Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, May 29, 2016

    சேவை வரி 15 சதவீதமாக அதிகரிப்பு ஓட்டல், போன் கட்டணம் உயரும்

    அடுத்த மாதம் முதல், சேவை வரி விகிதம் உயர்த்தப்படுவதால், ஓட்டல், பார்களுக்கு செல்வோர், மொபைல் போன் வாடிக்கையாளர்கள் என, பல தரப்பினரும், கூடுதலாக செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    பள்ளிக்கல்வி - 2016-17ஆம் கல்வியாண்டில் தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இயக்குனர் அறிவுரைகள்

    சம்பளம் வழங்க கோரி மகனுடன் தலைமை ஆசிரியை உண்ணாவிரதம்

    மருத்துவ விடுப்பு நாட்களை, பணி நாட்களாக கருதி, எட்டு மாதம் சம்பளம் வழங்க கோரி, தேனி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் முன், பள்ளி தலைமை ஆசிரியை, மகனுடன் உண்ணாவிரதம் இருந்தார். தேனி மாவட்டம், போடி ஒன்றியம், கூழையனுார் அரசு நடுநிலைப் பள்ளி தலைமைஆசிரியை கற்பகம், 46. இதற்கு முன், இவர் குண்டல்நாயக்கன்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியையாக பணிபுரிந்தார்.

    மாணவர்களை கண்காணிக்கும் 'ஆப்ரேட்டிங் சிஸ்டம்'

    பள்ளி வாகனங்களில் மாணவர்கள் செல்வதை பெற்றோர் வீட்டில் இருந்தே எஸ்.எம்.எஸ்., மூலம் அறிந்து கொள்வதற்கான ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை காரைக்குடி கிட் அன்ட் கிம் இன்ஜி., கல்லுாரி கணிப்பொறியியல் துறை மாணவிகள் நாச்சம்மை, விஜயராணி பேராசிரியர்கள் சுசில்குமார் உதவியுடன் கண்டுபிடித்துள்ளனர். 'ஜி.பி.எஸ்., ஜி.எஸ்.எம் அன்ட் கிளவுட் மெசேஜிங்' தொழில் நுட்பத்தில் இயங்குகிறது.

    தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு

    தமிழகத்தில் உள்ள பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 1ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.கோடை வெயில் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பு தாமதமாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

    புதுச்சேரியில் பள்ளிகளின் கோடை விடுமுறை: ஜூன் 6-ம் தேதி வரை நீட்டிப்பு

    புதுச்சேரியில் கடும் கோடை வெப்பம் நிலவி வருவதால் பளளிகளின் விடுமுறைக்காலம் வரும் ஜூன் 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கல்வித்துறை இயக்குநர் ல.குமார் வெளியிட்ட அறிக்கை:புதுவையில் அரசு மறறும் தனியார் பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 1-ம் தேதி (புதன்கிழமை) திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    Saturday, May 28, 2016

    மேற்கு வங்கத்தில் அரசு ஊழியர்களுக்கு மம்தா பரிசு

    மேற்கு வங்கத்தில் இரண்டாது முறையாக முதல்வராக பதவியேற்ற மம்தா பானர்ஜி, அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வினை அறிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றிபெற்றது.

    ஆலோசனைக் கூட்டம்: பள்ளிகள் திறப்பைத் தள்ளி வைப்பது குறித்து இறுதி முடிவு எட்டப்படவில்லை, பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுமா?

    தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி ஒத்திவைக்கப்படலாம் எனத் தெரிகிறது. இது குறித்த அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் ஜூன் 1-ஆம் தேதி அனைத்து அரசு பள்ளிகளும் மீண்டும் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கோடை காலமென்பதால் பல நகரங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டியுள்ளது. எனவே, பள்ளிகளின் கோடை விடுமுறையை ஜூன் 8-ஆம் தேதி வரை நீட்டிக்க மாணவர்கள், பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். 

    தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் (TIAS) முன்னாள் மாநில தலைவர் இயற்கை எய்தினார்

    தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் திரு.கயத்தாறு அவர்கள் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் இயற்கை எய்தினார் என்பதனை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரின் இறுதி சடங்கு சென்னை கொளத்தேரியில் நடக்கவுள்ளது.

    பிளஸ் 2 தேர்வு முடிவை முன்னதாக வெளியிட்ட அதிகாரி 'சஸ்பெண்ட்'

    கிருஷ்ணகிரியில், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவை முன்னதாக வெளியிட்ட, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.தமிழகம் முழுவதும், கடந்த, 17ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாயின. காலை 10:31 மணிக்கு தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என, அரசு தேர்வுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

    எம்.பி.பி.எஸ்., விண்ணப்பத்தில் குளறுபடி?பதிவு எண் குழப்பம்; மாணவர்கள் தவிப்பு

    எம்.பி.பி.எஸ்., விண்ணப்ப படிவத்தில், பதிவு எண் எழுதுவது தொடர்பாக குளறுபடி ஏற்பட்டுள்ளதால், பெற்றோர், மாணவர் குழப்பம் அடைந்துள்ளனர். மத்திய அரசின், அவசர சட்டம் காரணமாக, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் மாணவர் சேர்க்கை சிக்கல் தீர்ந்ததால், தமிழகத்தில், மே, 26 முதல், அரசு மருத்துவ கல்லுாரிகளில், விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. மாணவர்களும் ஆர்வமுடன் விண்ணப்பங்கள் பெற்று வருகின்றனர்.

    இன்ஜி., கவுன்சிலிங்: மூன்று நாட்களே அவகாசம்

    அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, அண்ணா பல்கலையின் இன்ஜி., கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும். இந்த ஆண்டு கவுன்சிலிங்குக்கான விண்ணப்ப பதிவு ஏப்ரல், 15ல் துவங்கியது.

    அஞ்சல்தலை வடிவமைப்புப் போட்டி: மே 31-க்குள் விண்ணப்பிக்கலாம்

    சுதந்திர தின அஞ்சல்தலை வடிவமைப்புப் போட்டிக்கு மே 31-க்குள் விண்ணப்பிக்கலாம். "இந்தியாவில் சுற்றுலா' எனும் தலைப்பில், போட்டியாளர்கள் வடிவமைக்கும் அஞ்சல் தலையானது கண்களைக் கவரும் வகையில் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் அஞ்சல் தலைகளுக்கு முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.6000, மூன்றாம் பரிசாக ரூ. 4000 வழங்கப்படும்.

    பள்ளிகளில் ரவா கேசரி, உப்புமா..... சாத்தியமா?

    தமிழகத்தில் தற்போது சத்துணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இனிமேல் பள்ளிகளில் காலையில் மாணவர்களுக்கு டிபன் வழங்கப்படும் என்று அறிவித்து முதல்வர் ஜெயலலிதா பதவியேற்ற முதல் நாளிலேயே அந்த திட்டத்திற்கான கோப்பில் கையெழுத்திட்டார்.

    TAMILNADU MBBS ADMISSION 2016

    பள்ளி திறக்கப்படும் பொழுது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், அறிவுரைகள்

    Friday, May 27, 2016

    2023ம் ஆண்டுக்குள் இந்தியாவில் புல்லட் ரயில்: சுரேஷ் பிரபு

    இந்தியாவின் முதல் புல்லட் ரயில் 2023ம் ஆண்டுக்குள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: இந்தியாவின் முதல் புல்லட் ரயில் 2023ம் ஆண்டுக்குள் இயக்கப்படும். இதற்கான பணிகள் சிறப்பான முறையில் திட்டமிடப்பட்டு முறையாக நடந்து வருகிறது. இத்திட்டம் இந்திய ரயில்வே வரலாற்றில் புதிய மாற்றத்தை கொண்டு வரும்.

    புதுச்சேரியில் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு

    புதுச்சேரி மாநிலத்தில் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

    சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

    சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. www.cbseresults.nic.in என்ற இணையதளத்தில் முடிவுகளை காணலாம்.

    மாணவர்களுக்கு ரூ.300கோடி ஒதுக்கீடு

    மாணவர்களின் விலையில்லா நலத்திட்டங்களுக்காக ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்படடுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

    தொடக்கக் கல்வி - ICT திட்டத்தின் கீழ் 2015ஆம் ஆண்டில் கணினி வழிக் கல்வியில் ஆர்வமூடன் செயல்படும் ஆசிரியர்களுக்கான தேசிய விருது கோரும் சார்பான கருத்துருக்கள் 31.05.2016க்குள் அனுப்ப இயக்குனர் உத்தரவு

    பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பா?

    தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி அனைத்து அரசு பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட உள்ளன. தனியார் பள்ளிகள் ஜூன் 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை பல்வேறு தேதிகளில் திறக்கப்படுகின்றன. சில நாட்களாக தமிழகத்தில் பல நகரங்களில் வெயில் 38 டிகிரி செல்சியசை தாண்டியுள்ளது.

    இரண்டு ஆண்டுகளாக டி.இ.டி., இல்லை: மாணவர்கள் பாதிப்பு

    தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) நடக்காததால், பி.எட்., முடித்த மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டாய கல்விச் சட்டத்தின்படி அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்,பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) கட்டாயம் ஆக்கப்பட்டுஉள்ளது. தமிழக அரசு கடந்த 2012,13 ஆண்டில் ஆசிரியர் தகுதி தேர்வை நடத்தியுள்ளது.

    தேர்வுத்துறை கிடுக்கிப்பிடி: குறைந்தது 'ரேங்க், சென்டம்'

    கடந்த ஆண்டு, 10ம் வகுப்பு தேர்வில், இரண்டு லட்சம் பேர், நுாற்றுக்கு நுாறு எடுத்ததால் அரசு தேர்வுத்துறை, வினாத்தாள் முறையில் மாற்றம் கொண்டு வந்தது. அதனால், 'சென்டம்' எண்ணிக்கை, மூன்றில் ஒரு பங்காக குறைந்து உள்ளது.

    மின்னணு கழிவு: 5வது இடத்தில் இந்தியா

    மின்னணு கழிவுகளை உருவாக்குவதில் உலகளவில் இந்தியா 5வது இடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் 18.5 லட்சம் மெட்ரிக் டன்கள் (உலகளவில் 12 சதவீதம்) தொலைதொடர்பு சாதனங்கள் மின்னணு கழிவுகள் சேர்கிறது. 100 கோடி மொபைல் போன்கள் புழக்கத்தில் இருக்கின்றன. இதில் 25 சதவீதம் ஆண்டுதோறும் மின்னணு கழிவாக வருகிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

    பள்ளிகளில் சாதி, மதத்தை தெரிவிக்க வற்புறுத்தக் கூடாது என வழக்கு: அரசு பதிலளிக்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவு

    பள்ளி சான்றிதழில் சாதி, மதத்தைத் தெரிவிக்கும்படி மாணவர்களை வற்புறுத்தக் கூடாது என தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ஜூன் 15 ஆம் தேதிக்குள் அரசின் கருத்தை தெரிவிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஜி.பாலகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "இந்தியாவில் பல்வேறு மதம், சாதிய அமைப்புகள் உள்ளன. இதன் தாக்கத்தால், நாட்டின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டம், சகோதரத்துவம், சுதந்திரம், சமத்துவம் ஆகிய கொள்கையின் அடிப்படையில் சாதியில்லா சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. 

    பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

    பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த, வருகை தராத மாணவர்கள் சிறப்பு துணைத் தேர்வை எழுத வெள்ளிக்கிழமை (மே 27) வரை விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த, வருகை தராத மாணவர்களுக்காக வரும் ஜூன் 22-ஆம் தேதி தொடங்கி ஜூலை 4-ஆம் தேதி வரை சிறப்பு துணைத் தேர்வு நடைபெறுகிறது.

    கலை கல்லூரிகளில் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் தர கோரிக்கை

    கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், விண்ணப்பம் வழங்குவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் சேர, விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. விண்ணப்பத்தை பெற்ற மாணவர்கள், பிளஸ் 2 தேர்வு வெளியான, 10 நாட்களுக்குள் கல்லுாரிகளில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    வண்ணமயமான வகுப்பறை சூழல்

    'புதிய கல்வியாண்டை புத்துணர்வோடு வரவேற்க காத்திருக்கும் மாணவர்களுக்கு, அவர்கள் எதிர்பார்ப்பை விட முற்றிலும் வண்ணமயான வகுப்பறை சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது ஒவ்வொரு ஆசிரியரின் கடமை,' என்கிறார் ஆலாத்துார் நடுநிலைப் பள்ளி தலைமைஆசிரியை நிர்மலா மேரி.அவர் கூறியதாவது:

    குழந்தை தொழிலாளர் பள்ளிகள் 92 சதவீத தேர்ச்சி

    அரசு குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளி மாணவர்கள், 92 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். குழந்தை தொழிலாளியாக இருந்து மீட்கப்பட்டு, சிறப்பு பள்ளியில் படித்த மாணவர் கவின், 10ம் வகுப்பு தேர்வில், 476 மதிப்பெண் பெற்று, சாதித்து உள்ளார். 

    கலை கல்லூரிகளில் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் தர கோரிக்கை

    கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், விண்ணப்பம் வழங்குவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் சேர, விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. விண்ணப்பத்தை பெற்ற மாணவர்கள், பிளஸ் 2 தேர்வு வெளியான, 10 நாட்களுக்குள் கல்லுாரிகளில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இரண்டாம் கட்ட 'நீட்' தேர்வு அறிவிப்பு: ஜூன் 21 வரை விண்ணப்பிக்க அவகாசம்

    நாடு முழுவதும் மாணவர்களிடம் பரபரப்பை ஏற்படுத்திய மருத்துவ நுழைவுத் தேர்வான, 'நீட்' இரண்டாம் கட்ட தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 'அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர, மருத்துவ நுழைவுத் தேர்வான, நீட் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. 

    Thursday, May 26, 2016

    அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்க வேண்டும்; தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்

    தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வருகிற ஜூன் 1ந் தேதி பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் மாணவர்கள் நலன் கருதி அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்க வேண்டும் என ஆசிரியர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் கூறியுள்ளதாவது; கும்பகோணம் பள்ளி, தீவிபத்தில் 90க்கும் மேற்பட்ட குழந்தைகள் கருகி உயிரிழந்த சம்பவம் 2004ல் நிகழ்ந்தது. அது குறித்து விசாரித்த நீதிபதி சம்பத் கமிஷன் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், தனியார் பள்ளிகளுக்கான பல விதிமுறைகளை தமிழக அரசு உருவாக்கியது.

    100 யூனிட் இலவச மின்சாரம்.. யாருக்கு லாபம்?

    முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள 100 யூனிட் இலவச மின்சாரம் அனைத்து வீட்டு உபயோக மின் இணைப்பு பெற்றவர்களுக்கும் பொருந்தும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிமுக தேர்தல் அறிக்கையில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் "தற்போதைய கணக்கீட்டு முறைப் படி 100 யூனிட் மின்சாரம் கட்டணம் ஏதுமின்றி வீடுகளுக்கு வழங்கப்படும்" என அறிவிக்கப்பட்டிருந்தது.

    தேசிய வருவாய் வழிதிறன் தேர்வில் தேவக்கோட்டை பள்ளி மாணவி சாதனை

    தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வில்  தேவக்கோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளி மாணவி  வெற்றி பெற்று சாதனை  படைத்தார்.தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக இத்தேர்வில் இப்பள்ளி மாணவர்கள்  வெற்றி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    பள்ளி திறந்த முதல் நாளில்நோட்டு - புத்தகம், சீருடை

    'தமிழகத்தில், கோடை விடுமுறை முடிந்து ஜூன், 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் கோடையால், இந்த தேதியை தள்ளி வைக்க, பெற்றோர், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    அரசு ஊழியர்களுக்கான வாடகை வீடு ஒதுக்கீட்டை புதுப்பிப்பதில் மாற்றம்

    தமிழகத்தில், அரசு ஊழியர்களுக்கான வாடகை வீடு ஒதுக்கீட்டை புதுப்பிக்க, 'ஆன்லைன்' முறை கட்டாயமாகிறது. இதற்கான நடவடிக்கையை வீட்டுவசதி வாரியம் துவக்கி உள்ளது. தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்காக, பிரத்யேக வாடகை குடியிருப்பு திட்டத்தை வீட்டுவசதி வாரியம் செயல்படுத்தி வருகிறது. சென்னையில், 17 இடங்களிலும், மாவட்ட தலைநகரங்களிலும், இத்திட்டத்துக்காக கட்டப்பட்ட வீடுகள் பயன்பாட்டில் உள்ளன.

    1,429 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி: 9,500 பேர் 'சென்டம்'

    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், 10 அரசு பள்ளிகள் மாநில, 'ரேங்க்' பெற்றுள்ளதாக, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் பல சிறப்பு திட்டங்கள் மூலம், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களை ஊக்குவித்ததால், அரசு பள்ளிகள், 90.21 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இந்த கல்வியாண்டில், அரசு பள்ளிகளில் மாணவர்களை விட, மாணவியர், 6.40 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 1,429 அரசு பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

    10ம் வகுப்பிலும் கோட்டை விட்டது விருதுநகர் முதல் இடம் பிடிக்க முடியாது தொடர் ஏமாற்றம்

    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்திலும் விருதுநகர் மாநில அளவில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இது கல்வித்துறை அதிகாரிகளிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் 1985ல் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது முதல், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தில் தொடர்ச்சியாக 26 ஆண்டாக மாநில முதல் இடத்தில் இருந்தது.

    மாநில முதல் மாணவர்களின் 'டிப்ஸ்'

    பத்தாம் வகுப்பு தேர்வில் விருதுநகர் பெரிய வள்ளிக்குளம் நோபிள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஆர். சிவகுமார் 499 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார்,இவர் தமிழில் 99, மற்ற பாடங்களில் ௧௦௦ மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.இவரது சொந்த ஊர் அருப்புக்கோட்டை. தற்போது விருதுநகரில் வசிக்கிறார்.அவர் கூறியதாவது:

    500க்கு 500 மார்க்யாரும் இல்லை!

    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், கடந்த ஆண்டு, 500க்கு, 500 மதிப்பெண்களை, ஐந்து பேர் எடுத்த நிலையில், இந்த ஆண்டு ஒருவர் கூட, 500 மதிப்பெண் பெறவில்லை.
    அரசு பள்ளிகளின் தேர்ச்சி
    * கடந்த, 2015ல், அரசு பள்ளிகளில் முதல் மூன்று இடம் பெற்றவர்கள், 18 பேர்
    * தமிழ் வழியில் படித்து முதல், மூன்று இடங்களை பெற்றவர்கள், 23 பேர்

    நாளை பாலிடெக்னிக்தேர்வு முடிவுகள்

    பாலிடெக்னிக் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்திய, ஏப்ரல் மாத பட்டய தேர்விற்கான தேர்வு முடிவுகள், நாளை வெளியிடப்படுகின்றன.

    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், இந்த ஆண்டு, 93.60 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    500க்கு, 499 மதிப்பெண்கள் பெற்று, இரண்டு பேர், மாநில அளவில் முதலிடமும்; 53 பேர், இரண்டாம் இடமும்; 230 பேர், மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர். முக்கிய பாடங்களில், 77 ஆயிரம் பேர், 100க்கு, 100 பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மார்ச்சில் நடந்த, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை, அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் நேற்று வெளியிட்டது. இத்தேர்வுக்கு, 10.72 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்; 10.12 லட்சம் பேர் பங்கேற்றனர். 4.64 லட்சம் மாணவர்கள்; 4.84 லட்சம் மாணவியர் தேர்ச்சி பெற்றனர். 

    Wednesday, May 25, 2016

    மாவட்ட வாரியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி விவரம்

    1.ஈரோடு - 98.48
    2.கன்னியாகுமரி-- 98.17    
    3.விருதுநகர் - 97.81
    4. ராமநாதபுரம் - 97.1
    5.தூத்துக்குடி-- 96.93
    6.கரூர் - 96.67
    7.சிவகங்கை - 96.66

    மருத்துவ படிப்புக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பம்

    எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கு நாளை முதல் ஜூன் 6-ம் தேதி வரை விண்ணப்ப விநியோகம் செய்யப்படுகிறது. இன்று நன்பகல் 12 மணி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மருத்துவக்கல்வி இயக்குநர் விமலா செய்தியாளர்களிடம் கூறியதாவது;

    பத்தாம் வகுப்பில் 224 பேர் மாநில அளவில் மூன்றாம் இடம்

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.31 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது.

    பத்தாம் வகுப்பு தேர்வில் பிரேமசுதா, சிவகுமார் மாநில அளவில் முதலிடம்

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இரண்டு பேர் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளனர்.

    பத்தாம் வகுப்பு தேர்வில் 50 பேர் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல் இரண்டு பேர் 499 மதிப்பெண்களை பெற்று மாநில அளவில் முதலிடத்தை தக்க வைத்துள்ளனர். 498 மதிப்பெண்களை பெற்று 50 பேர் மாநில அளவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர்.

    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 2016 முடிவுகள் வெளியீடு

    பத்தாம் வகுப்பு ரிசல்ட் வெளியானது : முதல் இடம் ராசிபுரம், 2வது இடம் கரூர்

    தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின. இதில் ராசிபுரம் எஸ்.ஆர்.வி., எக்செல் பள்ளி 499 மதிப்பெண்கள் பெற்று மாநில முதலிடமும், கரூர் ஸ்டார் மெட்ரிக் பள்ளி மாணவி பிரதீபா 498 மதிப்பெண் பெற்று 2வது இடமும் பெற்றுள்ளனர்.தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச், 15ல் துவங்கி, ஏப்ரல் 13ல் முடிவடைந்தது. மொத்தம் 10.50 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வில் பங்கேற்றனர்.

    10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

    தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன. தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச், 15ல் துவங்கி, ஏப்ரல் 13ல் முடிந்தது; 10.50 லட்சம் பேர் பங்கேற்றனர். இவர்களில், 7,000 பேர் தமிழ் அல்லாத பிறமொழியை தாய்மொழியாக கொண்டு தேர்வு எழுதியுள்ளனர்.தேர்வு முடிவுகள் இன்று காலை, 9:31 மணிக்கு வெளியாகின்றன.

    'பள்ளிகளை திறக்க வேண்டாம்' அதிர வைத்த முதல் மனு!

    புதிய பள்ளிக்கல்வி அமைச்சரிடம் முதல் கோரிக்கையாக, பள்ளிகள் திறப்பை தள்ளிப் போட ஆசிரியர் சங்கத்தினர் மனு அளித்தனர்.பள்ளிக்கல்வி அமைச்சர் பெஞ்சமின், நேற்று காலை பதவியேற்று கொண்டதும் அவருக்கு, கட்சியினர், அதிகாரிகள் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர்.

    Tuesday, May 24, 2016

    வங்கி சேமிப்பு கணக்கு தொகைக்கு 24 மணி நேரத்துக்கு ஒரு முறை வட்டி

    வங்கி சேமிப்பு கணக்குக்கு தினமும் வட்டி கணக்கிட்டு, 90 நாட்களுக்கு, ஒரு முறை அளிக்கும் நடைமுறை வாடிக்கையாளருக்கு கூடுதல் பயன் அளிக்கும்; வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்' என, வங்கியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    மருத்துவ நுழைவுத்தேர்வை நிறுத்தி வைக்க அவசர சட்டம்: மத்திய மந்திரி ஜே.பி.நட்டா ஜனாதிபதியை சந்தித்து விளக்கம்

    மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வை ஒரு வருடத்துக்கு நிறுத்திவைக்கும் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் பெறுவதற்காக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை மத்திய மந்திரி ஜே.பி.நட்டா சந்தித்து உரிய விளக்கங்களை அளித்தார். 

    'பிரெட்'டில் நச்சு வேதிப்பொருள் இருப்பது அம்பலம்! விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவு

    தலைநகர் டில்லியில் விற்கப்படும், 'பிரெட்' வகைகளில், புற்றுநோயை உண்டாக்கக் கூடிய வேதிப் பொருட்கள் கலந்திருப்பதாக, சமீபத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. டில்லியில் பரவலாக விற்பனையாகும், 38 வகை பிரெட்களில், 32ல், பொட்டாசியம் புரோமேட், பொட்டாசியம் அயோடேட் ஆகிய வேதிப் பொருட்கள் கலந்துள்ளன. இது, சி.எஸ்.இ., எனப்படும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் நடத்திய சமீபத்திய ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

    7th Pay Commission Latest News – 27% increase expected as against 14.29% recommended


    Recent developments regarding implementation of 7th Pay Commission recommendations indicate that Govt may consider some of the demands of Staff Side, JCM such as minimum pay and multiplication factor etc., relating revision of Pay Central Government Employees.
    7th Pay Commision has recommended that minimum Basic Pay of Central Government Employees which is Rs. 7000 presently to be increased to Rs. 18,000. This works out to 14.29 % increase when taking in to account the dearness allowance of 125% with effect from 1st January 2016.
    As far as existing employees are concerned 7th CPC has recommended that their present basic pay has to be mulitiplied by 2.57, to arrive at new new basic pay as on 1st January 2016. This new basic pay is 14.22% more than the existing one.

    Multiplication Factor as per 7th Pay Commission Report:

    Who are entitled to 7th Pay Commission additional Bunching increment?

    7th Pay Commission Pay Fixation:
    As per Para 5.1.28 of 7th Pay Commission Report, pay fixation in the new pay structure will have to be made as follows
    Step 1: Identify Basic Pay (Pay in the pay band plus Grade Pay) drawn by an employee as on the date of implementation. This figure is ‘A’.

    Step 2: Multiply ‘A’ with 2.57, round-off to the nearest rupee, and obtain result ‘B’.
    Step 3: The figure so arrived at, i.e., ‘B’ or the next higher figure closest to it in the Level assigned to his/her grade pay, will be the new pay in the new pay matrix. In case the value of ‘B’ is less than the starting pay of the Level, then the pay will be equal to the starting pay of that level
    Click here to get more information on 7th Pay Commission Pay Fixation

    7th Pay Commission – Pensioners to Gain the Most – A Report

    7th Pay Commission on pay and pension: Once the recommendations of the 7th Pay Commission are implemented, the biggest gainers will be pensioners. While the 7th Pay Commission pay scale increase of serving employees is 16%, pensioners will see a 23.63% rise. However, the big gain per se is in allowances, which rise by as much as 63%. Here is an elaboration of the 7th Pay Commission pension recommendations:

    தேர்தல் பணியில்உயிரிழந்த ஆசிரியருக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

    தேர்தல் பணியின்போது வாக்குச்சாவடியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்த ஆசிரியர் செல்வராஜின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தியுள்ளது.

    கலை பாடங்களுக்கு 'மவுசு' அதிகரிப்பு: கல்லூரிகளில் அலைமோதும் கூட்டம்

    பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்கள் மற்றும் மாணவர்கள் பெறும், 'சென்டம்' எண்ணிக்கை தான், ஒவ்வொரு ஆண்டும், கல்லுாரிகளில் இடம் கிடைப்பதில் பலத்த போட்டியைஏற்படுத்துகிறது. இந்தாண்டு பிளஸ் 2வில், கணிதம், விலங்கியல், தாவரவியல், கணினி அறிவியல் மற்றும் இயற்பியல் ஆகிய பாடங்களில், கடந்த ஆண்டை விட, 'சென்டம்' எடுத்தவர்கள் எண்ணிக்கை, பலமடங்கு குறைந்துள்ளது.

    புதிய கல்விக் கொள்கை: மத்திய அரசு ஆலோசனை

    நாடு முழுவதும் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் கல்விக் கொள்கைக்குப் பதிலாக புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.இதுகுறித்து உத்தரப் பிரதேச மாநிலம், ஃபரூக்காபாதில்மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் ராம் சங்கர் கட்டேரியா  செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

    10ம் வகுப்பு விடைத்தாள் மறுகூட்டல்:உடனே விண்ணப்பிக்கலாம்

    விடைத்தாள் மறு கூட்டலுக்கு, நாளை முதல், மே, 28 வரை விண்ணசென்னை:பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன. விப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி, நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    பிளஸ் 2 உடனடி துணை தேர்வு: ஜூன் 22ம் தேதி துவக்கம்

    'பிளஸ் 2 மாணவர்களுக்கான உடனடி துணைத் தேர்வு, ஜூன், 22 முதல் ஜூலை, 4 வரை நடக்கும்' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேர்வுக்கு வராதவர்களுக்காக, சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்படுகிறது.

    பி.இ., 2 ம் ஆண்டு நேரடி சேர்க்கை:'ஆன் லைனில்' விண்ணப்பம்

    பி.இ., 2 ம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு ஆன்-லைனில் இன்று (மே 24) முதல் விண்ணப்பிக்கலாம் என, காரைக்குடி பி.இ., 2 ம் ஆண்டு நேரடி சேர்க்கை செயலர் மாலா தெரிவித்தார். அவர் கூறியதாவது:டிப்ளமோ, பி.எஸ்.சி., முடித்தவர்கள், பி.இ., பி.டெக்., 2 ம் ஆண்டில் நேரடியாக சேரலாம். இதற்கான விண்ணப்பம், www.accet.co.in, www.accet.edu.in, www.accetlea.com என்ற இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

    எம்.எஸ்சி., படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்பம்

    'எம்.எஸ்சி., படிப்பில் சேர, நாளை முதல், 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம்' என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.இதுகுறித்து அண்ணா பல்கலை, நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:அண்ணா பல்கலையின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லுாரிகளில், எம்.எஸ்சி., இரண்டு ஆண்டு படிப்பு; எம்.பில்., மற்றும் எம்.எஸ்சி., ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பில் சேர, 'ஆன்லைனில்' மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

    புதிய கல்விக் கொள்கை: மத்திய அரசு ஆலோசனை

    நாடு முழுவதும் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் கல்விக் கொள்கைக்குப் பதிலாக புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.இதுகுறித்து உத்தரப் பிரதேச மாநிலம், ஃபரூக்காபாதில்மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் ராம் சங்கர் கட்டேரியா  செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

    ஜிப்மரில் நர்சிங் நுழைவுத்தேர்வு விண்ணப்பிக்க ஜூன் 8 கடைசி

    ஜிப்மரில், பி.எஸ்சி., நர்சிங் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு, வரும் ஜூலை மாதம், 10ம் தேதி நடக்கிறது.புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில், நர்சிங் மற்றும் துணை மருத்துவப் படிப்புகளில் ஒட்டு மொத்தமாக, 154 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான, 'ஆன்லைன்' விண்ணப்பங்கள், இணையதளத்தில் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.

    சி.பி.எஸ்.இ., 2ம் வகுப்புக்கு தமிழ் பாடம் கட்டாயம்

    மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், இந்த ஆண்டு முதல், 2ம் வகுப்புக்கும் தமிழ் பாடம் கட்டாயமாகிறது. தமிழகத்தில், பல்வேறு வகை பள்ளிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான பாடத்திட்டம் மற்றும் மொழிகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. பிற மாநில எல்லையை ஒட்டிய பகுதிகளிலுள்ள கிருஷ்ணகிரி, தர்மபுரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, நீலகிரி, தேனி போன்ற மாவட்டங்களின் சில பள்ளிகளில், அருகில் உள்ள மாநில மாணவர்கள் படிக்கும் வகையில், பிற மொழி வழி கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது.

    Monday, May 23, 2016

    முதல் நாளிலேயே அமைச்சரவை விரிவாக்கம்

    இன்று காலை புதிய அரசு பொறுப்பேற்ற 24 மணி நேரத்தில் கூடுதலாக 4 புதிய அமைச்சர்கள் நியமிக்க முதல்வர் ஜெ., உத்தரவிட்டுள்ளார். 

    இதன்படி ஏற்கனவே இரு துறைகள் வழங்கப்பட்ட அமைச்சர்களிடம் இருந்து பிரித்து 4 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சர்களாக சேர்க்கப்பட்டனர் விவரம் வருமாறு:

    பதவியேற்ற முதல் நாளில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்: முதல்வர் ஜெ., உத்தரவு

    ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக இன்று பதவியேற்றதை தொடர்ந்து தேர்தலுக்காக மாற்றப்பட்ட தமிழக ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ் உயரதிகாரிகள் மீண்டும் பழைய பதவிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இடமாற்றம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீண்டும் அதே பணியில் நியமிக்கப்பட்டனர்.. மேலும் மாவட்ட கலெக்டர்கள் உள்பட 17 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் மாற்றப்பட்டனர். 

    தொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி: ஜெ., முதல் கையெழுத்து

    தமிழக முதல்வராக பதவியேற்ற முதல்வர் ஜெ., தலைமைச்செயலகம் வந்தார். அங்கு 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். முதல் கையெழுத்தாக, தொடக்க பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி என்ற கோப்பில் கையெழுத்திட்டார்.

    5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்; முதலமைச்சர் ஜெயலலிதா

    ** கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற அனைத்து கடன்களும் தள்ளுபடி

    ** அனைவருக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசம்

    ** தாலிக்கு ஒரு பவுன் (8கிராம்) தங்கம்.

    ** கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் 200 யூனிட்டாக அதிகரிப்பு, விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் 750 யூனிட்டாக அதிகரிப்பு, 

    ஆளுநர் முன்னிலையில் பதவியேற்பு உறுதிமொழி ஏற்றார் ஜெயலலிதா

    தமிழக முதல்வராக 6வது முறையாக பதவியேற்கும் ஜெயலலிதா, ஆளுநர் ரோசய்யா முன்னிலையில் பதவியேற்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.

    அதனைத் தொடர்ந்து ஆளுநர் ரோசய்யா வாசிக்க அதனை பின்தொடர்ந்து ரகசியக்காப்புப் பிரமாணமும் எடுத்துக் கொண்டார் ஜெயலலிதா.

    மருத்துவ நுழைவுத் தேர்வை ஒத்திவைக்கும் அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் பெறும் விவகாரத்தில் மத்திய அரசு தீவிரம் : குடியரசுத் தலைவரை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இன்று நேரில் சந்தித்து விளக்கம்

    மருத்துவ நுழைவுத் தேர்வு தொடர்பாக மத்திய அமைச்சரவை பிறப்பித்த அவசரச் சட்டத்திற்கு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற மத்திய அரசு தீவிரம்காட்டி வருகிறது. குடியரசுத் தலைவரை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இன்று நேரில் சந்தித்து, விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட முதல் விண்வெளி ஓடம் - ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை

    இந்திய தொழில்நுட்பத்திலேயே வடிவமைக்கப்பட்ட மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையிலான விண்வெளி ஓடத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளது. 

    நாளை மறுநாள் 10ம் வகுப்பு 'ரிசல்ட்'

    தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 15ல் துவங்கி ஏப்ரல், 13ல் முடிந்தது. 10.50 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள், நாளை மறுநாள் வெளியாக உள்ளன. இரு தினங்கள் கழித்து, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். 

    மருத்துவ படிப்புக்கு கட்-ஆப் பெற்ற 10 அரசு பள்ளி மாணவ, மாணவியர்

    ராமநாதபுரத்தில் `எலைட்’ திட்டத் தின் கீழ் பயிற்சி பெற்று பிளஸ் 2 தேர்வு எழுதிய அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10 பேர் மருத்துவப் படிப்புக்கான கட்-ஆப் பெற்றுள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் 67 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து 5,444 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 5,068 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

    வெயில் "ஓவர்"... பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க பெற்றோர்கள் கோரிக்கை!

    சென்னை பள்ளிகளை திறப்பதை தள்ளி வைப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், அது குறித்து அரசுதான் அறிவிக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார், கோடை விடுமுறை முடிந்து ஜுன் 1-ந் தேதி முதல் பள்ளிக்கள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

    'பாடத்திட்டத்தை தாண்டி சிந்திக்கும் மாணவர்களுக்கே வேலை'

    ''பாடத் திட்டத்தைத் தாண்டி சிந்திக்கும் மாணவர்களுக்கே பிரகாசமான எதிர்காலம் உள்ளது; அவர்களுக்குத் தான் வேலைவாய்ப்பும் கொட்டிக் கிடக்கிறது,'' என, கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி பேசினார்.சென்னை அண்ணா பல்கலையின் இணைப்புக்கு உட்பட்ட, 550 இன்ஜி., கல்லுாரிகளுக்கு, தமிழக அரசு சார்பில், கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

    'வழக்குகள் குறைய குறைதீர் கூட்டம் நடத்துங்க':ஆசிரியர்கள் சொல்றாங்க!

    'ஆசிரியர்களுக்கான குறைதீர் கூட்டம் உரிய காலங்களில் நடத்தினால்தான் கல்வித்துறையில் குவியும் வழக்குகள் பெருமளவில் குறையும்' என தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழகத் தலைவர் சாமி சத்தியமூர்த்தி வலியுறுத்தினார்.

    ஐ.ஐ.டி.,க்கான நுழைவு தேர்வில் சிக்கலான கணிதம், வேதியியல்

    ஐ.ஐ.டி., உயர்கல்வி நிறுவனத்தில், இன்ஜி., படிக்க சேர்வதற்கான, ஜே.இ.இ., அட்வான்ஸ்ட் தேர்வில், கடந்த ஆண்டு வினாக்கள் இடம் பெற்றன.ஐ.ஐ.டி., போன்ற மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில், பி.இ., பி.டெக்., படிப்பில் சேர இரண்டு வித நுழைவுத் தேர்வுகள் எழுத வேண்டும். மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்தும், ஜே.இ.இ., என்ற ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். பின், ஐ.ஐ.டி., கவுன்சில் நடத்தும், ஜே.இ.இ., அட்வான்ஸ்ட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

    ஜூன் 21ல் யோகா தினம்: பள்ளிகளுக்கு உத்தரவு

    'அனைத்து பள்ளி மற்றும் கல்லுாரிகளிலும், ஜூன், 21ல், யோகா தினம் கொண்டாட வேண்டும்' என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நாட்டின் பாரம்பரிய உடற்பயிற்சி கலையான யோகாவை, உலகம் முழுவதும் பிரபலப்படுத்த, மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது. இதன் பலனாக, ஜூன், 21ம் தேதி, சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என, ஐ.நா., சபை அறிவித்தது.

    பொது நுழைவுத்தேர்வு அவசியமா?நிபுணர்களுடன் ஜனாதிபதி ஆலோசனை

    இந்தாண்டு, 'ஸ்டேட் போர்டு' எனப்படும், மாநிலக் கல்வி முறையில் படித்து, பிளஸ் 2 தேர்வானவர்களுக்கு, மருத்துவ கல்விக்கான பொது நுழைவுத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்க வகை செய்யும், மத்திய அரசின் அவசரச் சட்டம் தொடர்பாக, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சட்ட நிபுணர்களின் கருத்தை கேட்டுள்ளார்.

    மருத்துவம் மற்றும் சட்ட கல்லூரிகளுக்கும்'ரேங்க்' பட்டியல் வெளியிட முடிவு

    அடுத்த ஆண்டு முதல், மருத்துவம் மற்றும் சட்டக் கல்லுாரிகளுக்கும், தேசிய அளவில், 'ரேங்க்' பட்டியல் வெளியிட, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், முடிவு செய்துள்ளது.மேலாண்மை, பொறியியல், மருந்தியல் ஆகிய கல்லுாரிகளுக்கு மட்டும், தேசிய அளவில், ரேங்க் எனப்படும் தரவரிசை பட்டியலை, மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. ஆனால், மருத்துவம் மற்றும் சட்டக் கல்லுாரிகளுக்கு இந்த பட்டியல் வெளியிடப் படுவதில்லை.

    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு: தேர்வுத்துறை எச்சரிக்கை

    'தமிழகத்தில் மே 25ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்போது, பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் சீலிடப்பட்ட கவர்களில் உள்ள மதிப்பெண்ணை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.மே 17ல் காலை 10:31 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. ஆனால், காலை 9:00 மணிக்கே பல மாவட்டங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் விவரம் புகைப்படங்களுடன் 'வாட்ஸ் ஆப்'ல் வெளியாகின. இதனால் தேர்வுத்துறை அதிர்ச்சி அடைந்தது. இதுகுறித்து விசாரணை நடக்கிறது.

    எந்த பாடத்துக்கு என்ன 'கட் ஆப்?'அண்ணா பல்கலை பட்டியல் வெளியீடு

    பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, இன்ஜி., கல்லுாரிகளில் சேர்வதற்கான குழப்பத்தை தீர்க்க, கடந்த ஆண்டு, 'கட் ஆப்' மதிப்பெண் பட்டியலை, அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்களில் பெரும்பாலானோர், மருத்துவம் மற்றும் இன்ஜி., படிப்புகளில் சேர விரும்புகின்றனர். தமிழகத்தில் அண்ணா பல்கலையின் இணைப்புக்கு உட்பட்ட, 550 இன்ஜி., கல்லுாரிகளுக்கு, தமிழக அரசு சார்பில், ஒற்றைச் சாளர முறையில் அண்ணா பல்கலையில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

    அரசு துறை தேர்வுகள் நாளை துவக்கம்

    அரசு பள்ளி மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, ஆண்டுக்கு இருமுறை டி.என்.பி.எஸ்.சி., மூலம் துறைத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அந்தந்த அலுவலக பணிக்கேற்ப, வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு, தேர்வுகள் நடத்தப்படும். இதில், தேர்ச்சி பெறுவதன் மூலம், ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கும் என்பதால், அரசு பணியாளர் கள் ஆர்வத்துடன் கலந்து கொள்வர்.

    Saturday, May 21, 2016

    புதிய தமிழக அமைச்சர்கள் பட்டியல் வௌியீடு

    தமிழகத்தில் 6வது முறை முதல்வராக பொறுப்பேற்கும் ஜெ., இன்று கவர்னர் ரோசய்யாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். தொடர்ந்து அமைச்சர்கள் பட்டியலையும் கவர்னரிடம் அளித்தார்.
    134 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி கட்டிலில் ஜெ., அமர்கிறார். நேற்று மாலை (20 ம்தேதி ), மாலை நடந்த எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் ஜெ., அதிமுக சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
    இந்த கூட்டத்தில் எடுத்த முடிவின் படி முதல்வராக ஆட்சி அமைக்க அவர் உரிமை கோரும் கடிதத்தை கவர்னரை நேரில் சந்தித்து ஜெ., இன்று கொடுத்தார். இன்று மாலை அமைச்சர் பட்டியல் வெளியிடப்பட்டது. துறை ரீதியிலான அமைச்சர்கள் பட்டியல் விபரம் வருமாறு....

    ஜெயலலிதா : இந்திய ஆட்சிப்பணி, காவல், பொதுநிர்வாகம் :

    ஓ.பன்னீர்செல்வம் : நிதித்துறை

    திண்டுக்கல் சீனிவாசன் : வனத்துறை

    அதிரடி! பொது நுழைவுத் தேர்வை தள்ளிவைக்க அவசர சட்டம்?

    'தேசிய அளவிலான நுழைவுத் தேர்வா? மாநில அளவிலான நுழைவுத் தேர்வா?' என, கடந்த இரண்டு மாதங்களாக மிகுந்த போராட்டத்தில் இருந்த, மருத்துவக் கல்லுாரி யில் சேரத் துடிக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், மாநில அளவிலான நுழைவுத் தேர்வை இந்த ஆண்டு நடத்தும் அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    மின் வாரிய ஊழியர் தேர்வு ஒத்திவைப்பு

    நாளை, மே, 22ம் தேதி நடக்க இருந்த, ஊழியர் நியமன எழுத்துத் தேர்வை, தமிழக மின் வாரியம் ஒத்திவைத்து உள்ளது. மின் வாரியத்தில், 50 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளதால், பல பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து, இளநிலை உதவியாளர், தணிக்கையாளர் உட்பட, 2,175 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, மின் வாரியம் பிப்ரவரியில் வெளியிட்டது.

    சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 முடிவு இன்று வெளியீடு?

    மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள், இன்று வெளியாகும் என தெரிகிறது.சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் உள்ள பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச், 1ல் பொதுத் தேர்வு துவங்கி, ஏப்ரலில் முடிந்தது; 10.67 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள், மே, 23ல் வெளியாகும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு முன், இன்று பகல், 12:00 மணிக்கு வெளியிடப்படும் என, தகவல்கள் வெளியாகியுள்ளன.

    மெட்ரிக் பள்ளி இலவச சேர்க்கைவிண்ணப்ப தேதி நீட்டிப்பு

    ''தனியார் மெட்ரிக் பள்ளிகளில், இலவச மாணவர் சேர்க்கைக்கு, மே, 30 வரை விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும்,'' என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் (பொறுப்பு) ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.

    மாணவர் சான்றிதழை நிறுத்தினால் தண்டனை: யு.ஜி.சி., எச்சரிக்கை

    'எந்த காரணத்தை கொண்டும் மாணவர்களின் சான்றிதழ்களை நிறுத்தி வைக்கக் கூடாது' என, அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும், பல்கலைக்கழக மானியக் குழுவான, யு.ஜி.சி., எச்சரிக்கை விடுத்துள்ளது.கல்லுாரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள், பட்டப்படிப்பு, முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்பு முடித்ததும், உரிய காலத்தில் அவர்களது சான்றிதழ்களை, கல்லுாரி மற்றும் பல்கலைகள் வழங்க வேண்டும். ஆனால் பெரும்பாலான கல்லுாரி மற்றும் பல்கலைகள், மாணவர்களின் பட்டங்களை நிறுத்தி வைப்பதும், வழங்காமல் இருப்பதும் தொடர்கதையாக உள்ளது.

    பிளஸ் 2 தற்காலிக சான்றிதழ் பள்ளிகளில் இன்று பெறலாம்

    பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, இன்று முதல் பள்ளிகளில் பெறலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே 17ம் தேதி வெளியிடப்பட்டு, மதிப்பெண்கள் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், மே 19ம் தேதி முதல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, மாணவர்கள் தாங்களாகவே பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.

    பி.இ., 2ம் ஆண்டு சேர்க்கை'ஆன்லைனில்' விண்ணப்பம்

    பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.டிப்ளமோ மற்றும் பி.எஸ்சி., முடித்தவர்கள், பி.இ., - பி.டெக்., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்ந்து படிப்பதற்கான, விண்ணப்ப வினியோகம், ஒவ்வொரு ஆண்டும் மே, இரண்டா-வது வாரத்தில் துவங்கும். கடந்த ஆண்டு மே, 13-ம் தேதி, தமிழகம் முழுவதும் உள்ள, 34 மையங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. 

    மருத்துவ நுழைவுத்தேர்வு ரத்துராமச்சந்திரா பல்கலை ஒத்திவைப்பு

    'மே 22ம் தேதி நடத்த இருந்த மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு, ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது' என, சென்னை ராமச்சந்திரா பல்கலை அறிவித்துள்ளது. அந்த பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளதாவது: எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, மே 22ம் தேதி நடக்க இருந்த நுழைவுத்தேர்வு, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ஒத்தி வைக்கப்படுகிறது.

    அதிமுக சட்டப் பேரவை குழுத் தலைவராக ஜெயலலிதா தேர்வு

    சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேரவை குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக 134 இடங்களைப் பெற்று அறுதிப் பெரும்பான்மை பெற்றது.

    Friday, May 20, 2016

    POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES EXAMINATION-II (INTERVIEW POSTS) (2014-2015 & 2015-2016)(GROUP-II SERVICES) (PRELIMINARY)

    மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: கி.வீரமணி

    திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய அளவிலான மருத்துவ நுழைவுத் தேர்வை ஒரு ஆண்டுக்கு ஒத்தி வைக்க அவசர சட்டம் ஒன்றைக் கொண்டுவர மத்திய அமைச்சரவை முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கதே. அதே நேரத்தில் நுழைவுத் தேர்வே கூடாது என்பதுதான் சரியான நிலை - சமூகநீதி அடிப்படையிலான நியாயமும் ஆகும்.

    திங்கட்கிழமை முதல்வராக பதவியேற்கிறார் ஜெ.,

    சட்டசபை தேர்தலில் 134 தொகுதிகளில் வென்று, தமிழக முதல்வராக மீண்டும் ஜெயலலிதா வரும் திங்கட்கிழமை பதவியேற்க உள்ளார்.

    Thursday, May 19, 2016

    முதல்வரை சிரிக்க வைத்து சீட் வாங்கியவர் 36 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

    அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதாவை வேட்பாளர் தேர்வின் போது வயிறு குலுங்க சிரிக்க வைத்ததால் ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) தொகுதியில் போட்டியிட்ட வாய்ப்பு பெற்ற மு.சந்திரபிரபா மாவட்டத்திலேயே அதிக வாக்கு வித்தியாத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்: வெற்றி உற்சாகத்தில் ஜெயலலிதா அறிவிப்பு

    நடைபெற்ற தேர்தலில் அதிமுகவுக்கு மகத்தான வெற்றியை அளித்து, தன்னை மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாக ஜெயலலிதா கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

    அதிமுகவுக்கு வெற்றி தேடித்தந்த 11 சதவீத ஓட்டு: தேய்ந்தது தேமுதிக

    இந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்கும், அடுத்த இடத்தில் வந்த திமுகவுக்கும் இடையே இருந்த சுமார் 11 சதவீத ஓட்டுகள் தான், வெற்றியை தீர்மானி்த்துள்ளன. 11 மணி அளவில் கிடைத்த தகவலின்படி, அதிமுகவுக்கு 41.8 சதவீத ஓட்டுகளும், திமுகவுக்கு 30.9 சதவீத ஓட்டுகளும் கிடைத்துள்ளன. இந்த ஓட்டு வித்தியாசமே அதிமுகவுக்கு அமோக வெற்றியை தேடித்தந்துள்ளது.

    கட்சிவாரி முடிவுகள்

    கட்சிவாரி முடிவுகள்

    கட்சிகள்முன்னிலைமுடிவுகள்
     அ.தி.மு.க.,1283
     தி.மு.க.,843
     காங்கிரஸ்82

    தமிழக சட்டபேரவை தேர்தல் 2016 செய்திகள்

    முதல்வர் பதவி ஏற்பு விழா பல்கலை அரங்கு தயார்

    Tamilnadu Assembly Election News:  முதல்வர் பதவி ஏற்பு விழா பல்கலை அரங்கு தயார்விரைவில், முதல்வர் பதவி ஏற்பு விழா நடக்க உள்ளதால், நேரு விளையாட்டு அரங்கம், சென்னை பல்கலை மண்டபத்திற்கு, தடையில்லா மின்சாரம் வழங்கும் பணிகளை, மின் வாரியம் முடுக்கி விட்டு உள்ளது.தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள், இன்று எண்ணப்படுகின்றன. ஆட்சியை பிடிப்பது யார் என்பது, மதியத்திற்குள் தெரியும். யார் ஆட்சியை பிடித்தாலும், ஒரு வாரத்திற்குள், புதிய முதல்வர் பொறுப்பேற்பார்.

    தபால் ஓட்டுப்பதிவு பல மடங்கு உயர்வு

    கடந்த இரண்டு தேர்தலை விட, இம்முறை அதிகளவில், தபால் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. தமிழகத்தில், 2011 சட்டசபை தேர்தலில், ஒரு லட்சம் தபால் ஓட்டுகள் பதிவாகின. அடுத்து, 2014 லோக்சபா தேர்தலில், 85 ஆயிரம் தபால் ஓட்டுகள் பதிவாகின. இம்முறை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார், வேன் டிரைவர்கள் என, மொத்தம், 6.26 லட்சம் பேர், தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.

    Wednesday, May 18, 2016

    தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் டாக்டர்.கலைஞர் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பு


    கோடை வெயிலிலும் தொடர்ந்து பாதுகாத்து தண்ணீர் ஊற்றி மரம் வளர்க்கும் பள்ளி

    தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் சில மாதங்களுக்கு முன்பு மரம் நாடு விழா நடைபெற்றது.பள்ளியின் உள்ளேயும் ,வெளியிலும் நல்ல நிழல் தரும் மரங்கள் நடப்பட்டன.ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி பேராசிரியர் செல்வம் மற்றும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அண்ணாமலை செட்டியார் ஆகியோர் மரங்களை நட்டனர்.மரங்களை வெளியில் நட்டத்துடன் அதனை பாதுகாக்கவும் சில ஏற்பாடுகளை செய்தோம்.காரைக்குடி சென்று கம்பி வலை வாங்கி வந்து அதனை ஆடு,மாடு போன்ற விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பாக காப்பற்றுவதற்காக முள்  செடிகளை சுற்றி நட்டு பாதுகாத்தோம்.

    248 அரசு பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி

    பிளஸ் 2 தேர்வில், தமிழகம் முழுவதும், 248 அரசு பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. தமிழகம் முழுவதும், 2,704 அரசு பள்ளிகளைச் சேர்ந்த, 3 லட்சத்து, 47 ஆயிரத்து, 478 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். அவர்களின், இரண்டு லட்சத்து, 97 ஆயிரத்து, 641 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதுகுறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:

    அரசு பள்ளியில் சாதித்தோர்

    நாமக்கல் மாவட்ட, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தாமதமாக வெளியிடப்பட்டதால், பல்வேறு தரப்பினரும் கடும் அதிருப்தி அடைந்தனர். 'பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று காலை, 10:32 மணிக்கு வெளியிடப்படும்' என, பள்ளிக்கல்வி தேர்வுத்துறை அறிவித்தது. அதை தொடர்ந்து, பத்திரிகையாளர்கள், வழக்கம் போல் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு படையெடுத்தனர்.

    மருத்துவ 'கட் - ஆப்' கூடும் இன்ஜி.,க்கு குறையும்

    பிளஸ் 2 தேர்வில், 'சென்டம்' எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதால், மருத்துவ படிப்பு, 'கட் - ஆப்' அதிகரிக்கவும், இன்ஜி., படிப்பு, கட் - ஆப் குறையவும் வாய்ப்புள்ளது. பிளஸ் 2 தேர்வில் இந்த ஆண்டு, இயற்பியலில், ஐந்து பேர் மட்டுமே, சென்டம் பெற்றுள்ளனர். இயற்பியல் வினாத்தாள் இந்த ஆண்டு எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். ஆனால், அனைத்து பாடங்களையும் விட, இந்த பாடத்தில், சென்டம் எண்ணிக்கை குறைந்துள்ளது. 

    'கட்' அடித்த 'லேப் டாப்' மாணவர்கள்

    அரசு பள்ளி மாணவர்கள் 'லேப்டாப்' பெற்றவுடன் பள்ளிக்கு முழுக்கு போட்டதால், பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.அரசுப்பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்காக சிறப்பு வகுப்பு நடத்துவது, கையேடு வழங்குவது என, கல்வித்துறை பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தபோதிலும் தனியார் பள்ளிகளை விட, அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் குறைவாகவே இருக்கிறது.

    அ.தே.இ - விடைத்தாள் நகல் / மறுகூட்டல் விண்ணப்பத் தொகை அனுப்புதல் சார்ந்து அரசு தேர்வுகள் துறையின் அறிவுரைகள்

    பள்ளிக்கல்வி - கணினிமயமாக்கம் - வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வேலைவாய்ப்புப் பிரிவு - 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ / மாணவியர்கள் கல்வி பயின்ற பள்ளிகள் மூலமாக நேரடியாக வேலைவாய்ப்புத் துறையின் இணையதளத்தில் தங்களின் கல்வித் தகுதிகளை பதிவு செய்ய சார்ந்து இயக்குனரின் அறிவுரைகள்

    நுழைவு தேர்வு ரத்து? வருகிறது அவசர சட்டம்

    தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வை ஒத்திவைக்கும் வகையில், அவசர சட்டம் கொண்டு வர, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.'மருத்துவக் கல்லுாரிகளுக்கு தேசிய நுழைவுத் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்திருந்தது.'மாநில அளவிலான நுழைவுத் தேர்வை நடத்த அனுமதிக்க வேண்டும்' என, பல்வேறு மாநிலங்களின் கோரிக்கையையும் சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது.

    'வாட்ஸ் ஆப்'பில் 'ரிசல்ட்' அவுட்

    'தமிழகம் முழுவதும் நேற்று காலை 10:31 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகும்' என அரசு தேர்வுத்துறை அறிவித்தது. அதன்படி முதன்மைக் கல்வி அலுவலர்கள் வெளியிடுவதற்கு முன்பே, காலை 9:30 மணிக்கே மாவட்ட அளவிலான தேர்வுமுடிவுகள் 'வாட்ஸ் ஆப்'பில் வெளிவர துவங்கின. மேலும் தேர்வு முடிவுகளும் முன்னுக்கு பின் முரணாக வந்தன.

    அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு: தனியார், மெட்ரிக் பள்ளிகள் பின்னடைவு

    பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாயின. அதில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், கடந்த ஆண்டை விட, இம்முறை மாணவ, மாணவியரின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரம், தனியார், மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் தேர்ச்சி குறைந்துள்ளது.

    Tuesday, May 17, 2016

    பப்பாளி விதைகளைச் சாப்பிட்டால் என்னவாகும் தெரியுமா?

    பப்பாளிப் பழம் எல்லாருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் பெங்களூர் பப்பாளியை சாப்பிட்ட பின் இதனைப் பிடிக்காது என்று சொல்ல மாட்டீர்கள். அவ்வளவு இனிப்பான சுவை இருக்கும்.
    பப்பாளியில் நிறைய மருத்துவ குணங்கள் இருப்பது பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். பப்பாளி மரம் எளிதில் எங்கும் வளரக் கூடியது. பூச்சி மருந்தோ, உரமோ தேவைப்படாது. ஆகவே மற்ற பழங்களைப் போலல்லாமல் அவற்றை தைரியமாக உண்ணலாம்.

    பிளஸ் 2 தேர்வில் அதிக தேர்ச்சி: ஈரோடு மாவட்டம் முதலிடம்; கடைசி இடத்தில் வேலூர் மாவட்டம்

    1. கன்னியாகுமரி : 95.7 சதவீதம்
    2. திருநெல்வேலி : 94.76 சதவீதம்
    3. தூத்துக்குடி : 95.47 சதவீதம்
    4. ராமநாதபுரம் : 95.04 சதவீதம்
    5. சிவகங்கை : 95.07 சதவீதம்
    6. விருதுநகர் : 95.73 சதவீதம்
    7. தேனி : 95.11 சதவீதம்
    8. மதுரை : 93.19 சதவீதம்
    9. திண்டுக்கல் : 90.48 சதவீதம்
    10. ஊட்டி : 91.29 சதவீதம்

    பிளஸ்-2 தேர்வு முடிவுகள், இயற்பியல் பாடத்தில் 200 மதிப்பெண்கள் எண்ணிக்கை குறைவு

    தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு பெரும்பாலான பாடங்களில் 200/200 மதிப்பெண்கள் எடுத்தவர்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளது.

    தமிழகத்தில் பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் 91.4% ஆக உயர்வு

    பிளஸ் 2 தேர்வின் முடிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.31 மணிக்கு வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 91.4%.

    கடந்த இரண்டு ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. கடந்த 2014, 2015 ஆண்டுகளில் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி விகிதம் 90.6% ஆக இருந்தது. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 91.4% ஆக அதிகரித்துள்ளது.

    பிளஸ் 2 தேர்வு: தமிழில் நால்வர் மாநில அளவில் முதலிடம்

    பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில், 200-க்கு 199 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் தமிழ் மொழிப் பாடத்தில் 3 மாணவிகள், 1 மாணவர் என மொத்தம் 4 பேர் முதலிடம் பிடித்துள்ளனர்.

    இவர்களில் இருவர் ஒட்டு மொத்தமாக மாநில அளவில் முதலிடம் பிடித்த ஆர்த்தி, ஜஸ்வந்த் ஆகியோர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பிளஸ் 2 தமிழ் வழிக் கல்வி பிரிவில் மாநில முதலிடம்: மதுரை மாணவி நாகநந்தினி சாதனை

    பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில், தமிழ் வழியில் பயின்று மாநிலத்தில் முதல் மூன்று இடம் பிடித்தவர்கள் விவரம் பின்வருமாறு:

    மாநிலத்தில் முதலிடம் பிடித்தவர், சி.எம்.நாகநந்தினி - 1187/1200 - மதுரை செயின்ட் ஜோசப்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி.

    பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

    இயற்பியலில் 5 மாணவர்களே சென்டம்

    தமிழகத்தில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இயற்பியல் பாடத்துக்கான வினாத்தான் மிகக் கடினமாக இருந்ததால் 5 மாணவர்கள் மட்டுமே 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். அதே போல பெரும்பாலான பாடங்களில் 200க்கு 200 மதிப்பெண் எடுத்த மாணாக்கரின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு குறைந்துள்ளது.

    200க்கு 200 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள்

    பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் ஒவ்வொரு பாடத்திலும் 200க்கு 200 மதிப்பெண்கள் பற்றிய விபரங்கள் இதோ... 

    இயற்பியல் : பாடத்தில் 5 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள்

    மதிப்பெண் குறைந்தால் திட்ட வேண்டாம்

    '104' சேவை மைய விழிப்புணர்வு மேலாளர் பிரபுதாஸ் கூறியதாவது: இன்று பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகிறது. எதிர்பார்த்ததை விட குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்கள் அல்லது தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள், மன உளைச்சலுக்கு ஆளாக வாய்ப்புள்ளது. பெற்றோர் விழிப்போடு இருக்க வேண்டும். மாணவர்களை திட்ட வேண்டாம்; அது, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

    கிருஷ்ணாகிரி மாவட்டம், ஊத்தங்கரை வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் ஆர்த்தி, ஜஸ்வந்த் 1195 மதிப்பெண் பெற்று சாதனை

    கிருஷ்ணாகிரி மாவட்டம், ஊத்தங்கரை வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் ஆர்த்தி, ஜஸ்வந்த் 1195 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.

    திருவள்ளூரை சேர்ந்த பவித்ரா 1194 மதிப்பெண்கள் பெற்று சாதனை

    தேர்தல் பணியில் ஆசிரியர் மாரடைப்பால் திடீர் மரணம்; தடைபடாத வாக்குப் பதிவு!

    உடுமலை அருகே, பள்ளி ஆசிரியர் ஒருவர் தேர்தல் பணியில் இருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், கரடுமடம் உடுமலையில் உள்ள அரசு பள்ளியில் வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் செல்வராஜ் (54). இவர் காங்கேயம் சட்டப்பேரவை தொகுதி வடசின்னேரிபாளையம் பஞ்சாயத்து, காங்கேயம் பகுதி தலைமை வாக்குச்சாவடி அலுவலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

    பிளஸ் 2: இன்றும், நாளையும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது.

    Saturday, May 14, 2016

    தேர்தல் முந்தததும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் ஒப்படைக்க வேண்டிய உறைகள்

    வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முக்கிய குறிப்புகள்

    நாம் பணியாற்றப் போகும் வாக்குச் சாவடி எது என முன் கூட்டியே அறிந்து கொள்ள முடியுமா?

    கண்டிப்பாக அறிந்து கொள்ள இயலாது...
    15.05.2016 அன்று காலை 7 மணிக்கு, தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள மென்பொருளை (software) பயன்படுத்தி, கணினி மூலம், மாவட்ட தேர்தல் அலுவலரால் (மாவட்ட ஆட்சியர்) எந்த குழுவுக்கு எந்த வாக்குச் சாவடி மற்றும் அவசர தேவைக்காக காத்திருப்பு பட்டியலில் உள்ள குழுக்கள் (reserve) எவை என்பது ஒதுக்கீடு செய்யப்படும்.

    Tuesday, May 10, 2016

    பொதுத் தேர்தல் 2016 - வாக்குப்பதிவு முடிந்த பின்னர் சில வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் "CLOSE" பொத்தனை அழுத்தி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை மூடுவதில்லை எனவும், இந்த நடவடிக்கையால் முறைகேடு நிகழ்ந்துள்ளது என ஐயம் எழுவதாக வந்த புகாரையடுத்து தேர்தல் நியாயமாக நடத்த தேர்தல் ஆணையம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

    மாநிலங்கள் நுழைவுத்தேர்வு நடத்த அனுமதி இல்லை உச்ச நீதிமன்றம் உத்தரவு

    மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு மாநில அரசுகள் தனியாக நுழைவுத்தேர்வு நடத்த அனுமதி இல்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதல்கட்ட தேர்வில் பங்கேற்காத மாணவர்கள் இரண்டாம்கட்ட தேர்வில் பங்கேற்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.                      எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பு களுக்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்த நிலையில், கடந்த 1-ம் தேதி நடந்த நுழைவுத்தேர்வை முதல்கட்ட தேர்வாகவும், இந்த தேர்வுக்கு விண்ணப் பிக்காதவர்கள் ஜூலை 24-ம் தேதி நடக்கவுள்ள தேர்வை இரண்டாம் கட்ட தேர்வாகவும் கருதும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

    9 மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவர்களை 5 சதவீதம் வரை 'பெயில்' செய்ய அனுமதி

    சேலம் மாவட்டத்தில் பிளஸ் 1 மற்றும் 9ம் வகுப்புகளில், 5 சதவீதம் வரை, மாணவர்களை, 'பெயில்' செய்ய, தலைமை ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைவருக்கும் இலவச கட்டாயக்கல்வி சட்டம் அமலில் உள்ளதால், 8ம் வகுப்பு வரை, அனைத்து மாணவ, மாணவியரையும், 'பாஸ்' செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.

    இன்று வாக்காளர் உறுதிமொழி ஏற்பு தேர்தல் கமிஷன் சிறப்பு ஏற்பாடு

    தமிழகத்தில், இன்று வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அனைத்து தரப்பு மக்களும், 'ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம்; பணம் கொடுப்பவர்களை பிடித்து கொடுப்போம்' என, உறுதிமொழி எடுக்க வேண்டும் என, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.

    அரசு ஊழியர் வீடு ஒதுக்கீடு கண்காணிக்க புது திட்டம்

    அரசு ஊழியர் வாடகை குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்வதில், மோசடிகளை தடுக்க, புதிய நடைமுறையை, வீட்டுவசதி வாரியம் உருவாக்கி உள்ளது. சென்னையில், பட்டினப்பாக்கம், லாயிட்ஸ் காலனி, பீட்டர்ஸ் சாலை, சைதாப்பேட்டை, நந்தனம், அண்ணா நகர், முகப்பேர் என பல்வேறு பகுதிகளில், அரசு ஊழியர் வாடகை குடியிருப்புகள் உள்ளன. இதே போல், பிற மாவட்டங்களிலும், அரசு ஊழியர் வாடகை குடியிருப்புகள் உள்ளன.

    அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் விவரங்களை சமர்ப்பிக்க அவகாசம் வேண்டும்: தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை

    அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் சார்ந்த தகவல் தொகுப்பு விவரங்களை சமர்ப்பிக்க உரிய கால அவகாசம் வேண்டும் என தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் சார்ந்த தகவல் தொகுப்பு விவரங்கள் ஆண்டுதோறும் கல்வி தகவல் மேலாண்மை முறையில்(இஎம்ஐஎஸ்) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

    எமிஸ் பணியை மே 12க்குள் முடிக்காவிட்டால் கல்வித்துறை மிரட்டலால் ஆசிரியர்கள் தவிப்பு

    'கல்வி தகவல் மேலாண்மை முறையை, இணையதளத்தில் மேம்படுத்தும் முறையை, மே 12ம் தேதிக்குள் முடிக்காவிட்டால், சென்னை இயக்குனரகம் செல்ல வேண்டியிருக்கும்' என, மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    Sunday, May 8, 2016

    தனியார் பள்ளியில் ’சீட்’ பெற இரவு முழுவதும் காத்திருப்பு

    புதிய கல்வியாண்டு துவங்கும் நிலையில், தனியார் பள்ளிகளில், சீட் பெறுவதற்கு, இரவு முழுவதும் கண்விழித்து, பள்ளி வாசலில் தவம் கிடந்து விண்ணப்பம் பெறும் படலம் காஞ்சிபுரத்திலும் துவங்கி உள்ளது.

    ஐ.சி.எஸ்.இ., தேர்வு முடிவுகள் 100 சதவீத தேர்ச்சி

    கோவை மாவட்டத்தில், ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ் தேர்வில் பங்கேற்ற பள்ளிகள் நடப்பு கல்வியாண்டில், 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது.

    பள்ளி வாகனங்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ்

    தாராபுரத்தில் நேற்று நடந்த, பள்ளி வாகனங்களுக்கான சோதனை முகாமில், தகுதியற்ற நிலையில் இருந்த, 21 வாகனங்களின் குறைபாடுகளை சரிசெய்ய, நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    விரைவில் அனைத்து பள்ளிகளிலும் யோகா கட்டாயமாகிறது

    அனைத்து மாநிலங்களில் உள்ள பள்ளிகளிலும் யோகா கட்டாயமாக்கப்பட வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாகவும், இந்த உத்தரவு வரும் கல்வி ஆண்டிலிருந்து அமலுக்கு வர உள்ளதாகவும் மத்திய இணையமைச்சர் ஸ்ரீபத் யாசோ நாயக் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் கவுன்சிலிங் முறையில் மாணவர் சேர்க்கை

    தமிழகத்தில் 2016-2017ம் ஆண்டிற்கான மருத்துவப் படிப்புக்கு மாணவர் சேர்க்கையை கலந்தாய்வு மூலம் நடத்த அனுமதிக்கலாம் என்று இந்திய மருத்துவ கவுன்சில் ஆக்கப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    தேர்வு முடிவில் தாமதம்; ஆசிரியர்கள், பெற்றோர் அதிருப்தி

    பிளஸ் 2 தேர்வு முடிவை மே, 17ம் தேதி வெளியிடப்போவதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தேர்ச்சி முடிவில் ஏற்பட்ட தாமதத்தால், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடையே அதிருப்தி நிலவுகிறது. 

    தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு நுழைவுதேர்வு கட்டாயம்; சுப்ரீம் கோர்ட்

    தனியார் மருத்துவக் கல்லுாரிகளுக்கான மாணவர் சேர்க்கையை, தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு மூலம் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக கூறியுள்ளது. அதே நேரத்தில் பொது நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து, மத்திய அரசின் கருத்தை சுப்ரீம் கோர்ட் கேட்டுள்ளது.

    பிளஸ் 2 ரிசல்ட் தேதி அறிவிப்பு; தேர்தல் பணியால் ஆசிரியர்கள் அதிர்ச்சி

    பிளஸ் 2 தேர்வு வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பணி சுமையாலும், தேர்தலுக்கு அடுத்த நாள் பிளஸ்2 ரிசல்ட் என்பதாலும் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வு நடந்தது. பிளஸ் 2 விடைத்தாள்கள் முழுமையாக திருத்தப்பட்டு விட்டது. தனித்தனியே மார்க் போடுதல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறைவு பெற்று விட்டன. எந்த நேரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட, பள்ளி கல்வி துறை தயாராகவே உள்ளது. 

    Saturday, May 7, 2016

    2016 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றி,தோல்வியை தீர்மானிக்க போவது யார்?

    தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 82 லட்சம் பேர் -2016 ல் ஓட்டளிக்க தகுதியானவர்கள். இதில் (உச்சகட்டமாக 80% வாக்குப்பதிவு நிகழ்ந்தால்4.5 கோடி வாக்குகள். ) ஆனால் இதுவரை கடந்த கால வரலாறுகளில் அதிகபட்சமாக 70% ஓட்டுகள் பதிவாகியுள்ளது. 70% என வைத்துக் கொண்டால் 3கோடியே 96 லட்சம் பேர் வாக்குகளை பதிவாகும் .

    Friday, May 6, 2016

    'இ' கிரேடு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி!

    எட்டாம் வகுப்பில், இ கிரேடு மாணவர்களுக்கு குறைதீர் கற்பித்தல் பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பெயர் பட்டியலை, மே 10ம் தேதிக்குள் இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், ஆறாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, முப்பருவக்கல்விமுறை மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில், மூன்று பருவ தேர்வுகளில் எடுக்கும் மதிப்பெண்கள், பள்ளி சார்ந்த செயல்பாடுகள், சுற்றுச்சூழல் செயல்பாடுகள், விளையாட்டு திறன், தனித்திறன் உள்ளிட்டவை அடிப்படையில், கிரேடு வழங்கப்படுகிறது. இதில், ஏ, பி, சி. டி, இ என, ஐந்து கிரேடுகள் வழங்கப்படுகிறது. 

    இந்திய மருத்துவத்திற்கான பல்கலை; உயர்நீதிமன்றம் உத்தரவு

    திருநெல்வேலியில் இந்திய மருத்துவத்திற்கான பல்கலை அமைக்க தமிழக அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும், என, உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது. திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லுாரி முதுகலை மாணவர் விஜய் விக்ரமன் தாக்கல் செய்த மனு: சித்த மருத்துவக் கல்லுாரி அமைக்க, விதிகள்படி 5 ஏக்கர் நிலம், மூலிகைத் தோட்டம் அமைக்க 10 ஏக்கர் நிலம் தேவை. திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லுாரி 4 ஏக்கரில் அமைந்துள்ளது. மூலிகைத் தோட்டம், விளையாட்டு மைதானம், கலையரங்கம் இல்லை. 

    பிளஸ் 2 தேர்வு முடிவு மே 17 ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு மே 25ம் தேதியும் வெளியாகும் என தமிழக அரசு அறிவிப்பு

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 1ம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 13ம் தேதியும் முடிவடைந்தன. ப்ளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 20ம் தேதியே நிறைவடைந்துவிட்டது. 

    தனியார் மருத்துவக் கல்லூரிகள் தனியாக நுழைவுத் தேர்வு நடத்த அனுமதி இல்லை: உச்ச நீதிமன்றம் மீண்டும் திட்டவட்டம்

    அரசு உதவி பெறாத தனியார் மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரிகள் தனியாக நுழைவுத் தேர்வு நடத்த அனுமதி இல்லை என்று உச்ச நீதிமன்றம் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்தது. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலையைத் தெளிவுபடுத்துமாறு இரு தினங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், மருத்துவ பொது நுழைவுத் தேர்வு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் கல்லூரிகள் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அனில் ஆர். தவே, சிவகீர்த்தி சிங், ஆதர்ஷ் குமார் கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது. 

    புத்தகங்களை பதிவு செய்ய 285 பொது இ-சேவை மையங்கள்: பாடநூல் நிறுவனம் ஏற்பாடு

    தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள், மாணவர்கள் பாட நூல்களைப் பெற 285 பொது "இ' சேவை மையங்களில் ஆன்-லைனில் பதிவு செய்து கொள்ளலாம். தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் நிறுவனம் பாடநூல்களைப் பெறுவதற்கு, இந்தாண்டு முதல் பல்வேறு எளிதான திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பள்ளிகளுக்குத் தேவைப்படும் பாடநூல்களை பள்ளிகள் தாங்களே, www.textbookcorp.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து அதற்கான தொகையை இணையதளம் மூலம் செலுத்தி பெற்றுக் கொள்ள முடியும்.

    கால்நடை படிப்புகளுக்கு மே 8-இல் விண்ணப்பம்?

    கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பம் விநியோகம் குறித்த அறிவிப்பு மே 8-ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானதும் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.