Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
 • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
 • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

  Tuesday, September 19, 2017

  கல்வி செயலாளர் உதயசந்திரன் நீக்கப்படவில்லை; தமிழக அரசு பதில்

  'பள்ளிகளுக்கு, புதிய பாடத் திட்டத்துக்கான வரைவு, நவம்பரில் வெளியிடப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது. கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன் நீக்கப்படவில்லை என்றும் வரும் நவம்பரில் தமிழகப் பள்ளிகளுக்கு புதிய வரைவு பாடத்திட்டம் வெளியிடப்படும். தமிழகத்தில் பள்ளிகளுக்கு புதிய  பாட திட்டம் தயாரிப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தலைமையில் உயர் மட்ட குழுவும், கல்வியாளர்கள் அடங்கிய பாடத் திட்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. 


  இக்குழுவில் இடம் பெற்றுள்ள பள்ளிக்கல்வித் துறை செயலாளர் உதய சந்திரன் உள்ளிட்ட எந்த உறுப்பினர்களையும் நீக்க கூடாது என கோரி காஞ்சிபுரத்தை சேர்ந்த ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், உதய சந்திரன் உள்ளிட்ட எந்த உறுப்பினர்களையும் நீக்க கூடாது என உத்தரவிட்டிருந்தார்.

  வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, உதயசந்திரனை நீக்கிவிட்டு, பிரதீப் யாதவை செயலாளராக அரசு நியமித்துள்ளது என மனுதாரர் தரப்பு வக்கீல் நீதிபதியிடம் தெரிவித்தார்.  இதைக்கேட்ட நீதிபதி, மாணவர்களின் கல்வி சம்பந்தப்பட்ட விஷயத்தில் விளையாடக் கூடாது. அந்த அதிகாரியை மாற்றியது ஏன்? என்று கேட்டார்.

  அதற்கு பதிலளித்த அரசு வக்கீல், உதய சந்திரன் நீக்கப்படவில்லை. அதே நேரத்தில் துறையின் முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய பாட திட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. வரும் நவம்பர் மாதம் புதிய பாடத்திட்ட வரைவு வெளியிடப்படும் என்று நீதிபதியிடம் தெரிவித்தார்.

  இதையடுத்து, உதய சந்திரன் நீக்கப்படவில்லை என்பது குறித்து மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை அக்டோபர் 5ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

  இந்நிலையில், நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வக்கீல் சூரியப்பிரகாசம் ஆஜராகி, நீதிபதியிடம் பள்ளிகளில் அறிவியல் பாடம் நடத்தும் ஆசிரியர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. இதனால், நீட் போன்ற தேர்வுகளை எழுத மாணவர்கள் கடும் சிரமப்படுகிறார்கள் என்றார்.

  இதைக் கேட்ட நீதிபதி, அரசு வக்கீலைப் பார்த்து, ஏற்கனவே, இந்த விஷயத்தில் உயர் நீதிமன்றம் அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது. ஏன் உத்தரவை அமல்படுத்தவில்லை. மனுதாரரின் கோரிக்கை குறித்து விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

  1 comment:

  Anonymous said...

  It boasts many glowing reviews from past and present gamers and has a strong historical past of honouring payouts. We included MagicRed Casino on our list of the seven high on-line casinos end result of} its excellent reputation, incredible choice of video games, and beneficiant welcome bonus. Whether you’re looking for 카지노사이트 stay dealer video games, a sportsbook, or cellular video games, our list of the top on-line casinos within the UK is a good place begin out|to begin}. Depending on the welcome bonus and on-line on line casino provider, some will allow you to use stay dealer, some is not going to, and a few bonuses may be be} solely for stay dealer video games. As a general notice, clearing a bonus with common video games like slots is far easier than doing it through Live Dealer video games. All bonuses have wagering necessities, which primarily signifies that customers looking to secure the bonus will have to wager sure amount|a specific amount|a certain quantity} on specific video games find a way to} money out the bonus funds.