Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
 • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
 • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

  Monday, May 23, 2016

  'பாடத்திட்டத்தை தாண்டி சிந்திக்கும் மாணவர்களுக்கே வேலை'

  ''பாடத் திட்டத்தைத் தாண்டி சிந்திக்கும் மாணவர்களுக்கே பிரகாசமான எதிர்காலம் உள்ளது; அவர்களுக்குத் தான் வேலைவாய்ப்பும் கொட்டிக் கிடக்கிறது,'' என, கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி பேசினார்.சென்னை அண்ணா பல்கலையின் இணைப்புக்கு உட்பட்ட, 550 இன்ஜி., கல்லுாரிகளுக்கு, தமிழக அரசு சார்பில், கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.


  பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர்கள், இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்பது, பாடப்பிரிவு, கல்லுாரிகளை தேர்வு செய்வது எப்படி என்பது குறித்து மாணவர்கள்,பெற்றோருக்கு வழிகாட்டும் வகையில், ஆண்டுதோறும், 'தினமலர்' நாளிதழ் சார்பில், 'உங்களால் முடியும்' வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான, 'உங்களால் முடியும்' நிகழ்ச்சி, நேற்று, 'தினமலர்' நாளிதழ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் ஸ்ரீ சாஸ்தா கல்வி குழுமம் இணைந்து, குன்றத்துாரில் உள்ள, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரி வளாகத்தில் நடத்தினர்.காலை, 10:30 மணி முதல் நடந்த நிகழ்ச்சியில், கல்வியாளர்கள் ரமேஷ் பிரபா, ஜெயப்பிரகாஷ் காந்தி ஆகியோர், பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு ஆலோசனையும், அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமும் அளித்தனர்.

  கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி பேசியதாவது:நாம் எதை படிக்க வேண்டும் என்ற தெளிவு, மாணவர்களுக்கு ஏற்பட வேண்டும். 70 சதவீத பாடத்திட்டம், காலாவதியாகும் நிலையில் தான் உள்ளது. பாடத் திட்டத்தை தாண்டி படிக்கும், சிந்திக்கும் மாணவர்கள் தான் வெற்றி பெற முடியும். கல்லுாரிகளும் அதற்கு உதவ வேண்டும். இனி வரும் காலங்களில், என்ன தேவையோ அதை படித்தால் தான் வேலை கிடைக்கும்.

  உற்பத்தி துறை நிறுவனங்களுக்கு ஏற்ப, மாணவர்கள் தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். 'கேட்' தேர்வு போன்ற வற்றுக்கு, மாணவர்கள் துவக்கம் முதல் பயிற்சி பெற வேண்டும். வித்தியாசமான படிப்பை தேர்ந்தெடுக்கவே, மாணவர்கள் அதிகம் பேர் ஆர்வம் காட்டுகின்றனர்; அதில் தவறு இல்லை. ஆனால், சரியான கல்லுாரியில் சேர்ந்து படிக்க வேண்டும். காலை, 9:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை படிக்கும் மாணவர்களுக்கு பட்டம் கிடைக்கும். ஆனால் மாலை, 5:00 மணிக்கு மேல் உழைக்கும் மாணவர்களுக்கு தான் இனி வேலை கிடைக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.

  கல்வியாளர் ரமேஷ் பிரபா பேசியதாவது: இந்த ஆண்டு அண்ணா பல்கலை நடத்தும் கவுன்சிலிங், 'ஆன்லைன்' மூலமாக விண்ணப்பிக்கும் முறையில் நடைபெறுகிறது. விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கப்படும், 'ரேண்டம்' எண் குறித்து, மாணவர்கள், பெற்றோர் கவலைப்படத் தேவையில்லை. மாணவர்களுக்கு, 'ரேங்க்' பற்றி வரும் கடிதத்தில், ஜாதி பிரிவு, ஒட்டுமொத்த ரேங்க் என, இரண்டு ரேங்க் எண்கள் இருக்கும். ஒட்டுமொத்த ரேங்கை விட, ஜாதி பிரிவு ரேங்கை பொறுத்து, கவுன்சிலிங்கில் கிடைக்கப் போகும் இடத்தை யூகிக்க முடியும்.

  அழைப்பு கடிதம் வராதவர்களும், கவுன்சிலிங்கிற்கு வரலாம். தவிர்க்க முடியாத காரணங்களால் வர இயலாதவர்கள், பெற்றோர் அல்லது உறவினரை கவுன்சிலிங்கிற்கு அனுப்பலாம். மறுகூட்டல், மறுமதிப்பீட்டின் மூலம் மதிப்பெண் பெற்றவர்கள், அதற்கான ஆதாரங்களை காண்பித்து, ரேங்கில் திருத்தம் செய்து கொள்ளலாம். அதற்கு அண்ணா பல்கலையில் தனிப்பிரிவு உள்ளது.

  கலந்தாய்வின் போது, மாணவர்கள், நல்ல கல்லுாரிகளை தேர்ந்தெடுப்பதில், கவனம் செலுத்த வேண்டும். நல்ல கல்லுாரி தொலைவில் இருந்தாலும், சென்று தங்கி படிக்க தயாராக இருக்க வேண்டும்.

  கலந்தாய்வுக்கு, இரண்டு மணி நேரத்திற்கு முன் செல்வது நல்லது. சரியான பெயரில் வரைவோலை, அசல் சான்றிதழ்கள் ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும். உடற்தகுதி சான்றிதழ், கலந்தாய்வு வளாகத்தில் எடுத்துக் கொள்வது நல்லது. இல்லையெனில், மருத்துவச் சான்றிதழுக்கு வெளியில் தேட வேண்டிய நிலை ஏற்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

  சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரியின் முதல்வர், பி.எல்.என்.ரமேஷ் பேசியதாவது:இந்த நிகழ்ச்சியில், இரண்டு கல்வியாளர்கள், உங்களுக்கு ஆலோசனைகளை வழங்க வந்துள்ளனர். அதை மாணவர்கள் கேட்டு, பயன் பெற வேண்டும். எங்கள் முயற்சிகளை

  தமிழகம் முழுவதும் கொண்டு சேர்க்கும், 'தினமலர்' நாளிதழுக்கு நன்றி.

  தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்பை, கல்வி நிறுவனங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். படித்து விட்டு வெளியேறும் மாணவர்களுக்கு, நிறுவனங்கள் பயிற்சி அளிக்க விரும்புவதில்லை. மாணவர்கள், அனைத்து திறமைகளுடன், தங்களிடம் வேலைக்கு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, அவர்களிடம் உள்ளது. எங்கள் கல்லுாரியில், மாணவர்களுக்கு, சீன நிறுவனங்களில் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்து தருகிறோம். மாணவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையே உள்ள இடைவெளியை, நாங்கள் குறைக்க விரும்புகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

  பெற்றோர் பேட்டி:நான், பழைய பெருங்களத்துாரில் இருந்து வருகிறேன். பல்வேறு படிப்புகள் மற்றும் அதற்கான வேலைவாய்ப்புகள் குறித்து, கல்வியாளர்கள் தெளிவாக விளக்கினர். எந்த பாடப்பிரிவை எடுப்பது என்ற குழப்பத்தில் இருந்த, என் மகளுக்கு, இந்த நிகழ்ச்சியின் மூலம் தெளிவு கிடைத்தது. செண்பகவள்ளி, 34-கூடுவாஞ்சேரியில் இருந்து என் மகளுக்காக, இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன். கவுன்சிலிங் குறித்து, குறைந்த தகவல்கள் தான் எனக்கு தெரியும். தற்போது இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தகவல்கள் தெரிந்து கொண்டதால், முழுவதும் புரிந்து கொண்டேன். இது, கலந்தாய்வு செல்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.எஸ்.சண்முகம், 50

  மாணவர் பேட்டி:நான் கொடுங்கையூரில் இருந்து, இந்த நிகழ்ச்சிக்காக, பெற்றோருடன் வந்துள்ளேன். எந்த பாடப்பிரிவு எடுத்து படிப்பது என, இன்னும் நான் முடிவெடுக்கவில்லை. எனினும், இந்த நிகழ்ச்சியின் மூலம், சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என தெரிந்து கொண்டேன். நிகழ்ச்சி நன்றாக புரியும்படி இருந்தது.இர்பான், 17

  சிறு வயதில் இருந்தே கணினி பிரிவு எடுக்க வேண்டும் என ஆவலாக உள்ளேன். இந்த நிகழ்ச்சியில், நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன். பெரிதும் உதவியாக இருந்தது.

  No comments: