அரசு குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளி மாணவர்கள், 92 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். குழந்தை தொழிலாளியாக இருந்து மீட்கப்பட்டு, சிறப்பு பள்ளியில் படித்த மாணவர் கவின், 10ம் வகுப்பு தேர்வில், 476 மதிப்பெண் பெற்று, சாதித்து உள்ளார்.
தமிழகத்தில், குழந்தை தொழிலாளியாக இருந்து மீட்கப்பட்டோருக்காக, 15 மாவட்டங்களில், சிறப்பு பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் படித்த, 464 மாணவ, மாணவியர், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர்; இவர்களில், 429 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த பள்ளிகள், 92 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
விசைத்தறி தொழிலில் இருந்து மீட்கப்பட்ட, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கவின், 476 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் முதல் இடம் பெற்றுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சிவராம லட்சுமி, 470 மதிப்பெண்; விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா முகமது, 469 மதிப்பெண் பெற்று, மாநில அளவில், இரண்டாவது, மூன்றாவது இடங்களை பிடித்துள்ளனர்.
இவர்கள் முறையே, பீடி சுற்றும் தொழில், தீப்பெட்டி தொழிலில் இருந்து மீட்கப்பட்டவர்கள். இது தவிர, விசைத்தறியில் இருந்து மீட்கப்பட்ட, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த, பார்வையற்ற மாணவர் தேவராஜன், 323 மதிப்பெண் பெற்று உள்ளார்.
No comments:
Post a Comment