தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்ட, துாய்மையான உயர் கல்வி நிறுவனங்கள் பட்டியலில், முதல், 25 இடங்களில், 12 இடங்களை தமிழகத்தைச் சேர்ந்த கல்லுாரிகள் பெற்றுள்ளன.
துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், 2017ம் ஆண்டுக்கான, துாய்மையான தனியார் பல்கலை, கல்லுாரி, தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களை, மத்திய அரசின், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை தேர்வு செய்துள்ளது. நாடு முழுவதும் இருந்து, 3,500 கல்வி நிறுவனங்கள் விண்ணப்பித்தன.
இதில், துாய்மையான, முதல், 25 உயர் கல்வி நிறுவனங்கள் பெயர் பட்டியலை, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, பிரகாஷ் ஜாவடேகர், டில்லியில் நேற்று வெளியிட்டார். இதில், 12 இடங்களை தமிழகத்தைச் சேர்ந்த, உயர் கல்வி நிறுவனங்கள் பிடித்துள்ளன.
துாய்மையான கல்லுாரிகள் பட்டியலில், ஈரோட்டிலுள்ள, கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, முதலிடம் பிடித்தது. தொழில் நுட்ப கல்லுாரிகள் பட்டியலில், கோவை, அம்ரிதா விஷ்வா வித்யாபீடம், முதலிடம் பிடித்தது.
No comments:
Post a Comment