'எம்.எஸ்சி., படிப்பில் சேர, நாளை முதல், 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம்' என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.இதுகுறித்து அண்ணா பல்கலை, நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:அண்ணா பல்கலையின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லுாரிகளில், எம்.எஸ்சி., இரண்டு ஆண்டு படிப்பு; எம்.பில்., மற்றும் எம்.எஸ்சி., ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பில் சேர, 'ஆன்லைனில்' மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
'அப்ளைட்' கணிதம், கணிதம், 'கம்யூட்டர் சயின்ஸ், மெட்டீரியல் சயின்ஸ்', இயற்பியல், மருத்துவ இயற்பியல், தகவல் தொழில்நுட்பம், வேதியியல், ஊடக படிப்பு, 'அப்ளைட்' வேதியியல், ஆங்கிலம், 'அப்ளைட்' புவி அமைப்பியல் மற்றும், 'கிரிஸ்டல் சயின்ஸ்' போன்ற படிப்புகளில் சேரலாம்.அண்ணா பல்கலையின், www.annauniv.edu இணையதளம் மூலம், மே 25ம் தேதி முதல், ஜூன் 8ம் தேதிக்குள், 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment