'அனைத்து பள்ளி மற்றும் கல்லுாரிகளிலும், ஜூன், 21ல், யோகா தினம் கொண்டாட வேண்டும்' என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நாட்டின் பாரம்பரிய உடற்பயிற்சி கலையான யோகாவை, உலகம் முழுவதும் பிரபலப்படுத்த, மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது. இதன் பலனாக, ஜூன், 21ம் தேதி, சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என, ஐ.நா., சபை அறிவித்தது.
இதன்படி, இரண்டு ஆண்டு களாக, பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில், யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், நாட்டின் அனைத்து பள்ளி, கல்லுாரி மற்றும் பல்கலைகளில், ஜூன், 21ம் தேதி, யோகா பயிற்சி வகுப்புகள் மற்றும் யோகா கண்காட்சி போன்ற பல நிகழ்ச்சிகள் நடத்த, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., மற்றும் பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி., ஆகியவை சுற்றறிக்கை அனுப்பியுள்ளன.
No comments:
Post a Comment