தமிழக முதல்வராக 6வது முறையாக பதவியேற்கும் ஜெயலலிதா, ஆளுநர் ரோசய்யா முன்னிலையில் பதவியேற்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து ஆளுநர் ரோசய்யா வாசிக்க அதனை பின்தொடர்ந்து ரகசியக்காப்புப் பிரமாணமும் எடுத்துக் கொண்டார் ஜெயலலிதா.
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து முதல்வராக பதவியேற்றுக் கொண்டதற்கான ஆவணத்தில் முதல்வர் ஜெயலலிதா பச்சை நிறப் பேனாவால் கையெழுத்திட்டார். அதில் ஆளுநர் ரோசய்யாவும் கையெழுத்திட்டார்.
No comments:
Post a Comment