விடைத்தாள் மறு கூட்டலுக்கு, நாளை முதல், மே, 28 வரை விண்ணசென்னை:பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன. விப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி, நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், நாளை காலை வெளியாகின்றன. மாணவர்கள், நாளை முதல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர், மே, 25 முதல், 28ம் தேதி மாலை, 5:45 மணி வரை விண்ணப்பிக்கலாம். தங்கள் பள்ளி மற்றும் தேர்வு எழுதிய தேர்வு மையம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.மொழிப் பாடங்களுக்கு, 350; ஆங்கிலத்துக்கு, 305; கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியலுக்கு, தலா, 205 மறு கூட்டல் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment