Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, September 15, 2017

    கோரிக்கைகள் மீதான மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவாதத்தை ஏற்று வேலைநிறுத்தம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

    உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று நடைபெற்ற JACTTO-GEO போராட்டத் தடை குறித்த வழக்கில்,

    நீதி மன்றத் தீர்ப்பை மீறி செயல்படும் நிலையில் எதிர்த்தரப்பின் விவாதத்தைத் துளியும் ஏற்க மறுக்கும் நீதி மன்ற மரபினைத் தாண்டி,


    45 நிமிடங்கள் JACTTO-GEO தனது தரப்பு விளக்கத்தை அளித்தது.


    எனினும், நீதி மன்ற உத்தரவிற்குக் கீழ்ப்படிய JACTTO-GEOவிடம் அறிவுறுத்தப்பட்டது.

    இதை ஏற்க மறுத்து போராட்டத்தைத் திரும்பப் பெற இயலாது என JACTTO-GEO கூறியது.

    இறுதியில், போராட்ட நியாயத்தை உணர்ந்து கொண்ட நீதிமன்றம், கோரிக்கை நிறைவேற்றத்திற்கான உறுதியை அளித்தது.

    போராட்டத்தை முடித்துக் கொள்ள கேட்டுக்கொண்டது நீதிமன்றம்.

    நீதி மன்ற உத்திரவாதத்தை அடுத்து தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்தி வைக்க JACTTO-GEO ஒப்புதல் கூறியது.

    தலைமைச் செயலரை திங்கள் கிழமை நீதிமன்றத்தில் ஆஜராக நீதிமன்றம் வழிகாட்டியது.

    அரசு தரப்பு வழக்கறிஞர் அதற்குச் சாத்தியமில்லை என மறுக்க,

    நீதிமன்றம் உத்தரவிட்டால் வந்து தான் ஆகவேண்டுமென காட்டமாக நீதிமன்றம் உத்தரவிட்டது.

    21-ம் தேதிக்குள் கோரிக்கைகள் குறித்து அரசு தரப்பிடமிருந்து பதில் பெற்றுத்தர நீதிமன்றம் உறுதியளித்தது.

    JACTTO-GEO இதனை ஏற்று 21.9.2017-வரை தனது காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

    இன்று (15.9.17) பிற்பகல் முதல் பணிக்குத் திரும்ப JACTTO-GEO உறுதி அளித்தது.

    மேலும், JACTTO-GEO தனது எழுத்துப்பூர்வமான விளக்கத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

    ஊழியர் - அதிகாரிகள் - நீதிமன்றம் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முதல் முத்தரப்புப் பேச்சுவார்த்தையை JACTTO-GEO-வின் 9 நாள் வேலைநிறுத்தம் சாதித்துக் காட்டியுள்ளது.

    நீதிமன்றமே நமது கோரிக்கைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளதால், நீதி மன்ற வழிகாட்டல் படி முன்னரே வழங்கப்பட்ட குற்றக்குறிப்பாணை / ஒழுங்கு நடவடிக்கைக் கடிதங்கள் மீதான பயமோ, பதிலோ இனி தேவையற்றது என்று JACTTO-GEO கூறியுள்ளது.

    9 நாட்களாகத் தொடர்ந்து களத்தில் இருந்து நமது உரிமைக்கான தமது உணர்வினை வெளிப்படுத்தியுள்ள இலட்சக்கணக்கான அரசு ஊழியர் & ஆசிரியர்களுக்கு JACTTO-GEO தனது நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது.

    21.9.2017 பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை எனில், JACTTO-GEO உயர்மட்டக்குழு கூடி அடுத்தகட்ட அறிவிப்பை அறிவிக்கும்.

    No comments: