அரசு பணியாளர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை துவக்கி வைத்து, ஐந்து அரசு பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகளை, முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். ஜூலை, 1ம் தேதி முதல், நான்கு ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தை, சில கூடுதல் பயன்களுடன் செயல்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் மூலம், ஜூலை, 1ம் தேதி முதல், 2020 ஜூன் 30 வரை, இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
*புதிய திட்டத்தில், அரசு பணியாளர் குடும்பத்திற்கு அனுமதிக்கப்படும், மருத்துவ காப்பீட்டுத் தொகை, நான்கு லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
*குறிப்பிட்ட சில சிகிச்சைகளுக்கு அனுமதிக்கப்படும் நிதியுதவி, 7.50 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
*இத்திட்டத்தில், அரசு துறை, உள்ளாட்சி நிறுவனங்கள், அரசு பொதுத்துறை நிறுவனங்கள், சட்டப்படியான வாரியங்கள், மாநில அரசு பல்கலைக்கழகங்கள், ஆகியவற்றின் பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினர் பலன் பெற முடியும்.
*இத்திட்டத்திற்கு, அரசுப் பணியாளர்கள் சந்தா தொகையாக, மாதம், 180 ரூபாய் செலுத்த வேண்டும். தமிழக அரசு தன் பங்காக, 17.90 கோடி ரூபாயை, ஆண்டுதோறும் காப்பீட்டு நிறுவனத்திற்கு வழங்கும். இத்திட்டத்தால், 10.22 லட்சம் அரசு பணியாளர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பயன்பெறுவர்.
No comments:
Post a Comment