அரசு மேல்நிலைப் பள்ளிகளில், மணி நேர சம்பள அடிப்படையில் பணியாற்றிய 25 தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு முதல்வர் நாராயணசாமி பணி நிரந்தர ஆணை வழங்கினார்.
புதுச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக, மணி நேர அடிப்படையில் தொழிற்கல்வி பயிற்றுநர்களாக பணியாற்றி வந்த 25 பேர், பணி நிரந்தரம் செய்யப்பட்டு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி சட்டசபை வளாகத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் நடந்தது. அவர்களுக்கு, பணி நியமன ஆணையை முதல்வர் நாராயணசாமி வழங்கினார். இந்நிகழ்ச்சியில், கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன், கல்வித்துறை செயலர் அருண்தேசாய், கல்வித்துறை இயக்குனர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது, முதல்வர் நாராயணசாமி கூறும்போது, 12 ஆண்டுகள் அரசில் பணியாற்றியவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யும் கடமை எங்களுக்கு உள்ளது. பணிநிரந்தரம் மட்டுமின்றி, அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு கொடுப்பதையும் அரசு பரிசீலித்து வருகிறது.
அரசு ஊழியர்கள் தங்களது கடமையை சரியாக செய்ய வேண்டும் என்று கட்டளையிடும் அரசு, அவர்களுக்கான உரிமையையும் கொடுக்கும் என்றார்.
No comments:
Post a Comment