இந்திய தொழில்நுட்பத்திலேயே வடிவமைக்கப்பட்ட மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையிலான விண்வெளி ஓடத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளது.
சென்னைக்கு அருகே உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஏவுதளத்திலிருந்து "RLV-TD HEX-ஒன்று" என்ற பெயரிலான விண்வெளி ஓடம் இன்று காலை 7 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டதாகவும், இந்த முயற்சி வெற்றியடைந்ததாகவும் இஸ்ரோ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இஸ்ரோவின் இந்த சாதனையொட்டி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த விண்வெளி ஓடமானது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதலாவது தொழில்நுட்பத்தின் அடிப்படையிலானது. செயற்கைக் கோள்களை பூமியின் விண்வட்ட சுற்றுப்பாதையில் செலுத்திய பின்னர், மீண்டும் வளிமண்டலத்திற்கு திரும்பும் வகையில், விண்வெளி ஓடம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விண்வெளி ஓடம் முதல்முறையாக சோதித்து பார்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மிகக்குறைந்த செலவில், செயற்கைக்கோள்களை செலுத்துவதற்கான வழிவகை ஏற்படும்.
No comments:
Post a Comment