ஆசிரியர்கள் தொடர் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளதால், திட்டமிட்டபடி காலாண்டு தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. தமிழகத்தில், பழைய &'பென்ஷன்&' திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பினர், போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
ஆகஸ்ட், 22ல் நடந்த வேலைநிறுத்த போராட்டத்தில், 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றதால், பள்ளிகளில் திறந்திருந்தாலும், வகுப்புகள் நடைபெறவில்லை. தற்போது செப்., 11 முதல், பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் ௧௦ம் வகுப்புகளுக்கு, காலாண்டு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், செப்., 7 முதல், தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். இதனால், திட்டமிட்டபடி காலாண்டு தேர்வு நடக்குமா என்பது குறித்து, மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
இது குறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஆண்டு துவங்கிய போராட்டம் இது. தேர்தல் அறிக்கையில் அறிவித்தும், தற்போதைய அரசு நடவடிக்கை எடுக்காததால், தொடர் வேலைநிறுத்தம் என்ற முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
அரசு சார்பில், நாளை பேச்சு நடத்த அழைக்கப்பட்டிருப்பினும், கோரிக்கை ஏற்காவிட்டால், வேலைநிறுத்தம் தொடரும். பெரும்பாலான ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் நிலையில், தேர்வுகளை நடத்த முடியாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment