'கரூர், சணப்பிரட்டி அருகே, மருத்துவ கல்லுாரி அமைக்கும் பணிகள் விரைவில் துவங்கும்,&'&' என, டீன் ரேவதி கூறினார். கரூர் மாவட்டத்தில், அரசு மருத்துவ கல்லுாரியை, குப்புச்சிபாளையத்தில் அமைக்க வேண்டும் என, ஒரு தரப்பும், சணப்பிரட்டியில் அமைக்க வேண்டும் என, மற்றொரு தரப்பும் போராட்டங்கள் நடத்தி வந்தன. இது தொடர்பான வழக்கை விசாரித்த, உயர் நீதிமன்ற மதுரை கிளை, &'சணப்பிரட்டியில் கல்லுாரியை அமைக்கலாம்&' என, உத்தரவிட்டது.
கரூர் மருத்துவக் கல்லுாரி டீன் ரேவதி கூறுகையில், &'&'மருத்துவக் கல்லுாரி அமைக்க, ஒதுக்கப்பட்ட நிதி அப்படியே உள்ளது. நீதிமன்ற உத்தரவு நகல் வந்த பின், பணிகள் உடனடியாக துவக்கப்படும். அடுத்த ஆண்டில், மாணவர் சேர்க்கை துவங்குமா என்பது குறித்து, தற்போது கூற இயலாது,&'&' என்றார்.
No comments:
Post a Comment