கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், விண்ணப்பம் வழங்குவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் சேர, விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. விண்ணப்பத்தை பெற்ற மாணவர்கள், பிளஸ் 2 தேர்வு வெளியான, 10 நாட்களுக்குள் கல்லுாரிகளில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான, மே, 17ம் தேதி முதல், 10 நாட்கள் என்ற கணக்கில், மே, 27ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும். ஆனால், பல மாவட்டங்களில் விண்ணப்பம் வாங்கவே, காத்திருக்கும் சூழல் உள்ளது. பல மாவட்ட பள்ளிகளில், பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மட்டுமே, வழங்கப்பட்டுள்ளது. கல்லுாரி படிப்பில் சேர தேவையான மாற்று சான்றிதழ் பல அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்னும் வழங்கப்படவில்லை. எனவே, அண்ணா பல்கலையில் விண்ணப்ப தேதியை நீட்டித்தது போல, கலை, அறிவியல் கல்லுாரிகளில் விண்ணப்பம் சமர்ப்பிக்க, கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment