சுதந்திர தின அஞ்சல்தலை வடிவமைப்புப் போட்டிக்கு மே 31-க்குள் விண்ணப்பிக்கலாம். "இந்தியாவில் சுற்றுலா' எனும் தலைப்பில், போட்டியாளர்கள் வடிவமைக்கும் அஞ்சல் தலையானது கண்களைக் கவரும் வகையில் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் அஞ்சல் தலைகளுக்கு முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.6000, மூன்றாம் பரிசாக ரூ. 4000 வழங்கப்படும்.
போட்டியாளர்கள் தாங்கள் வடிவமைத்த தாளை மடிக்காமல் விரைவுத் தபாலில், AGG(Philately), Room no.108(B), Dak Bhavan, New Delhi- 110001 என்ற முகவரிக்கு மே 31-க்குள் அனுப்ப வேண்டும். விவரங்களுக்கு www.indiapost.gov.in, www.postagestamps.gov.in என்ற இணையதளங்களைப் பார்வையிடலாம்.
No comments:
Post a Comment