இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள இடங்களுக்கு விரைவில் ஆட்களை வேலைக்கு அமர்த்த ரயில்வே அமைச்சகம் முடிவு எடுத்து உள்ளது. மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டதும் பியுஷ் கோயலுக்கு ரயில்வே துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் ரயில்வே ஒரு லட்சம் காலியிடங்களை நிரப்ப முடிவு செய்து உள்ளது . அது பாதுகாப்பு பிரிவின் கீழ் வரும் துறைகளுக்கு ஒரு லட்சம் பேரை வேலைக்கு அமர்த்த இந்தியன் ரெயில்வே முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பயணிகள் பாதுகாப்புக்கு முக்கியம்
பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையாக இந்திய பெரிய முடிவுக்கு ரயில்வே அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது .ரெயில் விபத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என ரெயில்வே அமைச்சகம் நம்புகிறது, சமீபத்திய தொழில்நுட்பம், உபகரணங்கள் மற்றும் கருவிகளை கையாளும் வகையில் ரெயில்வேக்கு பணியாளர்கள் தேவையானது உள்ளது. வீடியோ கான்பரன்ஸ் வழியாக பிராந்திய நிர்வாகிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனையை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
No comments:
Post a Comment