பிளஸ் 2 உடனடி துணைத்தேர்வின் முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா தேவி, நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஜூன் மற்றும் ஜூலையில், பிளஸ் 2 மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கு, சிறப்பு துணைத்தேர்வு நடந்தது.
இதற்கான முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. தேர்வு முடிவுகளை, மாணவர்கள் மற்றும் தேர்வர்கள், காலை, 11:00 மணிக்கு மேல், http://www.dge.tn.nic.in/ என்ற தேர்வுத் துறை இணையதளத்தில், மதிப்பெண் பட்டியலாகவே பார்க்கலாம்.
தேர்வரின் பெயர், பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி, மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், ஜூலை, 25 முதல், 27 வரை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், அதற்காக வழங்கப்படும் ஒப்புகை சீட்டை, பத்திரமாக வைத்திருக்க வேண்டும். அதிலுள்ள எண்ணை பயன்படுத்தியே, மறுகூட்டல் முடிவை பெற முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment