பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்கள் மற்றும் மாணவர்கள் பெறும், 'சென்டம்' எண்ணிக்கை தான், ஒவ்வொரு ஆண்டும், கல்லுாரிகளில் இடம் கிடைப்பதில் பலத்த போட்டியைஏற்படுத்துகிறது. இந்தாண்டு பிளஸ் 2வில், கணிதம், விலங்கியல், தாவரவியல், கணினி அறிவியல் மற்றும் இயற்பியல் ஆகிய பாடங்களில், கடந்த ஆண்டை விட, 'சென்டம்' எடுத்தவர்கள் எண்ணிக்கை, பலமடங்கு குறைந்துள்ளது.
அதே நேரம், வணிக கணிதம், 'அக்கவுன்டன்சி' எனப்படும் கணித பதிவியல் மற்றும் வணிகவியலில் அதிகம் பேர், 'சென்டம்' எடுத்துள்ளதால், கலை கல்லுாரிகளில், வணிகவியல் சார்ந்த பாடங்களுக்கு அதிக போட்டி ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு முதல், பி.காம்., மற்றும் கார்பரேட் செக்ரட்ரிஷிப் படிப்புகளுக்கு அதிக வேலைவாய்ப்பு ஏற்பட்டுள்ளதால், மாணவர்களின் கவனம் வணிகவியல் சார்ந்த படிப்புகளுக்கு திரும்பியுள்ளது. இதேபோல், சில கல்லுாரிகளில் இயற்பியல், ஆங்கிலம் போன்ற படிப்புகளுக்கும் அதிக போட்டி ஏற்பட்டுள்ளது.கல்லுாரிகளில் கூட்டம் அலை மோதுவதால், விண்ணப்பம் வாங்க, மாணவ, மாணவியர் நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. இதனால், அனைத்து கலை கல்லுாரிகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது.
No comments:
Post a Comment