ஆசிரியர் பணி மாறுதல் பொது கலந்தாய்வை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது. கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொதுக்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வட்ட தலைவர் சக்திவேல், மாநில துணை தலைவர் தருமன், முன்னாள் மாநில துணைத் தலைவர் சென்னப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
2016-2017-ஆம் கல்வி ஆண்டில் ஆசிரியர் பணி மாறுதல் பொது கலந்தாய்வை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும்.
10 ஆண்டு பணி முடித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாகத் தேர்வு நிலை ஆணை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
No comments:
Post a Comment