப்தி அடைந்துஉள்ளனர். பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து வருகின்றன. தேர்வில் ஏற்படும் குளறுபடிகள் குறித்து, தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் உள்ள தேர்வு கட்டுப்பாட்டு அறை மூலம் புகார்கள் பெறப்பட்டு, பிரச்னை கள் தீர்க்கப்படுகின்றன.
பிளஸ் 2வுக்கு பின் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம்?
பிளஸ் 2வுக்கு பின், உயர் கல்வியில், என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் போன்ற சந்தேகங்களுக்கு வழிகாட்டும், தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி ஏப்ரல் 2 முதல் 10 வரை பல மாவட்டங்களில் நடக்க உள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. தேர்வு முடிவுகள் வந்ததும் மாணவர்கள், இன்ஜி.,மருத்துவம் உட்பட, பலவகை படிப்புகளில், ஒன்றை தேர்வு செய்து படிப்பர். இதில், மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு பல குழப்பங்கள் இருக்கும்.
ரஷ்யாவில் கழிவறை கழுவ வைத்து கொடுமை; மருத்துவ மாணவர்கள் புகார்
மருத்துவம் படிக்க வைப்பதாக கூறி, ரஷ்யாவில் கழிவறை கழுவ வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பாதிக்கப்பட்ட மாணவர்கள் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்தனர். கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், தேனி, தஞ்சாவூர், கோவில்பட்டி உள்ளிட்ட இடங்களை சேர்ந்த, எட்டு மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம், ஒரு புகார் மனு அளித்தனர்.
வெளிநாட்டு மாணவர்களை கண்காணிக்கிறது மத்திய அரசு!
வெளிநாட்டு மாணவர்களின் வருகை குறித்து 24 மணி நேரத்துக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பல்கலை.,களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
+2 வேதியியல் தேர்வுக்கு 'போனஸ்' 6 மதிப்பெண்
பிளஸ் 2 வேதியியல் தேர்வில் பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விக்கு ஒரு மதிப்பெண்; பிழையான கேள்விக்கு ஐந்து மதிப்பெண் வழங்க விடைத்தாள் திருத்துனர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வில் வேதியியல் பாடத்திற்கு மார்ச், 14ல் தேர்வு நடந்தது. எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு கேள்வித்தாள் கடினமாக இருந்தது. பெரும்பாலான கேள்விகள்மாணவர்கள் சிந்தித்து எழுதும்வகையில் மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ.,கேள்வித்தாள் போல அமைக்கப்பட்டிருந்தது.அதனால், இந்த ஆண்டு வேதியியல் பாடத்தில், 'சென்டம்' பெறுவோர் எண்ணிக்கை கணிசமாக குறையும்; தேர்ச்சி விகிதம் குறையும் என, ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.
தேர்வு தொடர்பான புகார்கள், கருத்துகள் மற்றும் சந்தேகங்களை தெரிவிக்க ஆசிரியர் சங்கத்தினர் தேர்வு கட்டுப்பாட்டு அறை மூலம் தொடர்பு கொள்ளலாம்
ஆசிரியர் சங்க நிர்வாகிகளின் வருகையால், பொதுத்தேர்வு பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் கடும் அதிருப்தி அடைந்துஉள்ளனர்.பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து வருகின்றன. தேர்வில் ஏற்படும் குளறுபடிகள் குறித்து, தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் உள்ள தேர்வு கட்டுப்பாட்டு அறை மூலம் புகார்கள் பெறப்பட்டு, பிரச்னை கள் தீர்க்கப்படுகின்றன.
பிளஸ் 2 முப்பருவ முறை:கல்வியாளர்கள் வலியுறுத்தல்
தமிழக சமச்சீர் கல்வியில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கும், முப்பருவ முறையை கொண்டு வர வேண்டும்' என, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு சார்பில், கல்வியாளர்கள், எஸ்.எஸ்.ராஜகோபாலன் மற்றும் வசந்தி தேவி, பேராசிரியர் சிவக்குமார், ஆசிரியர் மூர்த்தி ஆகியோர், நேற்று அளித்த பேட்டி:
வங்கிகளுக்கு எத்தனை நாள் விடுமுறை?
வங்கிகள், நாளை முதல், மார்ச், 31 வரை இயங்காது' என, வெளியான தகவலுக்கு, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.இதுகுறித்து, சங்கத்தின் மாநில பொதுச் செயலர் சீனிவாசன் கூறியதாவது:
எஸ்.எஸ்.எல்.சி. ஆங்கிலம் முதல் தாள் தேர்வு எளிமையாக இருந்தது மாணவ–மாணவிகள் கருத்து
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த 15–ந் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தொடங்கியது. இந்த தேர்வை 11 லட்சத்து 20 ஆயிரத்து 749 பேர் எழுதி வருகிறார்கள். தமிழ் முதல் தாள், தமிழ் இரண்டாம் தாள் தேர்வு நடந்து முடிந்துவிட்டது.
சர்வதேச பல்கலை பட்டியலில் அண்ணா பல்கலைக்கு தரவரிசை
சர்வதேச பல்கலைகளின் பாடவாரியான திறன் பட்டியலில், சென்னை, அண்ணா பல்கலை, மூன்று பிரிவுகளில் தரவரிசை பெற்றுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த, க்யூ.எஸ்., எனப்படும், 'க்வாக்குவாரெல்லி சைமண்ட்ஸ்' நிறுவனம் சார்பில், இன்ஜி., மற்றும் அறிவியல் பல்கலைகளின் தரவரிசை பட்டியல், ஆண்டுதோறும் வெளியிடப்படும். அதன்படி, கடந்த கல்வி ஆண்டுக்கான தரவரிசை பட்டியல் ஏற்கனவே வெளியானது.
மத்திய அரசு பயிற்சிக்கு தமிழக அரசு அனுமதி மறுப்பு
மத்திய அரசின் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மூலம், மாநில அரசுப் பள்ளிகளில், பயிற்சி வழங்கும் திட்டத்தை அமல்படுத்த, தமிழக அரசு மறுப்பு தெரிவித்து உள்ளது. மாநில அரசு பள்ளிகளில், கல்வித்தரத்தை உயர்த்த, மத்திய அரசு புதிய முன்னோடி திட்டத்தை தயாரித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர்களை பணியில் அமர்த்தி, அவர்கள் மூலம், மாநில அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி தர, மத்திய அரசு திட்டமிட்டது.
Tuesday, March 22, 2016
விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு பிளஸ் 2 'ரிசல்ட்' தாமதமாகும் அபாயம்
விடைத்தாள் திருத்தும் பணிக்கு, தனியார் பள்ளி ஆசிரியர்கள் வர மறுப்பதால், 'ரிசல்ட்' வெளியாவதில் தாமதம் ஏற்படும் என, தெரிகிறது. பிளஸ் 2 பொதுத்தேர்வில், மொழி பாடங்கள் மற்றும் இரண்டு வகை முக்கிய பாடங்களுக்கு தேர்வுகளும் முடிந்துள்ளன. முதல் கட்ட மாக, 8.5 லட்சம் மாணவர்கள் எழுதிய மொழி பாடங்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி துவங்கி உள்ளது.
பிளஸ் 2: வேதியியல் விடைத்தாள் திருத்தும் பணி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு
பிளஸ் 2 வேதியியல் பாட விடைத்தாள் திருத்தும் பணி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்ட்டுள்ளது. கடந்த மார்ச் 14-ம் தேதி பிளஸ் 2 வேதியியல் படிப்புக்கான தேர்வு நடத்தப்பட்டது. தேர்வில் கடினமான வினாக்கள் இடம் பெற்றிருந்ததாகத் தேர்வு எழுதிய மாணவர்கள், வேதியியல் பாட ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மும்மொழி கல்வித் திட்டம் தேவை:தனியார் பள்ளிகள் சங்கம் தீர்மானம்
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் சங்க பொதுகுழுக் கூட்டம், மாநில தலைவர் கனகராஜ் தலைமையில், பொதுச் செயலர் நந்தகுமார் முன்னிலையில், சென்னையில் நடந்தது. இதில், தனியார் பள்ளிகளின் பல்வேறு பிரச்னைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின், 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம்:தமிழகத்தில், 20 ஆண்டு களுக்கு முன் கட்டப்பட்ட, பழைய பள்ளி கட்டடங்களுக்கு, உள்ளாட்சி அமைப்புகளின் திட்ட அனுமதி வேண்டும் என்ற முறையை, பள்ளிக்கல்வித்துறை கைவிட வேண்டும்.
மின் வாரிய வேலை தேதியை நீட்டிக்க கோரிக்கை
'தமிழ்நாடு மின் வாரிய தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாததால், கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும்' என, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு மின் வாரியம், உதவியாளர் உட்பட, 2,175 பணியிடங்களை நிரப்ப உள்ளது. இதற்கு, விண்ணப்பிக்க நேற்று கடைசி நாள். ஒரே நேரத்தில், பலரும் விண்ணப்பித்ததால், இணையதளத்தின் வேகம் குறைந்தது.
ஆசிரியர்கள் நாள்தோறும் தம்மைப் புதுப்பித்துக்கொள்ளும் திறன் படைத்தவர்களாக இருக்க வேண்டும்
ஆசிரியர் என்பவர் நாள்தோறும் தம்மைப் புதுப்பித்துக்கொள்ளும் திறன் படைத்தவர்களாகவும், தமக்குத் தாமே உந்துதலைக் கொடுத்து முன்னேற்றத்தை அறிவார்ந்த தளத்திலும், ஒழுக்க நிலையிலும் முன்மாதிரியாக விளங்குதல் அவசியம் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி கூறினார்.
கல்வித்தரம் குறைந்து வருவதற்கு அரசு, தனியார் கல்வி நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு: பாராளுமன்ற குழு அறிக்கை
மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் கீழ் ஒரு பாராளுமன்ற குழு செயல்பட்டு வருகிறது. பாரதீய ஜனதா எம்.பி., சத்திய நாராயண ஜாத்தியா தலைமையிலான இந்த குழு தனது 274-வது அறிக்கையில், நாட்டின் கல்வித்தரம் குறைந்து போனது குறித்து குறிப்பிட்டுள்ளது.
Monday, March 21, 2016
தேர்வு ஒருபக்கம்; தேர்தல் மறுபக்கம்
தேர்வு பணி, தேர்தல் வேலை என, இரட்டை பணிச்சுமையால், ஆசிரியர்கள் புலம்புகின்றனர். இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், மூன்றாம் பருவ பாடங்கள் முழுமையாக முடிக்கப்படவில்லை. பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது; மறுபக்கம், சட்டசபை தேர்தல் பணிகளும் விறுவிறுப்பு அடைந்துள்ளன. தேர்வு பணி மற்றும் தேர்தல் பணி என, இரண்டிலும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். ஏப்., 22ல் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, முப்பருவ தேர்வு துவங்குகிறது.
பிளஸ்- 2 கணினி அறிவியல்; 4 வகை வினாத்தாள் தயார்
பிளஸ் 2 கணினி அறிவியல் தேர்வுக்கு நான்கு வகையான வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுத்துறை செய்திக்குறிப்பு: பிளஸ்-2 கணினி அறிவியல் தேர்வு இன்று (21ம் தேதி) நடக்கிறது. இதில் 30 பக்கங்களுக்கு கோடு இல்லாத விடைத்தாள் வழங்கப்படும். மேலும் 75 ஒரு மார்க் அப்ஜெக்டிவ் வகை வினாக்களுக்கு விடை எழுத வேண்டும். இதற்கு ஆப்டிகல் மார்க்கிங் ரெசக்னிஷன் என்ற ஓ.எம்.ஆர்., விடைத்தாள் வழங்கப்படும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகளில் இதுபோன்ற விடைத்தாள் பயன்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் 5 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி?
தமிழகத்தில், 746 பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்காததால், ஐந்து லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது என, தனியார் பள்ளி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில், பள்ளிகளுக்கு எவ்வளவு இடம் இருக்க வேண்டும் என, மாநகரம், நகரம், கிராமம் வாரியாக, நில அளவுகள் குறித்து, தமிழக அரசு நிபந்தனைகள் விதித்துள்ளது. இந்த நிபந்தனைகள் மற்றும் உள்கட்டமைப்புகள் குறித்து, 2004ல், தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
மாதம் ரூ.3,000 சம்பளத்தில் முழுநேர பணி அரசு பள்ளி துப்புரவு பணியாளர்கள் கொதிப்பு
அரசு பள்ளிகளில் பணி புரியும் துப்புரவு பணியாளர்கள், கால முறை ஊதியத்துக்கு மாற்றப்படாததால், நான்கு ஆண்டுகளாக, மாதம், 3,000 ரூபாய் சம்பளத்தில் பணிபுரிந்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், கடந்த, 2012ம் ஆண்டு, 3,000 துப்புரவு பணியாளர்கள், 2,000 இரவுக்காவலர்கள் நியமிக்கப்பட்டனர்.இரு பணியிடங்களுக்கும், அடிப்படை கல்வித்தகுதி, ௧௦ம் வகுப்பு என்ற நிலையில், இரவு காவலர் பணியிடங்களை கால முறை ஊதியத்திலும், துப்புரவு பணியாளர் பணியிடங்களை சிறப்பு கால முறை ஊதியத்திலும் நியமிக்கப்பட்டனர்.
4.23 லட்சம் அரசு ஊழியர் குடும்பங்களின் ஓட்டு யாருக்கு?
தமிழகத்தில், 2003 ஏப்., 1 முதல் பணியில் சேர்ந்த நான்-கு லட்-சத்து, 23 ஆயி-ரத்து, 441 அரசு ஊழியர், ஆசிரியர்கள், புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். ஊழியர்களிடம் வசூலித்த தொகை மற்றும் அர-சின் பங்கு தொகை என, 8,543 கோடி ரூபாயை ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்திடம், தமிழக அரசு செலுத்தவில்லை.
கடமை உணர்வுக்கு அளவே இல்லையா?
பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள், பிளஸ் 1 வகுப்பு இறுதி தேர்வு நடந்து வரும் நிலையில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டமான, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டம் கீழ், மாணவர்களுக்கு பாடம் நடத்துவது குறித்து, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கு பொதுத் தேர்வுகள் நடந்து வருகின்றன. தேர்வு அறை கண்காணிப்பு பணி; விடைத்தாள் திருத்தும் பணி; 'டிஸ்லெக்சியா ' எனப்படும் கற்றல் குறைபாடு உள்ள மாணவர் மற்றும் மாற்று திறனாளி மாணவர்களுக்கு உதவி செய்யும் பணி என, ஆசிரியர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீட்டு பணி: புறக்கணிக்கும் ஆசிரியர்களால் அவதி
விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு, ஆசிரியர்களை அனுப்ப மறுக்கும், தனியார் பள்ளிகளின் போக்கு, கல்வித்துறை அலுவலர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில், எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். இவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காக, மாவட்டங்களுக்கு, இரண்டு முதல், நான்கு மையம் வரை அமைக்கப்பட்டுள்ளது.இதில், மதிப்பீட்டு பணியை தாமதமின்றி முடிக்க, உதவி தேர்வு மதிப்பீட்டார் பணிக்கு, சுயநிதி மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், பணிபுரியும் தகுதி வாய்ந்த ஆசிரியர்களும் நியமிக்கப்படுகின்றனர். ஆனால், அதற்கான ஆணை பெற்றும், பல முகாம்களில் பங்கேற்காமல், பல்வேறு விளக்கங்களை அளித்து வருகின்றனர். இதற்கு தனியார் பள்ளி நிர்வாகமும் ஒத்துழைப்பது கல்வித்துறை அலுவலர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
பிளஸ் 2 தேர்வுகளில் சிந்திக்க வைக்கும் வினாக்கள்:மனப்பாடத்தை நம்பிய பள்ளிகள் தவிப்பு
பிளஸ் 2 பொதுத்தேர்வில், சிந்திக்கும் திறன் கொண்ட வினாக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால், மனப்பாட முறையில் மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்திருந்த தனியார் பள்ளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. தமிழகத்தில் இன்ஜினியரிங், மருத்துவம் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புக்கான நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதிலிருந்து, பிளஸ் 2 வகுப்பில் எடுக்கும் மதிப்பெண், மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது.
4.50 லட்சம் தபால் ஓட்டுகள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில், தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள, 4.50 லட்சம் ஊழியர்கள், தபால் ஓட்டு போட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதற்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:தமிழகத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், 3 லட்சம் பேர்; போலீசார், 75 ஆயிரம் பேர்; டிரைவர்கள், கிளீனர்கள், 75 ஆயிரம் பேர் என, மொத்தம், 4.50 லட்சம் பேர், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பழைய ஓய்வூதிய திட்டம்:'டேக்டோ' வலியுறுத்தல்
மதுரையில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் கூட்டமைப்பு (டேக்டோ) ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியதாஸ் கூறியதாவது:அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை மற்றும் 'டேக்டோ' சார்பில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள் ஏற்கப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் தொடர்வது குறித்து ஆராய, திட்டக்குழு துணைத்தலைவர் சாந்தா ஷீலா நாயர் தலைமையில் 5 பேர் குழு அமைக்கப்பட்டது.
பிளஸ் 2 தேர்வில் 'போனஸ்' மதிப்பெண் தேர்வுத்துறைக்கு ஆசிரியர்கள் கோரிக்கை
'பிளஸ் 2 வேதியியல் மற்றும் கணிதத் தேர்வுகளில், மதிப்பெண் வழங்குவதில் சலுகை அளிக்க வேண்டும்' என, தேர்வுத் துறைக்கு, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிளஸ் 2 பொதுத் தேர்வில், வேதியியல் தேர்வு, மாணவர்களுக்கு பெரும் சோதனையாக அமைந்தது. கடந்த, 10 ஆண்டுகளில் இல்லாத வகையில், இந்த ஆண்டு வினாத்தாள், மாணவர்களுக்கு பெரும் சவாலாக இருந்ததாக, ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
பிளஸ் 2 கணிதத் தேர்வு கடினம்: சேலம் மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை
தமிழகத்தில் நடந்து வரும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் கணிதத் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததால், முழு மதிப்பெண் பெற முடியாது என்ற விரக்தியில், சேலத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி ஒருவர், கணிதப் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற வேண்டும் என்ற லட்சியத்தோடு படித்து வந்தார்.
பிளஸ் 2 தேர்வு தாமதம்: தேர்வுப் பணியிலிருந்து தலைமை ஆசிரியர் நீக்கம்
பிளஸ் 2 தேர்வு தாமதமாகத் தொடங்கிய விவகாரத்தில், முதன்மைக் கண்காணிப்பாளரான தலைமை ஆசிரியரை தேர்வுப் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.விழுப்புரம் அருகே மாம்பழப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில், வெள்ளிக்கிழமை பிளஸ் 2 விலங்கியல், கணித பாட பொதுத் தேர்வு நடைபெற்றது. இதற்காக தேர்வு மையத்துக்கு காலை 9 மணிக்கே வர வேண்டிய தேர்வு அறை கண்காணிப்பாளர்களான ஆசிரியர்கள் 17 பேரும் வராததால், தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
ஆசிரியர்கள் நாள்தோறும் தம்மைப் புதுப்பித்துக்கொள்ளும் திறன் படைத்தவர்களாக இருக்க வேண்டும்
ஆசிரியர் என்பவர் நாள்தோறும் தம்மைப் புதுப்பித்துக்கொள்ளும் திறன் படைத்தவர்களாகவும், தமக்குத் தாமே உந்துதலைக் கொடுத்து முன்னேற்றத்தை அறிவார்ந்த தளத்திலும், ஒழுக்க நிலையிலும் முன்மாதிரியாக விளங்குதல் அவசியம் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி கூறினார்.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமையத்திற்குட்பட்ட 11 தொடக்க மற்றும் 5 உயர் தொடக்க நிலை மையங்களில் 680 ஆசிரியர்களுக்கு சனிக்கிழமை குழந்தைகளின் கற்றல் அடைவு குறித்த கலந்துரையாடல் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமையத்திற்குட்பட்ட 11 தொடக்க மற்றும் 5 உயர் தொடக்க நிலை மையங்களில் 680 ஆசிரியர்களுக்கு சனிக்கிழமை குழந்தைகளின் கற்றல் அடைவு குறித்த கலந்துரையாடல் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது.
உயர்கல்வி செயலருக்கு வலுக்கும் எதிர்ப்பு
சென்னை பல்கலையின் ஒருங்கிணைப்பு குழுவில், ஒரு பதவிக்கு, இரண்டு பேரை தமிழக அரசு பரிந்துரைத்துள்ளதால், இடியாப்ப சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, உயர்கல்வி செயலருக்கு எதிராக, போர்க்கொடி துாக்கியுள்ள பேராசிரியர் மற்றும் பணியாளர் குழுவினர், இன்று கவர்னரை சந்திக்க உள்ளனர். சென்னை பல்கலை துணைவேந்தர் தாண்டவன், ஜனவரியில் ஓய்வு பெற்றார். புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை, தற்காலிக நிர்வாககுழு அமைக்கப்பட்டுள்ளது.
Saturday, March 19, 2016
வருங்கால வைப்பு நிதி, கிசான் விகாஸ் பத்திரம் உள்ளிட்ட சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி குறைப்பு: ஏப்ரல் 1 முதல் அமல்
சாதாரண, நடுத்தர குடும்பங்களை பாதிக்கக் கூடிய வகையில், பி.எப்., எனப்படும் வருங்கால வைப்பு நிதி, கிசான் விகாஸ் பத்திரம் உள்ளிட்ட சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டு உள்ளது.சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம், ஒவ்வொரு காலாண்டுக்கும் மாற்றியமைக்கப்படும் என, மத்திய அரசு, பிப்., 16ம் தேதி அறிவித்தது.
விலங்கியலில் தேர்ச்சி எளிது: 'சென்டம்' கடினம்:ஆசிரியர்கள் வருத்தம்
"பிளஸ் 2 விலங்கியல் தேர்வு எளிதாகவும், அதிக எண்ணிக்கையில் 'சென்டம்' எடுக்க முடியாத வகையில் வினாக்கள் இடம் பெற்றுள்ளன," என ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.இத்தேர்வு குறித்து ஆசிரியைகள் மெர்லின் (திருமங்கலம் பி.கே.என்., பள்ளி), ஜீவா (பேரையூர் அரசு பள்ளி) ஆகியோர் கூறியதாவது:ஒரு மதிப்பெண் பகுதியில் கேட்கப்பட்ட 30 வினாக்களும் எளிது. மூன்று மதிப்பெண் பகுதியில் 20ல் 15 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும்.
தேசிய விருதுக்குவிண்ணப்பம் வரவேற்பு
சிறந்த கைவினைஞர்களுக்கான, 2015ம் ஆண்டின் தேசிய விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மத்திய அரசின் கைவினை மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கைத்தறி, கைத்திறன் துறையில், 40 சிறந்த கைவினைஞர்களுக்கு தேசிய விருதுகளும்; துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு, 40 தேசிய சான்றிதழ்களும் மத்திய அரசால் வழங்கப்படுகின்றன. ஓய்வூதியம்விருது மற்றும் சான்றிதழ் பெறுபவர்களுக்கு, 60 வயதிற்கு மேல், மாதம், 3,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும். கைவினை மேம்பாட்டு ஆணையர் அலுவலகம் ஏற்பாடு செய்யும் சந்தை சார்ந்த விழாக்களுக்கு, ரயிலில் பயணம் செய்ய, 20 ஆயிரம் ரூபாய் வரை உதவித் தொகை வழங்கப்படும்.
பிளஸ் 2 கணிதத்தில் 'சென்டம்' எடுப்பது எளிது:மாணவர்கள் உறுதி
பிளஸ் 2 கணிதத்தேர்வு நேற்று நடந்தது. இதில் 200க்கு 200 எடுப்பது எளிதென ராமநாதபுரம் மாவட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.மாணவர்கள் கூறியதாவது:வி.பாலசந்திரன், டி.டி.விநாயகர் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்: பகுதி 1ல் முதல் 40 ஒரு மதிப்பெண் வினாக்களில் 26வது கேள்விக்கு மட்டும் பதில் அளிப்பதில் குழப்பம் இருந்தது. புத்தகத்தின் உள்ளிருந்தும், பெற்றோர் ஆசிரியர் சங்கம் வெளியிட்ட வினா வங்கியில் இருந்தும் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. 6 மற்றும் 10 மதிப்பெண் வினாக்களில் கட்டாய வினாக்கள் முதல் தொகுதியில் இருந்து கேட்கப்பட்டிருந்தன. 200க்கு 200 எளிது.
திண்டுக்கல்லில் அங்கீகாரம் இல்லாத பத்து செவிலியர் பள்ளிகளுக்கு தடை: மாணவர்களுக்கு எச்சரிக்கை
திண்டுக்கல்லில் 10 அங்கீகாரம் பெறாத செவிலியர் பயிற்சி பள்ளிகள் இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றில் மாணவர்களை சேர்க்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல்லில் அங்கீகாரம் பெறாத பல செவிலியர் பயிற்சி பள்ளிகள் இயங்குவதாகவும், இதில் பயின்ற மாணவர்கள் வேலைக்கு செல்லும் போது புறக்கணிப்படுவதாகவும், தனியார் மருத்துவமனைகளிலும் இவர்களை வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை என்றும்சென்னை மருத்துவ இயக்குனரகத்திற்கு புகார்கள் சென்றன.இதையடுத்து மருத்துவ இணை இயக்குனர் ரவிக்கலா, திண்டுக்கல் நகரில் திடீர் சோதனை நடத்தினார். இதில் அங்கீகாரம் இல்லாத 10 செவிலியர் பயிற்சி பள்ளிகள் சிக்கின.
'கீ ஆன்சர்' தயாரிப்பில் மதுரை ஆசிரியர்கள் குழு
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில், அதிக பாடங்களுக்கு 'கீ ஆன்சர்' தயாரிக்கும் குழுவில் மதுரை ஆசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர்.இந்தாண்டு பிளஸ் 2 தேர்வு முடிவதற்குள் பத்தாம் வகுப்பு தேர்வும் துவங்கி விட்டன. மொழிப் பாட தேர்வுகள் முடிந்த பின், விடைத்தாள் திருத்தும் பணிகளும் அடுத்தடுத்து துவங்கின.பத்தாம் வகுப்பில் தமிழ் முதல் மற்றும் இரண்டாம் தாள் 'கீ ஆன்சர்' தயாரிப்பில், மதுரை ஆசிரியர் குழு ஏற்கனவே இடம் பெற்றது. தற்போது பிளஸ் 2 தேர்வுகளுக்கான 'கீ ஆன்சர்' தயாரிக்க, புவியியல், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல் ஆகிய பாடங்களுக்கு, மதுரை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பிளஸ் 2 புவியியலில் 'சென்டம்' கஷ்டம்
பிளஸ் 2 புவியியல் தேர்வில், பாடத்தில் இல்லாத வினா மற்றும் பாடத்திற்கு உள்ளே 'துளைத்து... துளைத்து' கேட்கப்பட்ட வினாக்களாலும் மாணவர்கள் 'சென்டம்' பெறு வது கேள்விக்குறியாகி உள்ளது. இதுகுறித்து புவியியல் பாட ஆசிரியர்கள் கூறியதாவது:எந்த ஆண்டும் இல்லாத வகையில் ஒரு மதிப்பெண், ஐந்து மதிப்பெண் 'பொருத்துக' பகுதிகளில் மாணவர்களை குழப்பும் வகையில் வினாக்கள் இடம் பெற்றன. 'சரியான வாக்கியத்தை தேர்வு செய்து எழுதுக' பகுதியில் இடம் பெற்ற 41, 42வது வினாக்கள் ஒன்று மற்றும் இரண்டாம் பாடங்களில் ஏதோ ஒரு மூலையில் உள்ள 'பாராகிராபில்' ஒரு வரியை கேட்டுள்ளனர். பாடத்தில் இல்லாத வினா மேலும் 47வது வினா 'இன்சாட்- இந்திய செயற்கைகோள் வானிலை பற்றிய தகவல்களை தருகின்றன' என இடம் பெற்றுள்ளது. 'இன்சாட்' தொடர்பான தகவல், தமிழ்வழி பாடப் புத்தகத்தில் இல்லை. ஆனால் ஆங்கிலவழி பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதனால் தமிழ்வழி மாணவர்கள் சிரமப்பட்டனர்.
Friday, March 18, 2016
தொடக்க கல்வி அலுவலகத்தில் பள்ளி ஆசிரியர்கள் முற்றுகை
ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேறாததால் வேடசந்தூர் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தை ஆசிரியர்கள் முற்றுகையிட்டனர். தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், ஊதிய முரண்பாடுகளை களைய கோரியும், கோவிலூர் பள்ளி ஆசிரியர் செந்தில்குமாரின் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப் படுத்த கோரியும், மாவட்ட அளவிலான காத்திருப்பு போராட்டம் மார்ச் 9ல் திண்டுக்கல்லில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
விடைத்தாள் திருத்தும் மையங்களில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் ஆசிரியர்கள் வலியுறுத்தல்
பிளஸ் ௨ விடைத்தாள் திருத்தும் மையங்களில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது. மதுரையில் மாவட்டத் தலைவர் சரவணமுருகன் தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில், பிளஸ் ௨ விடைத்தாள் திருத்தும் மையங்களில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்,
சி.பி.எஸ்.இ. 12–ம் வகுப்பு தேர்வு: கணக்கு வினாத்தாள், வாட்ஸ் அப்பில் வெளியானது குறித்து விசாரணை மத்திய அரசு முடிவு.
சி.பி.எஸ்.இ. 12–ம் வகுப்பு தேர்வுக்கான கணக்கு வினாத்தாள், வாட்ஸ்அப்பில் வெளியான விவகாரம் குறித்துவிசாரணை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மிகவும் கடினம்சி.பி.எஸ்.இ. 12–ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு மண்டலங்களில் இருந்து லட்சக்கணக்கான மாணவ–மாணவிகள் இத்தேர்வை எழுதி வருகின்றனர்.
தனியார் பள்ளியில், மாணவர்கள் தேர்வு எழுத உதவிய ஆசிரியர்கள்: கூண்டோடு இடமாற்றம்
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10–ம் வகுப்பு தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அங்கு கண்காணிப்பாளராக இருந்த ஆசிரியர் விடைகளை கூறியுள்ளார். இதேபோன்று பிளஸ்–2 வேதியியல் தேர்விலும் சில மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உதவியுள்ளனர். இதுகுறித்து சென்னையில் உள்ள தேர்வுத்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிந்தது.
போனஸ் மதிப்பெண் உண்டா?10ம் வகுப்பு தமிழ் 2ம் தாளில் பிழை
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ், இரண்டாம் தாளில் பிழையாகவும், பாடத்திட்டத்துக்கு வெளியில் இருந்தும் கேள்விகள் இடம் பெற்றதால், போனஸ் மதிப்பெண் வழங்கும்படி கோரிக்கை எழுந்துள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழ், இரண்டாம் தாளுக்கு, நேற்று முன்தினம் தேர்வு நடந்தது. மொத்தம், 100 மதிப்பெண்களுக்கு, 41 கேள்விகள் இடம் பெற்று இருந்தன.
தில்லி நீதிமன்றம் தடை எதிரொலி: மீண்டும் விற்பனைக்கு வருகிறது `விக்ஸ் ஆக்ஷன் 500'
சில குறிப்பிட்ட கலப்புகளை கொண்ட மருந்துகளை தடை செய்து மத்திய அரசு வெளியிட்ட உத்தரவுக்கு, தில்லி உயர் நீதிமன்றம் தடை விதித்ததைத் தொடர்ந்து 'விக்ஸ் ஆக்ஷன் 500' உள்ளிட்ட பிரபலமான மாத்திரைகள் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளன.
Thursday, March 17, 2016
900 ஆசிரியர்களுக்கு சம்பளத்தில் சிக்கல்!
கடந்த, 2012-13ம் ஆண்டில், தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, தொடர் நீட்டிப்பு ஆணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக, சம்பளம் கிடைக்காமல் அவதிப்பட்ட பிரச்சனைக்கு, தீர்வு காணப்பட்டுள்ளது.
'மட்டம்’ போடும் ஆசிரியர்களால் அரசுக்கு இழப்பு!
கல்வித் துறையில் உள்ள பல்வேறு ஊழல்களால், கல்வித் தரம் பாதிக்கப்படுவதுடன், மக்களின் வரிப்பணமும் வீணடிக்கப்படுகிறது. இந்தியாவில், 25 சதவீத ஆசிரியர்கள் வகுப்புகள் எடுக்காமல், மட்டம் போடுவதால், ஆண்டுக்கு, 14 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
4 தேர்வுகள் முடிந்த நிலையில் 3 மாணவர்களுக்கு ஹால் டிக்கெட்?
தஞ்சையில், பிளஸ் 2 தேர்வு தொடங்கி நான்கு தேர்வுகள் முடிந்த நிலையில், அவசர கதியில், மூன்று மாணவர்களுக்கு, அரசு பள்ளி ஹால் டிக்கெட் வழங்கியுள்ளது. நுாறு சதவீதம் தேர்ச்சிக்காக நடத்திய நாடகம் அம்பலமானதால் ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2வில், மொத்தம், 407 மாணவர்கள் படித்து வந்தனர்.
எழுத படிக்க தெரியாத பட்டதாரிகளை உருவாக்கும் பல்கலை கழகங்கள்
தமிழக பல்கலைகளில், தகுதியற்ற பட்டங்கள் வழங்கி, எழுத, படிக்க தெரியாத பட்டதாரிகள் உருவாக்கப்படுகின்றனர். தகுதியற்றவர்கள், துணைவேந்தர் மற்றும் பேராசிரியர்கள் ஆகின்றனர். இதற்கு, ஊழல் மலிந்த உயர்கல்வித்துறையே காரணம். பல்கலைகளும், கல்லுாரிகளும் பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி.,யின் விதிமுறைகளின் படியே செயல்பட்டு, பட்டதாரிகளை உருவாக்க வேண்டும். ஆனால், சில ஆண்டுகளாக, யு.ஜி.சி., விதிகளை துச்சம் என துாக்கி வீசி விட்டு, பல்கலைகளும், கல்லுாரிகளும் செயல்படுகின்றன.
மாணவர்களுக்கு பணி ஆணை வழங்கல்
பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் மூலமாக நடத்தப்பட்ட வளாகத்தேர்வில், நேர்காணலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆத்தூர் மாருதி மற்றும் ஸ்ரீ ஜெய மாருதி பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியருக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது.
பழைய ஓய்வூதிய திட்டம் வல்லுனர் குழு அமைப்பு
தமிழகத்தில், 2003 ஏப்., 1 முதல், அரசுப் பணியில் சேர்ந்துள்ள, அரசு அலுவலர்களிடம் இருந்து, பிடித்தம் செய்யப்பட்ட, ஓய்வூதிய பங்களிப்புத் தொகையும், அரசின் பங்களிப்புத் தொகையும், அவற்றுக்கான வட்டித் தொகையும், அரசு கணக்கில் தனியே வைக்கப்பட்டுள்ளன.
பிளஸ்-2 விடைத்தாள் திருத்தம் ஏப்.20க்குள் முடிக்க திட்டம்
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை ஏப்.,20க்குள் முடிக்க தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 82 ஆயிரத்து 44 மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு எழுதி வருகின்றனர். தமிழ், ஆங்கிலம்,வேதியியல் தேர்வுகள் முடிந்தன.
ஆசிரியர்களுக்கு நெருக்கடி அதிகரிப்பு: ஆசிரியர் கூட்டணி கண்டனம்
அரசு பள்ளிகளில் பணிசெய்யும் தலைமையாசிரியர்களை கல்வித்துறை அலுவலகப் பணியில் ஈடுபடுத்துவதை கைவிட வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. அமைப்பின் மாநிலச் செயலர் சோ. முருகேசன், மாவட்டச் செயலர் செ. பால்ராஜ், தலைவர் பி.ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள் கல்வித்துறை அதிகாரிகளை சந்தித்து அளித்த மனு:
அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியரல்லாத பணியிடங்கள்: தனியார் முகமை மூலம் நிரப்பக் கூறும் அரசாணைகள் ரத்து
அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியரல்லாத காலிப் பணியிடங்களை தனியார் முகமை (அவுட்சோர்சிங்) மூலம் நிரப்ப வகை செய்யும் இரண்டு அரசாணைகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசு உதவி பெறும் உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக, கடந்த 2007 மே 30, 2010 ஜூலை 23 ஆகிய தேதிகளில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் இரண்டு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன.
எஸ்எஸ்எல்சி தேர்வில் முறைகேடு: 32 மாணவர்கள் பிடிபட்டனர்
தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 32 மாணவர்கள் பிடிபட்டனர். தமிழகம் மற்றும் புதுவையில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மொழிப் பாடம் 2-ஆம் தாள் தேர்வு புதன்கிழமை (மார்ச் 16-ஆம் தேதி) நடைபெற்றது.
பிளஸ் 2 வேதியியல் வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகவில்லை: பள்ளிக் கல்வித் துறை மறுப்பு
பிளஸ் 2 வேதியியல் வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகவில்லையென பள்ளிக் கல்வித்துறை மறுப்புத் தெரிவித்துள்ளது. இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
Wednesday, March 16, 2016
மூன்று 'ஆப்ஸ்'களுக்கு ராணுவம் தடை
மூன்று மொபைல் போன் 'ஆப்ஸ்'களை பயன்படுத்த நமது ராணுவம் தடை விதித்துள்ளது. பாக். உளவு பார்ப்பதாக எழுந்த புகாரை அடுத்து இந்த ஆப்ஸ்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கூகுள் பிளே ஸ்டோர் மூலம் வீசாட், ஸ்மெஷ், லைன் ஆகிய 'ஆப்ஸ்'கள் பெருமளவு பதிவிறக்கம் செய்யப்படுகின்றன. இதில் ஸ்மெஷ் என்ற ஆப்ஸ் 'வாயிலாக பாகிஸ்தான் ராணுவம் நமது ராணுவத்தினரை உளவு பார்ப்பதாக சமீபத்தில் புகார் கிளம்பியது. இதையடுத்து கூகுள் வலைதளம் தனது பிளே ஸ்டோரில் இருந்த அதனை நீக்கியது.
Latest 7th Pay Commission News – 75% of implementation cost budgeted, Provision to be made for 7th PC Pay Arrears from Jan'16
Prime Minister Mr. Narendra Modi’s government has budgeted to meet nearly three-fourths of the estimated cost of the 7th Pay Commission report in 2016-17 with a provision of some Rs 53,500 crore, as it deferred the payment of extra allowances of about Rs 22,000 crore.
பள்ளிக்கூடங்களில் துப்புரவாளர் உள்ளிட்ட பணியிடங்களை தனியார் முகமை மூலம் நிரப்புவது குறித்த அரசாணைகள் ரத்து ஐகோர்ட்டு உத்தரவு
அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் துப்புரவாளர், பெருக்குபவர், காவலர் உள்ளிட்ட பணியிடங்களை தனியார் முகமை மூலம் நிரப்பவேண்டும் என்ற தமிழக அரசின் அரசாணைகளை ஐகோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
பி.இ. கலந்தாய்வு: ஏப்ரலில் விண்ணப்ப விநியோகம்?
சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, பி.இ. கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகத்தை முன்கூட்டியே ஏப்ரலில் தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகம் 2014-இல் மே 3-ஆம் தேதியும், 2015-இல் மே 6-ஆம் தேதியும் தொடங்கியது.இந்த நிலையில், சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு மே 16-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 19-ஆம் தேதியும் நடைபெற உள்ளன.
10ம் வகுப்பு தமிழ் தேர்வில் திருக்குறள் புறக்கணிப்பு
பத்தாம் வகுப்பு தமிழ் தேர்வின் முதல் நாளான, நேற்று வினாத்தாள் எளிமையாக இருந்தது. ஆனால், 'ப்ளூ பிரின்ட்' படி கேட்க வேண்டிய திருக்குறள் கேள்வி இடம் பெறவில்லை. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. இதை, 10.72 லட்சம் பேர் எழுதினர். முதல் நாளான நேற்று, வினாத்தாள் மிக எளிமையாகவே இருந்தது. நன்றாக படிக்கும் திறனுள்ள மாணவர்கள், 100 மதிப்பெண் பெற முடியும் என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
எஸ்.ஆர்.எம். பொறியியல் நுழைவுத் தேர்வு: மார்ச் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வுக்கு (எஸ்.ஆர்.எம்.ஜே.இ.இ.இ.) விண்ணப்பிக்கும் தேதி மார்ச் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 150 நகரங்களில் ஏப்ரல் 19 முதல் 25-ஆம் தேதி வரை இணையவழியில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.பிளஸ் 2 தேர்வு நடைபெற்று வருவதாலும் மாணவர், பெற்றோர் வலியுறுத்தியதாலும் இந்தத் தேர்வுக்கான விண்ணப்ப நாள் மார்ச் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எளிது எளிது தமிழ் முதல்தாள் எளிது! 10ம் வகுப்பு மாணவர்கள் 'குஷி'
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வில் நேற்று தமிழ் முதல்தாள் தேர்வு நடந்தது. முதல் தேர்வே முத்தான தேர்வாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். மதுரையை சேர்ந்த மாணவர்கள் கூறியதாவது:
ஏழாண்டுக்கு முந்தைய டி.டி.,திருப்பி அனுப்பிய டி.இ.ஓ.,
தனியார் பள்ளிகள் அளித்த வங்கி வரைவோலையை, ஏழு ஆண்டுகள் கழித்து திருப்பி அனுப்பிய கல்வித்துறை, ரொக்கமாக கட்ட உத்தரவிட்டுள்ளது. சென்னையில், 500க்கும் மேற்பட்ட, அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளின் ஆசிரியர் நியமனம், அங்கீகாரம் புதுப்பிப்பு, உட்கட்டமைப்பு வசதி ஆய்வு செய்தல், புதிய பாடப்பிரிவுகள் துவங்க அனுமதி போன்ற பல பணிகளுக்கு, மாவட்ட கல்வி அலுவலகங்கள் தான் அதிகார மையங்களாக உள்ளன.
பிளஸ்–2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது ஏப்ரல் 20–ந் தேதிக்குள் முடிக்க திட்டம்
பிளஸ்–2 விடைத்தாள் திருத்தும் பணி நேற்று தொடங்கியது. ஏப்ரல் 20–ந்தேதிக்குள் திருத்தி முடிக்க அரசு தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.விடைத்தாள் திருத்தும் பணி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்–2 தேர்வு கடந்த 4–ந்தேதி தொடங்கியது. இந்த தேர்வை 8 லட்சத்து 82 ஆயிரத்து 44 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதி வருகிறார்கள். தமிழ், ஆங்கிலம், வேதியியல் ஆகிய தேர்வுகள் முடிந்து விட்டன.
Tuesday, March 15, 2016
7ம் வகுப்பு மாணவன் பலி; சக மாணவன் தள்ளியதால் விபரீதம்
வகுப்பறையில் சக மாணவன் தள்ளியதில், கீழே விழுந்த மாணவன், சிகிச்சை பலனின்றி இறந்தார். விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அடுத்த பூண்டி கிராமத்தை சேர்ந்தவர், அன்பரசு மகன் பாலமுருகன், 12; அம்மையகரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், 7ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை, 10:30 மணிக்கு, பள்ளியில் இரண்டாம் பாடவேளை ஆசிரியர் வருவதற்குள், பாலமுருகன், சக மாணவரை மற்றொரு மாணவன் மீது தள்ளி விட்டுள்ளார்.
அறிவியல் ஆய்வகம் இல்லாத பள்ளி; கணக்கெடுக்க உத்தரவு
அரசு பள்ளிகளில், அறிவியல் ஆய்வகத்துக்கு கட்டடம் இல்லா பள்ளிகள் கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், 5,000க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், மேல்நிலைப்பள்ளிகளில் மட்டுமே, அறிவியல் ஆய்வகத்துக்கு கட்டடங்கள் இருந்தன. சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்திய பின், 10ம் வகுப்பிலும், அறிவியல் செய்முறைகள் அமல்படுத்தப்பட்டதால், உயர்நிலை பள்ளிகளுக்கும் அறிவியல் ஆய்வகம் அமைக்க வேண்டியது அவசியமானது.
தனியார் கல்லூரிகளைக் கண்காணிக்க இணையதளம்
தனியார் கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை கண்காணிப்பதற்கு இணையதளம் ஒன்றை மத்திய அரசு துவங்கியுள்ளது என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி லோக்சபாவில் தெரிவித்தார்.
லோக்சபாவில் நடந்த விவாதத்தில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியதாவது: தனியார் கல்லூரிகளின் தரத்தை உறுதி செய்வதற்காக, கல்லூரிகளின் நிர்வாகத்தினரிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. தனியார் கல்லூரிகளில் தொடர்ச்சியாக ஆய்வும் நடத்தப்பட்டு வருகிறது.
கன்னையா மற்றும் 4 பேரை ஜேஎன்யுவிலிருந்து வெளியேற்ற பரிந்துரை
டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக எழுந்த சர்ச்சை குறித்து விசாரித்த பல்கலை உயர்மட்ட குழு, கன்னையா குமார் மற்றும் 4 பேரை பல்கலையை விட்டு வெளியேற்ற பரிந்துரை செய்துள்ளது.
128 குழந்தைகளுக்கு உயிர் கொடுத்த ராகவா லாரன்ஸ்
சென்னையில் பிரம்மாண்ட ராகவேந்திரர் கோயிலை கட்டியுள்ள நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ், ராகவேந்திரா அறக்கட்டளை சார்பில், ஏழை எளியோர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.
மாற்றுத் திறனாளிகளுக்கு மற்றும் முதியோர்களுக்காக இல்லம் நடத்தி வரும் லாரன்ஸ், மாற்றுத் திறனாளிகளுக்கு நடன பயிற்சியும் கொடுத்து,அவர்களை கலைஞர்களாகவும் உயர்த்தும் பணியை தொடர்ந்து செய்து வருகிறார்.
விக்ஸ் ஆக்சன் -500 எக்ஸ்ட்ரா மருந்து நிறுத்தம்
பக்க விளைவுகளை ஏற்படுத்தும் இருமல் , வலி நிவாரணி , ஆன்டிபயாட்டிக் மருந்துகள் உள்ளிட்ட 344 மருந்துகளுக்கு மத்திய அரசு கடந்த வாரம் தடை விதித்து உத்தரவிட்டது. இது தொடர்பாக மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
7th Pay Commission’s suggestions on NPS
7th CPC observes that Government employees who have joined service between 2004 and 2011 have suffered due to delay in investment in market though they contributed properly. Summary of suggestions of 7th Pay Commission relating to NPS.
A study of upwared revision of contributions by employees in NPS required
There should be no delay in investment of contributions made by employee as certain states are yet to release the contribution made by AIS officers to NPS account.
PFRDA should take steps to make the Tier-II accounts operational as early as possible to enable the NPS subscribers the facility of withdrawals from their accounts in case of requirement.
எஸ்.எஸ்.எல்.சி.விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 1ந்தேதி முதல் ஏப்ரல் 25–ந்தேதி வரை நடைபெறவுள்ளது
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வு ஏப்ரல் 13–ந்தேதி வரை நடக்கிறது. விடைத்தாள் திருத்தும் பணி 79 மையங்களில் ஏப்ரல் 1–ந்தேதி முதல் ஏப்ரல் 25–ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் தவறாக மதிப்பீடு செய்வதால் தான் மறுமதிப்பீட்டில் அதிக மதிப்பெண் வித்தியாசம் வருகிறது.
பிளஸ்–2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது ஏப்ரல் 20–ந் தேதிக்குள் முடிக்க திட்டம்
பிளஸ்–2 விடைத்தாள் திருத்தும் பணி நேற்று தொடங்கியது. ஏப்ரல் 20–ந்தேதிக்குள் திருத்தி முடிக்க அரசு தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்–2 தேர்வு கடந்த 4–ந்தேதி தொடங்கியது. இந்த தேர்வை 8 லட்சத்து 82 ஆயிரத்து 44 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதி வருகிறார்கள். தமிழ், ஆங்கிலம், வேதியியல் ஆகிய தேர்வுகள் முடிந்து விட்டன. அரசு தேர்வுகள் துறை திட்டமிட்டபடி தமிழ் மற்றும் ஆங்கில விடைத்தாள்களை திருத்தும் பணி நேற்று தொடங்கியது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்பு
12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே முதல் வாரத்தில் வெளியிடப்படும் என அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்று வரும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று முதல் தொடங்கியது. தமிழகம் முழுவதும் 74 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடப்பதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
வங்கிகளுக்கு நான்கு நாட்கள் தொடர் விடுமுறை: ஏடி.எம் சேவை முடங்கும் அபாயம்
வரும் மார்ச் 24 ஆம் தேதி முதல் வங்கிகளுக்கு தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை வருவதால், பண பரிவர்த்தனை மற்றும் ஏடிஎம் சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வரும் மார்ச் 24 ஹோலி பண்டிகை, மார்ச் 25 புனித வெள்ளி, மார்ச் 26 சனிக்கிழமை விடுமுறை, மார்ச் 27 ஞாயிற்றுகிழமையும் சேர்த்து வங்கிகளுக்கு நான்கு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நான்கு
நாள் தொடர் விடுமுறையால் வர்த்தக பணபரிமாற்றம் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். மேலும் நாட்டில் உள்ள பெரும்பாலான ஏ.டி.எம்.களில் பணத் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனால், பொதுமக்கள், வணிகர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
10ம் வகுப்பு பொது தேர்வு இன்று துவக்கம்:முறைகேடுகளை தடுக்க பறக்கும் படை தயார்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, இன்று துவங்குகிறது. முறைகேடுகளைத் தடுக்க, 7,000 பேர் அடங்கிய பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி., எனப்படும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று துவங்குகிறது. காலை, 9:15 மணி முதல், 12:00 மணி வரை தேர்வு நடக்கும். முறைகேடுகள் நடக்காமல் தடுக்க, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
தேர்வுத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி:பிளஸ் 2 வேதியியல் தேர்வில் வினாத்தாள் 'லீக்?'
பிளஸ் 2 வேதியியல் தேர்வில், திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னையை ஒட்டிய பகுதிகளில் உள்ள, சில தனியார் பள்ளிகளுக்கு மட்டும் வினாத்தாள், 'லீக்' ஆகியுள்ளது. இதனால், வேதியியலுக்கு மறு தேர்வு நடத்தப்படுமா என, மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
'குரூப் - 2 ஏ' பதவிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு
அரசு துறையில், 'குரூப் - 2 ஏ' பிரிவு பணிகளுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யால், மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சிகிச்சை! மருத்துவ கல்வி முறையில் உள்ள பிரச்னைகளுக்கு... தேசிய அளவில் நுழைவுத்தேர்வு, திறனறி தேர்வு நடத்த திட்டம்
மருத்துவக் கல்வியை மேம்படுத்தவும், மருத்துவ, 'சீட்'டை பணம் கொடுத்து விலைக்கு வாங்குவதை தடுக்கவும், நாடு முழுவதுக்கும் ஒரே மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்தவும்; மருத்துவ பட்டப்படிப்பை முடிப்பவர்களுக்கு திறனறி தேர்வு நடத்தவும்மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
10ம் வகுப்பு பொது தேர்வு இன்று துவக்கம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, இன்று துவங்குகிறது. முறைகேடுகளைத் தடுக்க, 7,000 பேர் அடங்கிய பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. காலை, 9:15 மணி முதல், 12:00 மணி வரை தேர்வு நடக்கும். கடந்த ஆண்டு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் ஏராளமானோர், 'சென்டம்' எடுத்தனர்.
அரசு வாய்மொழி உத்தரவு:பொதுமக்கள் புகார் மீது உடனுக்குடன் நடவடிக்கை
பொதுமக்கள் புகார் செய்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அரசு ஊழியர்களுக்கு, வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அதனால், அரசு அலுவலகங்களுக்கு, அரசியல்வாதிகள், மக்கள் பிரதிநிதிகளின் வருகை பெரிதும் குறைந்துள்ளது.
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழி பாடத்துக்கு விலக்கு
தமிழகத்தில், இன்று துவங்கும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், வேறு மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள், தமிழ் மொழி பாடம் எழுத விலக்கு அளித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் அல்லாத மொழியை, தாய்மொழியாகக் கொண்டவர்கள், பிளஸ் 2 தேர்வில், தமிழ் மொழி பாடம் எழுத விலக்கு அளித்து, சமீபத்தில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிளஸ் 2 வேதியியல் தேர்வு கடினம்:மாணவர்கள் திணறல்
நேற்று நடந்த பிளஸ் 2 வேதியியல் தேர்வு கடினமாக இருந்தது என்றும் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெறுபவர்களின் எண்ணிக்கை இந்தாண்டு கணிசமாக குறையும் என்றும் மாணவர்கள் தெரிவித்தனர்.தேனி மாவட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்களின் கருத்து:நிவேதா லட்சுமி (தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, தேனி): வேதியியல் பாடத்தில் 3, 5 மற்றும் 10 மதிப்பெண் வினாக்கள் எதிர்பார்த்தபடி கேட்கப்பட்டிருந்தது. பெரும்பாலான வினாக்கள் புத்தகம், 'புளூபிரின்ட்' அடிப்படையில் கேட்கப் பட்டிருந்ததால் பல வினாக்களுக்கு எளிமையாக பதில் அளிக்க முடிந்தது.
பிளஸ் 2 தேர்வு முறைகேடு: 34 பேர் சிக்கினர்
பிளஸ் 2 பொதுத் தேர்வில், வேதியியல் மற்றும் கணித பதிவியல் பாடங்களுக்கு, நேற்று தேர்வு நடந்தது. வேதியியல் பாடம் மிக சிக்கலாகவும், கணித பதிவியல் தேர்வு எளிமையாகவும் இருந்தது. தமிழகம் முழுவதும், 16 பேர், வேதியியலிலும்; 18 பேர், கணித பதிவியல் பாடத்திலும் முறைகேடு புகாரில் பிடிபட்டனர். அதிகபட்சமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும், ஒரு பள்ளி மாணவரும், 16 தனித்தேர்வர்களும் பிடிபட்டனர்.
Monday, March 14, 2016
மாற்றுத்திறன் மாணவியருக்கு உதவித்தொகை!
அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தில், 367 மாற்றுத்திறன் மாணவியருக்கு, தலா, 2,000 ரூபாய் வீதம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தில், மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த திட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாற்றுத்திறன் மாணவியர்களுக்கு, உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாதத்துக்கு 200 வீதம், ஒரு கல்வியாண்டில், பத்து மாதத்துக்கு, 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
கணித திறனறிதல் தேர்வு; மாணவர்கள் சிறப்பிடம்
தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் சார்பில் நடந்த, கணித திறனறிதல் தேர்வில் உடுமலை கலிலியோ அறிவியல் கழக மாணவர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
பாதி பாடங்கள் கூட நடத்தப்படவில்லை; மாணவர்கள் அவதி
ஒன்பதாம் வகுப்பு வரையில், மூன்றாம் பருவத்துக்கான பாடங்களில், பாதிக்கூட நடத்தாத நிலையில், ஆசிரியர்கள் தேர்வு பணியில் தீவிரமாகிவிட்டனர். பாடங்கள் நடத்தப்படாமலேயே, தேர்வெழுத வேண்டிய கட்டாயத்துக்கு மாணவர்கள் உள்ளனர்.
விடைத்தாள் திருத்தும் மையங்களில் வசதி; ஆசிரியர்கள் வலியுறுத்தல்
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.
பின்தங்கிய பள்ளியில் ஆய்வு நடத்த உத்தரவு
கல்வி தரத்தில் பின்தங்கிய துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், கல்வித்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
மருத்துவ நுழைவு தேர்வில் ’0’; தமிழக கல்வி துறையின் அவலம்
நிறைய எதிர்வினைகள்; குறிப்பாக, பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் அயல்நாடுகளில் இருக்கும் தமிழர்களிடம் இருந்து.
வருத்தங்கள், கோபங்கள், ஆதங்கங்களைப் பகிர்ந்து கொண்ட மின்னஞ்சல்களுக்கு மத்தியில், கோவை ஆனைமலையில் இருந்து வந்த குரு என்பவரின் மின்னஞ்சல், மிக முக்கியமான தகவல்களை தாங்கி வந்திருந்தது.
Subscribe to:
Posts (Atom)