Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
 • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
 • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

  Saturday, August 5, 2017

  அதிர வைத்த அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள்! மிரண்டு போன அரசு!!

  தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஆசிரியர்கள் சம்பள விவகாரம் தொடர்பாக சென்னை சேப்பாக்கதில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

  Wednesday, June 14, 2017

  மத்திய அரசு ஊழியர்களுக்கு "அலவன்ஸ்" அதிகரிப்பு

  அரசு ஊழியர்களுக்கு 7ஆவது பே கமிஷனின் பரிந்துரைப்படி அலவன்ஸ்கள் வரும் ஜூலை 1 முதல் வழங்கப்படும் என தெரிகிறது. அசோக் லாவசா தலைமையிலான கமிட்டி தனது அறிக்கையை அமைச்சரவைக்கு சமர்பித்துள்ளது. 

  Saturday, June 10, 2017

  தடுப்பூசி போடாவிட்டால், மாணவர்களுக்கு கிடுக்கிப்பிடி

  முறையாக தடுப்பூசி போடாத மாணவர்கள், பள்ளி களுக்கு செல்ல முடியாத வகையில், கிடுக்கிப்பிடி போட, பொது சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், பிறந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டாலும், தொடர்ந்து போட வேண்டிய தடுப்பூசிகள், ௨௦௦௭ முதல் முறையாக போடப்படாதது, ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. அதனால், சமீபத்தில், ரூபெல்லா - தட்டம்மை தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, ௧௫ வயது வரை உள்ளவர்களுக்கு, தடுப்பூசி போடப்பட்டது.

  வருமான வரி கணக்கு தாக்கல், பான் எண் பெற ஆதார் கட்டாயமில்லை: உச்ச நீதிமன்றம்

  வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய மற்றும் பான் எண் பெற ஆதார் எண் கட்டாயமில்லை என்று உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் ஜூலை மாதம் முதல் வருமான வரித் தாக்கல் செய்யவும், பான் எண் பெறவும் ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. மேலும், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை சேர்க்க வேண்டியதும் கட்டாயமாக்கப்பட்டிருந்த நிலையில் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

  ஐந்தாம் வகுப்பு முடித்த 33 மாணவர்கள் அனைவரையும் அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்த்த பள்ளி

  விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் ஒன்றியம், தொட்டியம், ஊ.ஒ.தொ.பள்ளிலிருந்து ஐந்தாம் வகுப்பு முடித்த 33 மாணவர்கள் அனைவரையும் தொட்டியம், அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்க்கும் விழா, விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி.கீதா தலைமை தாங்கினார்,

  சித்தா, ஆயுர்வேதம், யுனானி படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம்: மத்திய அரசு

  வரும் ஆண்டு முதல் மத்திய அரசின் 'ஆயுஷ்' துறையின் கீழ் வரும் சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட  படிப்புகளில் சேர்வதற்கும், 'நீட்' தேர்வு கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

  50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் பண மழை!

  7-வது ஊதியக்குழுவில் அறிவிக்கப்பட்ட சலுகைகள் அகவிலைப்படி ஆகியவை திருத்தி அமைக்கப்பட்டுள்ளதால், ஜூலை மாதத்தில் இருந்து  50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள்,மாற்றிஅமைக்கப்பட்ட சலுகைக்கான பணத்தை ஊதியத்தோடு சேர்த்து பெறுவார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

  தினமும் முட்டை சாப்பிட்டால் அதிகரிக்கும் குழந்தைகளின் வளர்ச்சி

  நாளொன்றுக்கு ஒரு முட்டை சாப்பிடுவது குழந்தைகளின் வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் என்று ஒரு புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. உடலுக்குத் தேவையான புரதச்சத்து முட்டையில் அதிகமுண்டு. வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லொரா இயனொட்டி இதைப்பற்றிக் கூறுகையில் “உலகம் முழுவதிலும் இருக்கும் வளர்ச்சி குறைபாட்டினை தீர்க்கும் சக்தி முட்டைக்கு உள்ளது, இளம் குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் முட்டையில் இருக்கிறது” என்றார்.

  Friday, June 9, 2017

  அரசு ஊழியர், ஆசிரியர் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க உத்தரவு வருகிறதா?- பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் சூசகம்!

  அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்குமாறு உத்தரவு வரவிருக்கிறதா? என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சூசகமாக பதிலளித்தார்.

  Thursday, June 8, 2017

  'நீட்' உள்ளிட்ட நுழைவு தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

  ''நீட் உட்பட, மத்-திய அரசின் நுழைவு தேர்-வு-களுக்கு, தமிழக மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறிஉள்ளார்.

  முதுகலை ஆசிரியர்கள் பணி இட ஒதுக்கீடு வழக்கு, பணி நியமன ஆணை வழங்கக்கூடாது

  சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் நலச் சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.நம்புராஜன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

  15ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறையின் மானியக் கோரிக்கையின் போது 41 அறிவிப்புகள் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்


  தமிழக அரசு பாடத்திட்டத்தில் யோகா மற்றும் சாலை விதிகள் விரைவில் சேர்க்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 41 அதிரடி அறிவிப்புகள் பற்றி வரும் 15ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கையின் போது வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

  பிளஸ் 1க்கு 'அட்மிஷன் கவுன்சிலிங்' : பள்ளிக்கல்வியின் அடுத்த அதிரடி


  1. இன்ஜி., - மருத்துவ கல்லுாரிகள் போன்று, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மதிப்பெண் அடிப்படையில், விரும்பிய பாடப்பிரிவில் சேர, பிளஸ் 1 வகுப்புக்கு, ஒற்றை சாளர கவுன்சிலிங் முறை கொண்டு வரப்படுகிறது.

  Wednesday, June 7, 2017

  'டெட்' தேர்வு விடைத்தாள் அடுத்த வாரம் திருத்தம்

  ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு விடைத்தாள் திருத்தம், அடுத்த வாரம் துவங்குகிறது. தமிழகம் முழுவதும், மூன்று ஆண்டுகளுக்கு பின், ஏப்., 29, 30ல், 'டெட்' தேர்வு நடந்தது. இதில், முதல் தாளில், இரண்டு லட்சத்து, 37 ஆயிரம் பேரும், இரண்டாம் தாளில், ஐந்து லட்சத்து, மூன்றாயிரம் பேரும் பங்கேற்றனர். கொள்குறி என்ற, 'அப்ஜெக்டிவ்' வகை, வினாத் தாள் அடிப்படையில் தேர்வு நடந்தது.

  பள்ளிக்கல்வி - முதன்மைக கல்வி அலுவலர்கள் பதவி உயர்வு, இடமாற்றம் அரசாணை


  Tuesday, June 6, 2017

  தொடக்கக் கல்வி - அரசு நலத்திட்டங்கள் 2012 - 13ம் கல்வியாண்டு முதல் 2017 - 18ம் கல்வியாண்டு முடிய ஒவ்வொரு நலத்திட்டங்களின் தலைப்பின் கீழ் பதிவேடுகள் உருவாக்கி தேவைப்பட்டியலின் படி பதிவுகள் மேற்கொண்டு பராமரிக்க இயக்குநர் உத்தரவு

  அ.தே.இ - மார்ச் / ஏப்ரல் 2018 அரசு பொதுத் தேர்வுகள் - இடைநிலை / மேல்நிலை முதலாம் ஆண்டு, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான தேர்வுகால அட்டவணை வெளியீடு

  தொடக்கக் கல்வி - 2017-18ஆம் கல்வியாண்டில் மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள், நோட்டு புத்தகங்கள் மற்றும் சீருடைகள் அனைத்தும் 06.06.2017க்குள் பள்ளிகளுக்கு வழங்க உத்தரவு


  தமிழகத்தில் முதல் முறையாக கல்வியாண்டு தொடங்கும் முன்பே தேர்வுக்கான அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டது


  திட்டமிட்டப்படி பள்ளிகள் 7ம் தேதி திறக்கப்படும்


  ஆங்கிலவழி கல்விக்கு மாறும் அரசு பள்ளிகள் அதிகரிப்பு : இந்தாண்டு பிளஸ் 1ல் அமல்

  ஆங்கிலவழி கல்வி துவங்க ஏராளமான அரசு பள்ளிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்தாண்டு பிளஸ் 1 வகுப்புகளில் ஆங்கிலவழி கல்வி செயல்படுத்த அரசு அனுமதித்துள்ளது.

  தமிழக பள்ளிகளில் மாணவர்களின் காலை வழிபாட்டு கூட்டம் 10 நிமிடமாக குறைப்பு

  தமிழக பள்ளிகளில் மாணவர்கள் காலை வழிபாட்டு கூட்டம் தொடர்பாக அரசு கடந்த 2012ம் ஆண்டு ஆணை வெளியிட்டது. இதன்படி திங்கட்கிழமை பொதுவழிபாட்டு கூட்டம், பிற நாட்களில் வகுப்பறை வழிபாட்டு கூட்டம் கொண்டுவரப்பட்டது. 

  நாளை அனைத்து பள்ளிகள் திறப்பு

  கோடை வெயில் காரணமாக நீட்டிக்கப்பட்ட விடுமுறை முடிந்து நாளை அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை பள்ளிக்கு வரும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச பாடப்புத்தகம், சீருடைகள் வழங்க பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. 

  Monday, June 5, 2017

  7 வது ஊதியம் ஆணையம்: மத்திய அரசு ஊழியர்களுக்கான அனைத்து ஊதியத் தொகையின்கீழ் திருத்தப்பட்ட ஊதியம்


  7வது சம்பள கமிஷனின் பரிந்துரையின் படி, மத்திய அரசு ஊழியர்களின் மாத வருமானம் ரூ .7,000 இலிருந்து ரூ. 18,000 ஆக குறைந்தபட்ச ஊதியத்தை மத்திய அரசு அதிகரித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் திருத்தப்பட்ட வருமானம் 9,300 முதல் 34,800 ஊதியம் வரை அதிகரித்துள்ளது.

  அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்; திருவண்ணாமலை கலெக்டர் துவக்கி வைப்பு


  தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க பரிசீலனை: அமைச்சர் செங்கோட்டையன்

  தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருவதாகவும், பத்திரப் பதிவுத் துறையிலும் நல்ல அறிவிப்பு வெளிவர இருக்கிறது எனவும் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

  பாடத்திட்ட மாற்றத்திற்கான உயர்மட்ட குழு 2 நாட்களில் அமைக்கப்படும்

  தமிழக பள்ளிகளுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக இன்னும் 2 நாட்களில் உயர்மட்ட குழு அமைக்கப்படும் என்று தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

  பகுதிநேர ஆசிரியர்களுக்கு சிறப்பு ஊதியம்

  தமிழகத்தில் பணியாற்றும் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

  Saturday, June 3, 2017

  தமிழக பள்ளிக்கல்வித் துறையில் நாடே திரும்பிப்பார்க்கும் அறிவிப்புகளை ஜூன் 6 ம் தேதி வெளியிட போகிறோம்" - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேட்டி

  பள்ளிக் கல்வித் துறையில் நாடே திரும்பிபார்க்கும் வகையில் 41 அறிவிப்புகளை முதலைமைச்சரிடம் அனுமதி பெற்று வரும் 6 ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

  ** எடப்பாடி பழனிச்சாமி அரசு பதவியேற்ற பிறகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் நியமிக்கபட்டார்.

  ஊதிய குழு பரிந்துரை : கருத்து கேட்பு முடிவு


  ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை தொடர்பான, கருத்து கேட்பு கூட்டம், சென்னையில், இன்று நிறைவு பெறுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள், 2016ல் அமல்படுத்தப்பட்டன. அதை, தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும் என, அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

  பிளஸ் 2 மறுமதிப்பீடுக்கு இன்று முதல் விண்ணப்ப பதிவு

  பிளஸ் 2 விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு, இன்று முதல், 6ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். பிளஸ் 2 தேர்வின் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்கு, நேற்று இணையதளம் மூலம் விடைத்தாள் நகல் வழங்கப்பட்டது. இதில், மதிப்பெண்கள், கூட்டு எண்ணிக்கையை, மாணவர்கள் ஆய்வு செய்யலாம். 

  பள்ளி மாற்று சான்றிதழில் 'ஆதார்' எண் பதிய உத்தரவு

  அரசு பள்ளி மாணவர்களுக்கான மாற்று சான்றிதழில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 'ஆதார்' எண் மற்றும் மாணவர் வருகை நாட்களை, பள்ளி மாற்று சான்றிதழில் குறிப்பிட உத்தரவிடப்பட்டுள்ளது.

  வேலூர் மாவட்டத்தில் கல்விதரம் மேம்படுத்த 3 கல்வி மாவட்டங்களாக பிரிப்பு பள்ளிக்கல்வி இயக்குனரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

  கல்வி தரத்தை மேம்படுத்த `வேலூர் மாவட்டம்'' 3 கல்வி மாவட்டங்களாக பிரிப்பதற்கு பள்ளிக்கல்வி இயக்குனரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் 20 ஒன்றியங்களில் 1628 தொடக்கப்பள்ளிகளும், 509 நடுநிலைப்பள்ளிகளும், 197 உயர்நிலைப்பள்ளிகளும், 208 மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன.

  Friday, June 2, 2017

  பிளஸ் 2 தேர்வில் மறுமதிப்பீடு 'நோ'

  சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான, பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 28ல் வெளியாகின. மாணவர்களுக்கு, 'டிஜி லாக்கர்' என்ற, டிஜிட்டல் முறையில், மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. 

  பள்ளி மாற்று சான்றிதழில் 'ஆதார்' எண் பதிய உத்தரவு

  அரசு பள்ளி மாணவர்களுக்கான மாற்று சான்றிதழில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 'ஆதார்' எண் மற்றும் மாணவர் வருகை நாட்களை, பள்ளி மாற்று சான்றிதழில் குறிப்பிட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளிலிருந்து, வேறு பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு, இதுபோன்ற விபரங்கள் அடங்கிய, மாற்று சான்றிதழ் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  இடைநிலை ஆசிரியர் ஒதுக்கீடு : அரசு அறிவிப்பால் குழப்பம்

  முதுநிலை ஆசிரியர் நியமனத்தில், இடைநிலை ஆசிரியர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்திருப்பது, ஆசிரியர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 2,500க்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில், 1,663 இடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., சார்பில், ஜூலை, 7ல், தேர்வு நடத்தப்படுகிறது. 

  1,111 ஆசிரியர் பணியிடம் : ஜூன் 8ல் சான்றிதழ் சரிபார்ப்பு

  அரசு பள்ளிகளில் 1,111 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஜூன், 8 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 286 பட்டதாரி ஆசிரியர்; 623 பின்னடைவு இடங்கள், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ், 202 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என, 1,111 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த இடங்கள், ஏற்கனவே நடந்த ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மூலம், நிரப்பப்படும் என, அறிவிக்கப்பட்டது.

  தொலைநிலை கல்வியில் பிஎச்.டி., படிக்க தடை

  தொலைநிலை கல்வியில் ஆராய்ச்சி படிப்புகள் நடத்தவும், எம்.பில்., மற்றும் பிஎச்.டி., பட்டம் வழங்கவும், மத்திய அரசு தடை விதித்துள்ளது. மத்திய அரசின் பல்கலைக்கழக மானிய குழுவான, யு.ஜி.சி., சார்பில், ஆராய்ச்சி படிப்புகளுக்கு, பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. 

  மாநில அளவிலான செஸ் போட்டி : அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்!

  Wednesday, May 31, 2017

  பள்ளிக்கல்வி - ஜுன் 7ஆம் தேதி பள்ளிகள் நாள் - மாணவர் சேர்க்கை - பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய ஆயுத்தப் பணிகள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகள்

  Direct Recruitment of Graduate Assistants - 2016 - Please click here for Certificate Verification List and Individual Candidate Query


  Dated: 31-05-2017

  Chairman

  Direct Recruitment of Post Graduate Assistants for the year 2015 - 16 and 2016 - 17 - Please click here for Corrigendum & G.O MS.110 dated 26.05.2017


  Direct Recruitment of Post Graduate Assistants for the year 2015-2016 and 2016-17
            

  Dated: 30-05-2017

  Chairman

  Tuesday, May 30, 2017

  "நீட்" எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை குறித்து ஒரு வாரத்தில் தெளிவான முடிவு

  எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை குறித்து ஒரு வாரத்தில் தெளிவான முடிவு எடுக்கப்படும் என்று சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள நல வாழ்வு மற்றும் குடும்ப நல பயிற்சி மையத்தில் சுகாதார துறை சார்பில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களின் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு முன்னதாக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக நிருபர்களை சந்தித்து கூறியதாவது:

  பள்ளி கல்வி துறை: முதல்வர் ஆய்வு

  பள்ளிக் கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து, முதல்வர் பழனிசாமி, நேற்று ஆய்வு செய்தார். அடுத்த மாதம், சட்டசபை கூட உள்ளது. இதையொட்டி, முதல்வர் பழனிசாமி, ஒவ்வொரு துறை வாரியாக, ஆய்வு நடத்தி வருகிறார். நேற்று, சென்னை, தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து, ஆய்வு செய்தார்.

  SG Teacher - Inter District Transfer Counselling - Seniority List - REVISED

  தொடக்கக் கல்வி - தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் - கோடை விடுமுறை முடிந்து 2017-18ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் திறத்தல் சார்ந்து ஆயத்தப் பணிகள் மேற்கொள்ள இயக்குனர் உத்தரவு

  கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் விண்ணப்பித்தவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஜூன் 5ல் பள்ளிகளில் சேர்ப்பு: தமிழக அரசு

  இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி பள்ளிகளில் இடம் கோரி விண்ணப்பிருந்த குழந்தைகளில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜூன் 5ம் தேதிக்குள் பள்ளிகளில் சேருவதற்கான சேர்க்கை வழங்கப்படும் என்று பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.

  கணினி ஆசிரியர்களின் வேலை வாய்ப்பு குறித்து முதல்வரின் தனிப்பிரிவு மூலம் பெறப்பட்ட பதில்

  உடற்கல்வி ஆய்வாளர் நியமனம்; பள்ளிக்கல்வி இயக்குநருக்கு ஐகோர்ட் புது உத்தரவு

  தமிழகத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் கடந்த 1985 முதல் 1990 வரை உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்த மோகன் குமார் உள்ளிட்ட 8 பேர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: 

  இன்ஜினியரிங் படிக்க ஆன்லைன் பதிவுக்கு நாளை கடைசி நாள்

  அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இன்ஜினியரிங் படிப்பதற்கு ஆன்லைனில் பதிவு செய்தவற்கு நாளை கடைசி நாளாகும். அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன்கீழ் செயல்படும் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் இன்ஜினியரிங் படிக்க அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் பதிவு மே 1ம் தேதி தொடங்கியது. ஆன்லைனில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உரிய அவணங்களுடன் ஜூன் 3ம் தேதிக்குள் தபால் மூலமோ நேரிலோ அண்ணா பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

  Monday, May 29, 2017

  அகஇ - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான வட்டார மைய அளவில் "தமிழ், கணக்கு, அறிவியல் மற்றும் சமூகவியல்" ஆகிய பாடங்களில் முதற்கட்டமாக 10.07.2017 முதல் 14.07.2017 வரையிலும், இரண்டாம் கட்டமாக 24.07.2017 முதல் 28.07.2017 வரையிலும் நடைபெறவுள்ளது


  SMS மூலம் இலவசமாக நமது வங்கி இருப்பை தெரிந்து கொள்வது எப்படி?

  தற்பொழுது ஒரு மாதத்திற்கு 5 முறை மட்டுமே இலவசமாக ATM எந்திரம் வழியே பணம் எடுக்கவோ அல்லது வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை பார்க்கவோ முடியும்.

  **அதற்கு மேல் பார்த்தால் ஒவ்வொரு முறைக்கும் 20 ரூபாய் பிடித்துக்கொள்ளப்படுகின்றது.

  **இதனால் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  பள்ளிக் கல்வித் துறையில் நாடே வியக்கும் அளவுக்கு மேலும் புதிய திட்டங்கள்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

  திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 409 மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு 2018 மே மாதம் வரையிலான தற்காலிக அங்கீகாரம் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி சமயபுரம் எஸ்ஆர்வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது.

  Sunday, May 28, 2017

  DEE - SG Teacher - Inter District Transfer Counselling - Seniority List

  பள்ளிக்கல்வி - மேல்நிலைக் கல்வி பாடத்திட்டம் - மேல் நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டில் மாநில அளவிலான அரசு பொதுத் தேர்வு நடத்த அரசு உத்தரவு

  பள்ளிக்கல்வி - இடைநிலை / சிறப்பு / உடற்கல்வி ஆசிரியர் பதவியிலிருந்து அறிவியல் பட்டதாரி பதவி உயர்வு - இறுதி முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு

  பள்ளிக்கல்வி - பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கு அழைக்கப்பட வேண்டியவர்கள் எண்ணிக்கை (அனைத்து பாடங்கள்)

  Saturday, May 27, 2017

  பிறப்பு, இறப்பு பதிவு சான்று : தமிழக அரசு புது உத்தரவு


  'ஓராண்டுக்கு மேல் பிறப்பு, இறப்புக்களை பதிவு செய்யாவிட்டாலும், அதற்கான சான்றிதழ் பெற, நீதிமன்றம் செல்லாமல், கோட்டாட்சியர்களான, ஆர்.டி.ஓ.,க்களிடம் விண்ணப்பிக்கலாம்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

  பல்கலை. துணைவேந்தர்கள் நியமனம்

  அமைச்சர் அன்பழகன் கூறியதாவது: சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக துரைசாமி நியமனம்


  மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லதுரை நியமனம்

  12,000 பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் குறித்து வரப்போகும் சட்டப் பேரவை கூட்டத் தொடரில் முடிவு!

  பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் 12,000 பேருக்கு சம்பள உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்யும் தீர்மானம் குறித்து விரைவில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

  Wednesday, May 24, 2017

  'நீட்' தேர்வு முடிவுகளை வெளியிட தடை; உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

  தமிழ் மற்றும் ஆங்கில வழித் தேர்வுகளில் வினாக்கள் மாறுபட்டு இருந்ததால் மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். 

  பள்ளி திறப்பு தள்ளி போகுமா? அரசு 2 நாளில் முடிவு!

  கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்று 2 நாட்களில் முடிவு செய்யப்படும் என்று அரசு கூறியுள்ளது.

  ஒரு நபர் குழு ஊதிய முரண்பாடுகளை கலைத்திடவும், மறுநிர்ணயம் செய்திடவும் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்திற்கு 26.05.17 அன்று அழைப்பு!

  பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் வேண்டுகோளை ஏற்று அமைச்சர்கள் ஆலோசனை !

  பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் வேண்டுகோளை ஏற்று,
  தமிழகத்தில், அரசு பள்ளிகளில், உட்கட்டமைப்புகளை மேம்படுத்த, தொழில் அதிபர்கள் முன் வந்துள்ளனர். அவர்களுடன், நேற்று தலைமை செயலகத்தில், அமைச்சர்கள் செங்கோட்டையன், பெஞ்சமின் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

  சட்டப் படிப்பில் சேர வயது உச்ச வரம்பு இல்லை: 2017-18 கல்வியாண்டுக்கு மட்டும் பொருந்தும்.

  தமிழகத்தில் சட்டப் படிப்புகளில் சேருவதற்கு இந்தக் கல்வியாண்டில் (2017-18) மட்டும் வயது உச்ச வரம்பே கிடையாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. வயது வரம்பு நீக்கப்பட்டது ஏன்?: நாடு முழுவதும் வழங்கப்பட்டு வரும் சட்டப் படிப்புகள் அனைத்தையும் இந்திய பார் கவுன்சில் (பிசிஐ) கட்டுப்படுத்தி வருகிறது.

  1 முதல் பிளஸ் 2 வரை பாடத்திட்டம் மாற்றம்! மனப்பாட கல்வி முறைக்கு 'குட்பை'

  மனப்பாட கல்விமுறையை கைவிடும்வகையில், ஒன்று முதல்பிளஸ் 2 வகுப்பு வரை,பாடத்திட்டம்மாற்றப்படுகிறது.அறிவியல் பாடத்தில்,கணினி அறிவியலும் இடம்பெறுகிறது. பள்ளிபாடத்திட்ட மாற்றத்திற்கான அரசாணையை, பள்ளிக்கல்வி செயலர்உதயசந்திரன், நேற்றுவெளியிட்டு உள்ளார்.

  அரசுப் பள்ளி இனி கணினி பள்ளி!!

  அரசுப்பள்ளி மாணவர்கள் ,40000பி.எட் படித்த கணினி ஆசிரியர்கள் வாழ்வில் தமிழக அரசு ஒளி!!

  6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை அரசுப்பள்ளியில் கொண்டுவந்து அரசுப்பள்ளியன் தரத்தை அயல் நாட்டுக் கல்வியின்  தரத்திற்க்கு இணையாக கொண்டு சென்ற மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை    அமைச்சர் ஐயா அவர்களுக்கும், மதிப்புமிகு கல்வி செயலாளர், இயக்குனர், இணை இயக்குனர் அவர்களுக்கும் 40000 பி.எட் கணினி ஆசிரியர்கள் குடும்பங்களின் சார்பிலும், தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கதத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை  தெரிவித்துக் கொள்கின்றோம்.

  Tuesday, May 23, 2017

  பொது மாறுதல் - 2017-18ஆம் கல்வியாண்டில் கலந்தாய்விற்கான திருத்திய கால அட்டவணை வெளியீடு

  பள்ளிக்கல்விப் பாடத்திட்டம் - 1 முதல் 10ஆம் வகுப்பு பாடத்திட்டம் மற்றும் 11, 12ஆம் வகுப்பு பாடத்திட்டம் மாற்றி அமைத்தல் - ஆணை வெளியீடு


  காலாவதியாகும் ஆசிரியர் பணியிடங்கள்

  அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்கள் குறைந்ததால் மாநிலம் முழுவதும் ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலாவதியாகின்றன.

  பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம்: மொத்த மதிப்பெண் 600 ஆக குறைகிறது

  வரும் கல்வியாண்டு முதல், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, கட்டாய பொதுத்தேர்வு அமலுக்கு வருகிறது. இரண்டு தேர்வுகளின் மொத்த மதிப்பெண், 1,200க்கு பதிலாக, 600 ஆக குறைக்கப்படுகிறது.

  7-வது சம்பள கமி‌ஷன் பரிந்துரைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த வாரம் அலவன்ஸ் அறிவிப்பு வெளியாகிறது!

  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது சம்பள கமி‌ஷன் சிபாரிசுப்படி சம்பள உயர்வு அளிக்கப்பட்டது. இதில் 196 விதமான அலவன்ஸ் (படிகள்)களை சம்பள கமி‌ஷன் மாற்றி அமைத்து சிபாரிசு செய்து இருந்தது.

  அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு; இனி டி.சி., தேவைபடாது: அமைச்சர் செங்கோட்டையன்

  அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும், பள்ளிகளில் மாற்று சான்றிதழ் முறை தேவைப்படாது எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

  விரைவில் தமிழக அரசு ஊழியர்களுக்கு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம்!


  மத்திய அரசின் 7-வது் ஊதியக்குழு பரிந்துரைகளை தமிழகத்தில் அமல்படுத்துவதற்கான பணிகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதன் அடிப்படையில், `ஊதியக் குழு ஊதிய மாற்றம் - ஊதியக் குழு அறிக்கைக்கு முன் ஊதிய மாற்றம் செய்தல் தொடர்பான பரிசீலனைக்கு தமிழக அரசு  அனைத்துத் துறைகளில் இருந்தும் விபரம் கோரியுள்ளது. 

  Monday, May 22, 2017

  பள்ளிக்கல்வித் துறையில் கொண்டுவரப்பட உள்ள மாற்றங்கள்


  கடந்த சில மாதங்களாக பள்ளிகல்வித்துறையில் அதிரடியாக சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் இந்த மாற்றங்கள் பல கல்வி ஆளுமைகளால் வரவேற்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பள்ளிக்கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் 


  ➤கோடை விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது. 

  ➤அடுத்து கல்வியாண்டில் இருந்து 11ம் வகுப்புக்கு பொது தேர்வு 

  பள்ளிகளில் சுகாதார பணியாளர்கள் உடனே நியமிக்க வேண்டும்

  இரண்டாண்டு முன் பள்ளிகளில், கழிப்பறை மற்றும் துாய்மை பணிகளை செய்ய உள்ளாட்சி அமைப்புகளிடம் அரசு ஒப்படைத்தது. அப்போது துாய்மை பணிகள் முழுமையாக நடைபெறவில்லை. தற்போது உள்ளாட்சி அமைப்புகள் இல்லாத நிலையில், நுாறு நாள் வேலை திட்டத்தில் துாய்மை பணி மேற்கொள்ளப்போவதாக வெளியான தகவலையடுத்து முழு அளவில் இந்த பணி நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. 

  தமிழ் நாடு பள்ளிக்கல்விப் பணி - 2017-18ம் கல்வியாண்டில் இன்று நடைபெறவிருந்த அரசு / நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு தற்காலிகமாக ஒத்திவைப்பு


  Tamil Nadu Teachers Eligibility Test (TNTET) - 2017 - Please click here for Tentative Key Answers - Paper I and II

  Sunday, May 21, 2017

  7-வது சம்பள கமி‌ஷன் பரிந்துரைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த வாரம் அலவன்ஸ் அறிவிப்பு வெளியாகிறது!

  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது சம்பள கமி‌ஷன் சிபாரிசுப்படி சம்பள உயர்வு அளிக்கப்பட்டது. இதில் 196 விதமான அலவன்ஸ் (படிகள்)களை சம்பள கமி‌ஷன் மாற்றி அமைத்து சிபாரிசு செய்து இருந்தது. இதை அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை வழங்க நிதித்துறை செயலாளர் அசோக் லவசா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.

  Friday, May 19, 2017

  தமிழகத்தில் உள்ள கலந்தாய்வு மற்றும் மாணவர்கள் சேர்க்கை போன்ற அவசர பணிகாக மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு 20,21.05.2017 அன்று வேலை நாட்களாக அறிவிப்பு


  மாவட்டம் வாரியாக தேர்ச்சி விகிதம்

  • 98.5% பெற்று விருதுநகர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. 
  • 98.17% எடுத்து கன்னியாகுமரி  இரண்டாவது இடத்திலும் 
  • 98.16% எடுத்து ராமநாதபுரம்  மூன்றாவது இடத்திலும் உள்ளது. 
  • 97.97% எடுத்து ஈரோடு நான்காவது இடத்திலும், 
  • 97.16% எடுத்து தூத்துக்குடி ஐந்தாவது இடத்திலும், 
  • 97.10% எடுத்து தேனி  மாவட்டம் 6 வது இடத்திலும், 
  • 97.06% எடுத்து திருப்பூர் ஏழாவது இடத்திலும் உள்ளது. 

  தேர்ச்சி குறைந்த பள்ளிகள்; செயல் திறன் அறிக்கை தயாரிக்க உத்தரவு

  பிளஸ் 2 தேர்வில் குறைந்த தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், செயல்திறன் அறிக்கையை தாக்கல் செய்ய, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், 57 ஆயிரம் பள்ளிகள் செயல்படுகின்றன. அரசு மற்றும் தனியார் தரப்பில், 6,700 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. ஆண்டுதோறும், பள்ளிக்கல்வி வளர்ச்சிக்காக, 24 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல், நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

  10ம் வகுப்பு தேர்வு; பள்ளிகள் வாரியான தேர்ச்சி மதிப்பீடு

  பள்ளிகள்
  தேர்வெழுதியவர்கள்
  தேர்ச்சி பெற்றவர்கள்
  சதவீதம்
  ஆதி திராவிடா பள்ளிகள்
  10293
  8931
  86.77
  ஆங்கிலோ இந்தியன்
  3946
  3863
  97.9
  கன்டான்மென்ட் போர்டு
  402
  351
  87.31
  மாநகராட்சி பள்ளிகள்
  10937
  10229
  93.52
  வனத் துறை
  312
  291
  93.27
  உதவி பெறும் பள்ளிகள்
  175020
  164972
  94.26
  அரசு பள்ளிகள்
  403513
  369572
  91.59
  அறநிலைய பள்ளிகள்
  580
  538
  92.76

  10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்; மதிப்பெண் முறை வெளியீடு

  இந்த ஆண்டு வெளியிடப்பட்ட 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளில் 'ரேங்கிங்' முறை கிடையாது' என தமிழக கல்வித்துறை அறிவித்தது. அதன்படி வெளியிடப்பட்ட மதிப்பெண் முறை விவரம்:

  மொத்த மதிப்பெண்
  மாணவர்கள்
  மாணவியர்
  திருநங்கை
  மொத்தம்
  சதவீதம்
  481 மேல்
  11,625
  26,988
  0
  38,613
  3.93%
  451-480
  46,915
  75,842
  0
  1,22,757
  12.50%
  426-450
  48,149
  65,681
  1
  1,13,831
  11.59%

  10ம் வகுப்பு தேர்வு 2017; பாடப்பிரிவு வாரியான தேர்ச்சி விவரம்


  மொழிப்பாடம்
  ஆங்கிலம்
  கணிதம்
  அறிவியல்
       சமூக அறிவியல்
  தேர்வெழுதியவர்கள்  மாணவர்
  4,90,870
  4,90,870
  4,90,870
  4,90,870
  4,90,870
  மாணவியர்
  4,91,226
  4,91,226
  4,91,226
  4,91,226
  4,91,226
  திருநங்கை
  1
  1
  1
  1
  1
  மொத்தம்
  9,82,097
  9,82,097
  9,82,097
  9,82,097
  9,82,097

  பாடவாரியாக ‘சென்டம்’ பெற்றவர்கள் எத்தனை பேர்?

  இன்று வெளியிடப்பட்டுள்ள 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளின்படி, பாடவாரியாக 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை விபரம்:

  மொழிப்பாடம்: 69 பேர்
  ஆங்கிலம்: 0 
  கணிதம்: 13,759 பேர்
  அறிவியல்: 17,481 பேர்
  சமூக அறிவியல்: 61,115 பேர்

  பிளஸ் 2 தேர்ச்சி குறித்து விளம்பரம் செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: பள்ளிக் கல்வித்துறை

  அரசாணையை மீறி பிளஸ் 2 தேர்ச்சி குறித்து விளம்பரம் செய்த தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பள்ளிக் கல்வித்துறையின் உயர்மட்டக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி பொதுத்தேர்வுகளில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான தரப் பட்டியல் வெளியிடும் முறை கைவிடப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டது.

  மாணவர் எண்ணிக்கை 10 கீழ் குறைந்தாலும் பள்ளி மூடப்படாது: தொடக்கக் கல்வித்துறை

  தொடக்கப் பள்ளிகளில் 10 க்கும் குறைவான மாணவர்கள் இருந்தாலும், அவற்றை மூடாமல் இருக்க 3 ஆண்டுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில் 10 க்கும் குறைவான மாணவர்கள் இருந்தாலும், அவற்றை மூடாமல் இருக்க 3 ஆண்டுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகள் வருகை, ஆங்கிலவழிக் கல்வி மோகம் போன்ற காரணங்களால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது.

  அஞ்சல் துறை தேர்வு ரத்து: இணையதளத்தில் அறிவிப்பு

  முறைகேடு நடந்திருக்கலாம் எனப் புகார் தெரிவிக்கப்பட்ட தபால் துறை தேர்வு ரத்து செய்யப்படுவதாக, தமிழ்நாடு அஞ்சல் வட்ட இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அஞ்சல் வட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட தபால்காரர் மற்றும் மெயில் கார்டு பணிக்கான தேர்வு 2016 டிசம்பர் 11-ஆம் தேதி நடத்தப்பட்டது. மெட்ரிக் அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கல்வித் தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.

  Thursday, May 18, 2017

  நடுநிலைப்பள்ளி தலைமையாசியர் பதவி உயர்வுக்கு வழங்கப்பட்டிருந்த தடையை நீங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை

  தொடக்கக் கல்வி துறையின் சார்பில் நடுநிலை  பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க கோரிய       வழக்கில் மதுரை உயர் நீதிமன்றம் தடையை நீக்கியது. அனைத்து சங்கங்களும்தடையை  நீக்கக்கோரி வைத்த  கோரிக்கையினையும் ஏற்று தொடக்கக் கல்வி துறையின் சார்ப்பில் தடையை நீக்கக்கோரி வழக்கு போடப்பட்டிருந்தது. இன்று மதியம் இவ்வழக்கு மதுரை உயர்நீதி மன்றகிளையில் எடுத்துக் கொள்ளப்பட்டு தடையை விலக்கியது.